|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

23 February, 2012

Taken at the Right Moment...












மூச்சுப்பயிற்சி சுகப்பிரசவத்தை ஏற்படுத்தும்!


கர்ப்பிணிகள் மூச்சுப் பயிற்சி மேற்கொள்வது பிரசவத்தை எளிதாக்கும் என்று மகப்பேறு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பிரசவ வலி ஏற்பட்டு குழந்தை பிறக்கும் முன்னர் மூச்சுப் பயிற்சி செய்வதால் சுகப்பிரசவம் ஏற்படுவது எளிதாகிறது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். பிரசவ வலி என்பது, ஏதோ வலி எடுத்தது... உடனே குழந்தை பிறந்தது என்பது போன்ற சாதாரண விஷயமில்லை... தாய்க்கு அதீத வலி இருந்தாலும் பத்து மாதங்களாக தன்னுள் வளர்த்த ஒரு உயிரை உலகிற்கு அறிமுகப்படுத்தும் சந்தோச தருணம்.

பிரசவத்தின் போது லேசான வலியில் தொடங்கி, அது மெதுமெதுவாய் அதிகரித்து, கடைசியாக சஸ்பென்ஸை உடைப்பதுபோல கருவில் இருந்து குழந்தை ரிலீஸ் ஆகும். சில மணி நேர அவஸ்தைக்குப் பிறகுதான் குழந்தை வெளிவரும். வெளி வரவேண்டும். இந்த வலி மெதுமெதுவாய் அதிகரிக்கவும் ஒரு குறிப்பிட்ட வரைமுறை இருக்கிறது. முதல் பிரசவத்துக்கு ஒரு வகையாகவும் அதன்பிறகு வரும் பிரசவங்களுக்கு வேறு விதமாகவும் இது அமையும்.

பிரசவ அறிகுறிகள் பிரசவ வலி எடுக்கும்போது கர்ப்பப்பையின் வாய்ப்பகுதி, அதாவது சர்விக்ஸின் நீளம் வழக்கத்தை விடவும் குறையத் தொடங்கும். இப்படி அதன் நீளம் குறையும்போதே அது மெதுவாகத் திறக்கவும் தொடங்கும். சர்விக்ஸின் இந்த இரண்டு செயல்பாடுகளுமே உண்மையான பிரசவ வலி ஏற்பட்டால் மட்டுமே ஒரே சமயத்தில் நிகழும் என்கின்றனர் மருத்துவர்கள். முதுகின் கீழ் பகுதியில் வலி ஏற்படும். பெரும்பாலும் அது வலி மிகுந்த தசை இறுக்கமாகவே இருக்கும். பிறப்புறுப்பில் இருந்து ரத்தத்துடன் கூடிய திரவம் வெளிப்படும். இந்த அறிகுறிகள் பிரசவ காலத்தை உறுதிப்படுத்துகின்றன. எனவே வலி மிகுந்த அந்த நேரத்தில் மூச்சுப் பயிற்சி மேற்கொள்வது பிரசவத்தை எளிதாக்கும் என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

மனதை ஒருநிலைப்படுத்துங்கள் மூச்சுப் பயிற்சியின் போது பிரச்சினைக்குரிய எதைப்பற்றியும் நினைக்காமல் உங்கள் மனதை ஒரு நிலை படுத்த வேண்டும்... ஒவ்வொரு முறை மூச்சை வெளி விடுவதில் மட்டும் நீங்கள் உங்கள் நினைப்பை ஒரு முக படுத்த வேண்டும்..மூச்சை உள்ளிழுத்தல் தானாக நடக்கும். மூச்சை உள்ளிருக்கும் போது அவரவருக்கு பிடித்தமானவற்றை நினைத்து மூச்சுப் பயிற்சி மேற்கொள்ளலாம். ஏதாவது ஒரு பெயரை சொல்லியபடி, அல்லது உங்களுக்குப் பிடித்த கடவுளின் பெயரைச் சொல்லியபடி பயிற்சி எடுக்கலாம். உங்கள் நினைப்பை அலைபாய விடாமல், இந்த பயிற்சியை ஒரு சீரான ஓட்டத்தில் செய்து கொண்டே இருக்க வேண்டும்.

எண் கணக்கு பெயரை நினைக்க யோசனையாக இருந்தால் எண் மூச்சு பயிற்சி மேற்கொள்ளலாம். மூச்சை மெதுவாக உள்ளிழுக்கும் பொழுது ஒன்றில் இருந்து உங்களுக்கு எத்தனை எண் மனதில் தோன்றுகிறதோ அதை எண்ணவேண்டும். அதே அளவு எண் கணக்கை நீங்க மூச்சினை வெளியில் விடும்போதும் எண்ணிக்கையில் வைத்து கொள்ளலாம். உதாரணத்துக்கு நீங்க மூச்சை உள்ளிழுக்கும் பொழுது மூன்று வரை எண்ணினால் மூச்சை வெளியில் விடும் பொழுதும் அதே மூன்று வரை மெதுவாக எண்ண வேண்டும்..முடிந்தவரை மூக்கின் வழியாக மூச்சு உள்ளிழுக்கவும் வாய் வழியாக மூச்சை வெளி விடவும் முயற்சிக்க வேண்டும்.. அவ்வப்பொழுது தொண்டை காய்ந்து போகாமல் இருக்க சிறிது தண்ணீர் பருகவும். இந்த மூச்சு பயிற்சியை கர்ப்ப காலத்தில் இருந்தே செய்து பயிலுங்கள்...பிரசவ வலியின் பொழுது இந்த பயிற்சி மிகவும் உதவும். எளிதாய் சுகப் பிரசவம் நடக்கும்.

அம்மை நோயை கட்டுப்படுத்தும் நுங்கு!


இயற்கையானது காலத்திற்கு ஏற்ப உணவுகளை அளிப்பதில் ஆற்றல் படைத்தது. கோடை காலம் வந்துவிட்டாலே நுங்கு சீசன் தொடங்கிவிடும். கோடை காலத்தில் உடலுக்கு குளுமை தரவே இயற்கையானது நுங்கினை அறிமுகப்படுத்தியுள்ளது. நுங்கு பனை மரம் தரும் அரிய பொருளாகும். இதில் கால்சியல், பாஸ்பரஸ், வைட்டமின் பி காம்ளக்ஸ், தையாமின், ரிபோஃப்ளோவின் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன. குளுமை தரும் நுங்கு கோடையின் வெம்மையை கட்டுப்படுத்துவதில் நுங்கு சிறந்த உணவுப் பொருளாகும். இது குளிர்ச்சி தருவதோடு வைட்டமின் பி, சி சத்துக்கள் நிறைந்துள்ளதால் உடலுக்கு ஆரோக்கியத்திற்கு ஏற்றது.

துவர்ப்பு சுவை பனங்காயை வெட்டினால் மூன்று அல்லது நான்கு நுங்குகள் தனித்தனியாக கிடைக்கும் அதனை அப்படியே விரலால் எடுத்து சாப்பிடலாம். இளம் நுங்கினை அப்படியே சாப்பிட வேண்டும். ஒருசிலர் மேல்தோல் துவர்ப்பாக இருக்கிறது என்பதற்காக அதனை நீக்கிவிட்டு வெறும் சதையை மட்டுமே சாப்பிடுவார்கள். இதனால் சத்துக்கள் முழுமையாக கிடைக்க வாய்ப்பில்லை. சிறு குழந்தைகளுக்கு ஜீரணமாக நேரமாகும் என்பதால் நசுக்கிக் கொடுக்கவேண்டும். முற்றிய நுங்கு, பெரியவர்களுக்கே ஜீரணமாகாது எனவே இளம் நுங்கே உண்பதற்கு ஏற்றது.

அம்மைநோய் அம்மை நோயால் அவதிப்படுபவர்கள் இளம் நுங்கை சாப்பிட்டு வர உடல் குளிர்ச்சி ஏற்படும். குடலில் உள்ள சிறு புண்களையும் ஆற்றும். பதநீரும் நுங்கும் பனை மரத்தில் இருந்து கிடைக்கும் பதநீர் சுவை மிகுந்தது. பனை மட்டையில் பதநீர் ஊற்றி இதனுடன் நுங்கை எடுத்துப்போட்டு குடித்தால் அதன் ருசியே அலாதிதான். எப்படிப்பட்ட கோடை வெப்பத்திலும் இந்த பானம் தாகத்தை தீர்க்கும் குடலுக்கும், உடலுக்கும் குளுமையை ஏற்படுத்தும். வேர்குரு போக்கும் நுங்கு கோடையில் வேர்குரு தொல்லையினால் அவதிப்படுபவர்கள் நுங்கை தொடர்ந்து சாப்பிட்டு வர வேர்க்குரு நீங்கும். தோலுடன் நுங்கை சாப்பிட்டு வர சீதக்கழிசல் நீங்கும்.

மின்சார பற்றாக்குறை 4000 மெகாவாட்



தமிழ்நாடு மின்சார வாரியம், தமிழகத்தில் உள்ள தனியார் மின் உற்பத்தி ஆலைகளிடம் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் மின்சாரத்தை வாங்கி அதனை பொதுவிநியோகத்திற்கு பயன்படுத்தி வருகிறது. ஆனால், வரும் கோடைக் காலத்திற்குத் தேவையான மின்சாரத்தை வாங்குவது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படாமல் உள்ளது என்ற மின்சார வாரிய அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். தமிழகத்தில் உள்ள 20 தனியார் மின்சார உற்பத்தி மையங்கள் 800 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றன. இதில்லாமல் வெளிமாநிங்களிடம் இருந்தும் தமிழக மின்சார வாரியம் மின்சாரத்தை பெறுவதற்கு கோரிக்கை விடுக்கும். பொதுவாக தனியாரிடம் இருந்து ஒரு யூனிட் மின்சாரம் 5 முதல் 15 ரூபாய்க்கு வாங்கப்படும். இப்படி வாங்கும் மின்சாரமே தமிழகத்தின் தேவைக்கு போதுமானதாக இருந்து வந்தது. ஆனால் 2008ம் ஆண்டில் இருந்து மின்சார பற்றாக்குறை ஏற்படத் துவங்கியது. அந்த ஆண்டுகளில் கூட மின்சார பற்றாக்குறை என்பது 2000 மெகா வாட்டாகவே இருந்தது.


 இந்நிலையில் 2011ம் ஆண்டில் பற்றாக்குறையின் அளவு 3,000 மெகாவாட்டாக உயர்ந்தது. மேலும், இந்த ஆண்டு அந்த பற்றாக்குறை 4,000 மெகாவாட்டாக உயர்ந்துவிட்டது. இன்னும் கோடைக்காலம் துவங்கிவிட்டால் இந்த அளவு மேலும் அதிகரிக்கக் கூடும் என்று மின்சாரத் துறை மேலாளர் கூறியுள்ளார். இந்த இக்கட்டான சூழ்நிலையை மின்சார வாரியம் எவ்வாறு சமாளிக்கப்போகிறது என்று இதுவரை எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை. கடந்த ஆண்டு மின் பற்றாக்குறை ஏற்பட்டபோது 1,500 மெகாவாட் மின்சாரத்தை மிக அதிக விலை கொடுத்து வாங்கி நிலையை சரி செய்தோம். ஆனால் இம்முறை யாரிடமும் மின்சாரத்தை வாங்க முடியாது. ஏனெனில் இதுவரை நமக்கு மின்சாரம் அளித்தவர்களுக்கு 10,000 கோடி பாக்கி வைத்துள்ளோம்.


தற்போது தமிழ்நாடு மின்சார வாரியத்தால் வெறும் 150 மெகாவாட் மின்சாரத்தையே பெற முடியும். ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் இருக்கும் தமிழ்நாடு மின்சார வாரியம், அதிக விலை கொடுத்து மின்சாரத்தை வாங்க இயலாத சூழ்நிலையில் உள்ளது. ஒரு யூனிட் 4 ரூபாய்க்குக் கிடைத்தால் மட்டுமே வாங்கக் கூடிய சூழ்நிலை நிலவுகிறது. இன்னும் ஒரு சில மாதங்கள் இந்த மோசமான நிலைமையை தாங்கிக் கொள்ள வேண்டிய நிலையில் உள்ளோம். மே மாதத்தில் காற்றாலை மின் உற்பத்தி அதிகரித்துவிடும். வல்லூர், மேட்டூர், வடசென்னைப் பகுதிகளில் அமைக்கப்படும் மின் உற்பத்தி ஆலைகளும் இந்த ஆண்டில் செயல்படத் துவங்கிவிட்டால் மின்சாரத் தேவையை பூர்த்தி செய்து விடலாம். இப்போது நமது தேவை 11,500 மெகாவாட்டாகவும், உற்பத்தியின் அளவு வெறும் 7,500 மெகாவாட்டாகவும் உள்ளது. கோடைக் காலத்தில் இரவில் மக்கள் குளிர்சாதன வசதியைப் பயன்படுத்துவதால்தான் அதிகளவில் மின்சாரம் தேவைப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

சிவனை வழிபட நல்ல நேரம்.


பிரதோஷ காலம் என்பது என்ன? சிவ தரிசனம் செய்ய, அது ஏன் விசேஷமாகச் சொல்லப்படுகிறது?சிவனை வழிபட ஏற்ற காலம் மாலை நேரம்; அதிலும் சிறந்தது சோமவாரம்; (திங்கட்கிழமை) அதிலும் சிறந்தது மாத சிவராத்திரி, அதிலும் சிறந்தது பிரதோஷ காலம். பிரதோஷ காலத்தில் சிவதரிசனம் செய்பவர்கள், எல்லா தேவர்களையும் தரிசித்த பலனையும் பெறுவர். பிரதோஷ காலத்தில், சகல தேவர்களும், சிவதரிசனம் செய்ய வந்து விடுகின்றனர். அதனால், நம் வீடுகளில் தெய்வ வழிபாடு பிரதோஷ காலத்தில் அவசியமில்லை.பிரதோஷ காலங்களில் சிவதரிசனம் செய்வதால், சகல பாவங்களும் விலகி, புண்ணியம் கிடைக்கும்; சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும்; சோமாஸ் கந்த மூர்த்தியை தரிசிப்பதால், இந்திரனுக்கு சமமான புகழ் கிட்டும்; பிரதோஷ காலத்தில் சிவாலயத்தில் செய்யப்படும் எந்த கைங்கர்யமும் பலவாகப் பெருகி, அளவற்ற பலனை கொடுக்கும்.



பிரதோஷ காலத்தில் சிவன் கோவில் வழியாகப் போனான் ஒருவன். போகும்போது வெற்றிலை பாக்கு போட்டுக் கொண்டே போனான். வெற்றிலை பாக்கு போட்ட பிறகு, விரலில் கொஞ்சம் சுண்ணாம்பு இருந்தது. அதை வழியிலிருந்த சிவன் கோவில் சுவரில் தடவி விட்டுப் போனான். ஆனால், அதுவே பெரும் புண்ணியமாகி விட்டது. இவன் தடவிய சுண்ணாம்பு, மதில் சுவரில் இருந்த ஒரு சிறிய பள்ளத்தை அடைத்து விட்டது. உடனே, சிவன் கோவிலில், கைங்கரியம் செய்த புண்ணியம் இவனுக்கு சேர்ந்து விட்டது.இப்படியாக சிவ கைங்கர்யம், வழிபாடு எல்லாவற்றுக்குமே புண்ணியம் சொல்லப்படுகிறது. சிவன் கோவிலில், "சோம சூத்ர பிரதட்சணம்...' என்று ஒன்று உண்டு. இது, கொஞ்சம் சிக்கலானது. புரிந்து கொள்வது கூட சிரமம்; புரிந்து செய்தால் புண்ணியம். பிரதோஷ காலத்தில் சிவ தரிசனம் செய்வது புண்ணியம். ¬முன் மண்டபத்தில் உள்ள நந்தியின் கொம்புகள் வழியாக சிவலிங்க தரிசனம் செய்ய வேண்டும் என்பது சாஸ்திரம்.சிரமப்பட்டாவது பிரதோஷ காலத்தில், சிவதரிசனம் செய்தால் புண்ணியம் கிடைக்கும்.

இதே நாள்...


  • கயானா குடியரசு தினம்(1970)
  •  உலக தரநிர்ணய அமைப்பு( ஐ.எஸ்.ஓ.,) ஆரம்பிக்கப்பட்டது(1947)
  •  ரோட்டரி அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது(1905)
  •  ருடொல்ஃப், டீசல் இயந்திரத்திற்கான காப்புரிமம் பெற்றார்(1893)
  •  புளூட்டோனியம் முதல் முறையாக உருவாக்கப்பட்டது(1941)

பணம் கொடுக்கும் போதோ, வாங்கும் போதோ தவறி கீழே விழுந்தால்?

தளர்ந்து இருக்கக்கூடிய மனதை சரிசெய்வதே நமது கடமை. அதனால், பணம் மற்றும் மங்கள பொருட்களை கொடுக்கும் போதோ, வாங்கும் போதோ தவறி கீழே விழுந்தால் அங்கு நல்ல காரியங்கள் நடைபெறும் என்று சொல்லுவது பெரியோர்களின் வழக்கம். கீழே விழுவதினால் மனம் பதறும் என்ற காரணத்தினால் துக்கம் அடையாமல் உற்சாகத்துடன் இருத்தல் வேண்டும் என்பதினால் கூறியிருக்கலாம். இதனால் பணம் தவறி விழுந்தால் லாபம் என்று கூறி நமக்கு நாமே திருப்தி பட்டு கொள்கிறோம். அதே சமயம் நாம் தவறி கீழே விழுந்தால் நஷ்டமாகி அல்லவா போய்விடும்! பணமோ மங்கலப்பொருள்களோ எதனால் கீழே விழுகிறது, பதற்றம் அடைந்தால் தான் தவறிப்போய் கீழே விழுகிறது. எனவே எதையும் தவறாமல் கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது. பதறாத காரியம் சிதறாது.

போலீசார் நாட்டில் அமைதியை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டுமோழிய, வன்முறை உருவாக காரணமாக அமைந்து விடக்கூடாது சுப்ரீம் கோர்ட்


 போலீசார் நாட்டில் அமைதியை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டுமோழிய, வன்முறை உருவாக காரணமாக அமைந்து விடக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் 4 மற்றும் 5 தேதிகளில் கறுப்பு பணம் மீட்டு கொண்டு வரக்கோரி டில்லியில் டில்லி ராம்லீலா மைதானத்தில் யோகாஉண்ணாவிரத போராட்டம் நடத்தினார். மைதானத்தில் இரவில் தூங்கி கொண்டிருந்தவர்களை அப்புறப்படுத்தும் முயற்சியில் போலீசார் களம் இறங்கினர். இது போலீசாருக்கும், கூடியிருந்தவர்களுக்கும் இடையே கைகலப்பாக மாறியது. தொடர்ந்து தடியடி நடத்தப்பட்டது. இதில் பலர் காயமுற்றனர். ராம்தேவ் மேடையில் இருந்து குதித்து ஆதரவாளர்களுடன் கலந்து போலீசார் பிடியில் இருந்து தப்பினார். ஒருவர் பலியானார்.

போலீசார் அத்துமீறி நடந்து கொண்டதாகவும், ஜனநாயக உரிமை மறுக்கப்பட்டதாகவும் ராம்தேவ் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி.எஸ்.,சவுகான் மற்றும் சுவாதந்தர் ஆகியோரை கொண்ட பெஞ்ச் விசாரித்து. இன்று தங்களுடைய தீர்ப்பில் ; இந்த சம்பவத்தில் பலியான குடும்பத்தினைர சேர்ந்த ராஜாபாலா என்பவரது குடும்பத்தினருக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும், பலமான காயமுற்றவர்களுக்கு நிவாரணமாக ரூ. 50 ஆயிரமும், லேசான காயமுற்றவருக்கு ரூ. 25 ஆயிரமும் வழங்க வேண்டும். நாட்டில் ஒரு பிரச்னை இருக்கிறதென்றால் இந்த இடத்தில் போலீசார் அதிகபட்சமாக அமைதியை உருவாக்க முயற்சிக்க வேண்டும். அத்துமீறி அங்கு ஒரு வன்செயல்கள் நடக்க காரணமாக அமைந்து விடக்கூடாது.இந்த போராட்டத்தை பொறுத்தவரை அடிப்படையான உரிமையுடன் கூடிய போராட்டம் . இதனை நசுக்க முயற்சிக்க கூடாது. மக்களுக்கும், மக்களை ஆளும் அரசுக்கும் இடையே நம்பிக்கை குறைந்தததை காட்டுகிறது. அதே நேரத்தில் ராம்தேவ் ஆதரவாளர்களும் வன்முறையில் ஈடுபட்டத கண்டிக்கத்தக்கது என்றும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக பத்திரிகைகள் மற்றும் மீடியாக்களில் வெளியான செய்திகள், கிளிப்பிங்ஸ்கள் ஆகியவற்றை கோர்ட் ஆதாரமாக எடுத்து கொண்டது.

கோர்ட் தீர்ப்பு : மத்திய அரசுக்கு கண்டனம்: அடிப்படை உரிமை மறுக்கப்பட்டதன் அம்சத்தை கோர்ட் ஏற்றுக்கொண்டுள்ளது. இதற்கு மாநில போலீசாரும், மத்திய அரசும் தான் பொறுப்பு என பா.ஜ., மூத்த நிர்வாகிகள் , ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசுவாமி, பிரபல வக்கீல் ராம்ஜெத்மலானி ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது குறித்து ராம்ஜெத்மலானி கூறுகையில் : இந்த வழக்கு பாபா ராம்தேவுக்கு வெற்றியாக அமைந்துள்ளது. அவர் பக்கம் நியாயம் இருப்பது கண்கூடாக தெரிய வருகிறது . உள்துறை அமைச்சகத்தின் மூலம் வந்த உத்தரவே மக்களை வெளியேற்ற காரணமாக இருந்தது. இதனால் உள்துறை அமைச்சர் சிதம்பரம் ராஜினாமா செய்ய வேண்டும் என்றார். இது குறித்து பாபா ராம்தேவ் கூறுகையில்:ராம்லீலா மைதானத்தில் அமைதியை பின்பற்ற வேண்டும் என்றுதான் எனது தொண்டர்களிடம் கூறியிருந்தேன். யாரையும் நான் தூண்டும்படி நடந்து கொள்ளவில்லை. என்னை வேண்டுமானால் கைது செய்யுங்கள் என்று கூறினேன் ஆனால் போலீசார் அதனை பொருட்படுத்தாமல் அனைவரையும் தாக்க துவங்கினர். அரசு அரசியலமைப்பு சட்டத்தை பின்பற்ற தவறக்கூடாது. 2 ஜி வழக்கு தீர்ப்பிற்கு பின்னர் மத்திய அரசுக்கு மேலும் ஓரு அடியாக இந்த தீர்ப்பு இருக்கும். உள்துறை அமைச்சகத்திடம் இருந்து மாநில போலீசார் நெருக்கடிக்கு உள்ளாயினர் என்பது தெளிவாகிறது என்றார். ஜனதாகட்சி தலைவர் சுப்பிரமணிய சுவாமி இது குறித்து கூறுகையில்; இதற்கு முழுக்காரணமான சிதம்பரம் பதவி விலக வேண்டும் என்றார்.

கருணை மனுவை பரிசீலிக்க 11 ஆண்டுகளா? சுப்ரீம் கோர்ட் கவலை!


மரண தண்டனை கைதியின் கருணை மனுவை பரிசீலிக்க, மத்திய அரசு பல ஆண்டு கால அவகாசம் எடுத்து கொள்வதற்கு சுப்ரீம் கோர்ட் கவலை தெரிவித்துள்ளது. டில்லியில், கடந்த 93ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ரெய்சினா சாலையில் உள்ள இளைஞர் காங்கிரஸ் அலுவலகத்தில் குண்டு வெடித்ததில் ஒன்பது பேர் பலியாயினர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய பஞ்சாப் பயங்கரவாதி தேவேந்தர் பால் சிங்குக்கு சுப்ரீம் கோர்ட் கடந்த 2002ல் மரண தண்டனை அறிவித்தது. இதை தொடர்ந்து தேவேந்தர் பால் சிங், ஜனாதிபதிக்கு 2003ல் கருணை மனு செய்தார். இதுநாள் வரை இந்த மனு பரிசீலனையில் உள்ளது. இந்த கருணை மனுவை விரைவில் பரிசீலிக்கக்கோரி, தேவேந்தர் பால் சிங் சார்பில் தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்யப்பட்டு வருகிறது. இது தொடர்பாக மத்திய அரசிடம் சுப்ரீம் கோர்ட் விளக்கம் கேட்டிருந்தது. "ஜனாதிபதியிடம் உள்ள கருணை மனுவை விரைவில் பரிசீலிக்கும் படி வற்புறுத்த முடியாது. அரசியலமைப்பு சட்டப்படி உயர் அதிகாரம் படைத்த ஜனாதிபதி, கருணை மனுவை பரிசீலிக்க காலக்கெடு ஏதும் கிடையாது' என, மத்திய அரசு சார்பில் பதில் அளிக்கப்பட்டது. இதற்கிடையே இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்திய சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, எஸ்.ஜெ.முகோபாத்யாய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், "ஒவ்வொரு மாநிலங்களில் உள்ள கருணை மனு தொடர்பான ஆவணங்களை உள்துறை செயலர்கள், மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும். மாநிலங்களிடமிருந்து பெறப்பட்ட கருணை மனு தொடர்பான ஆவணங்களை, மூன்று நாட்களுக்கு சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு சமர்ப்பிக்க வேண்டும். ஒரு கருணை மனுவை பரிசீலிக்க 11 ஆண்டு காலம், எட்டு ஆண்டு காலம் எடுத்து கொள்வது வருத்தம் அளிக்கிறது' என்றது.

யாருக்குச் சொந்தம் கணவர்கள் மோதல்!!!


முதல் திருமணத்தை மறைத்து ராமநாதபுரத்தை சேர்ந்த இருவரை காதலித்து திருமணம் செய்த பெண், யாருக்கு சொந்தம் என கடைசி இரண்டு கணவர்களிடையே தகராறு ஏற்பட்டது. பட்டுக்கோட்டை சுப்பிரமணி மகள் ரேணுகா, 27. இவரது 14 வயதில் அதே பகுதியை சேர்ந்த தென்னரசுக்கு திருமணம் செய்து கொடுத்தனர். இவர்களுக்கு இரண்டு பெண், ஒரு ஆண் குழந்தை உள்ளனர். தென்னரசு, வேலை தேடி வெளிநாட்டிற்கு சென்றார். பட்டுக்கோட்டையில் ராமநாதபுரத்தை சேர்ந்த கார் டிரைவர் செந்தில்குமார் என்பவரை ரேணுகா சந்தித்தார். அப்போது முதல் திருமணத்தை மறைத்த ரேணுகா, கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் செந்தில்குமாரை திருமணம் செய்து கொண்டார். (செந்தில்குமார் மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தவர்).

இருவரும் ராமநாதபுரம் அண்ணாநகர் பகுதியில் வசித்து வந்தநிலையில், அரண்மனை அருகே ஒரு கடையில் ரேணுகா வேலைக்கு சென்றார். அங்கு வந்து சென்ற வாடிக்கையாளரான மதுரை திருப்பரங்குன்றம் செந்தில்மனோகரன் என்பவரிடம் ரேணுகா, முதல் இரண்டு திருமணம் மற்றும் குழந்தைகள் விபரத்தை மறைத்தார். இவர்கள், கடந்த ஜனவரியில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் திருமணம் செய்தனர். பின்னர் இவர்கள் ராமநாதபுரம் சக்கரக்கோட்டையில் வசித்து வந்தனர்.

மனைவியை காணவில்லை என செந்தில்குமார் தேடி வந்தபோது, சக்கரக்கோட்டையில் வசித்து வருவது தெரிந்தது. அங்கு சென்று ரேணுகாவை தன்னுடன் அனுப்பி வைக்க செந்தில் மனோகரனை வற்புறுத்தினார். இருவருக்கும் இடையே, ரேணுகா, யாருக்கு சொந்தம் என்பதில் தகராறு ஏற்பட்டது. இருவரும் ராமநாதபுரம் மகளிர் போலீசில் புகார் செய்தனர். ராமநாதபுரம் இன்ஸ்பெக்டர் மீனாம்பாள், ரேணுகாவிடம் நடத்திய விசாரணையில், ""ஆடம்பரமாகவும், வசதியாகவும் வாழவே, முதல் மற்றும் இரண்டாவது திருமணத்தை மறைத்து மூன்றாவது திருமணமும் செய்து கொண்டேன்,'' என தெரிவித்தார்."இனி ராமநாதபுரம் பக்கமே தலைகாட்டக்கூடாது' என எச்சரித்து, பட்டுக்கோட்டையில் உள்ள பெற்றோரிடம் ரேணுகாவை, போலீசார் ஒப்படைத்தனர். இதில் ஏமாற்றமடைந்த செந்தில்மனோகரன், செந்தில்குமாருக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தன

வட மாநிலத்தை சேர்ந்த கொள்ளையர்கள் 5 பேர் தமிழக போலீசாரால் சுட்டு கொல்லப்பட்டனர்.



 சென்னையி்ல் வங்கி்க்கொள்ளையில் ஈடுபட்டு வந்த வட மாநிலத்தை சேர்ந்த கொள்ளையர்கள் 5 பேர் தமிழக போலீசாரால் சுட்டு கொல்லப்பட்டனர். இது போன்று 5 பேர் கொல்லப்படுவது தமிழகத்திலேயே இதுதான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில், கடந்த மாதம் 23ம் தேதி பெருங்குடி பாங்க் ஆப் பரோடா வங்கி மற்றும் இம்மாதம் 20ம் தேதி கீழ்க்கட்டளை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆகியவற்றில், 39 லட்சம் ரூபாய் பணம் துப்பாக்கி முனையில் கொள்ளையடிக்கப்பட்டது. இதையடுத்து வங்கி கொள்ளையில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியின் படத்தை வெளியிட்டு, சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதி பேட்டியளித்தார்.

இந்த சூழ்நிலையில் சென்னை வேளச்சேரி பகுதியில் வண்டிக்காரன் தெருவி்ல் உள்ள வீடு ஒன்றில் இந்த வங்கி கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய கொள்ளையர்கள் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது ‌நள்ளிரவில் போலீசாரால் சுற்றி வளைக்கப்பட்டனர். இதை அறித்த கொள்ளையர்கள் தப்பியோட நினைத்துள்ளதாக கூறப்படுகிறது. அப்போது போலீசார் து்ப்பாக்கிச்சூடு நடத்தியதில் இதில் 5 பேர் பலியானதாகவும் தகவல்கள் தெரிவிக்கி்ன்றன. நள்ளிரவு 2.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் இரு எஸ்.ஐ.க்கள் காயமடைந்தனர். அவர்கள் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சம்பவம் நடந்த இட‌த்தை உயர் போலீஸ் அதிகாரிகள் பார்வையிட்டனர். காயமடைந்த இரு எஸ்.ஐ.க்களை ராயப்பேட்டை அரசு மருத்துமனைக்கு சென்று சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதி , நேரில் சென்று ஆறுதல் கூறினார்.

வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் :துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்கள் குறித்த தகவல்களை போலீசார் சேகரி்த்து வருகின்றனர் , சம்பவம் குறித்த தகவல் வெளியான உடன் பத்திரிகையாளர்கள் குவிந்தனர். மேலும் பலியானவர்கள் யார் என்ற விபரம் விசாரணையில் தெரியவரும்‌. எனினும் வடமாநிலத்தவர்கள் என கமிஷனர் திரிபாதி கூறினார். நீதிவிசாரணைக்கு உத்தரவிடப்படலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. துப்பாக்கிச்சூடு நடந்த வீட்டில் கட்டுக்கட்டாக ரொக்கப்பணமும்,துபாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் ஏராளமான பொருட்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர். மேலும் கொள்ளையர்களுக்கு யாருடனேனும் தொடர்புள்ளதா என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர். அரைமணி நேரத்தில் முடிந்த என்கவுன்டர்:கொள்ளையர்கள் பதுங்கியிருந்த சென்னை வேளச்சேரி வண்டிக்காரன் தெருவை முன்பே நோட்டமிட்ட போலீசார் , நள்ளிரவு 2.30 மணியளவில் , வீட்டுவசதி வாரிய குடியிருப்பு அருகே உள்ள செக்போஸ்டில் குவிந்தனர். பின்னர் கொள்ளையர்களை உடனடியாக வெளியே வருமாறு எச்சரிக்கைவிடுத்தனர். அவர்கள் துப்பாக்கிச்சூடு நடத்திய பின்னர் போலீசார் எதிர்தாக்குதல்நடத்தினர்.நள்ளிரவு 2.35 மணிக்கு துவங்கிய துப்பாக்கிச்சூடு சம்பவம் 3 மணியளவில் முடிந்தது. வீட்டிற்குள் 5 கொள்ளையர்களும் ரத்த வெள்ளத்தி்ல் பிணமாககிடந்தனர்.


வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்தனர்:சென்னை பெருங்குடியில் உள்ள ‌பாங்க் ஆப் பரோடா மற்றும் கீழகட்டளையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆகிய வங்கிகளில் கடந்த மாதம் 23 மற்றும் இம்மாதம் 20 ஆகிய தேதிகளில்‌ கொள்ளையர்கள் கைவரிசையை காட்டியுள்ளனர். போலீசுக்கு பெரும் சவால்விடும் வகையி்ல் இந்த சம்பவம் அமைந்ததால், கொள்ளை சம்பவங்கள் நடந்த 28 நாட்களி‌‌லேயே போலீசார் அதிரடியாக விசாரணையில் இறங்கி கொள்ளையர்களை சுற்றி வளைத்து என்கவுன்டர் செய்துள்ளனர்.. பக்கத்துவீட்டைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில், நள்ளிரவில் துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டவுடன் ‌ஏதோ சம்பவம் நடந்துள்ளதை அறிந்தேன். ஆனால் கொள்ளையர்கள் என்பது தனக்கு தெரியாது எனவும், அவர்கள் வாடகைக்கு தங்கியிருந்தது தான் தெரியவந்தது என்றார்.சென்னையில் நடந்த என்கவுன்டரி்ல் சுட்டுக்கொல்லப்பட்டவர்கள் பீகார் மாநிலத்தவர் என விசாரணையில் தெரியவந்தது. கொள்ளை கும்பல் தலைவன் சென்னை பல்கலை.யின் பொறியியல் மாணவர். இவர் வட மாநில மாணவர்களுக்கு சீட் வாங்கி கொடுக்கும் புரோக்கராக இருந்து வந்து்ள்ளார். மேலும் சம்பவ இடமான வேளச்சேரியின் வண்டிக்காரன் தெருவில் உள்ள வீடு முன்னாள் ரெளடியின் வீடு என தகவல் வெளியாகியுள்ளது. இவர் தற்போது திருந்தி வாழ்ந்து வருவதாகவும், இவரது வீட்டில் தான் கொள்ளை கும்பல் கடந்தஆண்டு டிசம்பர் மாதம் தான் மாதம் ரூ. 5000 வாடகைக்கு கீழ்தளத்தில் குடியிருந்து வந்துள்ளனர். தங்களை கல்லூரி மாணவர்கள் என அப்பகுதியி்ல் கூறி வந்துள்ளனர். 

மருத்துவமனையி்ல் 5 பேர் உடல்கள் :என்கவுன்டரி்ல் சுட்டுக்கொல்லப்பட்ட 5 கொள்ளையர்களின் உடல்கள் தற்போது சென்னை செனட்ரல் அரசு பொதுமருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. அதே போன்று காயமடைந்த இரு போலீஸ் அதிகாரிகளான ரவி (தேனாம்பேட்டை எஸ்.ஐ.), தலையில் குண்டுகாயமும், கிறிஸ்டிஜெயசீலி (துரைபாக்கம் எஸ்.ஐ) இடுப்பு பகுதியில் குண்டு காயங்களும் இருந்ததால் அவர்கள் ராயப்பேட்டை மருததுவமனையில் சிகிச்சை பெற்று வருகி்ன்றனர்.தமிழகத்தில் நடந்த மிகப்பெரிய என்கவுன்டர் :சென்னையில் நள்ளிரவில் நடந்த என்கவுன்டர் தமிழகத்தில் நடந்த மிகப்பெரிய என்கவுன்டர் என போலீசார் தெரிவித்தனர். நேற்று நள்ளிரவில் வேளச்சேரி வண்டிக்காரன் தெருவில் 5 வடமாநில கொள்ளையர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்கள் தங்கியிருந்த வீட்டில் கட்டுக்கட்டாக பணம் 5 துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன. இதே  போனறு கடந்த2002-ம் ஆண்டு பெங்களூருவி்ல் பயங்கரவாதி இமாம் அலி கூட்டத்தினர் 5 பேர் போலீஸ் தமிழக போலீசார் நடத்திய என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர். கடந்த 2010-ம் ஆண்டு ரெளடி திண்டுக்கல் பாண்டி உள்பட 2 பேர் நீலாங்கரையில் சுட்டுக்கொல்லப்பட்டனர். தற்போது தமிழகத்தில் முதன்முறையாக 5 பேர் சுட்டுக்‌கொல்லப்பட்டுள்ளனர்.ஒரேதேதி: சென்னை பெருங்குடியில் கடந்த மாதம் 23-ம் தேதியன்று தான் கொள்ளையர்கள், பேங்க் ஆப்பரோவில் தங்களது கைவரிசைய காட்டினர். அதற்கு அடுத்த மாதம் பிப்ரவரி 23-ம் தேதி நள்ளிரவில் சுட்டு்க்கொல்லப்பட்டுள்ளனர். இதன் மூலம் போலீசாரால் விசாரணைய தீவிரப்படுத்தி வெற்றிகரமாக கொள்ளையர்களை சுட்டுக்கொன்றுள்ளனர்.

இரவோடு இரவாக தப்பிக்க திட்டம் :சுட்டுக்கொல்லப்பட்ட வடமாநில கொள்ளையர்கள் நேற்று இரவு தாங்கள் குடியிருக்கும் வேளச்சேரி வண்டிக்காரன் தெருவில் உள்ள வீட்டின் உரிமையாளரிடம் வாடகை பாக்கியினை கொடுத்துவிட்டு வீட்டை காலி செய்யப்போவதாக கூறியுள்ளனர். அப்போது இரவோடு இரவாக தப்பிக்க திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது.அப்போது வீட்டின் உரிமையாளருக்கு இவர்கள் தான் ‌‌கொள்ளையர்கள் என தெரியாது ‌என போலீசார் கூறுகின்றனர். எனினும் அன்று இரவில் டி.வி.யில் கும்பல் தலைவனின் வீடியோ படம் வெளியானது . இத‌னை பார்த்த போது தான் அவர்கள் போலீசாரால் தேடப்படும் கொள்ளையர்கள் என்ற தகவல் தெரிந்தது.அதன்பின்னர் தான் போலீசாருக்கு கொள்ளையர்கள் தங்கியிருந்த விவரம் தெரியவந்தது. இதனால் தக்க நேரத்தில் போலீசார் செயல்பட்டுள்ளனர்.கொள்ளையர்கள் பெயர் தெரிந்தது : சென்னை வேளச்சேரியில் நடந்த என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டவர்கள் வினோத்குமார், வினாய்குமார், ஹரீஷ்பிரசாத் , சகி‌கரே , அபேகுமார் உள்ளிட்ட 5 பேர் ஆவர். இதில் சகிகரே என்பவர் மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்தவர்கள் எனவும், மற்றவர்கள் பீகார் மாநிலத்தவர் என்பதும் போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. இவர்கள் 5 பேரும் வங்கிகளில் கொள்ளை நடத்த திட்டம் தீட்டியதும் தெரிவந்துள்ளது. இவர்கள் பயன்படுத்திய துப்பாக்கிகள் பீகாரில் தயாரிக்கப்பட்டவை எனவும் தெரியவந்துள்ளது. இதற்காக வேளச்சேரி வண்டிக்காரன் தெருவில் ரூ. 20 ஆயிரம் அட்வான்‌ஸ், மாதம் ரூ.5000 வாட‌கை பேசி தங்கியிருந்தனர்.

ஒரின சேர்க்கையை இந்தியாவில் அனுமதிக்க முடியாது மத்திய உள்துறை அமைச்சகம் சுப்ரீம் கோர்ட்டில் அபிடவிட்!


உலகில் ஏனைய நாடுகளை ஒப்பிடுகையில் பாரம்பரியத்திலும், கலாச்சாரத்திலும் வித்தியாசப்பட்டது. மேலை நாடுகளில் அனுமதிக்கப்பட்டுள்ள ஒரின சேர்க்கையை இந்தியாவில் நாம் அனுமதிக்க முடியாது என்று மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் இன்று சுப்ரீம் கோர்ட்டில் அபிடவிட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2009 ல் ஒரின சேர்க்கைக்கு அனுமதி வேண்டும் என கோரி டில்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த கோர்ட் ஒத்திசைவு கொண்ட ஒரினத்தவர்கள் சேர அனுமதி மறுக்க வேண்டியது அவசியமில்லை என் தீர்ப்பளித்தது. இதனையடுத்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டது. இந்த மனு விசாரணைக்கு வந்தபோது உள்துறை அமைச்சகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அபிடவிட்டில் : ஒரின சேர்க்கை இயற்கைக்கு எதிரானது. இது சமூக சூழலை கெடுத்து விடும். மேலும் எய்ட்சை பரப்பும் தன்மை கொண்டது. பிற நாடுகளில் இருந்து இந்தியா வேறுபட்டது. மேலை நாட்வர்களை நாம் பின்பற்ற முடியாது. நமது நாட்டிற்கென தனிச்சிறப்பு உண்டு இதனால் இதனை அனுமதிக்க முடியாது. குழந்தைகள் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அடிப்படை சட்டங்களை பதம் பார்க்கும் அளவில் இருப்பதால் இது பெரும் சட்ட சவால்கள் மாற்றத்தை கொண்டு வரவேண்டியது வரும் என்றும் கூறப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சகம் தனது கருத்தில முரண்பட்டிருந்தது. இதன் மூலம் எய்ட்ஸ் பரவாது என்று கூறியிருந்தது. இதனால் எய்ட்ஸ் பரவுமா இல்லையா என தீவிரமாக கண்டுபிடிக்குமாறு சுப்ரீம் கோர்ட் கேட்டுள்ளது. மேலும் இது போன்ற ஒரின சேர்க்கையை எத்தø நாடுகள் அங்கீகரிக்கிறது? எத்தனை நாடுகளில் குற்றச்செயல்களாக பார்க்கப்டுகிறது என்ற விவரத்தை தருமாறும் நீதிபதிகள் அரசு தரப்பு வக்கீலிடம் கேட்டு கொண்டனர்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...