தமிழகத்தின் வளங்கள் எண்ணற்றது. அதில் முக்கியமும் முதன்மையானது நீர். அதிகளவில் தேவைப்படும் தமிழக குடிநீர் தேவையை கடல் நீரை சுத்திகரித்து செய்து கொள்ளலாம் (தமிழக அரசின் அம்மா மினரல் வாட்டர் கடல் நீர் சுத்திகரிப்பில் பெறப்படுவது தான்). மண்ணிற்கு தேவையான சத்துக்கள் ஏதும் இல்லா இந்த நீரை உழவிற்கு பயன்படுத்தவே முடியாது. புள்ளிவிவரப்படி தமிழகத்தில் ஆற்று நீர் குடிநீர் தேவையை விட உழவிற்கே அதிகம் பயன்படுத்துகிறோம். அதற்காகத்தான் காவிரி நீர் பங்கீட்டிற்கு தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறோம்.
1972-73ல் காவிரிச்சிக்கல் தமிழகத்தில் பூதாகாரமாய் தலைதூக்கவே 1974ல் காவிரிப் பாசன ஆணையம் முன்னெடுக்கப்பட்டு 1976 அன்றைய மத்திய நீர்ப்பாசன அமைச்சர் ஜெகஜீவன்ராமின் தலைமையில் வாரியம் அமைக்கப்பட்டது. ஆனால் அதற்குள் குடகு மலைப் பகுதியில் (காவிரி உற்பத்தியாகும் பகுதி) ஹிராங்கினி அணையை சத்தமில்லாமல் கட்டி முடித்தது கர்நாடகம். இதனை எதிர்த்து 1986ல் தஞ்சை உழவர் சங்கங்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வழக்கு தொடுத்தனர். இந்நிலையில் தான் உழவு உள்ள வரை தமிழகம் தண்ணீர் கேட்டுக் கொண்டே தான் இருக்கும். தமிழகத்தை உழவிலிருந்து வெளியேற்றிவிட்டால் மாநில நீர்த்தேவை குறையும் என முடிவெடுத்து மத்திய அரசை அமைதியாய் அனுகியது கர்நாடக அரசு. தேசிய கட்சிகள் கோலோச்சும் கர்நாடகாவின் இத்திட்டத்திற்கு செவிசாய்த்த மத்திய அரசு, 1980களின் இறுதியில் தமிழகத்தின் நெற்களஞ்சிய மாவட்டங்களில் மீத்தேன் எடுக்க ஆய்வுகள் மேற்கொள்ள ஆரம்பிக்கப்பட்டது (இதனை தஞ்சை பூர்வ உழவர்களைக் கேட்டால் சொல்வர்). ஆனால் இதனை நேரடியாக சொல்லாமல் மண்ணெண்ணை குழாய் அமைக்க வேண்டி ஆய்வு செய்யப்படுகிறதென ஆரம்பித்தது ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு தமிழக அரசிடம் சமர்ப்பித்தது. தமிழக அரசோ கூட்டணி தேசியக் கட்சி சொன்னவுடன் திட்டத்தை படித்துக்கூட பார்க்காமல் ஒப்புதல் வழங்கி மீத்தேனுக்கு பச்சைக் கொடி காட்டியது. இதில் கோரப்பட்ட டெண்டர் பத்தில் ஐந்து நிறுவனங்கள் கர்நாடகத்தைச் சேர்ந்தவை. இப்போது நெடுவாசலில் போடப்பட்டிருக்கும் ஜெம் லேப் நிறுவனம் கூட கர்நாடக பாஜ. MP மறைந்த திரு.மல்லிகார்சுனப்பாவுடையது.
விழி தமிழா. அழிவுத் திட்டங்களை எதிர்த்து நில். போராடு.
போராடாத எந்த ஒரு இனமும் விடுதலை அடைந்ததாக சரித்திரம் இல்லை.
No comments:
Post a Comment