|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

02 October, 2011

பெண்கள் வாழ சிறந்த நாடு இந்தியாவுக்கு 141வது இடம்!


உலகில் பெண்கள் வாழ சிறந்த இடம் எது என்ற கருத்து கணிப்பை அமெரிக்காவைச் சேர்ந்த, "நியூஸ்வீக்' என்ற நாளிதழ் நடத்தியது.மொத்தம், 165 நாடுகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.இதில், இந்தியா, 141வது இடத்தை பெற்றது. இதன் மூலம், நமது நாடு சுதந்திரம் பெற்று, 65 ஆண்டுகளை கடந்தாலும், அரசியல், கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பில் பெண்கள் இன்னும் முன்னேற்றம் அடையவில்லை என்பதை காட்டுகிறது.

அனைத்து துறைகளிலும் பெண்களுக்கு ஏற்ற நாடு என்ற பெருமையை ஐஸ்லாந்து பெற்றுள்ளது. இதற்கு அடுத்து, சுவீடன், கனடா, டென்மார்க், பின்லாந்து ஆகிய நாடுகள், முதல் ஐந்து இடங்களை பெற்றுள்ளன. இதே நேரத்தில் மாலி, காங்கோ, ஏமன், ஆப்கானிஸ்தான், சாத் ஆகிய நாடுகள் கடைசி ஐந்து இடங்களை பெற்றுள்ளன. இப்பட்டியலில், அயர்லாந்து, மொத்தமாக, 100க்கு 100 சதவீதம் பெற்று முதலிடத்தை பெற்றுள்ளது. இதில் பொருளாதாரத்தில், 100க்கு 88, சுகாதாரத்தில், 100க்கு 90.5, அரசியலில், 100க்கு 92.8, கல்வியில், 96.7 சதவீதத்தை பெற்றுள்ளது.ஆனால், இந்தியா, 100க்கு, 41.9 மதிப்பெண்களை மட்டுமே பெற்று, 141வது இடத்தை பெற்றுள்ளது. இதில், அரசியலில், 14.8 சதவீதமும், நீதித் துறையில், 54, பொருளாதாரத்தில், 60.7, சுகாதாரத்தில், 64.1, கல்வியில், 64.9 சதவீதமும் பெற்றுள்ளது.

நமது நாட்டை விட, சிறிய நாடாக இருக்கும், வங்கதேசம், நேபாளம், பூடான், மியான்மர், இலங்கை உள்ளிட்ட நாடுகள், இந்தியாவை விட, மேலிடத்தில் உள்ளன. இப்பட்டியலில், முதல் 20 இடங்களுக்குள் வந்த ஒரே ஆசிய நாடு பிலிப்பைன்ஸ் (17வது இடம்) மட்டுமே.

பறவைகள் தங்கும் மரங்களை வெட்டுவதற்கு மக்கள் எதிர்ப்பு!


 வெளிநாட்டு பறவைகள் தங்கும் மரங்களை வெட்டுவதற்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து அந்தப் பணியை நிறுத்தி விட்டனர். நெல்லை மாவட்டம் ஆழ்வார்குறிச்சியிலிருந்து கடையம் செல்லும் பாதையில் உள்ளது வாகைகுளம். வாகைகுளத்தில் சுமார் 12 ஹெக்டேர் பரப்பளவில் குளம் உள்ளது. இந்த குளத்தில் 1996ம் ஆண்டு கருவேல மரக்கன்றுகள் நடப்பட்டது.

இந்த மரங்களில் ரஷ்யா, சைபீரியா, ஸ்காட்லாந்து மற்றும் வெளிநாடுகளிலிருந்து சுமார் 45 வகையான பாம்புதாரா, மூக்கன், புள்ளிதாரா, கரண்டிவாயன், கூழகிடா, கரும்புள்ளி கொத்து, நீலமீன்கொத்தி, பவளக்கால் உள்ளான், கார்மரண்ட், பெலிக்கன், மஞ்சள் மூக்கு ஆள்காட்டி என சுமார் 45 வகையான வெளிநாட்டு பறவைகள் அக்டோபர், நவம்பர், டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி ஆகிய மாதங்களில் இங்கு வந்து தங்கி இனப்பெருக்கம் செய்துவிட்டு பின்னர் 6 மாதம் கழித்து தங்களின் நாடுகளுக்கு திரும்பிவிடுவது வழக்கம். கூந்தன்குளத்தை அடுத்து வாகைகுளத்தில் வெளிநாட்டு பறவைகள் வந்து தங்குவதால் இப்பறவைகளுக்கு உணவாக குளத்தில் உள்ள மீன்கள் பயன்படும். மேலும் இப்பறவைகளின் எச்சங்கள் குளத்துநீரில் கலந்து உரமாக விவசாயத்திற்கு பயன்படுகிறது.நெல்லை சமூகவனக்கோட்டம் கோட்ட வன அலுவலகம் சார்பில் இந்த குளத்தில் 1996ம் ஆண்டு நடப்பட்ட இம்மரங்களை கடந்த 2007ல் வெட்டுவதற்கு உத்தரவிட்டனர். இதற்கு நாணல்குளம், வாகைகுளம், வீராசமுத்திரம், மாலிக்நகர் பொதுமக்கள், ஏட்ரி அமைப்பு, சமூகநல ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போதைய கலெக்டர் ஜெயராமன் வாகைகுளத்தை பார்வையிட்டு இங்குள்ள பறவைகளையும், அருகில் உள்ள கல்லூரி விலங்கியல் துறையினர் மற்றும் பேராசிரியர்கள் மூலம் ஆய்வு செய்து இங்கு பறவைகள் சரணாலயம் அமைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினர்.இதன் பேரில் முறையாக பறவைகள் சரணாலயம் அமைப்பதற்காக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சமூகவன காடுகள் கோட்ட வன அலுவலகத்திலிருந்து கருவேல மர குத்தகைதாரர் தற்போது தண்ணீர் இல்லாததால் மரங்களை வெட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டார். மரங்கள் வெட்டுவதை அறிந்த நாணல்குளம், வாகைகுளம், வீராசமுத்திரம், மாலிக்நகர் பொதுமக்கள் மரம் வெட்டுவதை நிறுத்தக் கோரினர்.இத்தகவல் அறிந்த அம்பை தாசில்தார்,கடையம் ஒன்றிய ஆணையாளர்,கல்லூரி விலங்கியல்துறை பேராசிரியர்,ஆழ்வார்குறிச்சிசப்-இன்ஸ்பெக்டர், ஆகியோர் வாகைகுளத்திற்கு வந்து குத்தகைதாரர்டன் பேச்சுவார்த்தை நடத்தினர். பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாலும், பறவைகள் சரணாலயம் அமைப்பதற்கான நடவடிக்கையில் வாகைகுளம் இருப்பதாலும், தேர்தல் வேலைகள் இருப்பதாலும் மரங்களை வெட்டக் கூடாது என அதிகாரிகள் முடிவெடுத்து மரம் வெட்டுவது நிறுத்தப்பட்டது.

இந்திய ராணுவத்தின் முதல் பெண் ஜவான்

இந்திய ராணுவப் படைப் பிரிவில் முதல் முறையாக பெண் ஒருவர் ஜவானாக பணியில் சேர்ந்துள்ளார். இதுவரை போரில் ஈடுபடாதப் பிரிவுகளில், அதுவும் அதிகாரிகள் அந்தஸ்தில் மட்டுமே பெண்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். இந்த நிலையில், 2 குழந்தைகளுக்கு தாயாக உள்ள 35 வயதான சாப்பர் சாந்தி டிக்கா, தரைப் படையின் ரயில்வே என்ஜினீயர் பிரிவில் ஜவானாக சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளார் என்று ராணுவ உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். வானுக்கான உடற்தகுதித் தேர்வில் ஆண்களை விட சிறப்பாக செயல்பட்ட சாந்தி டிக்கா, ஓட்டப் போட்டியில் ஒன்றரை கி.மீ. தூரத்தை மற்றவர்களைவிட 5 விநாடிகள் குறைவான நேரத்தில் கடந்தார். 50 மீட்டர் ஓட்டத்தில், நிர்ணயிக்கப்பட்ட தூரத்தை 12 விநாடிகளில் கடந்தார். மேற்கு வங்கத்தின் ஜல்பைகுரி மாவட்டத்தில் உள்ள சல்சா ரயில் நிலையத்தில் பாயின்ட்ஸ் மேனாக பணியில் சேர்ந்த சாந்தி டிக்கா, தற்போது ராணுவத்தில் சேர்ந்துள்ளதன் மூலம் தனது நீண்ட நாள் கனவு நிறைவேறியது எனத் தெரிவித்தார்.

இதே நாள்...


  • சர்வதேச வன்முறையற்ற தினம்
  •  இந்தியாவில் காந்தி ஜெயந்தி
  •  மகாத்மா காந்தி பிறந்த தினம்(1869)
  •  தினமலர் நிறுவனர் டி.வி.ராமசுப்பையர் பிறந்த தினம்(1908)
  •  இந்திய முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி பிறந்த தினம்(1904)

தமிழ்பெண்ணை ஏமாற்றி உல்லாசம் திருச்சி வாலிபருக்கு 7ஆண்டு சிறை


ஆஸ்திரேலியாவில் வசிக்கும் தமிழ்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, உல்லாசமாக இருந்து ஏமாற்றிய திருச்சி வாலிபருக்கு ஏழாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியில் வசிப்பவர் கார்த்திக் தியோடர் (30). இவருடைய குடும்பம் திருச்சியில் மிகவும் பாரம்பரியம் மிக்கது. இவர் கடந்த 2007ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு வேலைக்குச் சென்றார். அங்கு ஏற்கனவே வசித்து வரும் தமிழ்ப்பெண் கவிதா (29) என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கவிதா அங்குள்ள வெளிநாட்டு வங்கியில் மேலாளராக பணியாற்றி வருகிறார். கவிதாவுக்கும், கார்த்திக்கும் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியது. அவர்கள் இருவரும் குடும்பத்துக்கு தெரியாமல் நிச்சயம் செய்து கொண்டு, ஆஸ்திரேலியாவில் தனியாக வீடு எடுத்து வசித்துள்ளனர்.ஓராண்டுக்கும் மேலாக கவிதாவுடன் கார்த்திக் குடும்பம் நடத்தியுள்ளார். அதன்பின் கவிதாவை விட்டு அவர் விலகிச் செல்ல ஆரம்பித்தார். இதை முதலில் கண்டுகொள்ளாத கவிதா, பின் விழித்துக்கொண்டு கார்த்திக்கை பின்தொடர ஆரம்பித்துள்ளார். அப்போது தான் கவிதாவுக்கு தெரியாமல் திருச்சி திரும்ப கார்த்திக் திட்டமிட்டது தெரியவந்தது. இதையடுத்து கடந்த 2009ம் ஆண்டு கார்த்திக் பின்னாலே கவிதாவும் இந்தியாவுக்கு திரும்பினார். கார்த்திக்கை சென்னை ஏர்போர்ட்டில் வைத்து சந்தித்து, தன்னை திருமணம் செய்து கொள்ளாமல் வந்தது குறித்து நியாயம் கேட்டுள்ளார். அதற்கு கார்த்திக் ஒன்றும் பதில் சொல்லாமல் திருச்சிக்கு வந்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த கவிதா திருச்சி வந்து, கார்த்திக் தன்னை ஏமாற்றியது குறித்து கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் போலீஸில் புகார் அளித்தார். புகாரின்பேரில், வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அப்போது கார்த்திக் தியோடர் கைது செய்யப்பட்டார். உடனடியாக ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். ஆனால், கவிதா விடாமல் தன்னிடம் உள்ள ஆதாரங்களை காட்டி, போலீஸார் வழக்கை துரிதப்படுத்த உதவினார்.


திருச்சி மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு கடந்த இரண்டு ஆண்டாக நடந்தது. வழக்கு விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. கவிதாவை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி, உல்லாசம் அனுபவித்து, திருமணத்துக்கு மறுத்த கார்த்திக் தியோடருக்கு ஏழாண்டு சிறை தண்டனை வழங்கி, மகளிர் நீதிமன்ற நீதிபதி மாயாண்டி தீர்ப்பளித்தார். * அனைத்து மகளிர் போலீஸில் புகார் செய்தபின், கார்த்திக் தியோடர் ஒரு பெண்ணை பார்த்து திருமணம் செய்துள்ளார். அந்த பெண்ணுடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, அவரையும் கார்த்திக் தியோடர் விவாகரத்து செய்துவிட்டதாக தெரிகிறது. இவ்வழக்கை பொறுத்தவரை கவிதா தனியொரு ஆளாக ஆஸ்திரேலியாவிலிருந்து, திருச்சி வந்து, பல்வேறு பிரச்னைக்கு இடையே புகார் செய்தும், வழக்கை நடத்தியும் வெற்றி பெற்றுள்ளார் 

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...