அரசு அமைத்துள்ள கண்காணிப்பு குழுவின் அனுமதி பெறாமல், சுயநிதி மருத்துவக் கல்லூரிகள், தன்னிச்சையாக மாணவர் சேர்க்கை செய்வது செல்லாது" என, தமிழக அரசு தெரிவித்துள்ளது.சுப்ரீம் கோர்ட் தீர்ப்புப்படி, தமிழகத்தில் உள்ள சுயநிதி மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த, சிறுபான்மை மற்றும் சிறுபான்மை அல்லாத சுயநிதி கல்லூரிகளில், நேர்மையாக மாணவர் சேர்க்கப்படுவதை உ றுதிப்படுத்த, தமிழக அரசு, குழு ஒன்றை அமைத்துள்ளது.
ஐகோர்ட் ஓய்வுபெற்ற நீதிபதி அப்துல் ஹாதி தலைமையில், சுயநிதி மருத்துவக் கல்விக்கான மாணவர் சேர்க்கையை முறைப்படுத்தும் மற்றும் கண்காணிக்கும் குழு என்ற ஒரு குழுவை, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், அரசு அமைத்தது.இக்குழுவின் உறுப்பினர் செயலராக, சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் கிரிஜா வைத்தியநாதனும், உறுப்பினர்களாக, எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக் கழக துணைவேந்தர் மயில்வாகனன் நடராஜன், டாக்டர் ஆனந்த கண்ணன், டாக்டர் எஸ்.கே.ராஜன் ஆகியோரும் உள்ளனர்.வரும், 2012-13ம் கல்வியாண்டுக்கு, மருத்துவம், மருத்துவம் சார்ந்த பட்டப் படிப்புகளில் (மருத்துவம், பல் மருத்துவம், செவிலியர், மருந்தாளுநர், பி.ஓ.ட்டி, பி.பி.டி., பி.பி.டி., - இந்திய மருத்துவம்) தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை பணிகளை மேற்கொள்ள, தமிழகத்தில் எந்த ஒரு சுயநிதி மருத்துவக் கல்லூரிக்கோ, சங்கத்துக்கோ, அரசு இதுவரை அனுமதி வழங்கவில்லை.
இதுதொடர்பாக கண்காணிப்புக் குழு வெளியிட்ட செய்திக் குறிப்பு: இனிமேல்தான், இதற்கான அனுமதியை உரிய முறையில் இக்குழு வழங்கும். எந்த ஒரு சங்கமோ அல்லது கல்லூரியோ, தன்னிச்சையாக, மருத்துவப் படிப்புகளுக்கு, 2012-13ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கையை, குழுவின் அனுமதி பெறாமல் மேற்கொள்ளக் கூடாது.எனவே, மாணவர்களும், பெற்றோரும், கல்லூரி மற்றும் சங்கங்கள் வெளியிடும் விளம்பரங்கள், கண்காணிப்புக் குழுவின் அனுமதியோடு வழங்கப்படுகிறதா? என்பதை உறுதிசெய்ய வேண்டும். அவ்வாறு, குழுவின் அனுமதியின்றி நடத்தப்படும் மாணவர் சேர்க்கை செல்லாது.இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள, டி.டி., மருத்துவக் கல்லூரி தன்னிச்சையாகவும், அனுமதி பெறாமலும், மாணவர் சேர்க்கைக்கான விளம்பரத்தை, நாளேடு ஒன்றில் செய்துள்ளது. அவ்வாறு செய்து மாணவர் சேர்க்கை செய்வது செல்லத்தக்கதல்ல.இவ்வாறு கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment