|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

02 October, 2011

பறவைகள் தங்கும் மரங்களை வெட்டுவதற்கு மக்கள் எதிர்ப்பு!


 வெளிநாட்டு பறவைகள் தங்கும் மரங்களை வெட்டுவதற்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து அந்தப் பணியை நிறுத்தி விட்டனர். நெல்லை மாவட்டம் ஆழ்வார்குறிச்சியிலிருந்து கடையம் செல்லும் பாதையில் உள்ளது வாகைகுளம். வாகைகுளத்தில் சுமார் 12 ஹெக்டேர் பரப்பளவில் குளம் உள்ளது. இந்த குளத்தில் 1996ம் ஆண்டு கருவேல மரக்கன்றுகள் நடப்பட்டது.

இந்த மரங்களில் ரஷ்யா, சைபீரியா, ஸ்காட்லாந்து மற்றும் வெளிநாடுகளிலிருந்து சுமார் 45 வகையான பாம்புதாரா, மூக்கன், புள்ளிதாரா, கரண்டிவாயன், கூழகிடா, கரும்புள்ளி கொத்து, நீலமீன்கொத்தி, பவளக்கால் உள்ளான், கார்மரண்ட், பெலிக்கன், மஞ்சள் மூக்கு ஆள்காட்டி என சுமார் 45 வகையான வெளிநாட்டு பறவைகள் அக்டோபர், நவம்பர், டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி ஆகிய மாதங்களில் இங்கு வந்து தங்கி இனப்பெருக்கம் செய்துவிட்டு பின்னர் 6 மாதம் கழித்து தங்களின் நாடுகளுக்கு திரும்பிவிடுவது வழக்கம். கூந்தன்குளத்தை அடுத்து வாகைகுளத்தில் வெளிநாட்டு பறவைகள் வந்து தங்குவதால் இப்பறவைகளுக்கு உணவாக குளத்தில் உள்ள மீன்கள் பயன்படும். மேலும் இப்பறவைகளின் எச்சங்கள் குளத்துநீரில் கலந்து உரமாக விவசாயத்திற்கு பயன்படுகிறது.நெல்லை சமூகவனக்கோட்டம் கோட்ட வன அலுவலகம் சார்பில் இந்த குளத்தில் 1996ம் ஆண்டு நடப்பட்ட இம்மரங்களை கடந்த 2007ல் வெட்டுவதற்கு உத்தரவிட்டனர். இதற்கு நாணல்குளம், வாகைகுளம், வீராசமுத்திரம், மாலிக்நகர் பொதுமக்கள், ஏட்ரி அமைப்பு, சமூகநல ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போதைய கலெக்டர் ஜெயராமன் வாகைகுளத்தை பார்வையிட்டு இங்குள்ள பறவைகளையும், அருகில் உள்ள கல்லூரி விலங்கியல் துறையினர் மற்றும் பேராசிரியர்கள் மூலம் ஆய்வு செய்து இங்கு பறவைகள் சரணாலயம் அமைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினர்.இதன் பேரில் முறையாக பறவைகள் சரணாலயம் அமைப்பதற்காக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சமூகவன காடுகள் கோட்ட வன அலுவலகத்திலிருந்து கருவேல மர குத்தகைதாரர் தற்போது தண்ணீர் இல்லாததால் மரங்களை வெட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டார். மரங்கள் வெட்டுவதை அறிந்த நாணல்குளம், வாகைகுளம், வீராசமுத்திரம், மாலிக்நகர் பொதுமக்கள் மரம் வெட்டுவதை நிறுத்தக் கோரினர்.இத்தகவல் அறிந்த அம்பை தாசில்தார்,கடையம் ஒன்றிய ஆணையாளர்,கல்லூரி விலங்கியல்துறை பேராசிரியர்,ஆழ்வார்குறிச்சிசப்-இன்ஸ்பெக்டர், ஆகியோர் வாகைகுளத்திற்கு வந்து குத்தகைதாரர்டன் பேச்சுவார்த்தை நடத்தினர். பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாலும், பறவைகள் சரணாலயம் அமைப்பதற்கான நடவடிக்கையில் வாகைகுளம் இருப்பதாலும், தேர்தல் வேலைகள் இருப்பதாலும் மரங்களை வெட்டக் கூடாது என அதிகாரிகள் முடிவெடுத்து மரம் வெட்டுவது நிறுத்தப்பட்டது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...