|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

13 April, 2012

இதே நாள்...


  • அங்கோலா இளைஞர்கள் தினம்
  • இந்திய சட்ட நிபுணர் அம்பேத்கர் பிறந்த தினம்(1891)
  • தமிழக ஆன்மீகவாதி ரமண மகரிஷி இறந்த தினம்(1950)
  • நோவா வெப்ஸ்டர் தனது அகராதியின் முதல் பதிவுக்கான காப்புரிமையை பெற்றார்(1828)

இந்த வார பலன்(13-4-2012 முதல் 19-4-2012 வரை)

மேஷம் பொது: முன்னேற்றகரமான வாரம். எடுக்கும் காரியங்கள் வெற்றிகரமாக முடியும். மனம் குதூகலமாக இருக்கும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். பண வரவு நன்றாக இருக்கும். சமுதாயத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். பெண்களுக்கு: குடும்பம் ஆனந்தமாக நடக்கும். குடும்பத்தார் ஒற்றுமையாக இருப்பார்கள். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வீட்டுக்குத் தேவையான பொருட்கள் வாங்க திட்டமிடுவீர்கள். குழந்தைகள் நலனில் கவனம் செல்லும். வேலை பார்ப்போருக்கு: வேலை பளு அதிகரிக்கும். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். அலுவலகத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். வீண் பேச்சைக் குறைத்துக்கொள்வது நல்லது.

ரிஷபம் பொது: அதிர்ஷ்டகரமான வாரம். எடுக்கும் காரியங்கள் நல்லபடியாக முடியும். பண வரவுக்கு குறைவிருக்காது. கை நழுவிப்போன வாய்ப்புகள் மீண்டும் உங்களை தேடி வரும். பயணங்களால் நன்மை உண்டு. உடன் பிறப்புகளை அனுசரித்துச் செல்லவும்.பெண்களுக்கு: குடும்பம் அமைதியாக நடக்கும். கணவரிடம் பாராட்டு பெறுவீர்கள். உடல் நலனில் கவனம் தேவை. உற்றார், உறவினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. வீண் செலவுகளைக் குறைத்துக்கொள்ளவும்.வேலை பார்ப்போருக்கு: கொடுக்கும் வேலைகளை உடனுக்குடன் செய்து முடிப்பீர்கள். உழைப்புக்கேற்ற ஊதியம் உண்டு. உயர் அதிகாரிகளை அனுசரித்துச் செல்லவும். சக ஊழியர்களின் குடும்ப விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது.

மிதுனம் பொது: சந்தோஷமான வாரம். எடுக்கும் காரியங்கள் திருப்திகரமாக முடியும். பண வரவு சீராக இருக்கும். சமுதாயத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வழக்குகள் சாதகமாக முடியும்.பெண்களுக்கு: குடும்பம் மகிழ்ச்சிகரமாக நடக்கும். இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் நடத்தி மகிழ்வீர்கள். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். சேமிப்பில் கவனம் செல்லும். உங்கள் கோரிக்கைகள் நிறைவேறும்.வேலை பார்ப்போருக்கு: அலுவலகத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். சிலருக்கு பதவி உயர்வு கிடைத்து மகிழக்கூடும். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். அலுவலகத்தில் குடும்ப விஷயங்களைப் பற்றி பேச வேண்டாம்.

கடகம் பொது: அமைதியான வாரம். எடுக்கம் காரியங்கள் எளிதில் முடியும். பண வரவுக்கு குறைவிருக்காது. மனம் தெளிவாக இருக்கும். உங்கள் ரகசியங்களை யாரிடமும் கூற வேண்டாம். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள்.பெண்களுக்கு: குடும்பம் நன்றாக நடக்கும். உறவினர் வீட்டு மங்கல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள். கணவர் அன்பாக இருப்பார். குழந்தைகளால் சந்தோஷம் அடைவீர்கள். வேலை பார்ப்போருக்கு: வேலை பளு அதிகரி்க்கும். இருப்பினும் சிறப்பாக பணியாற்றுவீர்கள். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். அதனால் சில சலுகைகள் பெறுவீர்கள். பண வரவு திருப்திகரமாக இருக்கும்.

சிம்மம் பொது: இன்பமான வாரம். எடுக்கும் காரியங்கள் திருப்திகரமாக முடியும். பண வரவு சீராக இருக்கும். நட்பு வட்டாரம் விரிவடையும். உடல் நலம் சிறப்பாக இருக்கும். சமுதாயத்தில் உயர்ந்தவர்களின் உதவி கிடைக்கும். யாருக்கும் வாக்கு கொடுக்க வேண்டாம்.பெண்களுக்கு: குடும்பம் மகிழ்ச்சிகரமாக நடக்கும். நல்ல செய்தி வீடு தேடி வந்து மகிழ்விக்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். உறவினர் வருகையால் மனம் மகிழும்.வேலை பார்ப்போருக்கு: எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைத்து மகிழ்வீர்கள். சிலருக்கு விரும்பிய இடத்திற்கு மாற்றம் கிடைக்கும். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். வருமானத்திற்கு குறைவிருக்காது.

கன்னி பொது: நிம்மதியான வாரம். எடுக்கும் காரியங்களை திறம்பட செய்து முடிப்பீர்கள். இனிமையான பேச்சால் அனைவரையும் கவர்வீர்கள். பண வரவு திருப்திகரமாக இருக்கும். அரசியல்வாதிகளின் நட்பும், அவர்களால் அரிய செயல் ஒன்றை செய்யும் வாய்ப்பும் கிடைக்கும்.பெண்களுக்கு: குடும்பம் குதூகலமாக நடக்கும். குடும்பத்தார் ஒற்றுமையாக இருப்பார்கள். மங்கல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழக்கூடும். கணவன் மனைவி இடையே அன்பும் பாசமும் அதிகரிக்கும்.வேலை பார்ப்போருக்கு: அலுவலகத்தில் சுமூகமான சூழல் நிலவும். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். அதனால் உங்கள் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும். இதுவரை இருந்து வந்த பிரச்சனைகள் தீரும்.

துலாம் பொது: சிறப்பான வாரம். எடுக்கும் காரியங்கள் நல்லபடியாக முடியும். திறமை மேம்படும். பண வரவு அதிகரிக்கும். பெரியோர்களின் ஆசி கிடைக்கும். நண்பர்கள் பக்கபலமாக இருப்பார்கள். யாருக்கும் வாக்கு கொடுக்கவோ, ஜாமீன் கையெழுத்திடவோ வேண்டாம்.பெண்களுக்கு: குடும்பம் சீராக நடக்கும். வீட்டுக்குத் தேவையான பொருட்கள் வாங்கி மகிழக்கூடும். கணவருடன் இருந்து வந்த பிரச்சனை தீரும். மனம் நிம்மதியாக இருக்கும். குழந்தைகள் நலனில் கவனம் செல்லும்.வேலை பார்ப்போருக்கு: கொடுக்கும் வேலைகளை உடனுக்குடன் செய்து முடிப்பது நல்லது. உழைப்புக்கேற்ற ஊதியம் உண்டு. சக ஊழியர்களின் குடும்ப விஷயங்களில் தலையிட வேண்டாம். உயர் அதிகாரிகளை அனுசரித்துச் செல்லவும்.

விருச்சிகம் பொது: அமைதியான வாரம். எடுக்கும் காரியங்களை எப்பாடுபட்டாவது வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். பண வரவு சீராக இருக்கும். பயணங்களால் நன்மை உண்டு. வீண் செலவுகளைக் குறைத்துக்கொள்வது நல்லது. பணம் கொடுக்கல், வாங்கலில் கவனமாக இருக்கவும்.பெண்களுக்கு: குடும்பம் நன்றாக நடக்கும். கணவர் அன்பாக இருப்பார். உடல் நலனில் கவனம் செலுத்துவது நல்லது. பேச்சில் நிதானம் தேவை. ஆன்மீகத்தில் நாட்டம் செல்லும்.வேலை பார்ப்போருக்கு: வேலையில் கூடுதல் கவனம் தேவை. பதவி உயர்வு கிடைக்க காலதாமதம் ஆகலாம். ஆனால் பண வரவுககு குறைவிருக்காது. சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

தனுசு பொது: வெற்றிகரமான வாரம். எடுக்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். பண வரவு அதிகரிக்கும். சமுதாயத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். உடல் நலம் நன்றாக இருக்கும். நடக்காது என்று நினைத்த காரியம் ஒன்று வெற்றிகரமாக நடக்கும்.பெண்களுக்கு: குடும்பத்தில் நிம்மதி இருக்கும். கணவருடன் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். தாய் வீட்டுக்கு சென்று மகிழக்கூடும். குழந்தைகள் உங்கள் சொல்படி நடப்பார்கள்.வேலை பார்ப்போருக்கு: அலுவலகத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். எதிர்பார்த்த கடன் தொகை கிடைத்து மகிழக்கூடும். சக ஊழியர்களை நம்பி உங்கள் வேலைகளை ஒப்படைக்க வேண்டாம். வீண் பேச்சைக் குறைத்துக்கொள்ளவும்.

மகரம் பொது: குதூகலமான வாரம். எடுக்கும் காரியங்கள் நல்லபடியாக முடியும். பண வரவு திருப்திகரமாக இருக்கும். உங்கள் அமைதியான குணத்தை அனைவரும் பாராட்டுவார்கள். சமூக சேவையில் ஈடுபடுவீர்கள். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள்.பெண்களுக்கு: குடும்பம் சீராக நடக்கும். மனம் உற்சாகமாக இருக்கும். நல்ல செய்தி வீடு தேடி வந்து மகிழ்விக்கும். சேமிப்பில் கவனம் தேவை. உறவினர்களிடம் மனம் திறந்து பேச வேண்டாம். வேலை பார்ப்போருக்கு: வேலை பளு அதிகரிக்கும். இருப்பினும் சிறப்பாக பணியாற்றி உயர் அதிகாரிகளிடம் பாராட்டு பெறுவீர்கள். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். அடுத்தவர்களைப் பற்றி விமர்சிக்க வேண்டாம்.

கும்பம் பொது: மிதமான வாரம். எடுக்கும் காரியங்கள் சிலவற்றில் தான் வெற்றி கிடைக்கும். பண வரவு நன்றாக இருக்கும். சிலர் புதிய வீட்டுக்கு மாறக்கூடும். குல தெய்வ வழிபாடு மேற்கொள்வீர்கள். சமுதாயத்தில் பெரிய அந்தஸ்தில் உள்ளவர்களை சந்திப்பீர்கள்.பெண்களுக்கு: குடும்பம் ஆனந்தமாக நடக்கும். உறவினர் வருகையால் மனம் மகிழும். கணவன் மனைவி இடையே அன்பும் பாசமும் அதிகரிக்கும். மங்கல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழக்கூடும்.வேலை பார்ப்போருக்கு: அலுவலகத்திலேயே அதிக செல்வாக்குள்ள பதவி கிடைக்கும். எதிர்பார்த்த கடன் தொகை கிடைத்து மகிழக்கூடும். உயர் அதிகாரிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. பேச்சில் நிதானம் தேவை.

மீனம் பொது: ஆனந்தமான வாரம். எடுக்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். பண வரவு அதிகரி்ககும். மனதில் இருந்து வந்த குழப்பங்கள் தீரும். நல்ல செய்தி உங்களைத் தேடி வந்து மகிழ்விக்கும். யாருக்கும் வாக்கு கொடுக்கவோ, ஜாமீன் கையெழுத்திடவோ வேண்டாம்.பெண்களுக்கு: குடும்பம் அமைதியாக நடக்கும். மகான்களின் ஆசி கிடைக்கும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழக்கூடும். உறவினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.வேலை பார்ப்போருக்கு: கொடுக்கும் வேலகளை சிறப்பாக செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள். உழைப்புக்கேற்ற ஊதியம் உண்டு. அலுவலகத்தில் குடும்ப விஷயங்களைப் பற்றி பேச வேண்டாம். சக ஊழியர்களிடம் உங்கள் ரகசியங்களைக் கூற வேண்டாம்.

சூப்பர் சேஸ் செய்த சூப்பர் கிங்ஸ்-ஐபிஎல் வரலாற்றில் 2வது முறை!


ஐபிஎல் வரலாற்றில் 2வது முறையாக ஒரு பெரிய சேசிங்கை நடத்தி முடித்துள்ளனர் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள்.இன்று தமிழ்நாட்டில் தமிழ்ப் புத்தாண்டு, ஆனால் நேற்று சேப்பாக்கத்தில் தீபாவளியைக் கொண்டாடி விட்டனர் சென்னை வீரர்கள். அட்டகாசமான ஆட்டமாக மாறிப் போன இந்தப் போட்டியில் சென்னை வெற்றி பெறுமா என்பது 18 ஓவர்கள் வரை நிச்சயம் இல்லாமல்தான் இருந்தது. ஆனால் 19 மற்றும் 20வது ஓவர்களில் கண்ணு மண்ணு தெரியாமல் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் பேட் செய்த விதத்தால் போட்டியை பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸடமிருந்து அதிரடியாக தட்டிப் பறித்து விட்டனர்.ஐபிஎல் போட்டி வரலாற்றில் ஒரு பெரிய ஸ்கோரை சேஸ் செய்து வெற்றி பெறுவது என்பது இது 2வது முறையாகும்.2008ம் ஆண்டு நடந்த ஐபிஎல் போட்டியில், ஹைதராபாத்தில் ராஜஸ்தான் ராயல்ஸுக்கும், டெக்கான் சார்ஜர்ஸுக்கும் இடையே நட்நத போட்டியில், ராஜஸ்தான் அணி, ஹைதராபாத்தின் 214 என்ற ஸ்கோரை சேஸ் செய்து 217 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதுவே இன்று வரை அதிகபட்ச சேசிங்காக உள்ளது.

இதற்கு அடுத்த அதிகபட்ச சேசிங்கை நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் செய்தது. முதலில் பேட் செய்த பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் 205 என்ற ஸ்கோரை சேஸ் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ், 208 ரன்கள் குவித்து சிறப்பாக வென்றது.இதற்கு அடுத்த பெரிய சேசிங்காக உள்ளது 2010ல் பெங்களூரில் நடந்த போட்டியில், கிங்ஸ் லெவன் பஞ்சாபின் 203 ரன் இலக்கை, 204 ரன்கள் எடுத்து பெங்களூர் எட்டியதே.அதேபோல அதே ஆண்டு கொல்கத்தாவில் நடந்த போட்டியில், முதலில் ஆடிய கொல்கத்தா 200 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் 204 ரன்கள் எடுத்து வென்றது.

இதேபோல சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெரிய ஸ்கோரை சேஸ் செய்வது இது 2வது முறையாகும். இதற்கு முன்பு 2010ல் தர்மசலாவில் நடந்த போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் முதலில் பேட் செய்து 192 ரன்கள் குவித்தது. இதை அருமையாக சேஸ் செய்த சென்னை, 4 விக்கெட் இழப்புக்கு 195 ரன்கள் எடுத்து வென்றது.நடப்பு தொடரில் நான்கு போட்டிகளில் ஆடி 2 போட்டிகளில் வென்றும், 2 போட்டிகளில் தோற்றும் சம நிலையை எட்டியுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ். இதுவரை தட்டுத் தடுமாறி ஆடி வந்த அந்த அணி நேற்று பேட்டிங்கிலும், பவுலிங்கிலும் காட்டிய அதிரடி ரசிகர்களை குஷிப்படுத்தியதோடு, சென்னை சூப்பர் கிங்ஸ் சூப்பர் பார்முக்கு வந்து விட்டதாகவும் அவர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.



7 பந்தில் 5 விக்கெட்டு

ராயல்சேலஞர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் கடைசி ஓவர்களில் 7 பந்துகளில் 5 விக்கெட்டுகளை அள்ளிக்கொண்டு சென்ற போலஞ்சரும் ஜடேஜாவும் சரித்திரம் படைத்துவிட்டனர்.ஐ.பி.எல். 5-வது தொடரில் 13வது போட்டியில் சென்னை சூப்பர்கிங்ஸும் ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களூரும் மோதின.முதலில் ஆடிய பெங்களூர் அணி திறமையாகத்தான் ஆடிவந்தது. 18-வது ஓவரின் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 190 ரன்களை எடுத்திருந்தது ராயல்சேலஞ்சர்ஸ் அணி. விக்கெட்டுகள் கைவசம் இருக்க.. நல்ல ஸ்கோரையும் எட்டும் என்றே எதிர்பார்க்கப்பட்டது.

எல்லாமே தலைகீழாகிப் போனது கடைசி 2ஓவர்களில்தான்! 19-வது ஓவரை வீசியவர் "ரூ10" கோடி ஜடேஜா. அவர் 19--வது ஓவரின் கடைசி பந்தில் எஸ்.எஸ். திவாரியை அவுட் செய்தார். அப்போது ராயல்சேலஞ்சர்ஸ் அணியின் ஸ்கோர் 198. ஜடேஜா வீசிய பந்தை அடித்த திவாரியை கேட் செய்தார் ரெய்னா.20-வது ஓவரின் முதல் பந்தில் விராத் கோஹ்லி, 2-வது பந்தில் புஜாரா, 4-வது பந்தில் வெட்டோரி, 5-வது பந்தில் பத்கால் என ஒரே ஓவரில் 4 விக்கெட்டுகளை போலிஞ்சர் அளிக்கொண்டு போனார்.198-ல் அவுட் ஆகத் தொடங்கிய ஆட்டம் ஒரே ஒரு ரன்னை சேர்க்கவே 5 விக்கெட்டுகளைப் பறிகொடுத்தது. 7 பந்துகளில் 5 விக்கெட்டுகளைப் பறித்தது சென்னை சூப்பர்கிங்ஸ் அணி.கோஹ்லி அடித்த பந்து நேராஆக பிளெஸ்ஸிஸ் கைகளில் போய்ச் சேர்ந்தது. அடுத்த பந்தை எதிர்கொண்ட புஜாரா ரன் ஏதும் எடுக்காமலேயே அவுட்டாகிப் போனார்.

ஹாட்ரிக் விக்கெட்டுகளை எடுத்துவிடுவார் போலிஞ்சர் என்ற எதிர்பார்ப்பை தகர்த்தார் வெட்டோரி.. ஒரு ரன்னை எடுத்தார். ஆனால் அடுத்த பந்தை வெட்டோரி எதிர்கொண்டார். தமது ரன்னுக்கு அவர் முயற்சித்தாலும் விக்கெட் பறிகொடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்.அதேபோல் அடுத்து ஆடிய பத்காலும் அவுட்டாகி வெளியேறினார்.. கடைசிபந்தில் ஒரு பவுண்டரியை வினய்குமார் அடிக்க ராயல்சேலஞர்ஸ் பெங்களூர் அணி 205 ரன்களை எடுத்தது.கடைசி ஓவரில் மட்டும் 6 பந்துகளில் 4 விக்கெட்டுகளை பறித்தார் போலிஞ்சர். மொத்தம் கடைசி 2 ஓவர்களில் 7 பந்துகளில் 5 விக்கெட்டுகள் என சரித்திரம் படைத்தது சென்னை சூப்பர்கிங்ஸ் 

தனியார் பள்ளிகளில் 2 லட்சம் ஏழை மாணவர்களுக்கு இடம்!

இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, ஏழை மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டின் கீழ் தமிழகத்தில் வரும் கல்வியாண்டில் 2 லட்சம் பேர் தனியார் பள்ளிகளில் சேர வாய்ப்புள்ளது.இந்த ஒதுக்கீட்டின்கீழ் சேரும் அனைத்து மாணவர்களுக்கும் கல்விச் செலவை அரசே ஏற்கும். தமிழகத்தில் இந்தச் சட்டத்தை அமல்படுத்தவும், ஏழை மாணவர்களுக்கான கல்விச் செலவுக்காகவும் மாநில அரசுக்கு 13-வது நிதிக் குழு ரூ.141 கோடி ஒதுக்கியுள்ளதாக பள்ளிக் கல்வித் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.இந்த மாணவர் சேர்க்கையை மே 1-ல் தொடங்க வேண்டும் என்று தனியார் பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் படி எல்.கே.ஜி., யு.கே.ஜி., ஒன்றாம் வகுப்பு, ஆறாம் வகுப்பு ஆகிய தொடக்க வகுப்புகளில் அருகமையில் உள்ள ஏழை மாணவர்கள், சமூக ரீதியாகப் பின்தங்கிய மாணவர்களுக்கு குறைந்தபட்சம் 25 சதவீத இடங்களை தனியார் பள்ளிகள் ஒதுக்க வேண்டும்.
இந்தச் சட்டத்தை எதிர்த்து தனியார் பள்ளிகள் உச்ச நீதிமன்றத்துக்குச் சென்றன. அந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வியாழக்கிழமை தீர்ப்பளித்தது. இதையடுத்து, தமிழகத்தில் வரும் கல்வியாண்டில் இந்தச் சட்டம் எவ்வாறு அமல்படுத்தப்பட உள்ளது என்பது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறையின் மூத்த அதிகாரி கூறியதாவது:இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை அமல்படுத்த தமிழக அரசு தயார் நிலையில் உள்ளது. இந்தச் சட்டம் தொடர்பான விதிமுறைகள் கடந்த ஆண்டே வெளியிடப்பட்டன. பள்ளிக் கல்வித் துறை சார்பில் விளக்கக் கையேடுகளும் வெளியிடப்பட்டுள்ளன.


சட்டம் குறித்து பள்ளிகள், பொதுமக்களுக்கு எழும் சந்தேகங்களைத் தீர்ப்பதற்காக சிறப்பு தொலைபேசி மையமும் (044-2827 8742) ஏற்படுத்தப்பட்டுள்ளது.இந்தச் சட்டம் தொடர்பாக 4 ஆயிரம் தனியார் பள்ளி முதல்வர்கள், மாவட்ட கல்வி அதிகாரிகள், மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள், கல்வித் துறை மூத்த அதிகாரிகள், ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள், தனியார் பள்ளி நிர்வாகிகளுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.கடும் நடவடிக்கை: தமிழகத்தில் இந்தச் சட்டத்தை அமல்படுத்துவதற்காக 13-வது நிதிக் குழு ரூ.141 கோடியை வழங்கியுள்ளது.எனவே, தனியார் பள்ளிகளில் சேரும் ஏழை மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு வழங்குவதில் எந்தவித சிரமும் இருக்காது. இந்த ஒதுக்கீட்டின் மாணவர் சேர்க்கை மே மாதத்தில் தொடங்கும்.ஏழை, பின்தங்கிய மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டை முறையாகப் பின்பற்றாத பள்ளிகளின் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.


"ரேண்டம்' முறை: இந்த ஒதுக்கீட்டின் கீழ் தனியார் பள்ளிகளில் அதிகமான மாணவர்கள் விண்ணப்பித்தால், அந்த மாணவர்களைத் தேர்வு செய்ய "ரேண்டம்' முறையைப் பின்பற்ற வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்தச் சட்டத்தின் கீழ் மாணவர்களைப் பள்ளியில் சேர்ப்பதற்கு அவர்களுக்கோ, அவர்களது பெற்றோருக்கோ நேர்முகத் தேர்வு எதையும் நடத்தக் கூடாது. நேர்முகத் தேர்வு நடத்தினால் முதல்முறை ரூ.25 ஆயிரமும், அதற்குப் பிறகு ரூ.50 ஆயிரமும் அபராதம் விதிக்கப்படும்.தனியார் பள்ளிகளுக்கு அரசு வழங்கும் கட்டணம் எவ்வளவு? அரசுப் பள்ளிகளில் ஒரு மாணவருக்குச் செலவிடப்படும் தொகை அல்லது கட்டண நிர்ணயக் குழுவால் அந்த தனியார் பள்ளிக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் இதில் எது குறைவோ, அந்தத் தொகையை அந்தத் தனியார் பள்ளிக்கு மாநில அரசு வழங்கும். செப்டம்பர், மார்ச் ஆகிய மாதங்களில் இரண்டு தவணைகளாக தனியார் பள்ளிகளுக்கு இந்தத் தொகை வழங்கப்படும்.


ஒவ்வோர் கல்வியாண்டிலும் தங்களது பள்ளிகளில், இந்த ஒதுக்கீட்டின் கீழ் சேர்ந்த மாணவர்களின் பட்டியலை ஜூலைக்குள் உள்ளூர் கல்வி அதிகாரிகளிடம் பள்ளிகள் சமர்ப்பிக்க வேண்டும். இந்த மாணவர் சேர்க்கைக்கு கட்டணத்தைப் பெறுவதற்காக தனியார் பள்ளிகள் தனி வங்கி கணக்கைத் தொடங்க வேண்டும்.கிராமப்புறங்களில் இடங்கள் நிரம்புமா?தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் அறிமுக வகுப்புகளில் ஒவ்வோர் ஆண்டும் சுமார் 8 லட்சம் மாணவர்கள் சேருகின்றனர். இதில் குறைந்தபட்சமாக 25 சதவீதம் பேர் என்றாலும் கூட, சுமார் 2 லட்சம் ஏழை மாணவர்கள் தனியார் பள்ளிகளில் சேரலாம்.


அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளின் மாணவர்களுக்கு இலவசப் புத்தகங்கள், சிறப்பு ஊக்கத் தொகை, இலவச லேப்-டாப், சீருடைகள், உபகரணப் பெட்டிகள், செருப்புகள் என ஏராளமான திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.எனவே, கிராமப்புறங்களில் உள்ள தனியார் பள்ளிகளில் இந்த ஒதுக்கீட்டின் கீழ் ஏழை மாணவர்கள் அதிகமானோர் சேருவார்கள் என எதிர்பார்க்க முடியாது. அங்கெல்லாம் 25 சதவீத இடஒதுக்கீடு நிரம்பாத நிலையும் இருக்கும் என்று கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மே இறுதிக்குள் இந்த இடஒதுக்கீட்டில் மாணவர்களைத் தேர்வு செய்து அந்தப் பட்டியலை பள்ளிகளின் தகவல் பலகையில் ஒட்ட வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
 
யாருக்கு இடஒதுக்கீடு?பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கும் குறைவாக இருந்தால் அவர்களது குழந்தைகள் இந்த இடஒதுக்கீட்டைப் பெறலாம்.தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பெற்றோர் இல்லாத குழந்தைகள், எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டோர், திருநங்கையர், துப்புரவுத் தொழிலாளர்களின் குழந்தைகளும் இந்த இடஒதுக்கீட்டைப் பெறலாம்.

தபால் நிலையங்களில் நவீன சோலார் விளக்கு...


தபால் நிலையங்களில் இப்போது நடைமுறையில் உள்ள சூரிய ஒளி (சோலார்) விளக்கு விற்பனைத் திட்டத்தை தமிழகம் முழுவதும் விரிவுபடுத்த தபால் துறை திட்டமிட்டுள்ளது.தபால் பரிமாற்றச் சேவை, பணப் பரிமாற்றம் (மணி ஆர்டர்) மற்றும் சிறு சேமிப்பு உள்ளிட்ட சேவைகளை அளித்து வந்த தபால் துறை, இப்போது மக்களின் நலனைக் கருதியும் வருவாயைப் பெருக்கவும் மேலும் சில அத்தியாவசியச் சேவைகளை வழங்கி வருகிறது.


தங்க நாணய விற்பனை, ரயில் டிக்கெட் முன்பதிவு, மின் கட்டணம் செலுத்தும் வசதி, கைக் கடிகார விற்பனை, ரூ. 3,790 விலை கொண்ட மினி குளிர்சாதனப் பெட்டி விற்பனை என பல்வேறு சேவைகளை செய்து வருகிறது.ஒன்பது கிலோ எடை கொண்ட இந்த மினி குளிர்சாதனப் பெட்டியை எங்கு வேண்டுமானாலும் கையிலேயே தூக்கிச் செல்லலாம்.இதுபோன்று மக்களுக்கு மிகவும் அவசியமான சேவைகளை செய்து வரும் தபால் துறை இப்போது மிகவும் அத்தியாவசியமான சூரிய ஒளி விளக்கு விற்பனையிலும் இறங்கியுள்ளது.பல மணி நேர தொடர் மின்வெட்டுப் பிரச்னையை சந்தித்து வரும் மக்களிடையே இந்தத் திட்டம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. நாள் முழுவதும் சூரிய ஒளியில் சார்ஜ் செய்து, இரவு முழுவதும் இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.


தனியார் நிறுவனம் ஒன்றுடன் கைகோத்து இந்தத் திட்டத்தை தபால் துறை செயல்படுத்தி வருகிறது.
சென்னையை அடுத்துள்ள கிராமப் பகுதிகளில் மட்டுமே: முதல் கட்டமாக சென்னையை அடுத்துள்ள கிராமப் பகுதிகளில் மட்டுமே இந்த சூரிய ஒளி விளக்கு விற்பனை திட்டத்தை தபால் துறை நடைமுறைப்படுத்தி வருகிறது. இதுகுறித்து சென்னை தலைமை தபால் அலுவலக அதிகாரி ஒருவர் கூறியதாவது:இந்தத் திட்டத்தின் கீழ் மூன்று வகையான சோலார் விளக்குகள் விற்பனை செய்யப்படுகின்றன. டி.லைட் எஸ்250, டி.லைட் எஸ்10, டி.லைட் எஸ்1 என்ற மூன்று வகை விளக்குகள் விற்பனை செய்யப்படுகின்றன.இதில் டி.லைட் எஸ்250-ன் விலை ரூ.1,699 ஆகும். இது சி.எல்.எஃப். பல்புகளைக் காட்டிலும் அதிக வெளிச்சத் திறன் உடையதாக இருக்கும். 50 ஆயிரம் மணி நேரம் எரியக் கூடியவை. இதற்கு 12 மாதம் உத்தரவாதமும் உள்ளது. இதில் செல்பேசியையும், 1.3 வாட் திறன் கொண்ட சோலார் தகடையும் சார்ஜ் செய்து கொள்ள முடியும்.


டி.லைட் எஸ்10 விளக்கின் விலை ரூ. 549 ஆகும். இது எளிதில் உடைந்து விடாத வகையிலான பிளாஸ்டிக்கால் உருவாக்கப்பட்டுள்ளது. இது அதிகபட்சம் 8 மணி நேரம் வரை எரியக் கூடியது.
டி.லைட் எஸ்1 விளக்கின் விலை ரூ.399 ஆகும். இது 6 மாத உத்தரவாதத்தைக் கொண்டது.
எங்கெல்லாம் கிடைக்கும்? இப்போது சென்னையை அடுத்துள்ள வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு தலைமை தபால் நிலையங்கள், திருக்கழுக்குன்றம், மதுராந்தகம், திருப்போரூர், கருங்குழி, உத்தரமேரூர், பெரிய காஞ்சிபுரம், திருப்பெரும்பூதூர், திருத்தணி, பள்ளிப்பட்டு, ஊத்துக்கோட்டை, லத்தேரி, ஒடுகத்தூர், அணைக்கட்டு, கனியம்பாடி, சத்துவாச்சாரி ஆகிய துணைத் தபால் நிலையங்கள் உள்ளிட்ட 19 தபால் நிலையங்களில் மட்டும் இந்த சூரிய ஒளி விளக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
விரைவில் சென்னையில்: சென்னை உள்பட தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய தபால் நிலையங்களிலும் இத்திட்டத்தை விரிவுபடுத்துவதற்கான முயற்சியை தபால் துறை இப்போது எடுத்து வருகிறது. இதற்காக சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
எனவே, விரைவில் இந்தக் குறைந்த விலையிலான சோலார் விளக்குகள் தமிழகம் முழுவதும் உள்ள தபால் நிலையங்களில் கிடைக்கும் என்றார்.

மம்தா பானர்ஜியை விமர்சித்து கார்டூன்கள் பல்கலை பேராசிரியர் கைது!


மிக மோசமான முறையில் மம்தா பானர்ஜியை விமர்சித்து கார்டூன்களை வரைந்து அதை இணைய தளங்களில் பரவவிட்ட ஜாதவ்புர் பல்கலைக் கழக பேராசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.அம்பிகேஷ் மகாபத்ரா என்ற ஜாதவ்புர் பல்கலை வேதியியல் துறைப் பேராசிரியர், வியாழக்கிழமை இரவு கைது செய்யப்பட்டார். அவர், மேற்கு வங்க முதல்வர் மம்தாவின் அரசுக் கொள்கைகளை மிக மோசமாக விமர்சித்து இழிவுபடுத்தும் வகையில் கார்டூன்களை வெளியிட்டதற்காக கைது செய்யப்பட்டாராம். 65க்கும் மேற்பட்டவர்களுக்கு அவர் இவ்வாறு கார்டூன்களை அனுப்பி வைத்ததாக புகார் கூறப்பட்டது.

அடுத்த சர்ச்சையில் பிரதீபா பட்டீல்!

ஜனாதிபதி பிரதீபா பட்டீல் ஓய்வு பெற்ற பிறகு வசிப்பதற்கு வீடு கட்டுவதற்காக 5 ஏக்கர் ராணுவ நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.ஜனாதிபதி பிரதீபா பட்டீலின் கடந்த 5 ஆண்டுகால வெளிநாட்டு சுற்றுப்பயணத்துக்காக ரூ.205 கோடி செலவிடப்பட்டது சமீபத்தில் தெரிய வந்தது. தகவல் பெறும் உரிமை சட்டம் மூலம் வெளியான இத்தகவல், பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.இந்நிலையில், ஜனாதிபதி பிரதீபா பட்டீல் மற்றொரு சர்ச்சையில் சிக்கி உள்ளார். அவர் ஜுலை மாதம் ஓய்வு பெறுகிறார்.ஓய்வு பெற்ற பிறகு அவர் வசிப்பதற்காக, மராட்டிய மாநிலம் புனேவில் அவருக்கு 5 ஏக்கர் ராணுவ நிலம் ஒதுக்கப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து `ஜஸ்டிஸ் பார் ஜவான்` என்ற தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவ அதிகாரி சுரேஷ் பட்டீல்,

’’ஜனாதிபதிக்கு ஒதுக்கப்பட்ட 5 ஏக்கர் நிலத்துக்கும் வேலி போடப்பட்டுள்ளது. அந்த நிலத்தில் உள்ள வெள்ளையர் கால இரண்டு பங்களாக்களை இடித்து விட்டு, ஜனாதிபதிக்காக வீடு கட்டி வருகிறார்கள்.4,500 சதுர அடி பரப்புள்ள வீடு கட்டப்பட்டு வருகிறது. இந்த வீட்டுக்காக, 5 ஏக்கர் நிலத்துக்கும் வேலி எழுப்பியது ஏன்? என்று தகவல் பெறும் உரிமை சட்டப்படி, ராணுவ உயர் அதிகாரிக்கு கடிதம் எழுதினேன். ஆனால், பதில் வரவில்லை’’ என்று கூறினார்.இந்த குற்றச்சாட்டு குறித்து கேட்டபோது, ஜனாதிபதி மாளிகை செய்தித்தொடர்பாளர் அர்ச்சனா தத்தா,’’ஜனாதிபதியின் ஓய்வு கால இல்ல விவகாரத்தில், அனைத்து விதிமுறைகளும் சரிவர பின்பற்றப்படுகின்றன. எந்த தவறும் நடக்கவில்லை.விதிமீறலும் நடக்கவில்லை. அந்த நிலம், ராணுவ நிலம். அதை எந்த தனிநபரின் பெயருக்கும் மாற்றுவது என்ற கேள்வியே எழவில்லை. ஜனாதிபதியின் வாழ்நாள்வரை, அங்கு கட்டப்படும் வீடு அவரிடமே இருக்கும்.

அவர் வாழ்நாளுக்கு பிறகு, அது ராணுவத்திடம் ஒப்படை க்கப்பட்டு விடும். அங்கு புதிய கட்டுமானம் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. புனரமைப்பு பணி மட்டுமே நடைபெறுகிறது. அங்கு வேலி எழுப்பப்பட்டது குறித்து ராணுவ அமைச்சகம்தான் பதில் அளிக்க வேண்டும்’’ என்று கூறினார்.விதிமுறையின்படி, ஜனாதிபதியாக இருப்பவர் ஓய்வு பெற்ற பிறகு, அவர் விருப்பப்படி இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் பங்களா பெற்றுக் கொள்ளலாம். ஏற்கனவே அரசு பங்களா இருக்கும் இடமாக இருந்தால், அது மத்திய மந்திரிகளுக்கு ஒதுக்கப்படும் உயர்ரக வீட்டுக்கு சமமாக இருக்க வேண்டும்.அரசு பங்களா இல்லாத இடமாக இருந்தால், 4,500 சதுர அடிக்கு மிகாத வீடு கட்டித்தரப்பட வேண்டும். ஓய்வு பெற்ற ஜனாதிபதியின் இறப்புக்கு பிறகு, அவருடைய வாழ்க்கைத்துணை அந்த பங்களாவை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இனிய நந்தன புது வருட வாழ்த்துகள்!!!


தமிழ்ப்புத்தாண்டில் வழிபட...

தமிழ்ப்புத்தாண்டு சித்திரை மாதம் (ஏப்ரல் 13) முதல் தேதி மிகவும் சிறப்பான நாள். அன்றைய தினத்தில் அதிகாலை எழுந்து குளித்து புதிய ஆடைகளை அணிந்து கோயில்களுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்வர். எல்லா கோயில்களிலும் சிறப்பு பூஜை வழிபாடுகள் நடைபெறும். மலர்கள் மலருமு, சகல நற்காரியங்களையும், செய்வதற்கேற்ற காலம்இது. சித்திரை வருஷப்பிறப்பினை கேரள மக்கள் விஷூக்கனிகாணல் என்று கொண்டாடுவர் முதல் நாள் இரவு பூஜை அறையை சுத்தம் செய்து திருவிளக்கின் முன் கோலமிட்டு பூ, பழம், வெற்றிலை பாக்கு அணிகலன்கள், முகம் பார்க்கும் கண்ணாடி போன்றவற்றை வைப்பர். புத்தாண்டு தினத்தன்று அதிகாலை வீட்டில் உள்ள பெரியவர் ஒருவர் எழுந்து குளித்து பூஜை அறைகளில் திருவிளக்கு ஏற்றி வழிபாடு செய்த பின் வீட்டில் உள்ள அனைவரையும் எழுப்பி பூஜை அறைக்கு அழைத்து வருவர். அவர்கள் கண்களை திறக்காமல் மூடிய நிலையிலேயே வந்து பூஜை அறையில் வைத்துள்ள விளக்குகள் அருகில் வந்து கண்களை திறப்பர். முதலில் கடவுளின் திருஉருவப்படங்களையும், ஏற்றிய விளக்கினையும், மாங்கல்யப் பொருட்களையும் பார்ப்பதால் அந்த ஆண்டு மகவும் மகிழ்ச்சிதரும் தமிழ் வருடப்பிறப்பினை முன்னிட்டு திருப்பதி, திருப்பதி, திருத்தனி, முதலான கோயில்களுக்கு சென்று தரிசித்து வருகின்றனர்.

தமிழ் வருடப்பிறப்பான சித்திரை மாதம் முதல் நாளை கேரள மக்கள் கொன்னம்பூ வைத்து பூஜிக்கின்றனர். சித்ரா பௌர்ணமி : இந்த நோன்பை எல்லோரும் சிறப்பாக கொண்டாடுவர்கள் சித்திரை நட்சத்திரம், பௌர்ணமி தினத்தில் அல்லது ஒர நாள் முன் - பின்னாக வருவதால் அந்த மாதத்திற்கு சித்திரை மாதம் என்று பெயர். சித்திர குப்தனை வேண்டிக்கொண்டு பெரும்பாலும் பெண்களே விரதம் மேற்கொள்கின்றனர். சித்ரா பௌர்ணமி தினத்தில் சித்திர குப்தனைப்போல ""மாக் கோலம் போட்டு, ஏடு, எழுத்தாணி வைத்து விளக்கேற்றி பூஜை செய்து பொங்கலிட்டு வழிபடுவர். பாவங்களிலிருந்து விடுபடவும், நரகத்திற்கு போகாமலிருக்கவும் இந்த விரதம் மேற்கொள்கின்றனர். இரவு நேரத்தில் சித்திரபுத்திர நாயனார் கதையும் சொல்வதுண்டு, திருவண்ணாமலையிலும், காஞ்சிபுரத்திலும், சித்திரகுப்தனுக்கு தனியாக ஒரு கோயில் உள்ளது. சித்ரா பௌர்ணமி தினத்தில் பூஜைகள், புறப்பாடும் உற்சவமும் நடைபெற்று வருகிறது. இதே போல் குற்றாலம் மலைமீதுள்ள செண்பகாதேவி அம்மன் கோவிலிலும் சிறப்பு பூஜை வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  ஆதி நாளிலிருந்தே தமிழர் கொண்டாடும், திருவிழாக்களில் சித்ரா பவுர்ணமியை ஒட்டி நடைபெறும், சித்திரை திருவிழா தனிச்சிறப்புடையது. தென்னாட்டு கோவில்களில் குறிப்பிடத்தக்க மதுரை கோயிலில் அழகர் ஆற்றில் இறங்கும் சித்திரை திருவிழா சிறப்பாக நடைபெறுகிறது. அதே போல் திரு நங்கைகள் (அரவாணிகள்) கொண்டாடும் கூத்தாண்டவர் திருவிழாவும், சித்ரா பவுர்ணமி அன்றுதான் நடைபெறுகிறது. சித்திரை திருநாளில் சித்திர குப்தனை வணங்குவோம். சிறப்பு பலபெறுவோம். மேலும் இந்த (நந்தன) தமிழ் புத்தாண்டை தமிழர்கள் மட்டுமின்றி வங்காளிகள் நவபர்ஷா என்றும், காஷ்மீர் மக்கள் நவ்ரே புத்தாண்டு என்றும், சிந்து மகாணாத்தில் வசிக்கும் சிந்து இனத்தவர்கள் சேட்டி -சந்த் என்றும், கேரள மக்கள் விஷீகனிபார்த்தல் (விஷூ கனி காணுதல்) என்றும் கொண்டாடி வருகிறார்கள். இந்தியாவில் ஒவ்வொரு மாநிலங்களில் உள்ள கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடக்கும். கேரளா கோயில்களில் பூஜையின் போது அர்ச்சகர்கள் பூஜையில் வைத்து பக்தர்களுக்கு கொடுக்கும் பணத்தை கைநீட்டம் என கூறுவதுண்டு. நித்திரைக்கு விடை கொடுக்கும் சித்திரையே வருக. எம் தேசத்து மக்களுக்கு சிறப்பான வாழ்வை அருள்க!

அனைவருக்கும் கல்விசட்டம்: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு!


நாடு முழுவதும் அனைத்து மாணவர்களுக்கும் கட்டாய கல்வி வழங்கும் அடிப்படை உரிமை என்ற சட்டத்தை சுப்ரீம் கோர்ட் ஏற்றுக்கொண்டுள்ளது.மேலும் இந்த சட்டத்திற்குட்பட்டு பள்ளிகளில் ஏழை சிறார் மற்றும் சிறுமிகளுக்கு 25 சதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.கடந்த ஆண்டில் அனைவருக்கும் கல்வி என்ற அடிப்படை உரிமை சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. இதனை எதிர்த்து தமிழகம் உள்பட பல மாநிலங்களில் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டிலும் பதிவானது. வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி கப்பாடியா தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரித்து இன்று தீர்ப்பளித்தது.இந்த தீர்ப்பில்  அனைவருக்கும் கல்வி என்பது அரசியலமைக்கு சட்டமாக்கப்படுகிறது. இன்று முதல் இந்த சட்டம் நடைமுறைக்கு வருகிறது. இதன்படி ஏழை மாணவர்களுக்கு 25 சதம் இடம் ஒதுக்கப்பட வேண்டும். இது அரசுபள்ளிகள், அரசு உதவி பெறுபள்ளிகள், மற்றும் பெறதா பள்ளிகள் இதனை நடைமுறைப்படுத்த வேண்டும்.அதே நேரத்தில் அரசு உதவி பெறாத சிறுபான்மை பள்ளிகள் இதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. ஏற்கனவே சேர்க்கை முடிந்துள்ள பள்ளிகள் இது குறித்து பிரச்னை இருக்காது. இவ்வாறு நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் கூறியுள்ளனர். இதன் மூலம் பல மாநிலங்களில் நிலுவையில் இருந்த வழக்குகள் முடிவுக்கு வரும்.

இதே நாள்...


  • ஹங்கேரி நாடு குடியரசானது(1849)
  • கூகுள் காலண்டர் வெள்ளோட்டம் விடப்பட்டது(2006)
  • அமெரிக்காவின் முதல் வணிக செயற்கைகோளான வெஸ்டார் 1 ஏவப்பட்டது(1974)
  • ஐயன் ஃபிளமிங், தனது முதலாவது ஜேம்ஸ் பாண்ட் புதினத்தை வெளியிட்டார்(1953)

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...