|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

19 July, 2011

நீண்ட ஆயுள் தரும் தாம்பத்யம்!

ஆரோக்கியமான தாம்பத்ய வாழ்க்கை மூலம் நீடித்த ஆயுளை பெறமுடியும் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. நம்பிக்கைக்குரிய ஒருவருடன் மட்டும் தொடர்ந்து தாம்பத்ய உறவில் ஈடுபட்டு வருவோருக்கே இது பொருந்துமாம். அதேசமயம், பல்வேறு பெண்களுடன் சகட்டு மேனிக்கு உறவு கொள்வோருக்கு இது சற்றும் பொருந்தாது என்று இத்தாலியைச் சேர்ந்த ஆய்வாளர் இமானுவேல் ஜனினி தெரிவித்துள்ளார்.

வாழ்நாள் நீடிக்கும்

உறவு கொள்ளும் பெண் மீ்து மிகுந்த நம்பிக்கையும், பூரண திருப்தியும் வைத்திருக்கும் ஆண்களுக்கு செக்ஸ் வாழ்க்கை இனிதாக அமைகிறது. இப்படிப்பட்டோர் தொடர்ந்து செக்ஸ் வாழ்வில் ஆர்வத்துடன் ஈடுபடுகின்றனர். இதனால் அவர்களுக்கு இதயக் கோளாறுகள் வருவது குறைகிறது, வாழ்நாளும் நீடிக்க வாய்ப்பு ஏற்படுகிறது என்றும் ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.

முறையான செக்ஸ் வாழ்க்கையில் ஈடுபட்டிருப்போருக்கு இதயநோய்கள் ஏற்படுவதில்லை என்பதால் மாரடைப்பு எட்டிப்பார்ப்பதில்லை. இதன் மூலம்தான் அவர்களுக்கு ஆரோக்யமான உடல் நலமும், நீடித்த ஆயுளும் சாத்தியமாகிறதாம்.

மன அழுத்தம் குறையும்: செக்ஸ் உறவில் தொடர்ந்து அதிக அளவில் ஈடுபடும்போது ஆண்களுக்கு டெஸ்டோஸ்டிரான் உற்பத்தி அதிகரிக்கிறது. தொடர்ந்து அதிகரித்த அளவிலும் உள்ளது. இதன் மூலம் மன அழுத்தம் அவர்களுக்குக் குறைகிறது. இது உடலின் மெட்டபாலிசத்தை சிறப்பாக வைக்க உதவுகிறது என்கிறார் ஜனினி.

ஆண்களுக்கு செக்ஸ் உறவின்போது உற்பத்தியாகும் டெஸ்டோஸ்டிரான் மிகவும் நன்மை பயக்கக் கூடியது. தேவையில்லாத சர்க்கரையை அது குறைக்கிறது. இது இருதயத்திற்கு மிகவும் நல்லது. குறிப்பாக சர்க்கரை வியாதி உள்ளவர்கள அதிக அளவில் உடலுறவுகளில் ஈடுபடுவதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். அது அவர்களது சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவுகிறது என்கிறார் ஆய்வாளர்.

முறையற்ற உறவு: உடல் தேவைக்காக மட்டுமே பல்வேறு பெண்களுடன் செக்ஸ் உறவு கொள்வோருக்கு மன அழுத்தம் அதிகரிக்கிறதாம். குறிப்பாக கள்ளக் காதலில் ஈடுபடுவோருக்கு மன அழுத்தம் மிக அதிகமாக இருக்குமாம். யாருக்காவது தெரிந்து விடுமோ என்ற பயத்திலும், பதட்டத்திலும் இருப்பதால் அவர்களுக்கு மன அழுத்தம் அதிகரிப்பதோடு, இருதயக் கோளாறுகளும் சீக்கிரமே வந்து சேருகிறதாம்.

உடல் ஆரோக்கியம் கருதிதான் நமது முன்னோர்கள் பிறன் மனை நோக்குவதை பாவம் என்று தெரிவித்திருக்கின்றனர்.

ஆஸ்துமாவை அகற்றும் கரிசலாங்கண்ணி!

கரிசலாங்கண்ணி மூலிகைக் கீரைக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே மருத்துவத்தில் மிகச் சிறப்பான இடம் இருந்தது. பல்லவர்கள் ஆண்ட காலத்தில் அரசு அனுமதி இல்லாமல் கரிசலாங்கண்ணியைப் பயிரிட முடியாது ஆண்டு தோறும் அரசுக்கு ‘‘கண்ணிக்காணம்’’ என்ற வரி செலுத்த வேண்டும். அந்தளவிற்கு அது முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. கரிசலாங்கண்ணி தாவரம் முழுவதுமே மருத்துவ குணம் கொண்டது.

செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்: கரிசலாங்கண்ணிக் கீரையில் தங்கச் சத்து, இரும்புச்சத்து, வைட்டமின் ‘ஏ’ அதிகம் உள்ளன. எக்லிப்டால்,வெடிலோலாக்டோன்,டெஸ்மீத்தைல்,ஸ்டிக்மாஸ்டீரால்,ஹெப்டாகோசனால்,ஹென்ட்ரைஅக்கோன்டனால், போன்ற வேதிப்பொருட்களும் காணப்படுகின்றன.

கரிசலாங்கண்ணி  கரிசலாங்கண்ணி மூலிகைக் கீரைக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே மருத்துவத்தில் மிகச் சிறப்பான இடம் இருந்தது. பல்லவர்கள் ஆண்ட காலத்தில் அரசு அனுமதி இல்லாமல் கரிசலாங்கண்ணியைப் பயிரிட முடியாது ஆண்டு தோறும் அரசுக்கு ‘‘கண்ணிக்காணம்’’ என்ற வரி செலுத்த வேண்டும். அந்தளவிற்கு அது முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது.

கரிசலாங்கண்ணி கரிசாலை, அரிப்பான் பொற்கொடி போன்ற பெயர்களால் வழங்கப்படுகிறது. கரிசலாங்கண்ணியை எளிய முறையில் உபயோகித்தாலே பல நன்மைகளை அடையலாம். வாரத்துக்கு இரண்டு நாள், கீரையைச் சமையல் செய்து சாப்பிட்டாலும் இதன் சாற்றை 100 மில்லியளவு சாப்பிட்டு வந்தாலும், உடலுக்கு எந்த நோயும் வராமல் நோய் எதிர்ப்புத் தன்மை உண்டாகும். பல கொடிய வியாதிகளில் இருந்து பாது காத்துக் கொள்ளலாம். மஞ்சள் காமாலை முதல் அனைத்து வகையான காமாலை நோய்களுக்கும் மிக முக்கியமானது கரிசலாங் கண்ணிக் கீரையாகும்.

மஞ்சள் காமாலை குணமடையும் கல்லீரல் நச்சுத்தன்மையை நீக்கும் நன்மருந்து. கல்லீரல்,மண்ணீரல்,பெரிதாவதால் உள்ள அடைப்புகளைப் போக்கும். தோல்நோய்கள் மஞ்சள் காமாலையை குணப்படுத்தும். அனைத்து வகைக் காமாலைக்கும் இம்மருந்து நம்பகமானது. சிறுநீரகம் பாதிப்படைந்து வெள்ளை, வெட்டை நோய் ஏற்பட்டால், இந்நோய்க்கு கரிசலாங்கண்ணி தான் முதன்மையான மருந்தாகும்.

ஆஸ்துமா குணமடையும் கரிசலாங்கண்ணிச் சூரணத்தை நான்கு மாசத்துக்கு ஒரு பாகம் திப்பிலிச்சூரணம் சேர்த்து காலை, மாலை ஒரு தேக்கரண்டி தேனில் குழைத்து ஒரு மாத காலம் சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமாவின் தொல்லை குறையும். கல்லீரல் செயல்பாட்டின் குறைவினால் ஏற்படும் இரத்த சோகை நோய்க்கு கரிசலாங்கண்ணிச்சாற்றை 100 மில்லியளவு தினந்தோறும் சாப்பிட்டு வந்தால் சில தினங்களில் இரத்த சோகை நீங்கி விடும். இரத்தத்தில் உள்ள அமிலத்தன்மை சீராகச் செயல்படும்.

கரிசாலைச் சாற்றை காலை வேளையில் தினம் 30 மில்லியளவு சாப்பிட்டு வந்தால் சிறுநீர் எரிச்சல் குணமாகும். கஷாயம் கர்ப்பப்பை இரத்தப்போக்குக்குப் பயன்படும். பற்று தேள்கடிக்கு மருந்தாகும். வீக்கம் குறைக்கும். வாந்தி மருந்து, நன்மருந்து,தேனுடன் சாற்றைக் கலந்து குழந்தைகளுக்கு ஏற்படும் காற்றுக்குழாய் சார்ந்த அடைப்புகளை குணப்படுத்தலாம். விளக்கெண்ணெயோடு சேர்த்து பூச்சிகளை அகற்ற பயன்படும்.

குழந்தைகளின் சளி நீங்க குழந்தைகளுக்கு கரிசலாங்கண்ணிச்சாறு இரண்டு சொட்டில் எட்டு சொட்டு தேன் கலந்து கொடுத்தால் சளித்தொல்லை நீங்கிவிடும். அடிக்கடி சளி ஏற்படுவது குறைந்து குழந்தை ஆரோக்கியமாக இருக்கும். குழந்தைகளுக்கு ஏற்படும் மாந்தநோய், வயிறு பொருமல் உள்ளிட்ட நோய்களுக்கு கரிசலாங்கண்ணிச் சாற்றை சிறிதளவுக்கு கொடுத்து வந்தால் போதுமானது. மிக விரைவில் நோய் நீங்கி ஆச்சரியப்படும் படியான பலனைக் கொடுக்கும்.

மூச்சுத்திணறல் குணமடையும் கரிசலாங்கண்ணிச் சாறு 500 மில்லி, சுத்தமான கலப்படம் இல்லாத நல்லெண்ணெய் 500 மில்லி சேர்த்து தைலப் பதமாகக் காய்ச்சி வடித்து வைத்துக் கொண்டு ஒரு தேக்கரண்டி வீதம் தினம் இரண்டு வேளை உள்ளுக்குச் சாப்பிட்டு வந்தால் காசம், சுவாசம், சளியுடன் கூடிய இருமல் மூச்சுத்திணறல் ஆகிய நோய்கள் நீங்கிவிடும். இத்தைலத்தை மேல் உபயோகமாகவும் பயன்படுத்த வேண்டும்.

பொன்போல ஜொலிக்கும் கரிசாலை கிடைக்கும் போது சேகரித்துச் சுத்தம் செய்து, நன்றாகக் காய வைத்து பொடி செய்து வைத்துக் கொண்டு, தினம் ஐந்து கிராம் அளவில் சாப்பிட்டு வந்தால் உடல் நல்ல நிறத்தைப் பெறும்.

தலைமுடி நன்கு வளர கூந்தல் வளர 300 மில்லி தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெயில் 150 மில்லி கரிசலாங் கண்ணிச் சாற்றைக் கலந்து காய்ச்சி கைப் பதம் வந்ததும் வடிகட்டிவைத்துக் கொண்டு, தலைக்குத் தடவி வந்தால் தலைமுடி நன்றாக வளரும். கரிசலாங்கண்ணிப் பொடியை ஒரு பருத்தியினால் ஆன துணியில் முடிச்சாக கட்டி ஒரு பாத்திரத்தில் வைத்து நுனி முடிச்சு மூழ்கும் அளவிற்கு தேங்காய் எண்ணெய் ஊற்றி வெயிலில் சில தினங்கள் வைத்திருந்தால் எண்ணெய் நல்ல கருப்பு நிறமாக வரும். பிறகு எடுத்து வடிகட்டி இத் தைலத்தை தினமும் தலைக்குத் தடவி வந்தால் தலை முடி உதிராது, இளநீரை மாறிவிடும்.

பற்கள் உறுதியடையும் கரிசலாங்கண்ணி இலையை பல் துலக்கப் பயன்படுத்தினால், பற்கள் உறுதியாகும். ஈற்றில் உள்ள நோய்க் கிருமிகள் அழிந்து ஈறுகள் பலப்படும். தொண்டைச் சளி வெளியேறி விடும். கரிசலாங்கண்ணியின் வேரைக் கொண்டு பல் துலக்குங்கள். பல் துலக்கிய பின், கீரையை ஒரு பிடி எடுத்து மென்று தின்று ஒரு டம்ளர் தண்ணீர் அருந்தி வரவும். நாளடைவில் பற்களில் உள்ள மஞ்சள் கறை மறைந்து பற்களின் அழகு அதிகரிக்கும்.

நாள்பட்ட புண் ஆற... கரிசலாங்கண்ணி மிகச் சிறந்த கிருமி நாசினியாக இருப்பதால் அழுகும் நிலையில் உள்ள புண்கள், வெட்டுக் காயங்களுக்கு இலையை அரைத்து சாறு பூசினாலும், புண்கள் மேல் வைத்துக் கட்டினாலும் மிக விரைவில் புண்கள் ஆறிவிடும். கரிசலாங்கண்ணியை உணவாகவோ மருந்தாகவோ பயன்படுத்தினால், அறிவு விருத்தியாகும். பொன் போன்ற மேனி உண்டாகும்.

தயாநிதி மாறன், கலாநிதி மாறன் குறித்த புத்தகம் வெளியீடு!

சென்னையில் சன் டிவி அதிபர் கலாநிதி மாறன் பற்றியும், மத்திய முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன் பற்றி பரபரப்பு புத்தகம் வெளியீடு நடைபெற உள்ளது. 'கே.டி சகோதரர்கள், உண்மையும், ஊழலும்' என்ற தலைப்பில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. கே டி என்பது கலாநிதி மாறன், தயாநிதி மாறன் என்ற பொருள் வரும் வகையில் இந்த புத்தகத்திற்குப் பெயரிட்டுள்ளதாக தெரிகிறது.

இதன் வெளியீடு இன்று நடைபெறுகிறது. புதிய தமிழகம் வார இதழின் ஆசிரியர் அன்பழகன் இந்த நூலை எழுதியுள்ளார். கலாநிதி மாறன், தயாநிதி மாறன் சகோதரர்களின் ஆரம்ப கால வரலாறு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் இந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது. சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில், இப் புத்தகத்தை மூத்த பத்திரிக்கையாளரும், எழுத்தாளரும், அரசியல் விமர்சகருமான தி.சு.கிள்ளிவளவன் வெளியிடுகின்றார்.

மின்கட்டண உயர்வு!

ஏற்கெனவே அனைத்துப் பொருள்களின் விலைகளும் உச்சத்துக்குப் போய்விட்டன. இதுபோதாதென்று, தமிழக அரசு சத்தமில்லாமல் ரூ 4500 கோடி அளவுக்கு அனைத்து வரிகளையும் உயர்த்திவிட்டது. டாஸ்மாக், பீடி சிகரெட் என எங்கும் விலை உயர்வு. பஸ் கட்டணங்களை அவரவர் இஷ்டப்படி உயர்த்திக் கொண்டுள்ளனர் தனியார் நிறுவனத்தினர்.

இந்தநிலையில், தமிழக மக்களுக்கு பேரதிர்ச்சி தரும் வகையில் மின்கட்டணத்தை கணிசமாக உயர்த்த முடிவு செய்துள்ளது தமிழக அரசு. வல்லூர் மின்நிலைய சப்ளை சீரான கையோடு அல்லது அதற்கு முன்பே இதனை அறிவிக்கக் கூடும் என தெரிகிறது. அனைத்துப் பிரிவினருக்கும் பொதுவாக இந்த கட்டண உயர்வை அமல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

தமிழக மின்வாரியத்தில் இதுவரை ரூ.40,300 கோடிக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆண்டுதோறும் ரூ.10,000 கோடி பற்றாக்குறையில் ஓடிக்கொண்டுள்ளதாம் மின்வாரியம். கடந்த பத்தாண்டுகளில் மிகக் குறைந்த அளவே மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. சினிமா தியேட்டர்கள், வர்த்தக நிறுவனங்களுக்கு மட்டும் கடந்த ஆண்டு ஓரளவு மின்கட்டணம் உயர்த்தப்பட்டது. இது இழப்பை ஈடுகட்ட போதுமானதாக இல்லை. காரணம் விவசாயத்துக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்துக்கு மட்டும் தமிழக அரசு ரூ. 6000 கோடி செலவிடுகிறது. புதிதாக தொடங்கப்படும் சில பன்னாட்டு பெருந்தொழில் நிறுவனங்களுக்கும் மின்கட்டண சலுகை வேறு வழங்கப்படுகிறது.

இலவச மின்சாரம் ரத்தாகுமா? எனவே தொடர் நஷ்டத்திலிருந்து மீள உடனடி தீர்வாக கட்டண உயர்வை கையிலெடுத்துள்ளது ஜெயலலிதா அரசு. எந்தப் பிரிவுக்கு எவ்வளவு கட்டணம் உயர்த்தலாம், விவசாயத்துக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்தை தொடரலாமா போன்றவை குறித்து கோட்டையில் ஆலோசனை நடந்து வருகிறது. இந்த மின் கட்டண உயர்வை நியாயப்படுத்த, அண்டை மாநிலங்களான ஆந்திரா, கேரளா மற்றும் கர்நாடகத்தில் வசூலிக்கப்படும் கட்டண விகிதங்கள் குறித்த ஒப்பீட்டுப் பட்டியலையும் தமிழக அரசு வெளியிட உள்ளது.

ஏழு கோடியே 21 லட்சத்து 38 ஆயிரத்து 958 பேர் தமிழகத்தில் வசிப்பதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு !


ஏழு கோடியே 21 லட்சத்து 38 ஆயிரத்து 958 பேர் தமிழகத்தில் வசிப்பதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரம் தெரிவிக்கிறது. இதில் ஆண்களின் எண்ணிக்கையே அதிகமாக இருப்பதாகவும், சில மாவட்டங்களில் பெண்கள் எண்ணிக்கை குறைந்திருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. இந்திய மக்கள் தொகை பட்டியல் 120 கோடியாக இருக்கிறது என கடந்த சில மாதங்களுக்கு வெளியான அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

இன்று தமிழகத்தின் மக்கள் தொகை 7 கோடியே 21 லட்சத்து 38 ஆயிரத்து 958 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.52 சதவீதம் பேர் கிராமங்களிலும், சென்னை, மதுரை, கோவை போன்ற நகர் பகுதியில் 48 சதவீதம் பேர் வசிப்பதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

தமிழகத்தில் ஆண்களின் எண்ணிக்கை 3 கோடியே 61 லட்சத்து 58 ஆயிரத்து 871. பெண்களின் எண்ணிக்கை 3 கோடியே 59 லட்சத்து 80 ஆயிரத்து 87 பேர் ஆவர். இதில் 1 லட்சத்து 78 ஆயிரத்து 784 பெண்கள், ஆண்களை விட குறைவாக உள்ளனர். மொத்தம் கல்வியறிவு பெற்றவர்கள் 80.33 சதம் ஆகும். ஆண்கள் 86. 81. பெண்கள் 73. 86. சென்னை நகர்ப்புற மக்கள் தொகை 13 சதவீதமும் , விழுப்புரத்தில் கிராமப்புற மக்கள் எண்ணிக்கை 7.94 சதவீதம் உயர்ந்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் 1000 ஆண்களுக்கு 1041 பெண்கள் உள்ளனர். இந்த மாவட்டத்தில் தான் ஆண்களை விட பெண்கள் அதிகம் உள்ளனர்.

திருமதி என்பது ஏன்?

திருமணத்திற்கு முன் பொறுப்பில்லாமல் மற்றும் ஆண்கள் வீணாகச் செலவழித்து திரிவார்கள். திருமணத்துக்குப் பின் தறிகெட்டு அலையும் கணவனை மனைவி திருத்தி விடுகிறாள். அவள் கணவனின் வரம்பற்ற செலவுகளைக் குறைத்து வீட்டில் செல்வம் நிறைய முயற்சி செய்கிறாள். இதற்காக தனது மதிநுட்பத்தை (புத்திசாலித்தனம்) பயன்படுத்துகிறாள். அந்த வீட்டில் லட்சுமி கடாட்சம் ஏற்படுகிறது. திருவையும் மதியையும் இணைத்தே திருமணமான பெண்களுக்கு திருமதி என்ற பட்டம் தரப்பட்டது. திரு என்றால் லட்சுமி, மதி என்றால் அறிவு.

இதே நாள்...


  • நிக்கரகுவா, தேசிய விடுதலை தினம்(1979)
  •  பாரிசில் முதலாவது சுரங்கத் தொடருந்து சேவை ஆரம்பமாயிற்று(1900)
  •  பிரான்ஸ், புரூசியா மீது போரை ஆர்மபித்தது(1870)
  •  நேபாளத்தில் சகர்மதா தேசிய பூங்கா உருவாக்கப்பட்டது(1976)
  • மாஜி அமைச்சர் நேரு மீது ஹோட்டல் அபகரிப்பு புகார்!


    போலி ஆவணங்களை காட்டி ரூ.15 கோடி மதிப்புள்ள ஓட்டலை அபகரித்து விட்டதாக முன்னாள் திமுக அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அவரசு சகோதரர் ராமஜெயம் மீது திருச்சி காவல்துறையில் தொழிலதிபர் புகார் தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த தொழில் அதிபர் கதிர்வேல் கடந்த 2005ம் ஆண்டு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பிரபல ஓட்டலை (ஓட்டல் காஞ்சனா). ஓப்பந்தத்தின் அடிப்படையில் வாங்கினார். இந்த ஓட்டலுக்காக வாங்கப்பட்ட கடனையும் அடைத்துக்கொள்வதாக அந்த ஒப்பந்தத்தில் கூறப்பட்டிருந்தது. அதன்படி கடந்த 2007ம் ண்டு டிசம்பர் மாதம் வரை அந்த ஓட்டலை நடத்தி வந்தார். 
    ஆனால் 2007ம் ஆண்டு டிசம்பர் மாதம் 23ந்தேதி நள்ளிரவு அப்போதைய திமுக அமைச்சர் கே.என்.நேரு, அவரசு சகோதரர் ராமஜெயம், மாநகராட்சி துணைமேயர் அன்பழகன் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட ரவுடிக்கும்பல் ஓட்டலுக்குள் புகுந்தது. போலியான ஆவணங்களை தயார் செய்து கடந்த 2005ம் ஆண்டு முதல் பராமரித்து வருவதாக கூறி தொழிலதிபர் கதிர்வேலுவை கொலை மிரட்டல் விடுத்து ஓட்டலை அபகரித்துக்கொண்டனர்.

    இதுகுறித்து அப்போதைய காவல்துறையிடம் 2007டிசம்பர் 24ந்தேதி புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. இதனால் மிரட்டலுககு பயந்து ஓட்டலை அவர்களிடம் விட்டுவிட்டு உயிருக்குப்பயந்து தப்பிச்சென்று விட்டனர். தற்போது தமிழக முதல்வர் தலைமையிலான அரசு கடந்த திமுக ஆட்சியில் நில அபகரிப்பு குறித்த புகார்களை நேர்மையான முறையில் காவல் துறை விசாரணை நடத்தி மீட்டுத்தருவதையடுத்து, நேற்று திருச்சி மாநகர காவல்துறையில் தொழில் அதிபர் கதிர்வேல் புகார் அளித்துள்ளார். முன்னாள் திமுக அமைச்சர் மற்றும் சகோதரர் உள்ளிட்ட திமுகவினர் மீது தொழில் அதிபர் புகார் அளித்துள்ளது திருச்சி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஓட்டலின் தற்போதைய மதிப்பு சுமார் ரூ.30கோடி என கூறப்படுகிறது

    தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா!


    இலங்கை வன்னியில் எமது இளைஞர்களின், யுவதிகளின் ஆடைகளைக் களைந்து கண்களையும் கைகளையும் கட்டிச் சுட்டுக்கொன்றவர்களே இன்று தேர்தலுக்காக வந்து எம்மக்களுக்கு இலவச வேட்டியும் சேலையும் கொடுக்கிறார்கள் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா கூறினார். உள்ளாட்சி தேர்தலை ஒட்டி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரசாரக் கூட்டம் கிளிநொச்சியில் நடைபெற்றது. ராணுவத்தினரின் அச்சுறுத்தல்கள், மிரட்டல்கள் கடுமையாக இருப்பதாகக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றச்சாட்டுக்களைத் தெரிவித்து வந்த நிலையில், அந்த பிரசாரக் கூட்டத்தில் நூற்றுக்கணக்கான வன்னி மக்கள் கலந்துகொண்டனர். தன் கணவனைக் கொன்றவன் மீது கோபமாகி நின்ற கண்ணகி சினங்கொண்டு மதுரையை எரித்தாள் என்று சிலப்பதிகாரம் கூறுகிறது. அதேபோன்று இங்கும் தமது உறவுகளைப் பறிகொடுத்த தாய்மார்களும் பெண்களும் கண்ணீரும் கம்பலையுமாக நிற்கிறார்கள். காணாமல் போனவர்களின் உறவினர்கள் செய்வதறியாது நிற்கிறார்கள். அவர்கள் தமக்கு நீதி கேட்டு இந்த அரசுக்கு இந்தத் தேர்தலில் தக்க பதிலடியை வழங்குவார்கள் என்று அந்தக் கூட்டத்தில் பேசிய மாவை சேனாதிராசா தெரிவித்தார்.


    போரில் வெற்றி பெற்றதாகக் கூறும் அரசு இந்தத் தேர்தலின் மூலம் ஜனநாயகத்திலும் தான் வெற்றி பெற்றதாகக் காட்ட முயற்சிக்கிறது என்று கூறிய அவர், "தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்டார்கள் என்பதை உலகமே இன்று ஏற்றுக் கொண்டுள்ள நிலையில், அரசுக்கு ஆலவட்டம் பிடிக்கும் அமைச்சர் மட்டும் இறுதிப் போரில் எவரும் கொல்லப்படவில்லை என்று கூறிக்கொண்டு உங்கள் முன் வாக்குக் கேட்டு வந்திருக்கிறார். இவ்வாறானவர்களை தூக்கி எறிய வேண்டிய வரலாற்றுக் கடமையை நாம் சொல்லாமலேயே நீங்கள் செய்வீர்கள் என்பது எமக்குத் தெரியும்'' என்றும் கூறினார்.

    கேட்பது குதிரை கிடைத்தது கழுதை விஜயகாந்த்!

    நாம் கேட்பது குதிரையானாலும் கிடைத்திருப்பது கழுதைதான் என்றாலும், குதிரை கிடைக்கும் வரை கழுதையை பயணத்திற்கு பயன்படுத்திக் கொள்வது தவறல்ல என்று தற்போதைய சமச்சீர் கல்வி குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் கருத்து தெரிவித்துள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தமிழக அரசு ஏற்கனவே கொண்டு வந்த பொதுப்பாடத் திட்டத்தை அப்படியே செயல்படுத்த வேண்டுமென்றும், அதை இன்றைய அரசு திருத்தம் கொண்டு வந்ததை ஏற்க மறுத்தும் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும் பாடத்திட்டத்தில் நீக்க வேண்டியவற்றை நீக்கியும், சேர்க்க வேண்டியவற்றை சேர்த்தும் மூன்று மாத காலத்திற்குள் ஒரு துணை பாடப் புத்தகத்தை உருவாக்கவும் இந்தத் தீர்ப்பு வழி வகை செய்துள்ளது.


    இந்த கல்வி ஆண்டு தொடங்கி ஏற்கனவே இரண்டு மாதங்கள் கடந்து விட்டன. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு இன்னும் பாடப் புத்தகங்கள் கிடைக்கவில்லையே என்ற கவலையால் பீடிக்கப்பட்டுள்ளனர். எந்த பாடப் புத்தகத்தையாவது வைத்தால் போதும் என்ற நிலையே அவர்களிடம் உள்ளது. இந்த சூழ்நிலையில் முந்தைய தி.மு.க அரசு கொண்டு வந்த பாடத் திட்டத்தில் உள்ள கருணாநிதி குடும்பத்தின் சுய புராணம் பாடும் பகுதிகளை நீக்கி, தரமுள்ள புதிய பாடத் திட்டங்களை கல்வி நிபுணர்களின் குழுவின் மூலம் சேர்த்து பாடத் திட்டத்தின் தரத்தை தமிழக அரசு உயர்த்த வேண்டும்.

    தமிழகத்தில் தற்போதைய கல்வியின் தரம் வெகுவாக குறைந்துள்ளது என்பதும், முந்தைய தி.மு.க அரசு கொண்டு வந்த பொதுப் பாடத்திட்ட சட்டம் இந்த தரத்தை மேலும் குறைக்கவே வகை செய்துள்ளது என்பதும் மறுக்க முடியாத உண்மை.

    இன்றைய மாணவர்கள்தான் நாளைய நாட்டின் எதிர்காலம் என்று சென்னை உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது. ஆனால் அந்த மாணவர்களுக்கு சரியான கல்வி கிடைக்க தமிழக அரசு ஏற்கனவே நிறைவேற்றிய பொதுப் பாடத்திட்ட சட்டம் தீர்வாகாது. கல்வித் துறையில் கடந்த ஆட்சியால் ஏற்பட்டுள்ள சீர்கேட்டினை நிரந்தரமாகக் களைய வேண்டுமானால், அது குறித்து அனைத்து தரப்பினரும், குறிப்பாக கல்வி நிபுணர்களும், கலந்து கருத்தாய்வு செய்வது அவசியம். ஆகவே கல்வி சம்பந்தமாக அனைத்து விவரங்களையும் திரட்டி ஒரு வெள்ளை அறிக்கை கொண்டு வரவேண்டும் என்றும், அதில் அனைத்து தரப்பினரின் கருத்துகளை திரட்டி சட்டப் பேரவையில் அனைத்து கட்சியினர்களையும் கலந்து ஒரு விரிவான கல்வி சீர்திருத்த சட்டத்தைக் கொண்டு வரவேண்டும் என்று கேட்டுக் கொள்ளுகிறேன். இதற்கிடையில் நாம் கேட்பது குதிரையானாலும் கிடைத்திருப்பது கழுதைதான் என்றாலும், குதிரை கிடைக்கும் வரை கழுதையை பயணத்திற்கு பயன்படுத்திக் கொள்வது தவறல்ல. தேவை மற்றும் உடனடித் தேவை என்று இருப்பதைப் போல, நமக்கு தேவை சமச்சீர் கல்வி என்றாலும் உடனடித் தேவையாக இருப்பது தற்போது திறந்துள்ள பள்ளிக் கூடங்களை பாடப் புத்தகங்கள் தந்து நடத்துவதுதான். ஆகவே உயர்நீதிமன்ற தீர்ப்பை ஏற்று உடனடியாக பள்ளிக் கூடங்கள் இயங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்ளுகிறேன். இவ்வாறு விஜயகாந்த் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

    அழகான உதடுகள்...!


    தன்னுடைய உதடு அழகாக, சிவப்பாக இல்லையே என்ற ஏக்கம் பல பெண்களுக்கும் இருக்கிறது. மகிழ்ச்சி, துக்கம், சோகம் என அனைத்தையும் வெளிபடுத்துவதில் கண்களுக்கு எவ்வளவு முக்கிய பங்கு உண்டோ, அதுபோல உதடுகளும் உண்டு. 
    * கொழுப்புச் சத்து குறையும் போது, உதடுகள் சுருங்கி வயதான தன்மையை அடைகின்றன.   இதனால் உதடுகளில், "வாசலின்' தடவிக் கொள்ளலாம்.
    * வைட்டமின்கள் குறைபாட்டினால், உதடுகளின் ஓரத்தில் புண்கள் கூட வரலாம். இதற்கு உணவில் கீரைகள், பச்சை காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகளவில் சேர்த்து கொள்ள வேண்டும்.   மேலும், நிறைய தண்ணீரும் குடிக்க வேண்டும்.
    * வாய்ப் பகுதியை சுற்றி உதடுகளின் ஓரத்தில் உள்ள புண்கள் மற்றும் கொப்புளங்கள் மறைய, வைட்டமின், "இ' சத்துகள் நிறைந்த, "சன்ஸ்கிரீன் லோஷனை' தடவி வரலாம்.
    * அதிக குளிர் மற்றும் வெப்பத்தை தாங்க முடியாமல், சிலருக்கு உதடுகளில் பிளவுகள் ஏற்பட்டு காய்ந்து விடும்.   மேலும் சிலருக்கு உதடுகள் கறுத்தும், வெடிப்புகளுடனும் காணப்படும். பாலேட்டுடன் நெல்லிக்காய் சாறு கலந்து, உதடுகளில் தடவி வந்தால், கறுமை மறைந்து சிவந்த நிறம் உண்டாகும்.
    * வெண்ணெயுடன் ஆரஞ்சு பழச் சாறு கலந்து, உதடுகளில் தடவி வந்தால், வெடிப்புகள் சரியாகி உதடுகள் மென்மையாகும்.   

    LinkWithin

    Related Posts Plugin for WordPress, Blogger...