தளர்ந்து இருக்கக்கூடிய மனதை சரிசெய்வதே நமது கடமை. அதனால், பணம் மற்றும் மங்கள பொருட்களை கொடுக்கும் போதோ, வாங்கும் போதோ தவறி கீழே விழுந்தால் அங்கு நல்ல காரியங்கள் நடைபெறும் என்று சொல்லுவது பெரியோர்களின் வழக்கம். கீழே விழுவதினால் மனம் பதறும் என்ற காரணத்தினால் துக்கம் அடையாமல் உற்சாகத்துடன் இருத்தல் வேண்டும் என்பதினால் கூறியிருக்கலாம். இதனால் பணம் தவறி விழுந்தால் லாபம் என்று கூறி நமக்கு நாமே திருப்தி பட்டு கொள்கிறோம். அதே சமயம் நாம் தவறி கீழே விழுந்தால் நஷ்டமாகி அல்லவா போய்விடும்! பணமோ மங்கலப்பொருள்களோ எதனால் கீழே விழுகிறது, பதற்றம் அடைந்தால் தான் தவறிப்போய் கீழே விழுகிறது. எனவே எதையும் தவறாமல் கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது. பதறாத காரியம் சிதறாது.
No comments:
Post a Comment