|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

09 July, 2012

மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த பள்ளி பாடத்திட்டத்தில் ஆர்.டி.ஐ!


 தகவல் பெறும் உரிமைச் சட்டம் (ஆர்.டி.ஐ.,) குறித்து, மக்களிடம் அதிக அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ள மத்திய அரசு, இந்தச் சட்டத்தின் பல அம்சங்களை பள்ளிப் பாடத்திட்டத்தில் அறிமுகப்படுத்துவது குறித்து பரிசீலித்து வருகிறது.தகவல் பெறும் உரிமைச் சட்டம் தொடர்பான விவகாரங்களில், முதன்மையான நிறுவனமாகச் செயல்படும் மத்தியப் பணியாளர் நலத்துறை இதுதொடர்பாக, தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலுடன் (என்.சி. இ.ஆர்.டி.,) பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதற்கான வரைவுத் திட்டமும் விரைவில் தயாராக உள்ளது.தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் உள்ள முக்கிய அம்சங்களை, பள்ளிப் பாடத்திட்டத்தில் இடம் பெறச் செய்யும் விவகாரம், தற்போதுதான் ஆரம்பகட்ட நிலையில் உள்ளது. என்.சி.இ.ஆர்.டி., உடன் கலந்து ஆலோசித்த பின்னரே, இந்த விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என, மத்தியப் பணியாளர் நலத்துறை அதிகாரி ஒருவர் கூறினார்.
அவர் மேலும் கூறியதாவது:மத்திய, மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ள, பல்வேறு துறைகளிலும், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் விபரங்கள் கேட்டு, ஏராளமான விண்ணப்பங்கள் குவிந்து வருவதால், பள்ளிப் பாடத்திட்டத்தில் இந்தச் சட்டம் தொடர்பான விவரங்களை இடம் பெறச் செய்யும் யோசனை உருவாகியுள்ளது.அரசு நிர்வாகத்தின் செயல்பாடுகளை மேம்படுத்துவதில், தகவல் பெறும் உரிமைச் சட்டம் முக்கியப் பங்கு வகிக்கிறது.சில துறைகளின் செயல்பாடுகளில் உள்ள குறைபாடுகள் மற்றும் திறமைகள் எல்லாம், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்படும் விண்ணப்பங்கள் மூலம் தெரியவந்துள்ளன.அதனால், இந்தச் சட்ட அம்சங்களை பள்ளிப் பாடத்திட்டங்களில் இடம் பெறச் செய்வது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது. 

தமிழகத்தில் கொலை செய்யப்பட்ட 18 வயதுக்குட்பட்டோர் 136?



10 வயதுக்குட்பட்ட குழந்தைகள் கொலைச் சம்பவங்களில் தமிழகம் தேசிய அளவில் 3வது இடத்தைப் பிடித்துள்ளது. தேசிய குற்றப் பதிவு ஆவணம் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.தமிழகத்தில் குழந்தைகள் கொலைச் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும் அது கவலை தெரிவித்துள்ளது. தேசிய அளவில் அதிகளவில் குழந்தைகள் கொல்லப்படுவது மகாராஷ்டிராவில்தான். அங்கு 2011ம் ஆண்டு 141 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர். 2வது இடம் உ.பிக்கு, அங்கு 96 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தின் பங்கு இதில் 90 ஆகும்.
குற்றச் செயல்களின் கூடாரமாகக் கருதப்படும் பீகார், டெல்லியில் நிலைமை பரவாயில்லையாம். பீகாரில் 28 சிறார்கள் மட்டுமே கொலையாகியுள்ளனர். டெல்லியில் 23 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.கர்நடாகத்தில் 73 பேரும், கேரளாவில் 49 பேரும் கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்டுள்ளனர்.குழந்தைகள் கொலை செய்யப்படுவதற்கான சூழல்கள், காரணங்கள் கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்களிலும் ஒரே மாதிரியாகவே உள்ளது. பல சம்பவங்களில் கடத்தல், பணம் கேட்டு மிரட்டல் முக்கியக் காரணமாக இருந்துள்ளது. கள்ள உறவு தொடர்பாகவும் பல குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர். மன வளம் குன்றியவர்களால் கொலை செய்யப்படும் குழந்தைகளும் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
சமீபத்தில் திருப்பூர் மாவட்டத்தில் 19 வயதான மகாலட்சுமி என்ற பெண், தனது கள்ளக்காதலன் கல்யாணம் செய்து கொள்ள மறுத்ததால், கள்ளக்காதலரின் 4 வயது மகனைக் கொடூரமாகக் கொலை செய்தார் என்பது நினைவிருக்கலாம். இப்பெண் ஜூலை 1ம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.அதே பல்லடத்தில் கடந்த மே மாதம் 27 வயதான சலூன் கடைக்காரர் ஒருவர், தனது பக்கத்து வீட்டில் வசித்து வந்த 3 வயது சிறுவனை ஓரினச் சேர்க்கைக்கு உட்படுத்தி பின்னர் படுகொலை செய்தார்.2011ம் ஆண்டு புள்ளிவிவரப்படி தமிழகத்தில் கொலை செய்யப்பட்ட 18 வயதுக்குட்பட்டோர் எண்ணிக்கை 136 ஆகும். 2010ம் ஆண்டு சிறார்களுக்கு எதிரான குற்றச் செயல்கள் தொடர்பாக மொத்தம் 810 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.2010ம் ஆண்டு சென்னை காவல்துறை, 4 கொலை வழக்குகளைப் பதிவு செய்தது. இவர்கள் பத்து வயதுக்குட்பட்டோர் ஆவர்.சிறார்கள் கொலை செய்யப்படுவதும், குறிப்பாக கள்ளக்காதல், முறையற்ற காதல் உள்ளிட்ட காரணங்களுக்காக கொலை செய்யப்படுவதும் அதிகரித்து வருவது காவல்துறையை மட்டுமல்ல சமூக ஆர்வலர்களையும் பெரிதும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.


சாவதற்கு முன் கண்டிப்பாக சாப்பிட்டேயாக வேண்டிய உணவு!


ஹப்பிங்டன் போஸ்ட் இதழ்.நடத்திய கருத்துக் கணிப்பின் மூலம் தோசைக்கு இந்த கெளரவம்  பல்வேறு நாடுகளுக்கும் சுற்றுலா சென்ற அனுபவம் படைத்த ஒருவர் இந்த உணவு வகைகளைத் தொகுத்துள்ளார்.இந்தப் பட்டியலில் தென்னிந்தியாவின் புகழ் பெற்ற மசாலா தோசை தவிர, சீனாவின் பீகிங் டக், அமெரிக்காவின் பிபிக்யூ ரிப்ஸ், ஜப்பானின் டெபன்யாகி ஆகியவையும் இடம் பெற்றுள்ளன.
மசாலா தோசை குறித்து அந்த எழுத்தாளர் கூறுகையில், அரிசி மற்றும் மசாலாவால் ஆன இந்த தோசை மிகவும் சுவையானதாக இருக்கிறது. நசித்த உருளைக் கிழங்கையும், வெங்காயத்தையும் இந்த தோசைக்குள் புதைத்து சுருட்டி கொடுக்கிறார்கள். கூடவே அருமையான சட்னியும் தருகிறார்கள். மிக மிக அருமையான உணவு இது. கண்டிப்பாக ஒருவர் தனது ஆயுட்காலத்திற்குள் இதைச் சாப்பிட்டாக வேண்டும், அவ்வளவு ருசியான உணவு இது என்று வாயில் எச்சில் ஒழுக எழுதியுள்ளார்.
10 Must-Tries Around the Globe

10 Foods Around The World To Try Before You Die 

India: Masala dosa
If one subcontinental meal could persuade a committed carnivore to order vegetarian, my vote would go to a masala dosa in South India. The plate-covering, paper-thin pancake is made from rice and lentils, cooked to lacy perfection on a hot griddle. What creates the flavor is a spiced concoction of mashed cooked potatoes and fried onions, served with a liberal dose of garlicky 
NO :2 Japan: Teppanyaki
If you like a little theater and audience participation with your food, don't miss the experience of dining at a teppanyaki restaurant inJapan. With much flame-fuelled drama, sometimes accompanied by juggling of utensils and flipping of ingredients, the skilled chefs grill your steak right in front of you, via a sizzling-hot gas-powered griddle. 
NO :3 USA: BBQ ribs
If there's one US cuisine that has aficionados frothing at the mouth, it's the holy grail of smoked pork ribs: the BBQ. Kansas City, Memphis and St. Louis are US BBQ capitals, not forgetting Texas, the Carolinas ... hell, it seems everyone has their favorite local variety. 
NO :4 USA: BBQ ribs  If there's one US cuisine that has aficionados frothing at the mouth, it's the holy grail of smoked pork ribs: the BBQ. Kansas City, Memphis and St. Louis are US BBQ capitals, not forgetting Texas, the Carolinas ... hell, it seems everyone has their favorite local variety. 

NO : 5 Australia and New Zealand: Pavlova Fiercely competitive Australia and New Zealandvie for ownership of this iconic dessert. Currently the odds are on a hotel in Wellington, New Zealand as having invented this heavenly melange of meringue and cream.  The dish is named for the Russian ballerina Anna Pavlova, and indeed the meltingly soft light-as-air meringue does bring to mind the fluffy tulle of a ballet tutu. A classic pavlova is topped with lashings of whipped cream daubed with passionfruit, strawberries and kiwi fruit.

NO :6 Italy: Zucchini flowers Everyone who's eaten Tuscany's fiore di zucca, or deep-fried zucchini flowers, says they're to die for, so it makes sense to add them to our list. The tender yellow zucchini flowers are stuffed with a delicious filling, maybe herbed ricotta or mozzarella, then dipped into a simple tempura-like batter and sizzled in olive oil. The result is a melt-in-the mouth, sweetly crisp sensation that must beeaten immediately. 

NO :7 Thailand: Som tam (green papaya salad) To savour Thailand's four essential flavours - sour, salt, sweet and chilli - in one dish, load up a bowl of som tam and prepare for sensory overload. The base ingredient of shredded unripened papaya is combined with any or all of the following: palm sugar, garlic, lime juice, fish sauce, tamarind juice, dried shrimp and, quite often, seafood, tomatoes, carrot, beans and peanuts. Simply add the ingredients to a mortar and start pounding. A northern Thai dish from the Isan region, som tam is typically served with grilled chicken and sticky rice. If you're making the dish at home and can't source a green papaya at your local supermarket, you can substitute unripe mangoes, apples or cucumbers for a similar, but not as authentic, result. 

NO :8 Greece: Moussaka he national casserole in Greece is a certain must-try dish, and these days there aren't many of us who haven't succumbed to this melting concoction. The Greek answer to the Italian lasagne, the dish is made by smothering layers of ingredients in a cheese béchamel sauce, and baking until creamily melted and golden. Along with ground beef or lamb, the major ingredient in a traditional moussaka is eggplant; regional varieties might use other vegetables following this method, such as artichokes and potatoes. The salted and browned slices of eggplant are layered with meat stewed with onions, garlic, tomatoes and spices. Wherever you live, the resulting cheesy casserole is a heart-warming dish to serve in winter. 

NO :9 Malaysia: Seafood curry laksaMalaysia's  ing of soups is a spicy, tangy, coconut-creamy soup packed full of noodles, seafood, fish sticks, puffed tofu, vegetables, a hard-boiled egg, coriander and chilli sambal. The Chinese-Malay dish is a classic of Peranakan cuisine, merging elements from Malaysia andSingapore. There are heaps of regional variances, and some seafood laksas also include chicken. If you come across assam laksa, you'll find it has a fish rather than coconut broth. The general rule is the simpler the surroundings, the tastier the curry laksa, so pull up a stool at a streetside stall in a Penang backstreet or Singapore food court and tuck in. 
NO :10 France: Escargots
You've got to try snails at least once in your life, if only to try to distinguish their flavor lurking beneath all that garlic butter. The ancient Romans ate snails, and they're eaten across the globe from Morocco to Cambodia. However, it's the French who are most readily identified with these tasty morsels, ideally sourced fromBurgundy. Escargots are generally eaten as an appetizer, served in the shell and cooked in a delicious melange of garlicky parsley butter. And what do they taste like? As you might expect, the texture is firm, but shouldn't be chewy, and the flavor underneath all that garlic and butter is similar to mussels. Pair a wine tasting with a food tour for the ultimate French culinary experience.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...