|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

07 February, 2012

நண்பன் DVD MOVIE ONLINE


வானம் MOVIE ONLINE...


தைப்பூச நன்னாளில் வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெறுங்கள்!


ஆனைமுகனுக்குத் தம்பியாய் வந்த ஆறுமுகனே! சிவசுப்பிரமணியனே! ஒளிமிகுந்த பன்னிரு தோள்களைக் கொண்டவனே! பன்னிருகைப் பரமனே! வெற்றி வேலாயுத மூர்த்தியே! செவ்வேள் முருகனே! திருமாலின் மருகனே! குழந்தைக் கடவுளே! எனக்கு மனநலத்தையும், உடல் நலத்தையும் தந்தருள வேண்டுகிறேன்.

 * அம்மையப்பர் ஈன்றெடுத்த அருந்தவப்புதல்வா! தேன்சிந்தும் புது மலர்களை விரும்பி அணிபவனே! திருத்தணி முருகனே! கந்தனே! கடம்பனே! கார்த்திகேயனே! சூரபத்மனுக்கு வாழ்வு தந்த வள்ளலே! வெற்றிவீரனே! வள்ளிக்கு வாய்த்தவனே! வாழ்வில் தடைகளைப் போக்கி நல்வழி காட்டுவாயாக.  

* குயிலைப் போல இனிய மொழி பேசும் தெய்வானை மணாளனே! வள்ளிநாயகியை காதல் மணம் செய்தவனே! கருணை சிந்தும் விழிகளைக் கொண்டவனே! வடிவேலனே! விரைவில் என் குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடத்த அருள்புரிவாயாக.  

* மலைக்கு நாயகனே! மயிலேறிய மாணிக்கமே! சேவற்கொடியோனே! சிவசக்தி மைந்தனே! நம்பியவரைக் கரை சேர்ப்பவனே! காங்கேயனே! அறுபடைவீடுகளில் வீற்றிருந்து அருளாட்சி புரிபவனே! இன்னல்களைப் போக்கி வாழ்வில் நிம்மதியும், மகிழ்ச்சியும் நீயே தர வேண்டும்.  

* உலகம் அனைத்தையும் ஆள்பவனே! நல்லவர்க்கு அருள்பவனே! வெற்றி வேலைக் கையில் ஏந்தியவனே! குற்றம் பொறுக்கும் குணக்குன்றே! சிவகுருநாதனே! எட்டுத்திக்கிலும் அருளாட்சி புரிபவனே! சரவணனே! சேவற்கொடியோனே! என் வசந்தத்தை வரவழைக்கும்படி சேவலைக் கூவச் செய்வாயாக.  

* தாமரைத் திருவடிகளைக் கொண்டவனே! வேதம் புகழும் உமைபாலனே! குறிஞ்சியின் முதல்வனே! துன்பமெல்லாம் போக்கி, ஆறுதலைத் தந்தருளும் ஆறுமுகப் பெருமானே! பிரணவத்திற்குப் பொருள் உரைத்த குருநாதனே! நீயே எனக்கு ஞானத்தை வழங்கி அருளவேண்டும்.

 * தண்டாயுதபாணியே! சிங்கார வேலனே! ஒருமையுடன் தியானிக்கும் பக்தர்கள் உள்ளத்தில் வீற்றிருக்கும் குகப்பெருமானே! கிரவுஞ்சகிரியை இருகூறாகப் பிளந்த வேலவனே! அகத்தியருக்கு உபதேசித்த என் ஆண்டவனே! எனக்கு நல்லறிவையும், மதிநுட்பத்தையும் கொடுப்பாயாக. 

* வேதத்தின் உட்பொருளே! அழகில் மன்மதனை வென்றவனே! பேரழகனே! தெய்வசிகாமணியே! குன்றுதோறும் வீற்றிருக்கும் குமரப்பெருமானே! தந்தைக்கு பாடம் சொன்ன தனயனே! சரவணப்பொய்கையில் உதித்தவனே! அவ்வைக்கு கனி ஈந்த சிவபாலனே! திருச்செந்தில் ஆண்டவனே! என் மன விருப்பங்களை நிறைவேற்றி வைப்பாயாக. 

 * சண்முகப்பெருமானே! நான் மட்டுமல்லாமல், என்னைச் சேர்ந்தவர்களான மனைவி, பிள்ளைகள், உறவினர், நண்பர்கள் என்று அனைவரையும் உன் அன்பர்களாக வாழச் செய்வாயாக. உன்னருளால் எங்கள் உள்ளங்களிலும் இல்லங்களிலும் என்றும் மகிழ்ச்சி நிலைத்திருக்கட்டும்.

தன்னிச்சையான மாணவர் சேர்க்கை செல்லாது தமிழக அரசு


அரசு அமைத்துள்ள கண்காணிப்பு குழுவின் அனுமதி பெறாமல், சுயநிதி மருத்துவக் கல்லூரிகள், தன்னிச்சையாக மாணவர் சேர்க்கை செய்வது செல்லாது" என, தமிழக அரசு தெரிவித்துள்ளது.சுப்ரீம் கோர்ட் தீர்ப்புப்படி, தமிழகத்தில் உள்ள சுயநிதி மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த, சிறுபான்மை மற்றும் சிறுபான்மை அல்லாத சுயநிதி கல்லூரிகளில், நேர்மையாக மாணவர் சேர்க்கப்படுவதை உ றுதிப்படுத்த, தமிழக அரசு, குழு ஒன்றை அமைத்துள்ளது.
ஐகோர்ட் ஓய்வுபெற்ற நீதிபதி அப்துல் ஹாதி தலைமையில், சுயநிதி மருத்துவக் கல்விக்கான மாணவர் சேர்க்கையை முறைப்படுத்தும் மற்றும் கண்காணிக்கும் குழு என்ற ஒரு குழுவை, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், அரசு அமைத்தது.இக்குழுவின் உறுப்பினர் செயலராக, சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் கிரிஜா வைத்தியநாதனும், உறுப்பினர்களாக, எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக் கழக துணைவேந்தர் மயில்வாகனன் நடராஜன், டாக்டர் ஆனந்த கண்ணன், டாக்டர் எஸ்.கே.ராஜன் ஆகியோரும் உள்ளனர்.வரும், 2012-13ம் கல்வியாண்டுக்கு, மருத்துவம், மருத்துவம் சார்ந்த பட்டப் படிப்புகளில் (மருத்துவம், பல் மருத்துவம், செவிலியர், மருந்தாளுநர், பி.ஓ.ட்டி, பி.பி.டி., பி.பி.டி., - இந்திய மருத்துவம்) தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை பணிகளை மேற்கொள்ள, தமிழகத்தில் எந்த ஒரு சுயநிதி மருத்துவக் கல்லூரிக்கோ, சங்கத்துக்கோ, அரசு இதுவரை அனுமதி வழங்கவில்லை.
இதுதொடர்பாக கண்காணிப்புக் குழு வெளியிட்ட செய்திக் குறிப்பு: இனிமேல்தான், இதற்கான அனுமதியை உரிய முறையில் இக்குழு வழங்கும். எந்த ஒரு சங்கமோ அல்லது கல்லூரியோ, தன்னிச்சையாக, மருத்துவப் படிப்புகளுக்கு, 2012-13ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கையை, குழுவின் அனுமதி பெறாமல் மேற்கொள்ளக் கூடாது.எனவே, மாணவர்களும், பெற்றோரும், கல்லூரி மற்றும் சங்கங்கள் வெளியிடும் விளம்பரங்கள், கண்காணிப்புக் குழுவின் அனுமதியோடு வழங்கப்படுகிறதா? என்பதை உறுதிசெய்ய வேண்டும். அவ்வாறு, குழுவின் அனுமதியின்றி நடத்தப்படும் மாணவர் சேர்க்கை செல்லாது.இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள, டி.டி., மருத்துவக் கல்லூரி தன்னிச்சையாகவும், அனுமதி பெறாமலும், மாணவர் சேர்க்கைக்கான விளம்பரத்தை, நாளேடு ஒன்றில் செய்துள்ளது. அவ்வாறு செய்து மாணவர் சேர்க்கை செய்வது செல்லத்தக்கதல்ல.இவ்வாறு கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது.

இதே நாள்...

  • கிரனடா விடுதலை தினம்(1974)
  •  ஐரோப்பிய ஒன்றியம் அமைப்பதற்கான மாஸ்ட்ரிக்ட் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது(1992)
  •  சுவிட்சர்லாந்தில் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டது(1971)
  •  புளூட்டோ, நெப்டியூனின் சுற்றுப் பாதைக்குள் நுழைந்தது(1979)

பார்த்ததில் பிடித்தது!

    

இன்டர்நேஷனல் டிரைவிங் லைசென்ஸ்...


குறைந்த கால மற்றும் நீண்ட கால அடிப்படையில் வெளிநாடுகளுக்கு செல்வது அதிகரித்துள்ளது. எனவே, அங்கு தங்கியிருக்கும்போது, கார் ஓட்டும் அவசியம் ஏற்படுவதை தவிர்க்க இயலாது. அத்தகைய சூழலில் அந்த நாட்டின் டிரைவிங் லைசென்ஸ் இருந்தால் மட்டுமே காரை வாடகைக்கு எடுத்து ஓட்டவோ அல்லது சொந்தமாக கார் வாங்கி ஓட்டவோ முடியும்.

எனவே, வெளிநாடு செல்பவர்கள் எந்த நாட்டிற்கு செல்கின்றனரோ அந்த நாட்டின் டிரைவிங் லைசென்ஸ் பெறுவது அவசியமாகிறது. திக்கு தெரியாத அயல்நாட்டில் போய் இறங்கியவுடன் டிரைவிங் லைசென்ஸ் பெறுவது எளிதான காரியமல்ல. அங்குள்ள டிரைவிங் ஸ்கூல்கள் மூலம் எளிதாக பெற்றுவிடலாமே என்றாலும், கூடுதல் கட்டணத்தை கொடுத்து தண்டம் அழும் சூழ்நிலை ஏற்படலாம்.இதை தவிர்க்க நம் நாட்டிலேயே இன்டர்நேஷனல் டிரைவிங் லைசென்ஸ் பெற்றுச்சென்றால் பாதிப் பிரச்னையை குறையும். எனவே, நம் நாட்டிலேய இன்டர்நேஷனல் லைசென்ஸ் பெறுவதற்கான வழிமுறைகளை இங்கே காணலாம்.

இன்டர்நேஷனல் டிரைவிங் லைசென்ஸ் பெறுவதற்கு நிரந்தர டிரைவிங் லைசென்ஸ் வைத்திருத்தல் அவசியம். இன்டர்நேஷனல் லைசென்ஸ் பெறுவதற்கு 4 ஏ என்ற விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அதனுடன் நிரந்தர டிரைவிங் லைசென்ஸ், பாஸ்போர்ட், எந்த நாட்டிற்கு செல்கிறோமோ அந்த நாட்டுக்கான விசா பிரதி, மருத்துவ சான்றிதழ் ஆகியவற்றை இணைத்து ரூ.1000 கட்டணமாக செலுத்த வேண்டும். விண்ணப்பிக்கும் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஆவணங்கள் சரிபார்த்த பின் அன்றைய தினமே இன்டர்நேஷனல் டிரைவிங் பர்மிட் வழங்கப்படும். இந்தியாவுக்கும் மற்ற உலக நாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்தத்தின்படி, இங்கிருந்து வாங்கிச்செல்லப்படும் இன்டர்நேஷனல் டிரைவிங் பர்மிட் ஓராண்டுக்கு செல்லத்தக்கதாக இருக்கும். அதன்பிறகும் அங்கு தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்படும்போது அங்கேயே டிரைவிங் லைசென்ஸ் விண்ணப்பித்து பெற முடியும்.

மணப்புரம் பைனான்ஸ் டெபாசிட் வசூலிப்பது சட்டவிரோதம்!


மலையாளிகளின் நிறுவனமான மணப்புரம் பைனான்ஸ் சட்டவிரோதமாக டெபாசிட்டுகளை வசூலிப்பதாக மத்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. பொதுமக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் என எச்சரிக்கையும் விடுத்துள்ளது.

இனி மணப்புரம் பைனான்ஸ் அல்லது மணப்புரம் அக்ரோ பார்ம்ஸ் நிறுவனங்களின் பெயரில் பொதுமக்களிடமிருந்து டெபாசிட்டுகளை வசூலிப்பது குற்றம், கடும் தண்டனைக்குரியது என்றும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.இதுகுறித்து ரிசர்வ் வங்கி இன்று வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், "விபி நந்தகுமாரை எக்ஸிக்யூடிவ் சேர்மனாகக் கொண்டு இயங்கும் மணப்புரம் பைனான்ஸ், தனது அனைத்து கிளைகளிலும் பொதுமக்களிடமிருந்து டெபாசிட் வசூலிக்கிறது. அதற்கு, மணப்புரம் அக்ரோ பார்ம்ஸ் எனும் பெயரில் ரசீதும் தருகிறது. மணப்புரம் அக்ரோ பார்ம்ஸ் என்பது விபி நந்தகுமாருக்கு முழுமையாக சொந்தமான நிறுவனம். இது கார்ப்பரேட் சட்டப்படி பதிவு பெறாதது.ரிசர்வ் வங்கி சட்டம் 45-S படி இது குற்றச் செயலாகும்.பொதுமக்கள் இந்த நிறுவனத்தில் டெபாசிட் செய்ய வேண்டும். மீறி டெபாசிட் வாங்கினால் மணப்புரம் பைனான்ஸ் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்," என அறிவித்துள்ளது.

கேரளாவின் திருச்சூரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் மணப்புரம் பைனான்ஸ் தங்க நகைக் கடன்களைத்தான் பிரதானமாக வழங்குகிறது (இருக்கிற நகை நட்டுகளை அடமானம் வைக்க சொல்லி விக்ரம் அட்வைஸ் பண்ணுவாரே... அந்தக் கம்பெனிதான்!). ஆரம்பத்தில் வங்கியல்லாத நிதி நிறுவனமாக பதிவு செய்திருந்த மணப்புரம் பைனான்ஸ், 2011-லிருந்து 'டெபாசிட் பெறாத வங்கியல்லாத நிதி நிறுவனம்' என்ற பிரிவின் கீழ் மாற்றிக் கொண்டது.ஆனாலும் டெபாசிட் பெறுவதை தொடர்வதாக ரிசர்வ் வங்கிக்கு ஆதாரங்களுடன் தகவல் கிடைத்ததால், இந்த எச்சரிக்கையை ரிசர்வ் வங்கி விடுத்துள்ளது.இதைத் தொடர்ந்து, மணப்புரம் நிதி நிறுவனம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் தாங்கள் டெபாசிட் வாங்குவதில்லை என்றும், கடன் பத்திரங்களில் மக்களை முதலீடு செய்ய மட்டுமே கோருவதாகவும் தெரிவித்துள்ளது. இந்த பத்திரங்கள் டெபாசிட்டுகள் என்ற பிரிவில் வருவதில்லை என்கிறது இந்த நிறுவனம்.ஏற்கெனவே பெற்ற டெபாசிட்டுகளை திருப்பிக் கொடுத்து வருவதாகவும், மீதியை பஞ்சாப் நேஷனல் வங்கியில் தனி கணக்கில் (escrow account) வைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளது

திமுகவுக்கு அடுத்த தலைமை யார்? 'குமுதம் ரிபோர்ட்டர்'

  கருணாநிதிக்குப் பின் திமுகவுக்கு அடுத்த தலைமை யார்... இந்தக் கேள்வி திமுகவினர் மத்தியில் மட்டுமல்ல... கட்சி சாராத தமிழ் உணர்வாளர்கள் பலருக்கும் உள்ளது. காரணம், யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், தமிழக அரசியலில் திமுகவின் ஆளுமை அப்படி!

கருணாநிதிக்குப் பின் திமுகவுக்கு அடுத்த தலைமை யார்? என்ற கேள்வியை முன் வைத்து 'குமுதம் ரிபோர்ட்டர்' வாரமிருமுறை இதழ் நடத்திய இந்தக் கருத்துக் கணிப்பில், முக ஸ்டாலினே தலைமைக்குத் தகுதியானவர் என்று 58 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.ஸ்டாலினுக்கு இன்று வரை தலைமைப் பதவி கிடைக்காமலிருக்க முக்கிய காரணம் என்று சித்தரிக்கப்படும் அழகிரிக்கு 12 சதவீத ஆதரவு மட்டுமே இருப்பதாக அந்தப் பத்திரிகை கருத்து தெரிவித்துள்ளது. திமுகவிலிருந்து பிரிந்து போய், தனிக்கட்சி நடத்தி வரும் வைகோவை 8 சதவீதம் பேர் திமுக தலைமைக்கு தகுதியானவர் என்று கருத்து கூறியுள்ளார்களாம்! இந்த சர்வேயில் இன்னும் இருவர் உண்டு. தயாநிதி மாறன் மற்றும் கனிமொழி!

தயாநிதிக்கு 5 சதவீத ஆதரவும், கனிமொழிக்க 3 சதவீத ஆதரவும் உள்ளதாக அந்த பத்திரிகை கூறியுள்ளது. இது கனிமொழி ஆதரவாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியைத் தந்துள்ளது. காரணம், கனிமொழியின் 'திகார் தியாகத்துக்கு' கட்சியில் பெரிய பதவியை பரிசாகத் தர வேண்டும் என்று அவரது தாயார் ராஜாத்தி அம்மாள் வெளிப்படையாகக் கூறிவந்தார். கருணாநிதியும் அதுகுறித்து யோசிப்பதாக கூறப்பட்ட நிலையில், இந்த சர்வேயை வெளியிட்டுள்ளனர். இதன் மூலம் கருணாநிதிக்குப் பின் திமுகவின் அடுத்த தலைவர் முக ஸ்டாலின்தான் என்பது உறுதியாகிறது என இந்த சர்வே முடிவு கூறுகிறது.

2007ல் இதே கேள்வியை வைத்து தினகரன் நடத்திய சர்வே மற்றும் அதைத் தொடர்ந்து நடந்த சம்பவங்கள் நினைவிருக்கலாம்!

மூங்கில் மரத்தில் தயாரித்த செல்போன்

மூங்கில் மூலம் ஒரு மாணவர் செல்போன் தயாரித்துள்ளார். இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள ஸ்கெபர்ஸ் புஷ் பகுதியை சேர்ந்தவர் கிரான்ஸ்காட் வுட் ஹவுஸ் (23). இவர் மிடில்செக்ஸ் பல்கலைக்கழக மாணவர். இவர் செல்போன்கள் தயாரிக்கும் படிப்பு படித்து வந்தார்.  செல்போன்கள் தயாரிப்பில் அனைவரது ஒட்டு மொத்த கவனத்தையும் கவர விரும்பினார்.
 
அதற்காக மூங்கிலினால் ஆன செல்போனை தயாரித்து சாதனை படைத்துள்ளார்.  அதற்காக, அவர் 4 வருடங்கள் வளர்ந்த இளம் மூங்கில் மரங்களை பயன் படுத்தினார். ஏனெனில் அது மிகவும் வளவளப்பு தன்மையுடன் உடையாத நிலையில் இருக்கும். இதில், மற்ற செல்போன்று, கேமரா உள்ளிட்ட அனைத்து தொழில் நுட்பங்களும் இடம் பெற்றுள்ளன. இவற்றை இந்த ஆண்டு இறுதியில் மக்கள் பயன்பாட்டுக்காக அறிமுகப்படுத்தப்படுகின்றன. உலகிலேயே முதன் முறையாக மூங்கில் மூலம் செல்போன் தயாரித்து சாதனை படைத்த வுட் ஹவுசுக்கு பாராட்டுகள் குவிகின்றன. இது குறித்து அவர் கூறும் போது, “செல்போனை நூதன முறையில் தயாரிக்க விரும்பினேன். அதற்காகத்தான் மூங்கிலை பயன்படுத்தினேன்” என்றார். 

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...