ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை. விவேகானந்தர்.
05 June, 2014
சும்மா ஒரு தகவலுக்காக...
நீங்கள் இப்போது உங்கள் தோட்டத்தில் அமர்ந்து கொண்டு, ஒரு மலரைப்
பார்த்தபடி அமைதியாக நின்றுகொண்டிருக்கலாம். ஒரு மோனநிலை
போல. சமீபத்தில் அனைவரின் வாயிலும் வறுத்தெடுக்கப்படும் ‚
ஜென்நிலை‘ போல என்றும் சொல்லலாம். மொத்தத்தில் அசையாமல்
அப்படியே நிற்கிறீர்கள்.
ஆனால், நீங்கள் அசையாமல் நிற்கிறீர்களா?
பூமி, தன்னைத்தானே சுற்றுவதால் அதனுடன் சேர்ந்து, அது சுற்றும் வேகமான 1600 கிமீ/மணி வேகத்தில் நீங்களும் ஓடிக்கொண்டிருக்கிறீர்கள். அதாவது அமைதியாக அசையாமல் நிற்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். ஆனாலும் கற்பனை பண்ண முடியாத வேகத்தில் இயங்குகிறீர்கள். இது மட்டும்தான் உங்கள் வேகம் என்று நினைத்தால், அதுதான் இல்லை.
பூமியானது சூரியனை 107000 கிமீ/மணி வேகத்தில் சுற்றுகிறது. நீங்களும் 1600 கிமீ/மணி வேகத்தில் பூமியுடன் ஓடிக்கொண்டு, மேலும் 107000 கிமீ/மணி வேகத்தில் சூரியனைச் சுற்றவும் ஓடுகிறீர்கள். இத்துடன் நின்றுவிடுவதில்லை உங்கள் ஓட்டம். சூரியனுடன் பூமியும், நீங்களும் சேர்ந்து பால்வெளிமண்டலத்தில் 792000 கிமீ/மணி வேகத்தில் ஓடிக்கொண்டிருக்கிறீர்கள். இன்னும் முடியவில்லை உங்கள் வேகம். பால்வெளிமண்டலத்துடன் மொத்தமாகச் சேர்ந்து நீங்கள் 2.1மில்லியன் கிமீ/மணி வேகத்தில் அருகிலிருக்கும் காலக்ஸியின் சார்பாக ஓடிக்கொண்டிருக்கிறீர்கள்.
மொத்தத்தில், 1600+107000+792000+2100000 கிமீ/மணி வேகத்தில் ஒவ்வொரு கணத்திலும் நீங்கள் இயங்கிக் கொண்டிருக்கிறீர்கள். ஆனாலும் தோட்டத்தில் பூக்களை ரசித்தபடி ஒரு 'ஜென்நிலை'யில் இருப்பதாக எண்ணிக் கொண்டிருக்கிறீர்கள்.
எல்லாமே ஐன்ஸ்டைனின் சார்புக் கொள்கையின் விளைவுகளே!
Subscribe to:
Posts (Atom)