நவீன தொழில்நுட்பங்களை உருவாக்குவதில் இந்தியா 6வது இடத்தில் உள்ளதாக ஜி.இ. நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் 200 இந்தியர்கள் உள்பட 22 நாடுகளை சேர்ந்த 2,800 மூத்த அதிகாரிகள் பங்கேற்ற ஆய்வறிக்கையின்படி, நவீன தொழில்நுட்பங்களை உருவாக்குவதில் அமெரிக்கா (65%), ஜெர்மனி (48%), ஜப்பான் (45%), சீனா (38%), கொரியா (13%) மற்றும் இந்தியா (12%) ஆகிய நாடுகள் முதல் 6 இடங்களை பிடித்துள்ளன.
நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்வதில் திறமை, அரசின் நிதி உதவி, பொதுமக்களின் சேமிப்பு ஆகிய மூன்றும் முக்கிய பங்கு வகிப்பதாக கூறப்பட்டுள்ளது. இதேபோன்று இதற்கான சூழலை அமைத்து தருவதில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு காரணிகள் சரி விகிதத்தில் அமைய வேண்டியது மிகவும் அவசியம் என்பது இதில் பங்கேற்றவர்களின் கருத்தாக இருந்தது. இந்த பட்டியலில் இந்தியா முதல் 3 இடங்களுக்குள் வருமா என்ற கேள்விக்கு இந்தியர்களில் 23 சதவீதத்தினரும், வெளிநாட்டவரில் 12 சதவீதத்தினரும் சாதகமான பதில் தெரிவித்திருந்தனர். நவீன தொழில்நுட்ப வளர்ச்சிக்கு பெரிய தொழில் நிறுவனங்களே உந்துசக்தியாக திகழும் என 36 சதவீத இந்தியர்களும், சிறு மற்றும் குறு நிறுவனங்கள்தான் என 35 சதவீதத் தினரும் கருத்து வெளியிட்டுள்ளனர்.
No comments:
Post a Comment