மொஹாலியில் செவ்வாய்க்கிழமை, இந்திய அணி கேப்டன் தோனி, பாகிஸ்தான் கேப்டன் அப்ரிதி ஆகியோர் செய்தியாளர்களைக் கூட்டாக சந்தித்தினர். அப்போது தோனி கூறியது: இந்தியா - பாகிஸ்தான் இடையிலான அரையிறுதி ஆட்டம் குறித்து ஊடகங்கள் பெருமளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்த விஷயத்தில் கவனத்தை செலுத்தாது, ஆட்டத்தில் முழு கவனத்தையும் செலுத்த வேண்டுமென அணி வீரர்களுக்குக் கூறியுள்ளேன்.
இது மிகப்பெரிய ஆட்டம் என்பதில் சந்தேகமில்லை. எனது கிரிக்கெட் வாழ்வில் இது மிகமுக்கிய ஆட்டமாக இருக்கும். அணியில் அனைத்து வீரர்களும் முழு உடல் தகுதியுடன் இருக்கிறோம். இரு அணிகளையும் ஒப்பிட்டுப் பார்ப்பதில் எனக்கு நம்பிக்கையில்லை. பாகிஸ்தான் அணி பந்து வீச்சில் சிறப்பாக இருக்கிறது. குறிப்பாக இத்தொடரில் அப்ரிதியின் பந்து வீச்சு எதிரணியைத் திணறடித்துள்ளது. ஆனால் அதனை சிறப்பாக எதிர்கொள்ளும் பேட்டிங் வரிசை நமது அணியில் இருக்கிறது என்றார்.

No comments:
Post a Comment