|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

26 July, 2011

டீன் ஏஜ் பெண்களை கவனமா பார்த்துக்கங்க !

டீன்-ஏஜ் பருவம் என்பது மிகவும் வாழ்வில் முக்கியமான காலகட்டம். பொதுவாக 13-19 வயது வரையிலான பருவத்தை “டீன்-ஏஜ்’ என்கிறோம். இந்தியாவில், டீன்-ஏஜ் பெண்களின் எண்ணிக்கை, 25 கோடிக்கும் அதிகமாக உள்ளதாக ஆய்வு ஒன்று கூறுகிறது.

இந்த காலகட்டத்தில், பெண்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல்வேறு மாறுதல்களை சந்திக்கின்றனர். அவர்களுக்கு பெற்றோரின் அன்பும் அரவணைப்பும் அவசியம்.

உடல் வளர்ச்சி மாற்றம்

தாய்மார்கள் தங்கள் பெண் குழந்தைகளுக்கு, அவர்களது உடல் வளர்ச்சி பற்றி அவசியம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். ஏனெனில் உடல் உறுப்பு வளர்ச்சி மாற்றத்தால், உணர்வுப் பூர்வமாக பலவிதமான மனஉளைச்சலுக்கு டீன் ஏஜ் பெண்கள் ஆளாகின்றனர்.

எனவே, இந்த பருவத்தில் எல்லோருக்கும் இப்படித் தான் உடல் வளர்ச்சி இருக்கும். இதுகுறித்து கவலைப்பட வேண் டாம் என்பதை பெற்றோர்கள் எடுத்துக் கூறுவது மிகவும் அவசியம். அதோடு, வெளியிடங்களிலும் தங்களை பாதுகாத்துக் கொள்வது எப்படி என்பது பற்றியும் அவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.

சிலருக்கு முகத்தில் பருக்கள் ஏற்படும். இது எண்ணெய் பசையுள்ள தோல், ஹார்மோன் மாறுபாடுகளால் ஏற்படக்கூடிய சாதாரண ஒரு நிகழ்வே. ஆனால், இந்த வயதுப் பெண்கள் இதை ஒரு நோய் போல கருதுவர் எனவே, இதுகுறித்து, பெற்றோர்கள் தெளிவாக தங்கள் குழந்தைகளுக்கு விளக்க வேண்டும்.

பாலியல் தொந்தரவு

டீன் ஏஜ் பெண்கள் சந்திக்கும் மிகப்பெரிய துன்பம் அந்நிய ஆடவர்களினால் எற்படும் பாலியல் தொந்தரவுதான். இதனால் எண்ணற்ற பெண்கள் யாரிடமும் பகிர்ந்து கொள்ள முடியாமல் மனச்சிதைவுக்கு ஆளாகின்றனர். ஒரு சிலர் தற்கொலை செய்து கொள்ளும் முடிவுக்கு தள்ளப்படுகின்றனர். இதுபோன்ற சூழ்நிலையில் பெண்குழந்தைகளின் மனதை புரிந்து கொண்டு அவர்களுக்கு அன்பான ஆறுதலான வார்த்தைகளால் வாழ்வின் சூட்சுமத்தை புரிய வைக்க வேண்டியது பெற்றோரின் கடமை.

டீன் ஏஜ் பருவத்தில்தான் எதையும் செய்து பார்த்தால் என்ன என்ற எண்ணம் தலை தூக்க ஆரம்பிக்கும். அப்பொழுது பெற்றோர் கூறும் அறிவுரைகளைக் கூட கேட்க மறுத்து தங்கள் இஷ்டம் போல செயல்பட தொடங்குவார்கள். எனவே டீன் ஏஜ் பெண்களை கட்டுப்படுத்த வேண்டும் என்று நினைப்பதை விட அன்பினால் அவர்களுக்கு புரியவைக்க வேண்டும்.

சுத்தம் பற்றிய புரிதல்

இந்த வயதுக்கே உரிய பல்வேறு பிரச்னைகளால், டீன் ஏஜ் குழந்தைகள், பொதுவாக அதிகம் சாப்பிட மாட்டார்கள். இதனால்,ரத்த சோகை ஏற்பட வாய்ப்புண்டு. இவற்றை சரிப் படுத்துவதுடன் ஹீமோகுளோபின் அளவை 10க்கு மேல் வைத்துக் கொண்டால், படிப்பில் முன்னேற்றம், வேலையில் சுறுசுறுப்பு, ஆரோக்கியம் ஆகியவை மேம்படும்.

அடுத்து, இளம் பெண்களுக்கு, சுத்தம் பற்றி தாய்மார்கள் எடுத்துக் கூற வேண்டியது மிக மிக அவசியம். நோய் தொற்று வராமல் இருப்பதற்கு சுகாதாரம் மிக முக்கியம். அவர்கள் பயன்படுத்தும் உள்ளாடைகள் குறித்தும் கவனமுடன் இருக்க அறிவுறுத்த வேண்டும். பூப்பெய்துவதில் சில குழந்தைகளுக்கு கால தாமதம் ஏற்படலாம். உடல் உறுப்பு வளர்ச்சி சரியாக இருந்தால் 16 வயது வரை பொறுத்திருந்து பார்க்கலாம். அப்படி இல்லையெனில், உடன் மருத்துவரை அணுகுவது நல்லது.

வேலைக்கு செல்லும் தாய்மார்கள் தங்களின் டீன்-ஏஜ் பெண்களுடன் தினமும் சிறிது நேரமாவது கட்டாயமாக செலவழிக்க வேண்டும். அவர்களது உடல்நலம், சந்தேகங்கள், படிப்பு பற்றி பேச வேண்டும் மனம் விட்டு பேச வேண்டும். இது அவர்களிடம் தன்னம்பிக்கையை வளர்ப்பதுடன் தாயுடனான நெருக்கத்தையும் பாசத்தையும் மேம்படுத்தும்.

நடிகர் ரவிச்சந்திரன் மரணம்!

சிறுநீரகங்கள் முற்றாக செயலிழந்து சிகிச்சைப் பெற்று வந்த பழம்பெரும் கதாநாயகன் ரவிச்சந்திரன் சென்னையில் நேற்று இரவு மரணம் அடைந்தார். அவருக்கு வயது 71. அவருடைய உடல் தகனம் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை நடக்கிறது.

காதலிக்கநேரமில்லை என்ற சூப்பர் ஹிட் படத்தில் கதாநாயகனாக இயக்குநர் ஸ்ரீதரால் அறிமுகம் ஆனவர் ரவிச்சந்திரன்.

தொடர்ந்து நான், குமரிப்பெண், அதே கண்கள், மூன்றெழுத்து, பாக்தாத்பேரழகி, அன்றுகண்ட முகம் உள்பட 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருந்தார். இவர் கடைசியாக நடித்த படம் சமீபத்தில் வெளியான ஆடுபுலி. அந்த படத்தில் இவருக்கு ஜோடியாக கே.ஆர்.விஜயா நடித்திருந்தார்.

வெள்ளிவிழா கதாநாயகன் என்று அழைக்கப்பட்ட ரவிச்சந்திரன் வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்திருந்தார். ஊமை விழிகள் படத்தில் இவருடைய வில்லன் கதாபாத்திரம் பரபரப்பாக பேசப்பட்டது.

சிறுநீரகக் கோளாறு

71 வயதான ரவிச்சந்திரனுக்கு நீண்டகாலமாக சர்க்கரை நோய் இருந்து வந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்பட்டது. அதற்காக அவருக்கு டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு அவர் உடல் நிலை மிகவும் பாதிக்கப்பட்டது. நுரையீரலில் நீர்க் கோர்ப்பு மற்றும் மூச்சுத்திணறல் நோய்களால் பாதிக்கப்பட்டார்.

இதைத்தொடர்ந்து சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இல்லாமல் கோமா நிலையை அடைந்தார்.

கடைசி வரை நினைவு திரும்பாமலேயே நேற்று இரவு 8.35 மணிக்கு அவர் மரணம் அடைந்தார். அவருடைய உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக சென்னை தியாகராயநகரில் உள்ள அவருக்கு சொந்தமான சாய் மகால் என்ற திருமண மண்டபத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டது.

ஏராளமான பொது மக்களும், திரை உலக பிரமுகர்களும் ரவிச்சந்திரன் உடலுக்கு மாலை வைத்து இறுதி அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

ரவிச்சந்திரனின் உடல் தகனம் சென்னை பெசன்ட் நகரில் உள்ள மின்சார மயானத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை நடக்கிறது.

மறைந்த நடிகர் ரவிச்சந்திரனுக்கு விமலா என்ற மனைவியும், பாலாஜி, அம்சவர்தன் என்ற 2 மகன்களும், லாவண்யா என்ற மகளும் இருக்கிறார்கள். இவர்களில் அம்சவரதன் சில படங்களில் கதாநாயகனாக நடித்து இருக்கிறார். இவரை நாயகனாக வைத்து ரவிச்சந்திரன் இரு படங்களை இயக்கினார்.

வெள்ளிவிழா நாயகன்

மறைந்த நடிகர் ரவிச்சந்திரனின் சொந்த பெயர் ராமன். அவருடைய சொந்த ஊர் திருச்சி. ஒளிப்பதிவாளர் பி.என்.சுந்தரம் மூலம் இயக்குநர் ஸ்ரீதருக்கு அறிமுகமானார்.

காதலிக்க நேரமில்லை படத்துக்குப் பின் நிற்க நேரமில்லை என்று சொல்லும் அளவுக்கு பிஸியான நாயகனாகிவிட்டார் ரவிச்சந்திரன்.ஸ்ரீதரின் சொந்த படநிறுவனமான சித்ராலாயாவுக்காக 2 வருடத்திற்கு ரவிச்சந்திரனை மாதம் ரூ.500 சம்பளம் பேசி ஒப்பந்தம் செய்தார். 2 வருடங்களில் ரவிச்சந்திரன் பிரபலமானதும் சித்ராலாயா நிறுவனத்தில் இருந்து விலகி மற்ற நிறுவன படங்களில் நடிக்க ஆரம்பித்தார். அதன்பிறகு அவர் படிப்படியாக உயர்ந்து வெள்ளிவிழா கதாநாயகன் என புகழப்பட்டார்.

அறுபதுகளின் இறுதி மற்றும் எழுபதுகளின் ஆரம்பத்தில் எம்ஜிஆர், சிவாஜிக்குப் பிறகு ஜெய்சங்கர் - ரவிச்சந்திரன் மிகப் பிரபலமான நாயகர்களாகத் திகழ்ந்தனர்.

வன்னியரசு சொல்வதில் உண்மையில்லை. இதுகுறித்து நடிகர் விஜய்யே விளக்கம் தெரிவிப்பார்!

இலங்கையில் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் லட்சக்கணக்கான தமிழர்களை இனப்படுகொலை செய்த போர்க்குற்றவாளி என குற்றம்சாட்டப்பட்டுள்ள ராஜபக்சேவுக்கு எதிராக கையெழுத்திட நடிகர் விஜய் மறுத்துவிட்டதாக விடுதலைச் சிறுத்தைகள் குற்றம் சாட்டியுள்ளது.

'இனப்படுகொலை குற்றவாளி' ராஜபக்சே மற்றும் அவருக்கு துணை நின்ற கும்பலை அனைத்துலக நீதிமன்றம் தண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக விடுதலைச் சிறுத்தைகளின் கையழுத்து இயக்கம் தமிழகம் முழுவதும் தொடங்கியுள்ளது.

இந்த இயக்கத்துக்கான தொடக்க நிகழ்ச்சியை கடந்த வாரம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் சென்னையில் தொடங்கி வைத்தார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் பொதுமக்களிடம் கையெழுத்து வாங்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். திங்கள்கிழமை திரையுலகைச் சேர்ந்த சத்யராஜ், மணிவண்ணன், ஆர்.கே.செல்வமணி, ரோஜா, அறிவுமதி உள்ளிட்ட பலரிடம் கையெழுத்து வாங்கியுள்ளனர்.

மறுத்தாரா விஜய்?இதேபோல் நடிகர் விஜய் ஈழத் தமிழர்களைப் பற்றி பேசி வருவதால், அவரிடம் கையெழுத்து வாங்க விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் செய்தித் தொடர்பாளர் வன்னியரசு தலைமையில் மாநில நிர்வாகிகள் முடிவு செய்தனர்.

சென்னை திருவல்லிக்கேணியில் நண்பன் படப்பிடிப்பில் விஜய் இருப்பதாக தகவல் கிடைத்ததால் அங்கு சென்று விஜய்யிடம் கையெழுத்து கேட்டனர்.

ஏன்? எதற்கு? என்று பல கேள்விகளைக் கேட்ட விஜய், கடைசியில் கையெழுத்துப் போட மறுத்துவிட்டதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வன்னியரசு கூறுகையில், "நாங்கள் கையெழுத்து கேட்டபோது பல விளக்கங்கள் கேட்டார் விஜய். நாங்களும் சொன்னோம். ஆனால் அவரோ கடைசியில், 'இல்லை, நான் கையெழுத்துப் போட மாட்டேன். எனக்கு விருப்பம் இல்லை,' என்றார். மேலும் எங்களை அனுப்புவதில் குறியாக இருந்தார்.

இதையடுத்து விஜய்யின் தந்தை இயக்குநர் எஸ்.ஏ.சந்ரேசேகரனை தொடர்பு கொண்டோம். உடனே கோபமாக, 'நாங்களும் ஒரு அமைப்பு வைத்திருக்கிறோம். தேவை என்றால் நாங்களே இதுபோன்ற கையெழுத்து இயக்கம் நடத்துவோம். உங்களுக்கு கையெழுத்து போட வேண்டிய அவசியம் இல்லை. படப்பிடிப்புக்கு தொந்தரவு கொடுக்காமல் அந்த இடத்தை விட்டு வெளியேறுங்கள்,' என்றார்.

"ராஜபக்சேவை இனப்படுகொலையாளி என உலகமே சொல்ல ஆரம்பித்துள்ளது. அதற்கு வலு சேர்க்கத்தான் கொலை குற்றவாளி என்பதற்காகத்தான் இந்த கையெழுத்து வாங்கிக்கொண்டிருக்கிறோம். வேறு எந்த காரணத்துக்காகவும் இல்லை என்று நாங்கள் எடுத்துக் கூறினோம். இருப்பினும் அவர்கள் கையெழுத்து போட மறுத்துவிட்டனர். இதிலிருந்தே தெரிகிறது, ஈழத் தமிழர்களுக்கு குரல் கொடுப்பதாகக் கூறி மக்களை எந்த அளவு விஜய்யும் அவர் தந்தையும் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்பது!", என்றார் வன்னியரசு.

விஜய் விளக்கம்: ஆனால் இதனை விஜய் தரப்பில் முழுவதுமாக மறுத்துள்ளனர். 'வன்னியரசு சொல்வதில் உண்மையில்லை. இதுகுறித்து நடிகர் விஜய்யே விளக்கம் தெரிவிப்பார்' என்று விஜய் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

கே.கே.நகர் போலீசில் நாளை ஆஜராக வேண்டும்' என, "சன் டிவி' கலாநிதிக்கு, மீண்டும் சம்மன்!


ு.சேலத்தைச் சேர்ந்த கந்தன் பிலிம்ஸ் உரிமையாளர் செல்வராஜ், "தீராத விளையாட்டுப் பிள்ளை' படம் வினியோக உரிமை தொடர்பாக, 82.53 லட்ச ரூபாய் பணத்தைத் தராமல், மிரட்டல் விடுத்ததாக, "சன் பிக்சர்ஸ்' நிர்வாக அதிகாரி ஹன்ஸ்ராஜ் சக்சேனா மீது, கே.கே.நகர் போலீசில், கடந்த 1ம் தேதி புகார் அளித்தார். இதையடுத்து, சக்சேனாவை, கடந்த 3ம் தேதி இரவு, 7.30 மணிக்கு, கே.கே.நகர் போலீசார் கைது செய்தனர்.

கோர்ட் அனுமதிப்படி, சக்சேனாவை காவலில் எடுத்து, போலீசார் விசாரித்த போது, "எனக்கு ஒன்றும் தெரியாது; என் முதலாளி (கலாநிதி) சொன்னதைத் தான் செய்தேன்' என்று பதிலளித்ததாகத் தெரிகிறது. இதையடுத்து, 13ம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி கலாநிதிக்கு, கடந்த 11ம் தேதி சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், 13ம் தேதி கலாநிதி ஆஜராகவில்லை.அவருக்கு பதிலாக, விசாரணை அதிகாரிகள் முன், அவரது வழக்கறிஞர்கள் ஆஜராகி, விளக்கம் அளித்தனர். அப்போது, அளித்த மனுவில், கலாநிதி வெளிநாடு சென்றிருப்பதாகவும், 26ம் தேதி வரை விசாரணைக்கு ஆஜராக முடியாது. அதன் பின் ஒரு நாள் ஆஜராவதாகவும் தெரிவித்திருந்தனர்

சுவிஸ் வங்கிகளில், பணம் சேமித்துள்ள இந்தியர்கள் பற்றிய விவரங்கள் அந்நாட்டுக்கு அளிக்கப்படும்' என, இந்தியாவுக்கான சுவிஸ் தூதர் தெரிவித்துள்ளார்!


சுவிஸ் வங்கிகளில், பணம் சேமித்துள்ள இந்தியர்கள் பற்றிய விவரங்கள் அந்நாட்டுக்கு அளிக்கப்படும்' என, இந்தியாவுக்கான சுவிஸ் தூதர் தெரிவித்துள்ளார்.இந்தியா - சுவிட்சர்லாந்து இடையேயான இரட்டை வரி விதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தம் (டி.டி.ஏ.ஏ.,), கடந்தாண்டு ஆகஸ்ட்டில் திருத்தம் செய்யப்பட்டது. முந்தைய ஒப்பந்தப்படி, வரி ஏய்ப்பு செய்தவர்கள் பற்றிய விவரங்களை மட்டுமே சுவிஸ் நாட்டில் இருந்து இந்தியா பெற முடியும். திருத்தப்பட்ட ஒப்பந்தப்படி, யார் யார் பணம் சேமித்துள்ளனர் என்ற முழு விவரத்தைப் பெற வழி பிறந்துள்ளது.

அதன்படி, சுவிஸ் வங்கிகளில் பணம் சேமித்துள்ள இந்தியர்கள், இந்திய நிறுவனங்கள் பற்றிய விவரங்களை, இந்தாண்டு ஜனவரி 1ம் தேதி முதல் இந்தியா பெற முடியும்.இந்த ஒப்பந்தம், சுவிஸ் பார்லிமென்ட்டில், கடந்த ஜூன் 17ம் தேதி ஒப்புதல் பெற்றது. சுவிஸ் சட்டப்படி, பார்லிமென்ட்டில் ஒப்புதல் ஆன மசோதா மீது, பொதுமக்கள் அடுத்த 100 நாட்களுக்குள் கருத்து தெரிவிப்பர். அதில் வேறுபாடுகள் இருக்கும் பட்சத்தில், மசோதா குறித்து பொது ஓட்டெடுப்பு நடக்கும்.அதன்படி, ஜூன் 17ம் தேதி சுவிஸ் பார்லிமென்ட்டில் ஒப்புதல் பெற்ற இருதரப்பு டி.டி.ஏ.ஏ., ஒப்பந்தம் மீது, அக்டோபர் 6ம் தேதி வரை பொதுமக்கள் கருத்து கேட்கப்படும். அதில் வேறுபாடுகள் இருந்தால், பொது ஓட்டெடுப்புக்கு விடப்படும்.

இதுகுறித்து இந்தியாவுக்கான சுவிஸ் தூதர் பிலிப்பி வெல்டி கூறியதாவது:அக்டோபர் மாதம், இதில் பொது ஓட்டெடுப்பு தேவையா? வேண்டாமா என்பது தெரிந்து விடும். இருந்தாலும், பொது ஓட்டெடுப்பு இதற்குத் தேவைப்படாது என்றே நான் நம்புகிறேன்.நான் சொல்வது சரியாக இருக்கும் பட்சத்தில், அக்டோபர் 7ம் தேதியே, வங்கிகளில் சேமித்து வைத்துள்ளோர் பற்றிய விவரங்களைத் தர நாங்கள் தயாராக இருப்பதாக, இந்திய அரசிடம் தெரிவிப்போம்.அப்போது, இதுபற்றி இந்திய அரசு எங்களிடம் கோரிக்கை விடுக்கலாம். இந்தாண்டின் துவக்கத்தில் இருந்து, யார் யார் சுவிஸ் வங்கிகளில் பணம் சேமித்துள்ளனர் என்ற விவரங்கள் அவர்களுக்கு கிடைக்கும்.இவ்வாறு வெல்டி தெரிவித்தார்.

பிரிட்டன் தலைநகர் லண்டனில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, "சுவிஸ் சட்டப்படி, சர்வதேச நாடுகளுடன் அந்நாடு செய்து கொள்ளும் ஒப்பந்தம், அந்நாட்டு பார்லிமென்டில் ஒப்புதல் பெறப்பட்டு பின், உள்ளூர் அதிகாரிகளிடமும் ஒப்புதல் பெறப்படும். அவ்வகையில் நமது ஒப்பந்தம், இந்தாண்டின் இறுதியில் ஒப்புதல் பெற்று விடும்' என்றார்.

திரைப்படங்களுக்கு கேளிக்கை வரி அரசு புதிய நிபந்தனை!


தமிழில் பெயர் சூட்டப்படும் திரைப்படங்களுக்கு கேளிக்கை வரி விலக்கு அளிக்கும் உத்தரவில், பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. புதிய தகுதிகளை பூர்த்தி செய்யும் படங்களுக்கு மட்டுமே, இனி, கேளிக்கை வரி விலக்கு அளிக்கப்படும்.தமிழில் பெயர் சூட்டப்படும் புதிய திரைப்படங்களுக்கு, கேளிக்கை வரியில் இருந்து முழுமையாக வரி விலக்கு அளித்து, முந்தைய, தி.மு.க., அரசு, 2006ல் உத்தரவிட்டது. பின்னர், இந்த வரிவிலக்கு, பழைய திரைப்படங்களுக்கும் நீட்டிக்கப்பட்டது. தொடர்ந்து, தமிழ் திரைப்படங்களின் காப்புரிமை வைத்திருப்போருக்கும், கேளிக்கை வரிவிலக்கு நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில், கேளிக்கை வரிச் சலுகை பெற, திரையிடப்படும் பழைய மற்றும் புதிய திரைப்படங்களின் தமிழ் பெயர், தமிழ் பண்பாட்டுக்கு உகந்ததாகவும், கண்ணியமானதாகவும் உள்ளதா என்று ஆய்வு செய்து பரிந்துரைக்கு, 2007ல் ஒரு குழு அமைக்கப்பட்டது. தற்போது புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், திரைப்படங்களுக்கு தமிழில் பெயரிட்டால் மட்டும், அத்திரைப்படங்களின் கதைக் கரு, தமிழ் பண்பாட்டுக்கு உகந்ததாகவும், கண்ணியமானதாகவும் உள்ளது என்று உறுதி செய்ய இயலவில்லை என்றும், சில தரமில்லாத திரைப்படங்கள் தமிழில் பெயரிட்டதால் மட்டும் கேளிக்கை வரிவிலக்கு பெற்றுவிடுவதாகவும், அரசு கருதியது.எனவே, கேளிக்கை வரிச்சலுகை பெற, திரைப்படங்களுக்கு தமிழில் பெயர் சூட்ட வேண்டும் என்ற நிபந்தனையுடன், சில கூடுதல் தகுதிகளையும் நிர்ணயித்து, தமிழக அரசு தற்போது உத்தரவிட்டுள்ளது. அவை வருமாறு:

* திரைப்படம், திரைப்பட தணிக்கை வாரியத்திடம் இருந்து, "யு' சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

* திரைப்படத்தின் கதையின் கருவானது, தமிழ் மொழி மற்றும் பண்பாட்டின் வளர்ச்சிக்கு உகந்ததாக இருக்க வேண்டும்.

* திரைப்படத்தின் தேவையை கருதி, பிறமொழிகளை பயன்படுத்தும் காட்சிகளைத் தவிர, பெருமளவில் திரைப்படத்தின் வசனங்கள் தமிழ் மொழியில் இருக்க வேண்டும்.

* திரைப்படத்தில் வன்முறை மற்றும் ஆபாசங்கள் அதிகளவில் இடம்பெற்றால், அத்திரைப்படம் வரிவிலக்கு பெறுவதற்கான தகுதியை இழக்கும். இந்த வரையறைகள், திரைப்படங்களுக்கு கேளிக்கை வரிவிலக்கு கோரப்பட்டு, தற்போது நிலுவையில் உள்ள விண்ணப்பங்களுக்கும் பொருந்தும். மேலும், கேளிக்கை வரி செலுத்துவதில் இருந்து விலக்களிக்க, புதிய நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் திரைப்படங்களை பார்வையிட்டு, வரிவிலக்கு அளிக்க பரிந்துரைப்பதற்காக, ஒரு புதிய தனிக்குழு ஏற்படுத்தப்பட உள்ளதாக, அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே நாள்...


  • வடகொரியா வெற்றி தினம்
  •  கவிமணி தேசிய விநாயகம்பிள்ளை பிறந்த தினம்(1876)
  •  பிரெட்றிக் பாண்டிங் தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள் இன்சுலினை கண்டறிந்தனர்(1921)
  •  இங்கிலாந்து வங்கி, ராயல் சார்டரால் அங்கீகரிக்கப்பட்டது(1694)
  • LinkWithin

    Related Posts Plugin for WordPress, Blogger...