|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

13 April, 2012

சூப்பர் சேஸ் செய்த சூப்பர் கிங்ஸ்-ஐபிஎல் வரலாற்றில் 2வது முறை!


ஐபிஎல் வரலாற்றில் 2வது முறையாக ஒரு பெரிய சேசிங்கை நடத்தி முடித்துள்ளனர் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள்.இன்று தமிழ்நாட்டில் தமிழ்ப் புத்தாண்டு, ஆனால் நேற்று சேப்பாக்கத்தில் தீபாவளியைக் கொண்டாடி விட்டனர் சென்னை வீரர்கள். அட்டகாசமான ஆட்டமாக மாறிப் போன இந்தப் போட்டியில் சென்னை வெற்றி பெறுமா என்பது 18 ஓவர்கள் வரை நிச்சயம் இல்லாமல்தான் இருந்தது. ஆனால் 19 மற்றும் 20வது ஓவர்களில் கண்ணு மண்ணு தெரியாமல் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் பேட் செய்த விதத்தால் போட்டியை பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸடமிருந்து அதிரடியாக தட்டிப் பறித்து விட்டனர்.ஐபிஎல் போட்டி வரலாற்றில் ஒரு பெரிய ஸ்கோரை சேஸ் செய்து வெற்றி பெறுவது என்பது இது 2வது முறையாகும்.2008ம் ஆண்டு நடந்த ஐபிஎல் போட்டியில், ஹைதராபாத்தில் ராஜஸ்தான் ராயல்ஸுக்கும், டெக்கான் சார்ஜர்ஸுக்கும் இடையே நட்நத போட்டியில், ராஜஸ்தான் அணி, ஹைதராபாத்தின் 214 என்ற ஸ்கோரை சேஸ் செய்து 217 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதுவே இன்று வரை அதிகபட்ச சேசிங்காக உள்ளது.

இதற்கு அடுத்த அதிகபட்ச சேசிங்கை நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் செய்தது. முதலில் பேட் செய்த பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் 205 என்ற ஸ்கோரை சேஸ் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ், 208 ரன்கள் குவித்து சிறப்பாக வென்றது.இதற்கு அடுத்த பெரிய சேசிங்காக உள்ளது 2010ல் பெங்களூரில் நடந்த போட்டியில், கிங்ஸ் லெவன் பஞ்சாபின் 203 ரன் இலக்கை, 204 ரன்கள் எடுத்து பெங்களூர் எட்டியதே.அதேபோல அதே ஆண்டு கொல்கத்தாவில் நடந்த போட்டியில், முதலில் ஆடிய கொல்கத்தா 200 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் 204 ரன்கள் எடுத்து வென்றது.

இதேபோல சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெரிய ஸ்கோரை சேஸ் செய்வது இது 2வது முறையாகும். இதற்கு முன்பு 2010ல் தர்மசலாவில் நடந்த போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் முதலில் பேட் செய்து 192 ரன்கள் குவித்தது. இதை அருமையாக சேஸ் செய்த சென்னை, 4 விக்கெட் இழப்புக்கு 195 ரன்கள் எடுத்து வென்றது.நடப்பு தொடரில் நான்கு போட்டிகளில் ஆடி 2 போட்டிகளில் வென்றும், 2 போட்டிகளில் தோற்றும் சம நிலையை எட்டியுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ். இதுவரை தட்டுத் தடுமாறி ஆடி வந்த அந்த அணி நேற்று பேட்டிங்கிலும், பவுலிங்கிலும் காட்டிய அதிரடி ரசிகர்களை குஷிப்படுத்தியதோடு, சென்னை சூப்பர் கிங்ஸ் சூப்பர் பார்முக்கு வந்து விட்டதாகவும் அவர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.



7 பந்தில் 5 விக்கெட்டு

ராயல்சேலஞர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் கடைசி ஓவர்களில் 7 பந்துகளில் 5 விக்கெட்டுகளை அள்ளிக்கொண்டு சென்ற போலஞ்சரும் ஜடேஜாவும் சரித்திரம் படைத்துவிட்டனர்.ஐ.பி.எல். 5-வது தொடரில் 13வது போட்டியில் சென்னை சூப்பர்கிங்ஸும் ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களூரும் மோதின.முதலில் ஆடிய பெங்களூர் அணி திறமையாகத்தான் ஆடிவந்தது. 18-வது ஓவரின் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 190 ரன்களை எடுத்திருந்தது ராயல்சேலஞ்சர்ஸ் அணி. விக்கெட்டுகள் கைவசம் இருக்க.. நல்ல ஸ்கோரையும் எட்டும் என்றே எதிர்பார்க்கப்பட்டது.

எல்லாமே தலைகீழாகிப் போனது கடைசி 2ஓவர்களில்தான்! 19-வது ஓவரை வீசியவர் "ரூ10" கோடி ஜடேஜா. அவர் 19--வது ஓவரின் கடைசி பந்தில் எஸ்.எஸ். திவாரியை அவுட் செய்தார். அப்போது ராயல்சேலஞ்சர்ஸ் அணியின் ஸ்கோர் 198. ஜடேஜா வீசிய பந்தை அடித்த திவாரியை கேட் செய்தார் ரெய்னா.20-வது ஓவரின் முதல் பந்தில் விராத் கோஹ்லி, 2-வது பந்தில் புஜாரா, 4-வது பந்தில் வெட்டோரி, 5-வது பந்தில் பத்கால் என ஒரே ஓவரில் 4 விக்கெட்டுகளை போலிஞ்சர் அளிக்கொண்டு போனார்.198-ல் அவுட் ஆகத் தொடங்கிய ஆட்டம் ஒரே ஒரு ரன்னை சேர்க்கவே 5 விக்கெட்டுகளைப் பறிகொடுத்தது. 7 பந்துகளில் 5 விக்கெட்டுகளைப் பறித்தது சென்னை சூப்பர்கிங்ஸ் அணி.கோஹ்லி அடித்த பந்து நேராஆக பிளெஸ்ஸிஸ் கைகளில் போய்ச் சேர்ந்தது. அடுத்த பந்தை எதிர்கொண்ட புஜாரா ரன் ஏதும் எடுக்காமலேயே அவுட்டாகிப் போனார்.

ஹாட்ரிக் விக்கெட்டுகளை எடுத்துவிடுவார் போலிஞ்சர் என்ற எதிர்பார்ப்பை தகர்த்தார் வெட்டோரி.. ஒரு ரன்னை எடுத்தார். ஆனால் அடுத்த பந்தை வெட்டோரி எதிர்கொண்டார். தமது ரன்னுக்கு அவர் முயற்சித்தாலும் விக்கெட் பறிகொடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்.அதேபோல் அடுத்து ஆடிய பத்காலும் அவுட்டாகி வெளியேறினார்.. கடைசிபந்தில் ஒரு பவுண்டரியை வினய்குமார் அடிக்க ராயல்சேலஞர்ஸ் பெங்களூர் அணி 205 ரன்களை எடுத்தது.கடைசி ஓவரில் மட்டும் 6 பந்துகளில் 4 விக்கெட்டுகளை பறித்தார் போலிஞ்சர். மொத்தம் கடைசி 2 ஓவர்களில் 7 பந்துகளில் 5 விக்கெட்டுகள் என சரித்திரம் படைத்தது சென்னை சூப்பர்கிங்ஸ் 

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...