|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

25 January, 2012

பத்ம விருதுகள் பெறும் தமிழர்கள்...


2012ம் ஆண்டிற்காக பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதில் பத்ம விபூஷன் விருது பெற 5 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.தமிழகத்தில் இருந்து ஏழு பேரும் பத்ம பூஷன், பத்மஸ்ரீ விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த ஆண்டிற்கான பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதில் கலை ஓவியத்துறையில் சிறந்த பணி ஆற்றியதற்காக மேற்கு வங்கத்தைச் சேர்ந்த கே.ஜி. சுப்ரமணியன், கோவாவைச் சேர்ந்த கார்டூனிஸ்ட் மறைந்த மரியோ டி மிராண்டா, அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த வாய்ப்பாட்டு கலைஞர் மறைந்த பூபேன் ஹசாரிகா, மகாராஷ்டிராவைச் சேர்ந்த எலும்பு சிகிச்சை நிபுணர் காந்திலால் ஹஸ்திமால் சன்செட்டி, டெல்லியைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி டி.வி.ராஜேஸ்வர் ஆகிய ஐவருக்கு பத்மவிபூசன் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

பத்ம விருதுகள் பெறும் தமிழர்கள்:

மேலும் தமிழகத்தைச் சேர்ந்த 7 பேரும் பத்ம பூஷண், பத்மஸ்ரீ விருதுகளுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

பத்ம பூஷண் பெறும் தமிழர்கள்: எம்.எஸ்.கோபாலகிருஷ்ணன்- வயலின் கலைஞர்

டாக்டர் திருப்பூணித்துரா விஸ்வநாதன் கோபாலகிருஷ்ணன் - வாய்ப்பாட்டுக் கலைஞர்

சுப்பையா முருகப்ப வெள்ளையன் - வணிகம் மற்றும் தொழில்துறை

பத்மஸ்ரீ விருது பெறும் பெறும் தமிழர்கள்:

நடேசன் முத்துசாமி கலை-நாடகம்

டாக்டர் பி.கே.கோபால்- சமூகப் பணி

சர்க்கரை நோய் நிபுணர் டாக்டர் விஸ்வநாதன் மோகன்- மருத்துவம்

டாக்டர் வல்லார்புரம் சென்னிமலை நடராஜன்-முதியோர் நல மருத்துவம்

இவர்களுக்கு மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் குடியரசுத்தலைவர் மாளிகையில் நடைபெறும் விழாவில் விருதுகளை குடியரசுத்தலைவர் வழங்குவார்.

சொல்லக்கூடாத ரகசியங்கள்...?

சாஸ்திரங்களில் 9 விஷயங்களை ரகசியமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அந்த 9 விஷயங்கள் இவை தான்:  1. ஒருவரது வயது, 2. பணம் கொடுக்கல் வாங்கல் 3. வீட்டு சச்சரவு, 4. மருந்துகளில் சேர்க்கப்பட்ட பொருட்கள், 5. கணவன்-மனைவி அனுபவங்கள், 6. செய்த தானம், 7. கிடைக்கும் புகழ், 8. சந்தித்த அவமானம், 9. பயன்படுத்திய மந்திரம். இந்த 9 விஷயங்களையும் என்றும் ரகசியமாக வைத்துக்கொள்ள வேண்டும்

உணவு உண்ணும் போது தெரியுமா?

அளவிற்கு அதிகமாக உண்டால் நோய்வரும் ஆயுள் குறையும். எனவே வயிறு புடைக்க மூச்சு முட்ட உண்ணக் கூடாது. பசிக்கும் போது தான் சாப்பிட வேண்டும். மிளகு சேர்ப்பதால் உணவில் உள்ள விஷம் நீங்குகிறது. உடலில் உள்ள விஷமும் முறிகிறது.  உணவில் சீரகம் சேர்ப்பதால் உடம்பை சீராக வைப்பது மட்டும் அல்லாமல் குளிர்ச்சியை தருகிறது.  வெந்தயம் உஷ்ணத்தைக் குறைக்கிறது. வெந்தயத்தை இரவே தண்ணீரில் ஊற வைத்து காலை எழுந்தவுடன் தண்ணீருடன் பருகி வந்தால் உடம்பில் உள்ள உஷ்ணத்தை குறைக்கிறது. கடுகு, உடலில் உள்ள உஷ்ணத்தை ஒரே அளவாக வைக்கிறது.  இஞ்சியை உணவில் சேர்ப்பதால் பித்தம், தலை சுற்றல், வாந்தி போன்ற கோளாறுகள் வருவதில்லை. உணவு உண்பதற்கு முன்பு கை, கால், வாய், போன்றவற்றை நீரால் கழுவ வேண்டும். காலில் ஈரம் உலர்வதற்கு முன்பே உணவு உண்ணத் தொடங்க வேண்டும். உணவு உண்ணும் போது பேசக் கூடாது, படிக்கக் கூடாது, இடதுகையை கீழே ஊண்டக் கூடாது. டி.வி பார்க்கக்கூடாது.  வீட்டில் கதவை திறந்து வைத்துக் கொண்டு வாசலுக்கு எதிரே அமர்ந்து உண்ணக் கூடாது. காலணி அணிந்து கொண்டு உண்ணக் கூடாது. சூரிய உதயத்திலும், மறையும் பொழுதும் உண்ணக் கூடாது.  உணவு உண்ணும் போது உண்பதில் கவனமாக இருக்க வேண்டும்.

 இருட்டிலோ, நிழல்படும் இடங்களிலோ உண்ணக் கூடாது. சாப்பிடும் பொழுது நடுவில் எழுந்து சென்று மீண்டும் வந்து சாப்பிடக் கூடாது. நின்று கொண்டு சாப்பிக் கூடாது. அதிக கோபத்துடன் உணவு உண்ணக் கூடாது. சாப்பிடும்போது தட்டினைக் கையில் எடுத்துக் கொண்டு உண்ணக் கூடாது. தட்டை மடியில் வைத்துக் கொண்டும், படுத்துக் கொண்டும் உண்ணக் கூடாது. இலையைத் துடைத்து வலித்துச் சாப்பிடுவதும், விரலில் ஒட்டிக் உள்ளதை சப்பிச் சாப்பிடுவதும் தரித்திரத்தை வளர்க்கும். ஒரே நேரத்தில் பல வித பழங்களைச் சாப்பிடக் கூடாது.  எள்ளில் தயாரித்த உணவை இரவில் உண்ணக் கூடாது. வெங்கலம், அலுமினியம் மற்றும் செம்பு பாத்திரங்களில் சமையல் செய்யக் கூடாது. புரச இலையில் சாப்பிட்டால் புத்தி வளரும். வெள்ளித் தட்டில் சாப்பிட்டால் நல்ல அழகு, அறிவு, மன ஒருமைப்பாடு, குடும்ப ஒற்றுமை கிடைக்கும். நாம் சாப்பிட்ட தட்டுக்களை வைத்து சாப்பாட்டையோ அல்லது மற்ற உணவு பதார்த்தங்களையோ மூடி வைக்கக் கூடாது. இரவில் இஞ்சி, கீரை, பாகற்காய், கஞ்சி, தயிர், நெல்லிக்காய் ஆகியவற்றை சேர்க்கக் கூடாது. உண்ணும் தட்டில் அல்லது இலையில் முதலில் காய்கறிகளோ, அப்பளமோ உப்போ பரிமாறாமல் சாதத்தை பரிமாறக் கூடாது. அதே போல முதலில் கீரையோ, வத்தலோ இலையில் வைக்கக் கூடாது. அசுப காரியத்தில் மட்டுமே பயன்படுத்துவர். உண்ணும் உணவில் இறைவன் வாசம் செய்வதால் மேற்கண்ட நடைமுறைகளை கடைப்பிடிப்பது சிறப்பைத்தரும்

மேம்பாட்டு படிப்பு - ஓர் ஆய்வு...


நோபல் பரிசுபெற்ற பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென் கூறுவது என்னவெனில், "மக்கள் தங்களது வாழ்வை வளமிக்கதாக மாற்றிக்கொள்ளும் பொருட்டு சுதந்திரம் வழங்குவதே மனித மேம்பாடு ஆகும். ஆனால் நாம் தற்போது வாழும் உலகில் ஏராளமான முரண்பாடுகள் உள்ளன. 19ம் நூற்றாண்டிலிருந்து பார்த்தால், ஒருவரின் தனிநபர் வருமானம் பல மடங்குகள் கூடியுள்ளது. அதேசமயம், மீண்டும் மீண்டும் ஏழைகளாகவே ஆகிக் கொண்டிருக்கும் மக்கள் மிக அதிகமாகவே உள்ளனர்" என்கிறார்.
இந்த முரண்பாடுகள், உலகளாவிய சமூக, பொருளாதார மற்றும் அரசியல் சூழல்களில் நிலவும் பிரச்சினைகளை, சிறந்த அறிவு மற்றும் பயிற்சியின் மூலம் தீர்க்க வேண்டும் என்பதை உணர்த்துகின்றன. இயற்கை அறிவியலும், தொழில்நுட்பமும் அவற்றுக்கான தீர்வை வழங்கினாலும், அவற்றுக்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளன. இத்தகைய சிக்கல்களைப் பகுப்பாய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ள, சமூக அறிவியல் துறைகளிலிருந்து அறிவும், திறன்களும் தேவைப்படுகின்றன. இதைத்தான் மேம்பாட்டு படிப்புகளும் நோக்கமாக கொண்டுள்ளன.
மக்களது வாழ்க்கை மேம்பாட்டை ஆய்வு செய்வதை, மேம்பாட்டுப் படிப்புகள் நோக்கமாக கொண்டுள்ளன. இத்துறையில், நடைமுறை அல்லது கற்பித்தலின் கொள்கைத் தொடர்பு மற்றும் ஆராய்ச்சி ஆகியவற்றில், மேம்பாட்டுப் படிப்பு ஈடுபட்டுள்ளது. அதேசமயம், மேம்பாட்டுப் படிப்புகளை கற்பிக்கும் ஆசிரியர்கள் மத்தியில், உள்ளூர் மற்றும் உலகளாவிய சமமின்மைத் தொடர்பான ஆர்வம் அதிகரித்து வருகிறது. செல்வம், வளங்கள் ஆகியவற்றுக்கிடையேயான சமமின்மை மற்றும் பாலின வேறுபாடுகள் ஆகிய அம்சங்களும், மேம்பாட்டுப் படிப்புகளில் அடங்கும்.
உலகில், வறுமையில் வாழும் மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பதே மேம்பாடு என்று பொதுவாக கருதப்படுகிறது. அதேபோன்று, வேளாண்மையில், இயற்கை அறிவியலை புகுத்துவதும் வலியுறுத்தப்படுகிறது. எனவே, மேம்பாட்டுப் படிப்புகள் என்பதன் கருத்தாக்கத்தில் பலவித அம்சங்கள் கலந்துள்ளன. "பல் பரிணாம மேம்பாட்டிற்காக, பலவிதமான முயற்சிகளில், மேம்பாட்டுப் படிப்புகள் என்ற கருத்தாக்கம் நம்பிக்கை கொள்கிறது. மிகப்பெரிய முதலாளித்துவ சர்வதேச சூழல், குறிப்பிட்ட கொள்கைகள், நிறுவனங்கள், மேம்பாட்டுப் பயன்களைப் பாதுகாக்க, பலவிதமான ஏஜென்சிகள் மூலமாக நேரடியாக தலையிடுதல் ஆகிய செயல்பாடுகளிலுள்ள, கட்டமைப்பு மாற்றம் மற்றும் சமூக-பொருளாதார மாற்றங்களின், வரலாற்று ரீதியான மற்றும் பெரியளவிலான தாறுமாறான செயல்பாடுகள் ஆகியவற்றின் மீது மேம்பாட்டு படிப்புகள் ஒரு சவாலான அணுகுமுறையாகும்.
இந்தப் படிப்பை மாணவர்கள் தேர்ந்தெடுக்க காரணம் முதுநிலையில், மேம்பாட்டு படிப்புகளை எடுத்துப் படிப்பதே சிறந்த விஷயமாக கருதப்படுகிறது. மேம்பாட்டுப் படிப்புகளின் பாடத்திட்டமானது, அனைத்துவித பின்னணிகளிலிருந்து வரும் மாணவர்களுக்கும் சமமான வாய்ப்புகளை தரும் விதமாக அமைந்துள்ளது. backgrounds. Philosophy of development research; perspectives in science and technology; history and theories of development; women history, development economics போன்ற படிப்புகள், மாணவர்களுக்கு தெளிவான புரிதலை வழங்குகின்றன. மேலும், Urban planning; law and development; culture and development; agriculture and rural development and sustainable development போன்ற படிப்புகள், நடைமுறை ரீதியில், மாணவர்களிடையே, விவாதங்களையும், கலந்துரையாடல்களையும் உருவாக்குகின்றன. மேம்பாட்டு படிப்புகளை முடித்த மாணவர்கள், United Nations organisations, inter-governmental organizations (IGOs), NGOs, the World Bank, private sector consultancy and aid firms, journalistic jobs, and research institutions போன்ற நிறுவனங்களில் வேலைவாய்ப்புகளை பெறலாம். மேலும் பலர், கொள்கைப் படிப்புகள், பொருளாதாரம், நகர்மய படிப்புகள், சுற்றுச்சூழல் படிப்புகள் ஆகிய துறைகளில் மேற்படிப்புகளை படிக்கிறார்கள்.
மேலும், சென்னை-ஐஐடி போன்ற கல்வி நிறுவனங்களில், மேம்பாட்டுப் படிப்புகள் துறையில், நுழைவுத் தேர்வு மூலமாக, ஒருங்கிணைந்த முதுநிலைப் படிப்பையும் மேற்கொள்ளலாம். நம் நாட்டில் நிலவும் பலவிதமான முரண்பட்ட சூழல்களை சமாளிக்க, மேம்பாட்டு படிப்புகள் உதவும் என்ற கருத்துக்கள் நிலவுகின்றன. மேலும், இந்தப் படிப்பானது வெறும் தியரி நிலையிலானது அல்ல. Field trips, case studies, dissertations and projects போன்ற பல அம்சங்கள் நிறைந்து, இந்தப் படிப்பை ஒரு சிறப்பு வாய்ந்ததாக மாற்றுகின்றன. வகுப்பறைக்கு வெளியேயும் சிறந்த அனுபவம் கிடைக்கிறது.
மேம்பாட்டு படிப்பின் எதிர்காலம் உலகிலுள்ள வளரும் நாடுகளின் ஒட்டுமொத்த வளர்ச்சி விகிதம் அதிகரித்து வருகிறது என்று புள்ளி விபரங்கள் கூறினாலும், ஏழை - பணக்காரர் ஆகிய 2 தரப்பினருக்கிடையேயான வித்தியாசம் நாளுக்குநாள் மிகவும் அதிகரித்து வருகிறது. எனவே, ஒரு சில செல்வந்தர்களின் வளர்ச்சியை நாட்டின் வளர்ச்சியாக காட்டுவதை விட்டுவிட்டு, உண்மையான சிக்கலுக்கு தீர்வுகாண வேண்டியுள்ளது.பொருளாதாரம், கலாச்சாரம், தொழில்நுட்பம் மற்றும் சமூக மாற்றங்கள் நிகழும் முக்கிய காலகட்டங்களில், மேம்பாட்டுப் படிப்புகள், நமக்கான ஒரு சுதந்திரமான கல்வியாக இருக்கிறது. மேம்பாடு தொடர்பாக, ஸ்பெஷலிஸ்டுகளை விட, ஜெனரலிஸ்டுகளே, ஒரு முழுமையான புரிந்துணர்வை பெற வேண்டிய கட்டாயம் உள்ளது. எனவே, ஒரு ஜெனரலிஸ்டாக இருக்க விரும்புபவருக்கு, மேம்பாட்டு படிப்புகள் ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கிறது.
இந்திய அளவில் மேம்பாட்டுப் படிப்புகளை வழங்கும் சில முக்கிய கல்வி நிறுவனங்கள்
*  Tata Institute of Social Sciences - www.tiss.edu
*  Madras Institute of Development Studies - www.mids.ac.in
*  Centre for Development Studies - www.cds.edu 
*  Indira Gandhi Institute of Development Research - www.igidr.ac.in  
*  IIT-Bombay - www.iitb.ac.in
*  IIT-Madras

நவீன தொழில்நுட்பத்தில் இந்தியாவுக்கு 6வது இடம்.



நவீன தொழில்நுட்பங்களை உருவாக்குவதில் இந்தியா 6வது இடத்தில் உள்ளதாக ஜி.இ. நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் 200 இந்தியர்கள் உள்பட 22 நாடுகளை சேர்ந்த 2,800 மூத்த அதிகாரிகள் பங்கேற்ற ஆய்வறிக்கையின்படி, நவீன தொழில்நுட்பங்களை உருவாக்குவதில் அமெரிக்கா (65%), ஜெர்மனி (48%), ஜப்பான் (45%), சீனா (38%), கொரியா (13%) மற்றும் இந்தியா (12%) ஆகிய நாடுகள் முதல் 6 இடங்களை பிடித்துள்ளன.

நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்வதில் திறமை, அரசின் நிதி உதவி, பொதுமக்களின் சேமிப்பு ஆகிய மூன்றும் முக்கிய பங்கு வகிப்பதாக கூறப்பட்டுள்ளது. இதேபோன்று இதற்கான சூழலை அமைத்து தருவதில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு காரணிகள் சரி விகிதத்தில் அமைய வேண்டியது மிகவும் அவசியம் என்பது இதில் பங்கேற்றவர்களின் கருத்தாக இருந்தது. இந்த பட்டியலில் இந்தியா முதல் 3 இடங்களுக்குள் வருமா என்ற கேள்விக்கு இந்தியர்களில் 23 சதவீதத்தினரும், வெளிநாட்டவரில் 12 சதவீதத்தினரும் சாதகமான பதில் தெரிவித்திருந்தனர். நவீன தொழில்நுட்ப வளர்ச்சிக்கு பெரிய தொழில் நிறுவனங்களே உந்துசக்தியாக திகழும் என 36 சதவீத இந்தியர்களும், சிறு மற்றும் குறு நிறுவனங்கள்தான் என 35 சதவீதத் தினரும் கருத்து வெளியிட்டுள்ளனர்.

இந்தியா உலக சாதனை...


15 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் ஒரு இடத்தில் கூடி, ஒரே நேரத்தில் இந்திய தேசிய கீதமான ஜன கண மன பாடலை பாடியதன் மூலம், உலக சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தில், லோக்மத் மீடியா அமைப்பு சார்பில் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியின் முடிவில், லண்டனில் இருந்து வந்திருந்த கின்னஸ் உலக சாதனைகள் குழுவினர், சாதனை சான்றிதழை வழங்கி கவுரவித்தனர். இதற்கு முன்னதாக, பாகிஸ்தானில், 5,800 பேர் கூடி, தேசிய கீதத்தை பாடியதே சாதனையாக இருந்தது. தற்போது, இந்த சாதனையை 15, 243 பேர் கூடி, இந்திய தேசிய கீதத்தை பாடியதன் மூலம், பாகிஸ்தான் சாதனை முறியடிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதே நாள்...


  • இந்திய தேசிய வாக்காளர் தினம்
  •  ரஷ்யா மாணவர் தினம்
  •  நாடுகளின் அணி உருவாக்கப்பட்டது(1919)
  •  மாஸ்கோ பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது(1755)
  •  இந்தியாவின் 18வது மாநிலமாக இமாச்சல பிரதேசம் ஏற்றுக் கொள்ளப்பட்டது(1971)

கை சுத்தமானவர்களை தேர்ந்தெடுங்கள் அன்னா குழு...

தாங்கள் எந்த கட்சிக்கும் மற்றும் எந்தவொரு தனிப்பட்ட நபருக்காகவும் தேர்தல் பிரசாரம் செய்யவில்லை என்றும், குற்றப்பின்னணி இல்லாத மற்றும் சுத்தமானவர்களை தேர்ந்தெடுக்கவே தாங்கள் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டுள்ளதாக அன்னா குழு தெரிவித்துள்ளது. பஞ்சாப், உத்தரபிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தலையொட்டி, அன்னா குழு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது. அர்விந்த் கெஜ்ரிவால், கிரண் பேடி உள்ளிட்ட முக்கிய உறுப்பினர்கள் இல்லாத நிலையில், மணிஷ் சிசோடியா தலைமையிலான அன்னா குழு, தற்போது பஞ்சாபில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது. அங்கு, பத்திரிகையாளர்களை சந்தித்த சிசோடியா கூறியதாவது, வலுவான ஜன் லோக்பால் மசோதாவை வலியுறுத்தும் தங்களது போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மத்திய அரசால் தாக்கல் செய்யப்பட்டுள்ள லோக்பால் மசோதாவால், ஒருபோதும் ஊழலை ஒழிக்கவோ மற்றும் கட்டுப்படுத்தவோ முடியாது 

சூரியனின் மேல்மட்டத்தில் எழுந்துள்ள சூரிய அதிர்வலைகள் பூமியைத் தாக்கியது!


கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, தற்போது சூரியனின் மேல்மட்டத்தில் எழுந்துள்ள சூரிய அதிர்வலைகள் அல்லது சூரியப் புயல், இன்று பூமியைத் தாக்கியது. இதனால் அமெரிக்காவில் விமானங்கள் திருப்பி விடப்பட்டன. சூரியனின் மேற்புறத்தில் பல்வேறு வேதியியல் மாற்றங்களால், கதிர்கள் பெருமளவில் கொந்தளித்து, அலைகளை வீசுவது, சூரிய அதிர்வலைகள் அல்லது சூரியப் புயல் எனப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே சூரியனின் மேற்புறம் அமைதியாகவே இருந்து வருகிறது. இந்நிலையில், கடந்த 22ம் தேதி, சூரியனின் மேற்புறத்தில் இருந்து புறப்பட்ட சூரிய அதிர்வலை, ஒரு மணி நேரத்தில் பூமியைத் தாக்கியது. தற்போது, அதைவிட சக்தி வாய்ந்த சூரியஅதிர்வலை, இன்று, பூமியைத் தாக்கும் என, "நாசா' தெரிவித்துள்ளது. இந்த தாக்குதல், மூன்று விதத்தில் நிகழும். முதலில் மின்காந்தத் தூண்டல் கதிர்வீச்சும், இரண்டாவதாக, புரோட்டான்கள் நிறைந்த அதிர்வலையால் கதிர்வீச்சும், மூன்றாவதாக, சூரியனின் கரோனா என்ற மேற்புறத்தில் இருந்து எழும் பிளாஸ்மா கதிர்வீச்சும் அடுத்தடுத்து பூமியை நோக்கி வரும். இந்த கதிர்வீச்சுகளினால், பூமியின் மேற்புறத்தில் சுற்றிக் கொண்டிருக்கும் செயற்கைக்கோள்கள், சர்வதேச விண்வெளி நிலையம்,சற்று பாதிக்கப்படலாம். பூமியின் சில பகுதிகளில் மின்சாரத் தொகுப்பு நிலையங்கள் பாதிக்கப்படலாம். எனினும், கடந்த 1989ல் நிகழ்ந்த சூரிய அதிர்வலையைப் போல் அல்லாமல், இந்த முறை சற்று குறைவாகவே இருக்கும் எனவும், அது பூமியின் வடதுருவத்தில் தான் அதி களவில் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது.


இந்நிலையில் அமெரிக்கா நேரப்படி செவ்வாய் காலை 10 மணியளவில்(ஜி.எம்.டி., நேரப்படி 15.00) மணியளவில் சூரிய புயல் பூமியை தாக்கியது. இது கடந்த அக்டோபர் 2003ம் ஆண்டை காட்டிலும் ஏற்பட்ட சூரிய புயலை விட அதிகம் என நாசா கூறியுள்ளது. மேலும், சூரிய புயலில் வரும் கதிர்வீச்சு மனிதனுக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது எனவும் அமெரிக்க விண்வெளி நிறுவனம் கூறியது. இந்த கதிர்வீச்சுக்கள் புதன்கிழமை வரை இருக்கும் எனவும், இதனால் விண்வெளி தொடர்பு, விமான போக்குவரத்து பாதிக்கப்படக்கூடும் என நாசா கூறியுள்ளது. கதிர்வீச்சு குறையும் வரை விமான போக்குவரத்து கண்காணிக்கப்படும்

ஜல்லிக்கட்டு அயர்லாந்து அமைப்பு கண்டனம்.


அயர்லாந்தைச் சேர்ந்த விலங்கு உரிமைகள் அமைப்பு ஒன்று, தமிழகத்தின் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டை எதிர்த்து, பிரச்சாரத்தில் ஈடுபடப்போவதாக எச்சரித்துள்ளது. தமிழகத்தின் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு குறித்து, விலங்குகள் நல அமைப்பான, "பீட்டா' தொடுத்த வழக்கில், மதுரை ஐகோர்ட் அளித்த இடைக்கால தீர்ப்பின்படி, பல்வேறு விதிமுறைகளுக்கு உட்பட்டு, சமீபத்தில் ஜல்லிக்கட்டு நடந்து முடிந்தது.

இந்நிலையில், அயர்லாந்தைச் சேர்ந்த, "விலங்கு உரிமைகள் நடவடிக்கை அமைப்பு' (ஏ.ஆர்.ஏ.என்.,), மத்திய சுற்றுலாத் துறை அமைச்சர் சுபோந்த் சகாய்க்கு அனுப்பிய கடிதத்தில்,    ‘’விலங்குகளை மதிப்புடன் நடத்துவதில், இந்தியா முன்னணியில் உள்ளது. எனினும், ஜல்லிக்கட்டைப் பொறுத்தவரையில், அடித்தல், குத்துதல், வாலைத் திருகுதல், இழுத்தல், கொம்புகளை உடைத்தல் போன்ற செயல்களும், நிகழ்ச்சிகளுக்கு முன், காளைகளுக்கு வலுக்கட்டாயமாக சாராயம் புகட்டுதலும் தொடர்கின்றன. இதை உடனடியாக நிறுத்தாவிட்டால், இதற்கு எதிராக நாங்கள் பிரசாரம் செய்வோம். இந்தியாவுக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளிடம், இதை எடுத்துச் சொல்லி, இந்தியாவைப் புறக்கணிக்கும்படி வலியுறுத்துவோம்’’என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

உலகிலேயே அதிக ஏழை மக்களைக் கொண்ட நாடு இந்தியாதான்.


விஜயகாந்த் குடியரசு தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு வாழ்த்து தெரிவித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ’’இந்தியா தனது 63வது குடியரசு தினத்தை இன்றைய தினம் கொண்டாடுகிறது. எத்தனையோ நாடுகள் பெற்ற சுதந்திரத்தையும், ஜனநாயகத்தையும் இழந்து தவிக்கின்றன. இடைக்காலத்தில் நெருக்கடி நிலை என்ற பெயரால் ஜனநாயகத்தை பறிகொடுத்தாலும் இந்தியா இன்றும் தனது ஜனநாயக அமைப்புகளை காப்பாற்றிக் கொண்டிருப்பதே ஒரு சாதனையாகும். ஆனால் அதே நேரத்தில் எல்லோரும் சமம் என்ற ஜனநாயகம் உண்மையில் செயல்பட்டுள்ளதா என்றால், இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். சமூக ரீதியில் ஜாதி, மதங்களால் பிரிந்தும், பொருளாதார ரீதியில் ஏழை, பணக்காரர் என்ற வேறுபாடு அதிகரித்தும் வருவதை கண்கூடாகப் பார்க்கிறோம். 

நாடு சுதந்திரம் பெற்றதில் இருந்து வறுமை ஒழிப்புக்காக மத்திய அரசும், மாநில அரசுகளும் போட்டி போட்டுக் கொண்டு திட்டங்களை அறிவித்தன. ஆனால் இந்த திட்டங்கள் வெறும் காகித அறிவிப்புகளாகவே இருந்துள்ளன. இன்றும் உலகிலேயே அதிக ஏழை மக்களைக் கொண்ட நாடு இந்தியாதான். உண்மையான ஜனநாயகம் மலர்ந்திருக்குமானால் இந்த அவல நிலை ஏற்பட்டிருக்காது. மக்கள் பிரதிநிதிகளாக உள்ள அரசியல் தலைவர்கள் இந்த குடியரசு தின கொண்டாடத்தையே குண்டு துளைக்காத மேடைகளில் கொண்டாட வேண்டிய அவசியம் ஏற்பட்டது ஏன்? நக்சல்பாரி இயக்கத்தினர் கையில் இந்தியாவின் மூன்றில் ஒரு பகுதி இன்னும் இருப்பது ஏன்? பொதுமக்கள் கூடும் பேருந்து நிலையங்கள், ரெயில்வே நிலையங்கள், விமான நிலையங்கள் போன்ற இடங்களையும், பஸ், ரயில் போன்ற போக்குவரத்து சாதனங்களையும் போலீசார் கண்காணிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருப்பது ஏன்?

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை அனைத்து துறைகளிலும் ஊழல், ஊழல், ஊழல் என்று ஊழல்மயமாக உள்ளன. இவற்றையெல்லாம் உற்று நோக்குகிறபோது எந்த ஜனநாயகம் உண்மையான ஏழை, நடுத்தர மக்களுக்கு பயன்பட வேண்டுமோ, அவர்களுக்கு பயன்படாததாலேயே இந்த நிலைமை ஏற்பட்டிருக்கிறது. 

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை நதி நீர்ப் பங்கீடு சம்பந்தமான பிரச்னை தீர்ந்தபாடில்லை. முல்லைப் பெரியாறு பிரச்னை தமிழ்நாட்டு மக்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி வருகிறது. ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் மீன் பிடித்து வாழ்க்கையை நடத்த முடியவில்லை.இவை போதாதென்று தானே புயல் என்ற இயற்கைப் பேரிடர் கடலூர், விழுப்புரம், திருவாரூர், நாகப்பட்டிணம் பகுதிகளில் உள்ள மக்களின் வாழ்க்கையையே சூறையாடி விட்டது. இவற்றிற்கு தீர்வு காணவும், நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவும் மாநில, மத்திய அரசுகள் எவ்வித முனைப்பையும் காட்டவில்லை. தற்போதைய பற்றாக்குறை ஜனநாயகத்தை மட்டுமே நம்பியிராமல் அனைவரின் நல்வாழ்வுக்கும் வழி வகுக்கக் கூடிய உண்மையான ஜனநாயகம் மலர்வதற்கு நாம் அனைவரும் பாடுபடுவதிலேயே இந்தியாவின் எதிர்காலம் அடங்கியுள்ளது. ஆகவே சமூகப் பொருளாதார ரீதியில் சம வாய்ப்பு சமுதாயம் ஏற்படவும், ஜனநாயகம் காப்பாற்றப்படவும் இந்த குடியரசு தின விழாவில் உறுதி சூளுரை மேற்கொள்வோம். அனைத்து தரப்பினருக்கும் எனது குடியரசு தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இசையமைக்கிறார் சிம்பு!


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...