|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

12 August, 2011

இந்தியாவில் மது அருந்துவோர் எண்ணிக்கை 6 கோடி!

நாட்டில் மிகப்பெரிய அளவில் சமூக கவலை தரும் பிரச்சனைக்காக போதை மருந்து பழக்கமும், மது அருந்தும் பழக்கமும் ஆகியிருப்பதற்கான காரணம் பூகோள பகுதிதான் காரணமா என்று திமுக எம்பி எஸ்.ஆர். ஜெயதுரை பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு மத்திய இணை அமைச்சர் நெப்போலியன் அளித்த பதிலில் கூறியதாவது,


இது மிகப்பெரிய கவலை தரும் பிரச்சனை தான். ஆனால், இன்னமும் புள்ளி விவர ரீதியாக நிருபணம் ஆகவில்லை. நாட்டின் மொத்தமுள்ள 120 கோடி பேரில் சுமார் 6 1/4 கோடி பேர் மது பயன்படுத்துபவர்களான உள்ளனர். அதில், சுமார் 17 சதவீதம் பேர் மட்டுமே அப்பழக்கத்திற்கு அடிமையானர்கள். இதுபற்றி ஐ.நா. அமைப்புகளுடன் இணைந்து ஆய்வு நடத்தப்படவில்லை. நாட்டின் மக்கள் தொகையை கணக்கில் எடுத்து பார்க்கும்பொழுது இது மிகவும் குறைவாக இருப்பதால் ஆய்வுகள் மேலும் தொடர்கின்றன என்றார்.

தமிழர்களின் உணர்வை மதிக்காத இந்திய!

இலங்கையில் நடந்த மனித உரிமை குற்றங்கள் குறித்து நேர்மையான விசாரணையை இலங்கைஅரசு மேற்கொள்ளாவிட்டால் அந்நாடு சர்வதேச விசாரணைக்கு உள்ளாக நேரிடும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது.
.
இலங்கையில் விடுதலைப்புலிகளுடன் நடந்த இறுதி சண்டையில் ஆயிரக்கணக்கான தமிழர்களை இலங்கை ராணுவம் கொன்று குவித்தது.  ஐ.நா. அமைத்த மூவர் குழு இந்த குற்றச்சாட்டை உறுதி செய்து உள்ளது. அண்மையில் பிரிட்டன் தொலைக்காட்சி ஒன்றும் இலங்கை ராணுவத்தின் போர் குற்றங்களை அம்பலப்படுத்தும் வகையில் நெஞ்சை பதற வைக்கும் வீடியோ காட்சிகளை வெளியிட்டது. இந்த நிலையில் அமெரிக்கா இலங்கை அரசுக்கு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. 


அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் விக்டோரியா நூலண்ட் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசினார்.மனித உரிமை குற்றங்கள் குறித்து விசாரணை நடத்துவது இலங்கை அரசின் பொறுப்பாகும். மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அமெரிக்கா விரும்புகிறது என அவர் கூறினார். இது நடைபெறாவிட்டால், அதுவும் விரைந்து நடைபெறாவிட்டால், இந்த போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச மன்றத்தில் விவாதிக்கும் உரிமையை நாங்கள் பயன்படுத்த நேரிடும் என்பதை எச்சரிக்கிறோம். 

ஒரு செயற்கையான காலக்கெடுவை நாங்கள் விதிக்க விரும்பவில்லை. இலங்கை தமிழ் மக்கள் கவலையையும் அவர்களுடைய விரக்தியையும் நாங்கள் உணர்ந்திருக்கிறோம். எனவே இலங்கை அரசு அவர்கள் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். அப்படி செயல்படுவது அவர்களது நாட்டின் நலனுக்கு நல்லது என்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் எச்சரித்தார். 

நில மீட்பு நடவடிக்கை மக்களுக்கு நிம்மதி அளிக்கிறது; விஜயகாந்த்!


கடந்த ஆட்சியில் தி.மு.க.வினர் சட்ட விரோதமான முறையில் மக்களை பயமுறுத்தி மக்களின் சொத்துக்களை பறித்தனர். இப்போது இத்தகைய சொத்துக்களை மீட்டு உரியவர்களுக்கு தர முன் வந்து இருப்பது தமிழ்நாட்டு மக்கள் அனைவராலும் வரவேற்வேற்கப்படுகிறது.

 ஆனால் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பழிவாங்கும் நடவடிக்கை என்கிறார், பொய் வழக்கு போடுவதாக குற்றம் சொல்கிறார். அப்படி என்றால் நீதிமன்றம் சென்று தங்களை விடுவித்துக் கொள்வது தான் முறையே தவிர தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் அமளி என்று நடத்துவது போடப்பட்டது பொய் வழக்கு அல்ல என்பது வெட்ட வெளிச்சமாகிறது.
 
அரசின் நில மீட்பு நடவடிக்கையால் மக்கள் நிம்மதியுடன் இருக்கிறார்கள். தமிழ்நாட்டு மக்கள் ஆதரித்து வெற்றி பெறச் செய்துள்ள கூட்டணியால் உருவான இந்த ஆட்சி அனைவருக்கும் சம வாய்ப்பு அளிக்கும் சமுதாயத்தை உருவாக்கும் வகையில் நிதி நிலை அறிக்கை திருப்பு முனையாக அமைந்துள்ளது’’ என்று பேசினார். அவர் மேலும்,   ‘’தமிழக அரசு ஒரு சிறப்பான பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளது. பல்வேறு இலவச திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பல்வேறு உதவிகளும் அதிகமாக்கப்பட்டுள்ளது. அனைவரும் பாராட்டும் வகையில் சிறந்த பட்ஜெட் அமைந்துள்ளது. இதில் புதிய திட்டம் எதுவும் இல்லை என்று சிலர் கூறுகிறார்கள். அவர்கள் கண் இருந்தும் பாராத கருத்து குருடர்கள். இது கண்ணை மூடிக்கொண்டு பாராட்டக் கூடிய பட்ஜெட்.அந்த அளவுக்கு ஏராளமான சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. ஏழை நடுத்தர மக்களை விலைவாசி உயர்வு தாக்கத்தில் இருந்து மீட்பதற்கு புதிய திட்டங்கள் உதவும். ரூ.8,900 கோடி அளவுக்கு புதிய திட்டங்களும், சலுகைகளும் அளிக்கப்பட்டு இருப்பது சமுதாயத்தின் அடித்தள மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும்.

ஏழைகளை அடையாளம் காண்பித்து அவர்களுக்கு ஏற்படும் குறைகளைகளைய அடையாள அட்டை வழங்க வேண்டும். ஏழைகளுக்கு உதவிகள் முழுமையாக கிடைக்க இடையூறாக இருந்து தவறு செய்யும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இளைஞர்களின் வேலை வாய்ப்பு அதிகரிக்க கல்லூரிகளிலேயே, அவர்களுக்கு வேலை வாய்ப்பு பயிற்சி அளிக்க வேண்டும்.

தி.மு.க. ஆட்சியில் இதற்கான அக்கறை செலுத்தப்படவில்லை. விவசாயிகளுக்கு இப்போது சலுகைகளை அரசு அறிவித்து உள்ளது. அவர்கள் பயிரிடும் விளை பொருட்களுக்கு உத்தரவாதம் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண்களுக்கு இந்த பட்ஜெட்டில் பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.   பெண்கள் நாட்டின் கண்கள் என்ற திட்டத்தை நான் எனது சொந்த பணத்தில் செயல்படுத்தினேன். எல்.ஐ.சி. மூலம் ரூ. 10 ஆயிரம் முதலீடு செய்தால் திருமண வயதை எட்டும் போது அந்த பெண்ணுக்கு ரூ.2 லட்சம் கிடைக்கும். இது போன்று ரூ.30 ஆயிரம் போட்டால் 18 ஆண்டில் ரூ.3 லட்சம் கிடைக்கும் திட்டம் எல்.ஐ.சி.யில் உள்ளது. இதனை அரசு பரிசீலிக்க வேண்டும்.

கடந்த தி.மு.க. ஆட்சியில் சுய உதவி குழுக்கள் அரசியல் நோக்கத்திற்காக பயன்பட்டு வந்தன. சமூக நலத்துறையில் இருந்த சுய உதவி குழுக்கள் மு.க.ஸ்டாலினிடம் உள்ளாட்சி துறை இருந்ததால் அந்த துறைக்கு மாற்றப்பட்டது. எனவே சுய உதவிக் குழுக்களை மீண்டும் சமூக நலத்துறைக்கு மாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று பேசினார். 

சுதந்திர காங்கிரஸும், சோனியா காங்கிரஸும் கொங்கு இளைஞர் பேரவை !


காங்கிரஸ் ஒரு கட்சியே அல்ல, இப்போது இருப்பது சுதந்திரம் வாங்கியபோது இருந்த காங்கிரஸ் அல்ல, இது சோனியாவின் காங்கிரஸ் என்று கொங்கு இளைஞர் பேரவை உறுப்பினர் தனியரசு கூறியதால் காங்கிரஸ் உறுப்பினர்கள் கோபமடைந்து குரல் எழுப்பினர். பின்னர் வெளிநடப்புச் செய்தனர்.

சட்டசபையில் இன்று பட்ஜெட் மீதான விவாதம் நடந்தது. அதில் கலந்து கொண்டு கொங்கு இளைஞர் பேரவை உறுப்பினர் தனியரசு பேசுகையில்,
மத்தியில் ஆளும் காங்கிரஸ் தமிழகத்துக்கு துரோகம் இழைக்கிறது. கா ங்கிரஸ் மக்களுக்கான கட்சி அல்ல. இந்திரா காங்கிரஸ், ராஜீவ் காங்கிரஸ், சோனியா காங்கிரஸ், பிரியங்கா காங்கிரஸ் என்றுதான் இருக்கிறது.

மக்கள் மீது இவர்களுக்கு அக்கறையே கிடையாது. அதனால்தான் தமிழகம் மீது பாராமுகமாக உள்ளனர். தமிழக மக்களின் திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்காமல் உள்ளனர் என்று கூறினார். அதற்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ரங்கராஜன் எழுந்து பேசுகையில்,  தமிழக முதல்வர் டெல்லி சென்று நிதி ஒதுக்க கேட்டபோது, ரூ.23 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. டெல்லியில் பத்திரிகையாளர்களிடம் முதலமைச்சர் கூறும்போது கூட நிதி ஒதுக்கீடு திருப்தி அளிப்பதாக கூறினார்.

மத்திய அரசு மீது சில குறைபாடுகள் இருக்கலாம். அதை மாநில அரசு பேசி சரி செய்து கொள்ள முடியும். ஆனால் இங்கு பேசிய உறுப்பினர்கள் தமிழக அரசுக்கு மத்திய அரசு துரோகம் செய்ததுபோல் பேசினார்கள்.

கொங்கு இளைஞர் பேரவை உறுப்பினர் பேசும்போது, காங்கிரஸ் ஒரு கட்சியே அல்ல என்று கூறி எங்கள் மனதை புண்படுத்தி உள்ளார். இது வேதனை அளிப்பதாக உள்ளது. எனவே அந்த வார்த்தையை சபை குறிப்பில் இருந்து நீக்கவேண்டும்’ என்றார்.

ஆனால் அதை நீக்க சபாநாயகர் உத்தரவிடவில்லை. இதையடுத்து தொடர்ந்து பேசிய தனியரசு, நான் சுதந்திரம் அடைந்தபோது இருந்த காங்கிரசை பற்றி சொல்லவில்லை. சோனியா காங்கிரசைதான் சொல்கிறேன் என்றார். இதற்கு மீண்டும் காங்கிரஸார் கடும் ஆட்சேபம் தெரிவித்து குரல் எழுப்பினர். பின்னர் தனியரசு பேச்சைக் கண்டித்து வெளிநடப்புச் செய்வதாக கூறி ரங்கராஜன் தலைமையில் அனைவரும் வெளியேறினர்.

செல்வ வளம் தரும் வரலட்சுமி விரதம்!

செல்வத்தை அளிக்கும் வரலட்சுமியை வரவேற்கும் விதமாக இல்லம்தோறும் செய்யப்படும் பூஜை தான் வரலட்சுமி விரதமாகும். இந்த ஆண்டு ஆகஸ்ட் 12-ம் தேதி நாளைய தினம் வெள்ளிக்கிழமை வரலட்சுமி விரதம் வருகிறது. வரலட்சுமி விரதம் கொண்டாடப்படும் நாளன்றுதான் பாற்கடலில் மகாலட்சுமி தோன்றியதாக புராணங்கள் கூறுகின்றன.

இந்த மகாலட்சுமியை தனலட்சுமி, தான்ய லட்சுமி, தைரிய லட்சுமி, ஜெயலட்சுமி, வீரலட்சுமி, சந்தான லட்சுமி, கஜலட்சுமி, வித்யாலட்சுமி என்ற அஷ்ட லட்சுமிகளாக வழிபடுகிறோம். வரலட்சுமி விரதம் அன்று இந்த எட்டு லட்சுமிகளையும் மனதார வேண்டி பூஜித்தால் இல்லத்தில் எப்போதும் செல்வம் நிறைந்திருக்கும்.

சிரவண மாதம் எனப்படும் ஆடி அல்லது ஆவணி மாதத்தில், பௌர்ணமிக்கு முன்வரும் வெள்ளிக்கிழமையில் வரலட்சுமி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. சுமங்கலிகள் அனுஷ் டிக்க வேண்டிய சிறப்பான விரதம் இது. இதைச் செய்வதன் மூலம் சுமங்கலித்துவம் வளரும்; குடும்ப நலன் பெருகும். கன்னிப் பெண்கள் இவ்விரதத்தை மேற்கொள்வதன் மூலம் சிறப் பான குடும்ப வாழ்க்கை அமையப் பெறுவர்.

விரதம் அனுஷ்டிக்கும் முறை: பூஜைக்கு முதல்நாள் வீட்டைப் பெருக்கி மெழுகி, மாக்கோலமிட்டு செம்மண் பூச வேண்டும். வாசற்படிக்கு மஞ்சள், குங்குமப் பொட்டு வைத்து அலங்கரிக்க வேண்டும். வீட்டின் தென் கிழக்கு மூலையில் மாக்கோலமிட்டு செம்மண் இட்ட ஒரு பலகையின் மேல் தலைவாழை இலை வைத்து, அதில் சிறிது அரிசியைப் பரப்பி, அதன் மேல் அம்மன் கலசத்தை வைப்பார்கள். சிலர் சிறு மண்டபம் அமைத்து அதில் கலசம் வைத்துப் பூஜை செய்வார்கள்.

கலசத்தில் அரிசி அல்லது தண்ணீரை நிரப்பி, மாவிலைக் கொத்தும் தேங்காயும் வைத்து, சந்தனம், மலர் ஆகியவற்றால் அலங்கரித்து, கலசத்தின்மேல் தேவியின் பிரதிமையை வைத்துப் பூஜை செய்வர். பூஜை தினத்தன்று ஒன்பது முடிச்சுடைய மங்களகரமான மஞ்சள் கயிற்றைப் பூஜையில் வைத்து வழிபட்ட பின்னர், அதை வலது மணிக்கட்டில் கட்டிக் கொள்ள வேண்டும்.

விரத தினத்தன்று லட்சுமி துதி, லட்சுமி வரலாறு போன்றவற்றைச் சொல்லி தங்களை முழுமையாக வழிபாட்டில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். எங்கள் வீட்டில் எழுந்தருளியிருக்கும் வரலட்சுமியே எங்கள் இல்லத்தில் நிரந்தரமாக குடியேறி எல்லா ஐஸ்வரியங்களும் அருள்வாயே... என்று போற்றி மனம் உருக பாட வேண்டும்.

சுமங்கலிப் பெண்களை வீட்டிற்கு அழைத்து, பூஜை முடிந்ததும் மங்கலப் பொருட்களுடன் தட்சணையும் வைத்துக் கொடுத்து அனுப்ப வேண்டும்.
அன்று மாலையோ அல்லது மறுநாள் காலையோ வரலட்சுமி அம்மனுக்கு எளிமையான ஒரு பூஜை செய்துவிட்டு அலங்காரத்தை அகற்றிக் கொள்ளலாம்.
பூஜைக்குப் பயன்படுத்திய பச்சரிசி, தேங்காய் போன்றவற்றை கொண்டு, அடுத்த வெள்ளிக்கிழமை பாயசம் செய்து நிவேதனம் செய்யலாம்.

கன்னிப் பெண்கள் இந்த விரதம் இருந்தால் விரைவில் திருமணமாகும். வரலட்சுமி விரதத்தை கடைபிடிக்கும் குடும்பத்தில் உள்ள குழந்தைகளுக்கு உயர்ந்த ஞானம் கிட்டும். இந்த விரதம் மேற்கொள்வோர் விரும்பிய நலன்கள் எல்லாம் கிட்டும். இந்த விரதம் மேற்கொள்ளும் வீட்டில் எப்போதும் செல்வச் செழிப்பு நிறைந்திருக்கும் என்பது நம்பிக்கை.

புராணக் கதை: பத்ரசிவன் என்ற மன்னன் சிறந்த விஷ்ணு பக்தன். அவன் மனைவி கரசந்திரிகா. இவர் களது ஒரே மகள் சியாமபாலா. அவளைத் திருமணம் செய்து கொடுத்தபின் தாய் துயருற்றாள். அவளது கவலையைத் தீர்த்து அவளுக்கு ஒரு ஆண் மகவு பிறக்க அருள் செய்ய எண்ணினாள் மகாலட்சுமி. அதனால் வரலட்சுமி விரதம் பற்றி எடுத்துக்கூற வயதான சுமங்கலி வடிவில் அவளிடம் சென்றாள். ஆனால் வந்திருப்பது லட்சுமிதேவி என்று அறியாத கரசந்திரிகா அவளை அவமானப் படுத்தி அனுப்பி விட்டாள்.

அங்கிருந்து சியாமபாலாவிடம் சென்ற மகாலட்சுமி நடந்தவற்றைக் கூறி, தான் போனால் எல்லா யோகங்களும் அரண்மனையை விட்டுப் போய்விடும் என்று கூறினாள். தன் தாயின் தவறுக்காக வருந்தி மன்னிப்புக் கோரிய சியாமபாலா, வரலட்சுமி விரதத்தைப் பற்றிக் கேட்டறிந்து சிரத்தையுடன் அதைக் கடைப் பிடித்து வரத் தொடங்கினாள். அதன் பிறகு அவளுக்குச் சுபிட்சம் பொங்கிய அதே நேரத்தில் அவளது பெற்றோர் அனைத்து செல்வங் களையும் இழந்தனர்.

தன் பெற்றோரது வறுமையை அறிந்த சியாமபாலா ஒரு குடம் நிறைய பொற்காசுகளை அவர்களுக்கு அனுப்பி வைத்தாள். அக்குடத் தில் கரசந்திரிகா கை வைத்ததும் பொற்காசுகள் கரியாகி விட்டன. இதையறிந்த மகள் அந்த ஆண்டு தன் தாயுடன் வரலட்சுமி விரதம் மேற் கொண்டாள். விரதத்தின் மகிமையால் கர சந்திரிகா தன் முந்தையை சுபிட்ச நிலையை எய்தியதோடு ஆண் வாரிசும் பெற்றாள். வரலட்சுமி விரதம் இருக்கும் பெண்கள் அஷ்ட போக பாக்கியங்களைப் பெறுவார்கள் என்பதை இவ்வரலாறு எடுத்துரைக்கிறது.

அனைத்து வளங்களையும் வாரி வழங்கும் வரலட்சுமியை வழிபட்டு நலம் பெறுவோம்.

வயிற்றுப் பூச்சிகளை கொல்லும் மணலிக்கீரை!

மணலிக் கீரை சமையலுக்கு உகந்த கீரைகளுள் ஒன்று. இதனை மணல்கீரை, நாவமல்லிக்கீரை என்ற பெயர்களில் அழைக்கின்றனர். இதன் இலை தண்டு அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டது. நம் முன்னோர்களின் மருத்துவக் கீரைகளில் மணலிக் கீரையும் இடம்பெற்றுள்ளது. மணலிக் கீரை பூண்டு இனத்தைச் சேர்ந்தது. இது தென்னிந்தியா முழுவதும் பரவிக் காணப்படும். மேலும் பஞ்சாப், சிந்து போன்ற இடங்களிலும் பரவிக் கிடக்கிறது.

வயிற்றுப் பூச்சி நீங்க: சிறுகுழந்தைகளின் வயிற்றில் கிருமித்தாக்குதல் அதிகம் இருந்தால் அவர்கள் மிகவும் சோர்ந்து பலவீனமடைந்து விடுவார்கள். ஏனென்றால் உடலுக்குத் தேவையான அனைத்து சக்திகளையும் கிருமிகள் உறிஞ்சிவிடுவதே இதற்கு காரணம். இந்த வயிற்றுப் பூச்சிகளுக்கு மருந்துகள் சாப்பிட்டாலும் முழுமையாக ஒழிந்துவிடாது. இந்த பூச்சிகளை கொல்வதற்கு மணலிக்கீரை சிறந்த மருந்தாகும்.

மணலிக் கீரையை நீர்விட்டு அரைத்து 70 கிராம் அளவாக எடுத்து நீரில் கலக்கி அதிகாலையில் வெறும் வயிற்றில் மூன்று நாள் அருந்தி விட்டு மறுபடியும் நான்கு நாள் இடைவெளிவிட்டு மூன்று நாட்கள் அருந்தி வந்தால் குடலில் உள்ள தட்டைப் புழுக்கள் நீங்கும்.

மலச்சிக்கல் நீங்க; பொதுவாக கீரைகள் அனைத்துமே மலச்சிக்கலைப் போக்கும் தன்மை கொண்டது. மணலிக் கீரையை கிடைக்கும் காலங்களில் வாங்கி வாரம் இருமுறை பாசிப்பருப்பு கலந்து கூட்டு செய்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் நீங்கும்.

மணலிக் கீரையை பாசிப்பருப்பு சேர்த்து கலந்து கூட்டு வைத்து வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்புண், குடல்புண், அஜீரணக் கோளாறு போன்றவை ஏற்படுவதற்கு இவை காரணமாகின்றன வயிற்றுப் பூச்சி நீங்கும்.

மார்புச்சளி நீங்கும்: மார்பு பகுதியில் சேர்ந்து சளி கட்டிக்கொள்வதால் தொடர்ந்து இருமல், நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படும். மணலிக் கீரையை குடிநீரில் கொடுக்க மார்புச் சளி, வயிற்றுப்புண் நீங்கும்.

மணலிக்கீரையை நன்கு நீர்விட்டு அலசி பின் அதனுடன் சின்னவெங்காயம், பூண்டு சேர்த்து அவித்து சாப்பிட்டு வந்தால் மார்புச்சளி நீங்கும். அல்லது மணலிக் கீரையை நிழலில் உலர்த்தி பொடியாக்கி அதனுடன் தேன் கலந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் மார்புச்சளி நீங்கும்.

ஞாபக சக்தியைத் தூண்ட; ஞாபக மறதி மனிதன் வாழ்வை சீரழிக்கும் நோய். ஞாபக மறதிக்கு பித்த அதிகரிப்பே காரணம். மேலும் மூளைக்கு தேவையான சத்துக்கள் குறைவதால் ஞாபக மறதி உண்டாகும். இக்குறையை நீக்க மணலிக் கீரை மசியல் செய்து சாப்பிடுவது நல்லது.

ஈரல் பலப்பட: ஈரல் பாதிக்கப்பட்டாலே உடலின் உறுப்புகள் அனைத்தும் பாதிக்கப்படும். இரத்தம் சீர்கெடும். கண்பார்வை கோளாறுகள் உண்டாகும். ஈரலைப் பலப்படுத்த மணலிக்கீரை கசாயம் செய்து அருந்தி வரவேண்டும்.

களைப்பை போக்கும் சாக்லேட் பானம்!

அதிக வேலைப்பளு, உடற்பயிற்சி உள்ளிட்ட காரணங்களால் உடல் சோர்வடைவது இயல்பு. இதுபோன்ற நேரங்களில் சோர்வை களைய எடுக்கப்படும் நடவடிக்கைகள் உடனடி பலனை தராது. ஆனால், லோ கலோரி சாக்லெட் பானங்கள் உடல் களைப்பை உடனே போக்கிவிடும் என்று சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. டெக்சாஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், டாக்டர் ஜான் கிவி தலைமையில் இது குறித்து மேற்கொண்ட ஆய்வில் இந்த உண்மை கண்டறியப்பட்டது.

களைப்பு நீக்கும் பானம்: ஆய்வுக்காக சுமார் 50 பேர் தேர்வு செய்யப்பட்டு, ஆய்வுக்கு முந்தைய பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர். பின்னர் விளையாட்டு, வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டனர். சுமார் 90 நிமிடம் தொடர்ந்து சைக்கிள் ஓட்டவும் கோரப்பட்டனர். இதில், களைப்பு அடைந்தவர்களுக்கு லோ கலோரி சாக்லெட் பானம் கொடுத்து பரிசோதித்தனர். களைப்பு நீங்கி அவர்கள் உற்சாகமாக காணப்பட்டனர்.

தொடர்ந்து 6 வாரங்கள் கண்காணிக்கப்பட்ட நிலையில், அவர்கள் உடல் எடை அதிகரிக்கவில்லை என்பதும் தெரிந்தது.ஆய்வு குறித்து டாக்டர் ஜான் கூறுகையில், ‘‘லோ கலோரி சாக்லெட் பானம் உடனடியாக உடல் சோர்வை போக்கும். குறைந்த கலோரி அளவுள்ள பாலாக இருந்தால் நல்லது. உடல் எடை அதிகரிக்காது.

பெரும்பாலும் விளையாட்டு வீரர்கள் இத்தகைய பானத்தையே அதிகம் எடுத்துக் கொள்கின்றனர். மிகக் குறைந்த கலோரிகள் அல்லது அதிக கார்போஹைட்ரேட் கொண்ட பானங்களால் இதுபோன்ற உடனடி பலன் கிடைப்பதில்லை. லோ கலோரி சாக்லெட் பானத்தை குடிப்பதனால் உடல் எளிதாக அதிக பிராணவாயுவை எடுத்துக்கொள்வதும் தெரியவந்துள்ளது. இதனால் விளையாட்டு வீரர்கள் மட்டுமின்றிசாதாரணமானவர்களுக்கும் உடலில் சுவாசம் உள்ளிட்ட பிரச்னைகளில் இருந்து பாதுகாப்பு கிடைக்கிறது.

உடல் சுறுசுறுப்படைகிறது: லோ கலோரி சாக்லேட் பானம் இயல்பை விட அதிக சுறுசுறுப்பாக இயங்க வகை செய்கிறது. உடல் மற்றும் மனச்சோர்வை நீக்குகிறது. ரத்த ஓட்டம் சீராகிறது; இதயநோய் பாதிப்புகளை விரட்டுகிறது. உடல்தசைகளும் வலுப்பெறுகிறது. இதில் உள்ள அதிக அளவு புரதம் உடல் சுறுசுறுப்புக்கு உடனடி வழி செய்கிறது. பாதிப்புகளோ பக்க விளைவுகளோ இல்லை.

முதுமையை துரத்தும் தண்ணீர்!

நம் உயிர்வாழத் தேவையான பொருட்களில் தண்ணீரின் பங்கு முக்கியமானது. உடலில் உள்ள தசைகள், தோல், முதலியவற்றின் வளர்ச்சியில் 70 சதவிகிதம் தண்ணீரின் பங்காகும். உடலில் நீர் சத்து குறைந்தால் தோல் வறண்டு போவதோடு உடல் சோர்வடைந்து விடுகிறது. இதனால் அகத்தோற்றம் முற்றிலும் பாதிக்கப்படுகிறது.

வயதாவதை முதலில் உணர்த்துவது தோல்தான். முகத்தில் சிறிது சுருக்கம் விழுந்தாலும் கவலை கொள்பவர்கள் ஏராளமானோர் உள்ளனர். சருமத்தை பாதுகாப்பதற்காக எத்தனையோ கிரீம்களை உபயோகிக்கின்றனர் இன்றைய இளைஞர்கள். பளபளப்பாகவும், மிக அழகான தோல் வேண்டும் என்பதற்காகவும், அதனை பாதுகாக்கவும் என்னென்னவோ முயற்சி செய்கின்றனர்.

முகப் பளபளப்பு: அதிக தண்ணீர் குடித்தால் தோல் சுருக்கம் காணாமல் போய்விடும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. தண்ணீர் குடிப்பதன் மூலம் தோலுக்குத் தேவையான ஈரப்பதம் கிடைக்கிறது. இதன் மூலம் இளமையான தோற்றம் ஏற்படுகிறதாம். இந்த ஆராய்ச்சியில் பங்கேற்ற பெண்களை எட்டு வாரங்களுக்கு தினமும் தொடர்ந்து ஒன்றரை லிட்டர் தண்ணீர் குடிக்கச் செய்துள்ளனர். இதில் ஒரு பிரிவு பெண்கள் குழாய் நீரையும், மற்றொரு பிரிவினர் வில்லோ நீரையும் குடித்துள்ளனர்.

வில்லோ நீர் என்பது இங்கிலாந்தில் அமைந்திருக்கும் லேக் மாவட்டத்தில் இயற்கையாக கிடைக்கும் தண்ணீராகும். இந்த தண்ணீரில் இருக்கும் சாலிசின் செரித்த பிறகு சாலிசிலிக் ஆசிடாக மாறுகிறது. பெரும்பாலான சரும பராமரிப்பு கிரீம்களில் சாலிசிலிக் ஆசிடைத்தான் பயன்படுத்துகின்றனர்.

திரும்பிய இளமை: செயற்கையான சரும கிரீம்களில் பயன்படுத்தப்படும் சாலிசிலிக் ஆசிடை தண்ணீர் குடித்து இயற்கையாக நாம் பெறுவதால்தான் தோல் சுருக்கம் மறைந்து போகிறது. இந்த ஆய்வில் பங்கேற்ற பெண்களை ஆராய்ச்சிக்கு முன்னரும், பின்னரும் புகைப்படம் எடுத்துள்ளனர். இதில் ஆய்விற்கு பின்னர் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் பெண்கள் இளமையாக தோன்றியுள்ளனர். சாதாரண தண்ணீர் குடித்தவர்களுக்கு தோல் சுருக்கம் 19 சதவிகிதமும், வில்லோ தண்ணீர் குடித்தவர்களுக்கு 24 சதவிகிதமும் சுருக்கம் மறைந்திருந்ததாம்.

தண்ணீரின் அவசியம்: உஷ்ணபிரதேசங்களில் தண்ணீரின் தேவை முக்கியமானது. தேவையான அளவிற்கு தண்ணீர் அருந்தாததன் காரணமாக அவர்கள் சிறுநீரகம் மற்றும் நுரையீரல் பிரச்சினைக்கும் ஆளாகின்றனர். எனவே உடல் நலத்திற்கு சராசரியாக மூன்று முதல் நான்கு லிட்டர் தண்ணீரை மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். நோயாளிகள் 4 முதல் 5 லிட்டர் தண்ணீரும், தோல் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் 5 முதல் 6 லிட்டர் தண்ணீரும் அருந்த வேண்டும் பரிந்துரைக்கின்றனர்.

நான்கு லிட்டர் தண்ணீர்: நான்கு லிட்டர் தண்ணீரையும் ஒரே நேரத்தில் அருந்தக்கூடாது என்று கூறும் மருத்துவர்கள் காலையில் ஒன்றரை லிட்டர் தண்ணீரும், காலை மற்றும் மதிய உணவு இடைவேளைக்கு இடையே ஒரு லிட்டரும் குடிக்கவேண்டுமாம். மதிய உணவு மற்றும் இரவு உணவுக்கு இடையே ஒரு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்,

சாதாரண உடல் நிலை கொண்டவர்கள் குளிர்ந்த நீர் அருந்துவது வயிற்றுக்கு நல்லது. ஒரு சிலர் வெதுவெதுப்பான தண்ணீர் அருந்துவார்கள். எப்போதாவது சுடுநீர் தண்ணீர் அருந்துவது தவறில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

நேதாஜி விமான விபத்தில் இறந்திருக்க முடியாது: டிரைவர் நிஜாமுத்தீன்!

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான விபத்தில் இறக்கவில்லை என்று அவரது டிரைவர் நிஜாமுத்தீன் தெரிவித்துள்ளார். சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் விமான விபத்தில் இறந்துவிட்டதாக சிலரும், உயிருடன் இருப்பதாக சிலரும் கூறி வருகின்றனர். எனவே, அவர் மரணம் குழப்பமாகவே உள்ளது. இந்நிலையில் நேதாஜி விமான விபத்தில் இறக்கவில்லை என்று அவரது டிரைவர் நிஜாமுத்தீன் என்பவர் தெரிவித்துள்ளார்.நேதாஜியின் டிரைவராக இருந்ததாகக் கூறும் நிஜாமுத்தீன் (107) உத்தர பிரதேச மாநிலம் ஆஜம்கட் மாவட்டம், பிலாரியாகஞ்சில் உள்ள இஸ்லாம்புராவில் வசித்து வருகிறார்.

இது குறித்து நிஜாமுத்தீன் கூறியதாக செய்தித்தாள்களில் வந்த செய்தி:
1945-ம் ஆண்டு நடந்த விமான விபத்தில் நேதாஜி இறக்கவில்லை என்று அவர் திட்டவட்டமாகக் கூறுகிறார். இந்த விமான விபத்து நடந்து 3, 4 மாதங்களுக்குப் பிறகு நான் தான் அவரை பர்மா, தாய்லாந்து எல்லை அருகே உள்ள சிடங்பூர் ஆற்றங்கரையில் இறக்கிவிட்டேன். விமான விபத்தில் இறந்திருந்தால் நான் எப்படி அவரை சந்திக்க முடியும். அவர் விமான விபத்தில் இறந்திருக்க முடியாது என்று அவர் கூறியுள்ளார்.

ஆனால் ஆற்றங்கரையில் இறக்கிவிட்ட பிறகு நேதாஜி என்ன ஆனார் என்று அவருக்குத் தெரியவில்லை. நேதாஜியுடன் தானும் வருவதாகத் தெரிவித்திருக்கிறார். ஆனால் நேதாஜி அவரைத் திருப்பி அனுப்பிவிட்டு சுதந்திர இந்தியாவில் சந்திப்பதாகத் தெரிவித்துள்ளார். நேதாஜிக்கு நெருக்கமான சுவாமி என்பவரை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு நிஜாமுத்தீன் சந்தித்துள்ளார்.

நேதாஜியின் ஆசாத் ஹிந்த் பௌஜ் வழங்கிய நாடு திரும்பல் சான்றிதழ் தான் நிஜாமுத்தீனுக்கும் நேதாஜியின் இயக்கத்திற்கும் இருந்த தொடர்பின் சான்று. அதில் நேதாஜி இயக்கத்தின் நிவாரணம் மற்றும் நாடு திரும்பல் குழுவின் தலைவர் சுவாமி(எஸ்வி சுவாமி) கையெழுத்திட்டுள்ளார்.

இல்லறம் ஒரு இனிய சங்கீதம்!

இல்லறத்தில் தம்பதியரிடையே ஒரு அந்நியோன்யத்தை ஏற்படுத்தி பிணைப்பை அதிகப்படுத்துவது தாம்பத்தியமே. அது ஓர் இனிய சங்கீதம். தாம்பத்யத்தை இசைப்பதும், ரசிப்பதும் மென்மையாய் நிதானமாய் அமைய வேண்டும் அவசரங்களால் அரைகுறையாக அலங்கோலமாக ஆகிவிடும். தாம்பத்தியத்தில் எந்திரத்தனங்களும், எல்லைமீறல்களும் இனிமைதராது. அடிக்கடி வரைமுறையின்றி உறவு கொள்ள விரும்புவது ஆரோக்கியத்தைச் சீர்குலைக்கும்.

ஆரோக்கியமே மூலதனம்: தாம்பத்திய உறவில் ஏதாவது ஒரு வரையரையைக் காலப்போக்கில் தம்பதியர்கள் தாங்களாகவே நிர்ணயம் செய்துகொள்வது முக்கியம். உறவுக்கு முன் இனிமையான உரையாடலும், உணர்வுப்பறிமாறலும், முன்விளையாடலும் உறவு முழுமைபெற உதவும்.

கணவன் மனைவியின் அந்தரங்கமான இல்லற வாழ்வில் ஒருவர் விருப்பத்தை மற்றொருவர். புரிந்துகொள்ள வேண்டும். இப்படிப்பேசினால் அநாகரீகம் அப்படிச் செய்தால் அநாகரீகம் என்று எண்ணத் தேவையில்லை. இருவரது விருப்பங்களில் ஆரோக்கியமான அனைத்துமே, சுகமான அனைத்துமே பாலியல் வாழ்க்கை நெறிப்படி சரியானதுதான்.

ஊட்டச்சத்து உணவுகள்: அன்றாட உணவில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த - புரதம், கொழுப்பு, வைட்டமின்கள், தாதுப்பொருட்கள் நிறைந்த சைவ / அசைவ உணவுக் கூறுகளையும், காய்கறிகள், பழங்கள், கீரைகள் போன்றவற்றையும் உண்ண வேண்டும். தாம்பத்தியத்தின் தொடர் வெற்றிக்கு கணவன், மனைவி இருவரின் உடல்நலமும் மனநலமும் முக்கியம். ஆழ்ந்த மன பாதிப்புகள் தாம்பத்திய உறவுக்கு பெரும் எதிரி.

உணவு உண்ட ஒரு மணிநேரத்திற்குள் உடலுறவு கொள்வது கூடாது. இதனால் மூட்டுவலி உள்ளிட்ட பல உடல்நலக்கோளாறுகளும் ஏற்படும். எந்தச் சந்தர்ப்பத்திலும் பாலியல் சக்தியைப் பாதிக்கக்கூடிய மருந்துகளை உண்ணக்கூடாது.

சரியான அலைவரிசை: அன்றாட வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகளால் கணவன் மனைவியரிடையே கருத்துவேறுபாடுகள், மனச்சோர்வுகள், மன இறுக்கங்கள் போன்றவை ஏற்படுவது இயல்பது. அது இல்லறத்தை பாதிக்கக் கூடாது. பரஸ்பரம் புரிந்துகொண்டு பேசித் தீர்க்க வேண்டும். மனஒற்றுமை ஏற்படாமல் உடல்களால் மட்டும் இணைய முயற்சிப்பது நல்லதல்ல.

தம்பதியரிடையேயான தாம்பத்திய தாகம் ஒரே அலைவரிசையில் இருப்பதில்லை.ஆணுக்கு ஆவல் அடிக்கடி ஏற்படும். பெண்ணுக்கு விருப்பமில்லாதபோது தொல்லை தரக்கூடாது என்றெண்ணுவதால் விருப்பத்தை தள்ளிப்போடுகிறான். இது தொடர்கதையானால் மனைவி மீது ஒருவித வெறுப்பு ஏற்படுவது இயற்கையே.

எனவே பெண்கள் ஆண்களின் மனநிலையறிந்து இயன்றளவு தங்களை சரிசெய்துகொள்ளுவது இல்லறத்தை இனிக்கச் செய்யும். அடிக்கடி உடலுறவு கொள்ள விரும்பும் பெண்களும் உண்டு.ஆண்கள் அவர்களது விருப்பம் அறிந்து உதாசீனப்படுத்தாமல் ஒத்துழைப்பு தரவேண்டும்.

அச்சம் தேவையில்லை: வயது அதிகமாகும் போது. தாம்பத்திய உறவு இயலாமல் போய்விடுமோ என்ற அச்சம் தேவையற்றது. உடலுறுவுக்கு வயது ஒரு தடை அல்ல. பரஸ்பர மனவிருப்பம், தேவை அறிந்து உடல் எழுச்சியை வரவழைத்து தாம்பத்தியம் மேற்கொள்வது தம்பதியரிடம் என்றென்றும் இறுக்கமான பிணைப்பையும், இணைப்பையும் உறுதிப்படுத்தும்.

மதுரையில் விஜய்யின் 'வேலாயுதம்' ஆடியோ ரிலீஸ்!

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வேலாயுதம் படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் வரும் 28-ம் தேதி நடக்கிறது. விஜய், ஜெனிலியா, ஹன்ஸிகா மோத்வானி நடித்துள்ள புதிய படம் வேலாயுதம். ஜெயம் எம் ராஜா இயக்கியுள்ள இந்தப் படத்தை ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரித்துள்ளார். ரூபாய் 45 கோடி செலவில் உருவாகியுள்ள படம் இது. ஆடியோவை சோனி மியூசிக் நிறுவனம் வெளியிடுகிறது.

அதிமுகவுக்கு தீவிர ஆதரவாளராக விஜய் மாறிவிட்டதால், இந்தப் படத்தின் ஆடியோவை, முதல்வர் ஜெயலலிதா வெளியிடுவார் என்று கூறி வந்தனர். ஆனால் இப்போது மதுரையில் ரசிகர்கள் முன்னிலையில் வேலாயுதம் இசை வெளியிடப்படுகிறது. இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: வேலாயுதம் பட பூஜையை ரசிகர்கள் முன்னிலையில் சென்னையில் பிரமாண்டமாக நடத்தினோம். இப்போது படத்தின் ஆடியோவை மதுரையில் ரசிகர்கள் முன்னிலையில் சிறப்பாக நடத்த ஏற்பாடு செய்துள்ளோம்.  வரும் ஆகஸ்ட் 28-ம் தேதி மாலை மதுரையில் இந்த விழா நடக்கிறது. ரசிகர்கள் இந்த விழாவை சிறப்பித்துத் தரவேண்டும்," என்று ஆஸ்கர் ரவிச்சந்திரன் கூறியுள்ளார்.

கலைஞர் டிவி நிர்வாகத்திற்கும், எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை-கனிமொழி!

கலைஞர் டிவிக்கும், எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை, அதன் நிர்வாகம், செயல்பாடுகளில் எனக்கு தொடர்பு எதுவும் இல்லை என்று கனிமொழி கூறியுள்ளார். 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு நேற்று சிறப்பு சிபிஐ கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது முன்னாள் அமைச்சர் ராசா, திமுக ராஜ்யசபா எம்.பி. கனிமொழி, ஷாஹித் பால்வா உள்ளிட்டோர் ஆஜராகினர். நேற்று வக்கீல்கள் திடீர் போராட்டம் காரணமாக விசாரணை நடைபெறவில்லை. இதையடுத்து குற்றம் சாட்டப்பட்ட ராசா உள்ளிட்டோருடன் நீதிபதி ஓ.பி.ஷைனி, அதிகாரப்பூர்வமற்ற முறையில் பேசினார்.

அப்போது ராசா கூறுகையில், 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தனனிச்சையாக நானே எல்லா நடவடிக்கைகளையும் எடுத்தேன் என்று சிபிஐ கூறுவது தவறானது. பிரதமர் அலுவலகம்தான் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பான அனுமதியை 2008ம் ஆண்டு ஜனவரி மாதம் அளித்தது. பிரதமர் அலுவலகம்தான் தவறு செய்ததாக கூறுகிறேனே தவிர பிரதமரை நான் குற்றம் சாட்டவில்லை. பிரதமர் மீது பழியைப் போட நான் முயலவில்லை.

அனைத்து நடவடிக்கைகளையும் நான் தன்னிச்சையாக எடுத்ததால் பிரதமர் அலுவலகத்திற்கு எதுவுமே தெரியாமல் போய் விட்டதாக சிபிஐ கூறுகிறது. ஆனால் புதிய ஆபரேட்டர்களுக்கு ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றையை ஒதுக்கீடு செய்யலாம் என்று பிரதமர் அலுவலகம்தான் 2008ம் ஆண்டு ஜனவரி மாதம் 6ம் தேதி எனக்கு கடிதம் அனுப்பியது. அதற்குப் பிறகும் கூட பிரதமர் அலுவலகத்திற்கு எதுவும் தெரியாதுஎன்று சிபிஐ கூறுவது வியப்பாகவும், புதிராகவும் உள்ளது. பிரதமருக்கு அனைத்துத் தகவல்களையும் தெரிவிக்க வேண்டியது எனது கடமை. அதை நான் முறையாக செய்தேன் என்றார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், 12 ஆண்டுகள் நான் மத்திய அமைச்சராக இருந்திருக்கிறேன். அமைச்சராக நான் பதவியேற்றபோது அரசியல் சாசனச் சட்டத்திற்கு உட்பட்டு நடப்பேன் என்றுதான் சத்தியப்பிரமாணம் எடுத்துக் கொண்டேனே தவிர பிரதமரின் அறிவுரையை ஏற்பேன் என்றோ அல்லது நிதியமைச்சரின் அறிவுரையை ஏற்பேன் என்றோ சத்தியப்பிரமாணம் எடுத்துக் கொள்ளவில்லை என்றார்.

கனிமொழி கூறுகையில், கலைஞர் டிவிக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. கலைஞர் டிவியின் நிர்வாகத்தில் ஒருபோதும் நான் என்னை ஈடுபடுத்திக் கொண்டதில்லை. அவர்கள் எப்படிச் செயல்படுகிறார்கள், என்ன செய்கிறார்கள் என்பது கூட எனக்குத் தெரியாது. அதில் நான் எந்தவிதத்திலும் தொடர்பு கொள்ளவில்லை என்றார்.

டிபி ரியாலிட்டி தலைவர் ஷாஹித் உஸ்மான் பால்வா கூறுகையில், திஹார் சிறையில் உள்ள கைதிகளின் நிலை குறித்துப் பேசினார். அவர் கூறுகையில், என்னைப் போன்றவர்களுக்கு நல்ல வக்கீல்கள் கிடைத்து விட்டார்கள். இதனால் எங்களது நிலைமை பரவாயில்லை. ஆனால் வக்கீல்கள் கூடக் கிடைக்காமல் திஹார் சிறையில் பல கைதிகள் வாடி வருகின்றனர். இது வேதனை தருகிறது என்றார்.

2ஜி வழக்கு தொடர்பாக அவர் கூறுகையில், சிபிஐயை சென்ட்ரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன் என்று கூறுவதற்குப் பதில் சென்ட்ரல் பீரோ ஆப் இமாஜினேஷன் என்றுதான் கூற வேண்டும். காரணம் கற்பனையான புகார்களை வைத்துக் கொண்டு வழக்கு தொடர்ந்துள்ளனர் என்றார்.

முன்னாள் தொலைத் தொடர்புத்துறை செயலாளர் சித்தார்த்த பஹூரா கூறுகையில், 2ஜி விவகாரம் தொடர்பாக எடுக்கப்பட்ட அனைத்து முடிவுகளும், நான் செயலாளர் பதவிக்கு வருவதற்கு முன்பு எடுக்கப்பட்டவை. எனவே அவற்றுக்கு நான் பொறுப்பாக முடியாது என்றார். இதேபோல ரிலையன்ஸ் அடாக் குழு நிர்வாக இயக்குநர் கெளதம் தோஷி, முதுநிலை துணைத் தலைவர் ஹரி நாயர், சுரேந்திர பிபாரா ஆகியோரும் தங்களது கருத்துக்களைத் தெரிவித்தனர்.

போர்க்குற்ற விசாரணையை உடனே துவங்காவிட்டால்... இலங்கைக்கு அமெரிக்கா எச்சரிக்கை!

இலங்கையில் இறுதிகட்டப் போரின்போது நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து அந்நாடு உடனே சர்வதேச தரத்திற்கிணங்க விசாரணை நடத்த வேண்டும் என்றும், இல்லையெனில் சர்வதேச நெருக்கடி மற்றும் நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது.இது குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் விக்டோரியா நூலேண்ட் கூறியதாவது,

இலங்கையில் இறுதிகட்டப் போரின்போது நடந்த போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் குறித்து அந்நாடு விரைவில் விசாரணை நடத்த வேண்டும். அந்த விசாரணை சர்வதேச தரத்தில் இருக்க வேண்டும். இலங்கையே விசாரணையை நடத்தும் என்று எதிர்பார்க்கிறோம். இல்லை என்றால் அந்நாடு சர்வதேச நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

இந்த விசாரணையைத் துவங்குமாறு நாங்கள் இலங்கை அரசை தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டு தான் இருக்கிறோம். ஆனாலும் இன்னும் விசாரணை துவங்கவில்லை. இலங்கையே விசாரிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். இந்த குற்றங்கள் குறித்த பிரச்சனையை சிங்களர்களே தீர்த்துக் கொள்ள விரும்பினால் அவர்களே செய்யட்டும். ஆனால் விரைவில் தீர்வு காணப்பட வேண்டும் என்றார்.

Alagiri, DMK leaders grab land - 20 கோடி கோவில் நிலத்தை ரூ. 85 லட்சத்துக்கு அபகரித்தார் அழகிரி!


CNN-IBN has accessed documents to show how Alagiri's wife bought temple land worth over Rs 20 crores at just Rs 85 lakhs from a man facing over 50 criminal cases. Kanthi Alagiri bought land from lottery king Santiago Martin, who faces over 50 criminal cases. Land worth over Rs 20 crore was sold to Kanthi Alagiri for Rs 85 lakhs in 2010. The deal took place after Alagiri became Union minister. Other key Alagiri aides have been arrested on criminal charges. After Alagiri, the question being asked is: did land grabbing start and stop with the DMK's first family or did it percolate through the party.  


மத்திய அமைச்சர் மு.க.அழகிரியும், பிற திமுக தலைவர்களும் பெருமளவில் நில அபகரிப்புகளில் ஈடுபட்டுள்ளனர். மு.க.அழகிரி மற்றும் குடும்பத்தினர் செய்த நில அபகரிப்புகள் தொடர்பாக பல ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

50க்கும் மேற்பட்ட கிரிமினல் வழக்குகளில் தொடர்புடைய லாட்டரி அதிபர் சான்டியாகோ மார்ட்டினிடமிருந்து ரூ. 20 கோடி மதிப்புடைய கோவில் நிலத்தை ரூ. 85 லட்சத்துக்கு தனது மனைவி காந்தி அழகிரி பெயரில் வாங்கியுள்ளார் அழகிரி. 2010ம் ஆண்டு இந்த நில விற்பனை நடந்துள்ளது. மு.க.அழகிரி மத்திய அமைச்சரான பின்னர்தான் இந்த நிலத்தை பெற்றுள்ளனர். முறைகேடாக நடந்த இந்த நில விற்பனை தொடர்பாக அழகிரியின் கூட்டாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அழகிரி தவிர திமுகவைச் சேர்ந்த மூன்று முன்னாள் அமைச்சர்கள், 3 மூத்த திமுக தலைவர்களும் தமிழகம் முழுவதும் பெருமளவில் நில அபகரிப்புகளில் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் வீரபாண்டி ஆறுமுகம் முக்கியமானவர். இவர் தவிர கே.என்.நேரு மற்றும் பரிதி இளம்வழுதி ஆகியோரும் நிலஅபகரிப்புகளில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ.வும், மு.க.ஸ்டாலினின் வலது கரமுமான ஜே.அன்பழகனும் நில அபகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். சேலத்தில் 24 குடும்பத்தினருக்குச் சொந்தமான அங்கம்மாள் காலனியில் வீரபாண்டி ஆறுமுகத்திடம் நிலத்தை இழந்தவர்களில் ஒருவரான உமா என்பவர் கூறுகையில், எங்களது சொந்த வீட்டை விட்டு அவர்கள் எங்களை விரட்டியடித்தனர். எங்களை தெருவில் அலைய விட்டனர். கொலை மிரட்டலும் விடுத்தனர் என்று குமுறினர்.

குணசீலன் என்பவர் கூறுகையில், அமைச்சருக்கு இதில் தொடர்பு இல்லை என்றால் பிறகு ஏன் கலெக்டர், தாசில்தார், ஆர்டிஓ, கமிஷனர் ஆகியோர் நாங்கள் புகார் கொடுத்தபோது உதவ முன்வரவில்லை. எல்லோருமே என் கண்மூடிப் போயிருந்தனர் என்றார்.

தமிழகத்தை வாழ விடுவதில்லை என்று மத்திய அரசு தீவிரமாக செயல்படுகிறது- ஜெ!

தமிழகத்தை வாழ விடுவதில்லை, அதை அனுமதிப்பதில்லை என்று மத்திய அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. ஆனால் தமிழகத்திற்கு மத்திய அரசு இழைத்து வரும் அநீதியை தகர்த்து தமிழக மக்களுக்கு நாங்கள் நன்மை செய்வோம் என்று முதல்வர் ஜெயலலிதா ஆவேசமாக கூறியுள்ளார்.

தமிழக சட்டசபையில் இன்று பட்ஜெட் மீதான விவாதம் நடந்தது. அப்போது சிபிஐ உறுப்பினர் ஆறுமுகம் பேசுகையில், வால்பாறையில் இரவில் யானைகள் பயம் உள்ளது. தீப்பந்தங்களை காட்டினால் யானைகள் ஓடிவிடும். இதற்காக அங்குள்ள மக்களுக்கு கூடுதல் மண்எண்ணெய் வழங்க வேண்டும் என்றார்.

அப்போது எழுந்த முதல்வர் ஜெயலலிதா, மத்திய அரசு என்ன காரணத்தினாலோ கடந்த ஜூன் மாதத்திலிருந்து தமிழகத்துக்கு வழங்கும் மண்ணெண்ணெய் அளவை குறைத்து வருகிறது. இது தொடர்பாக பிரதமருக்கு கடிதம் எழுதினோம். நேரிலும் வலியுறுத்தினோம். ஆனால் என்ன காரணத்தினாலோ நமக்கு வழங்கப்படும் மண்ணெண்ணெய் அளவு குறைந்து வருகிறது என்றார்.

பின்னர் தொடர்ந்து பேசிய ஆறுமுகம், தமிழகத்தின் வளர்ச்சிக்கு இதன் மூலம் மத்திய அரசு தடையாக இருப்பதாகத்தான் தெரிகிறது. இதை எதிர்த்து இடதுசாரிகள் போராடி வருகிறோம். மக்கள் தான் வருவதில்லை என்றார். மக்கள் வருவதில்லை என்று அவர் கூறியதைக் கேட்டு உறுப்பினர்கள் வாய் விட்டுச் சிரித்தனர். பின்னர் பேசிய சிபிஎம் உறுப்பினர் பாலபாரதி, உறுப்பினர் ஆறுமுகம் சொல்வது தவறு. இடதுசாரிகள் கடந்த 5 ஆண்டுகளாக மக்களை திரட்டி போராடி வந்ததால்தான் ஆட்சி மாற்றமே ஏற்பட்டது. எனவே மக்கள் வரவில்லை என்று கூற வேண்டாம் என்றார்.

மீண்டும் தனது பேச்சைத் தொடர்ந்த ஆறுமுகம், நாம் எதிர்பார்த்த அளவுக்கு மக்கள் வரவில்லை என்று தான் கூறினேன். ஆட்சி மாற்றத்துக்கு முக்கிய காரணம் உச்சபட்ச இமாலய ஊழலும், முறைகேடுகளும்தான் என்றார். இதையடுத்து குறுக்கிட்ட முதல்வர் ஜெயலலிதா, மக்களின் உரிமைக்காக மத்திய அரசை எதிர்த்து நாங்களும் போராடுகிறோம். நீங்களும் வாருங்கள். நீங்கள் எதிர்பார்ப்பதைவிட அதிகமாக மக்கள் நிச்சயம் வருவார்கள் என்று தெரிவித்தார்.

இதைடுத்துப் பேசிய ஆறுமுகம், இதைத்தான் நாங்கள் எதிர்பார்த்தோம். இடதுசாரிகளுடன் முதல்வர் சேர்ந்து போராடினால் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்றார். பின்னர் பேசிய சிபிஎம் தலைவர் செளந்தரராஜன், மத்திய அரசு தொடர்ந்து தமிழகத்தை பாரபட்சத்துடன் நடத்துகிறது என்றார்.

அப்போது குறுக்கிட்ட முதல்வர் ஜெயலலிதா, மண்ணெண்ணெய் அளவை மத்திய அரசு குறைத்து வருவது மட்டுமல்ல, நமது தேவைக்கு வெளியில் வாங்க விரும்பினாலும் அதற்கு அனுமதி வழங்குவதில்லை. மண்ணெண்ணெய் மட்டுமல்ல தமிழகத்துக்கு தேவையான டி.ஏ.பி. உரத்தையும் போதுமான அளவுக்கு வழங்க வில்லை. பிரதமரிடம் வலியுறுத்தியும் கூட மத்திய அரசு இந்த வகை உரத்தை குறைத்துதான் வழங்குகிறது.

நான் பலமுறை தெரிவித்து விட்டேன். மாநில அரசின் நிதி ஆதாரம் மிகக் குறைவாக இருக்கிறது. அதை வைத்து எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு செய்து இருக்கிறோம். மத்திய அரசும் போதிய நிதி வழங்கவில்லை. நிதி பிரச்சனை மட்டுமல்ல மாநில அரசின் பல்வேறு அதிகாரங்களை வருவாய்களை அத்தனைஇனங்களிலும் மத்திய அரசு பறித்துவிட்டது. தற்போது மாநில அரசுக்கு வருவாய் வரக்கூடிய ஒரே இனம் வாட் வரி விதிப்பு தான்.

இதை வைத்துக்கொண்டு இத்தனை திட்டங்களையும் உருவாக்கி செயல்படுத்தி வருகிறோம். இதை விட கூடுதலாக செய்ய வேண்டும் என்ற மனமும் ஆசையும் எங்களுக்கு உண்டு. நீங்கள் முன் வைக்கிற கோரிக்கைகளை விட ஆயிரம் மடங்கு அதிகம் செய்ய வேண்டும் என்று எண்ணம் உண்டு. ஆனால் நிதி தட்டுப்பாடு காரணமாக எங்கள் கைகள் கட்டுப்பட்டுள்ளன. அந்த கட்டுப்பாட்டை தகர்த்து பகீரத முயற்சி செய்து தமிழக மக்களுக்கு நிச்சயம் நன்மை செய்வோம்.
மத்திய அரசு எத்தனை தடைகளை விதித்தாலும் அந்த தடைகளை எல்லாம் தகர்த்து தமிழக மக்களுக்கு நன்மை செய்வோம்.

தமிழ்நாட்டை வாழ விடுவதில்லை என்று மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. இதை சொல்வதற்கு நான் வேதனைப்படுகிறேன். ஆனால் அதுதான் உண்மைா. தமிழகம் வாழக் கூடாது என்று மத்திய அரசு கருதுகிறது. அப்படித்தான் அது செயல்படுகிறது. எனவே ஜனநாயகத்துக்குட்பட்டு தமிழக மக்களுக்கு நிச்சயம் நன்மை செய்தே தீருவோம் என்றார். இதைக் கேட்டதும் அதிமுக கூட்டணிக் கட்சிகளின் உறுப்பினர்கள் மேசைகளைப் பலமாக தட்டி முதல்வரின் பேச்சை வரவேற்றனர்.

அடுத்தடுத்து மத்திய அரசுக்கு கடும் கண்டனம்: நேற்றுதான் சட்டசபையில் கோத்தபயாவின் பேச்சைக் குறிப்பிட்டு முதல்வர் ஜெயலலிதா மிகக் கடுமையாக பேசினார். அப்போது மத்திய அரசு வாய் மூடி மெளனமாக இருப்பதால்தான் கோத்தபயா போன்றவர்கள் தமிழகத்தை இழித்துப் பேசும் நிலை ஏற்பட்டுள்ளது என்று மத்திய அரசை மிகக் கடுமையாக சாடியிருந்தார். இந்த நிலையில் மத்திய அரசு தமிழகத்தை வாழ விடக் கூடாது என்று செயல்பட்டு வருவதாக மிகக் கடுமையான குற்றச்சாட்டை அவர் வைத்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சமச்சீர் கல்வியைக் கற்றால் கிளர்க் ஆகலாம், கலாம் ஆக முடியாது- விஜயகாந்த்!

சமச்சீர் கல்வியைப் படித்தால் கிளர்க்குகளை தான் உருவாக்கலாம். அப்துல் கலாம் போன்றவர்களை உருவாக்க முடியாது என்று தேமுதிக தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான விஜயகாந்த் தெரிவித்துள்ளார். சட்டசபையில் இன்று பட்ஜெட் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: நகர்ப்புறங்களில் வசதிகள் அதிகமுள்ள பள்ளிகளில் படித்த பிள்ளைகள் கூறுகையில், நாங்கள் 4-ம் வகுப்பில் படித்தது தான் தற்போது 8-ம் வகுப்பு பாடத்தில் உள்ளது. இதில் என்ன புதிதாக கற்றுக்கொள்ளப் போகிறோம் என்கின்றனர்.

இது ஒரு புறம் இருக்க மறு புறம் கிராமப்புற பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு 8-ம் வகுப்பு பாடப்புத்தகம் படிப்பதற்கு கடினமாக உள்ளது. பொதுப்பாடத்திட்டதின்படி தேர்வு வைத்தால் நகர்ப்புற மாணவர்கள் எளிதில் தேர்வாகி மேல் படிப்புக்குச் சென்றுவிடுவார்கள். ஆனால் கிராமப்புற மாணவர்களால் அது முடியாது. இதை சமூக நீதி என்று எவ்வாறு கூற முடியும்?

தற்போதுள்ள பாடத்திட்டத்தை படித்தால் கிளர்க்குகளை உருவாக்கலாம். ஆனால் அப்துல் கலாம் போன்றவர்களை உருவாக்க முடியாது. உண்மையான சமச்சீர் கல்வியைக் கொண்டு வர வேண்டுமானால் முதலில் பள்ளிகளில் அடிப்படை வசதிகள் செய்ய வேண்டும். அதற்கான திட்டங்களை வகுக்க வேண்டும். வண்டிக்கு முன்புதான் குதிரையை மாட்ட வேண்டுமே தவிர, குதிரைக்குப் பின்னால் வண்டி இழுத்துக் கொண்டு ஓடுவது சரியாக வராது. தற்போதைய பொதுப் பாடத்திட்டம் முன்னுக்குப் பின் முரணாக உள்ளது.

நில மீட்பு நடவடிக்கைளால் மக்கள் நிம்மதி பெருமூச்சு: கடந்த ஆட்சியில் திமுகவினர் சட்ட விரோதமான முறையில் மக்களை பயமுறுத்தி மக்களின் சொத்துக்களை பறித்தனர். இப்போது இத்தகைய சொத்துக்களை மீட்டு உரியவர்களுக்கு தர முன் வந்து இருப்பது தமிழ்நாட்டு மக்கள் அனைவராலும் வரவேற்வேற்கப்படுகிறது. ஆனால் முன்னாள் முதல்வர் கருணாநிதி பழிவாங்கும் நடவடிக்கை என்கிறார், பொய் வழக்கு போடுவதாக குற்றம் சொல்கிறார். அப்படி என்றால் நீதிமன்றம் சென்று தங்களை விடுவித்துக் கொள்வது தான் முறையே தவிர திமுகவினர் ஆர்ப்பாட்டம் அமளி என்று நடத்துவது போடப்பட்டது பொய் வழக்கு அல்ல என்பது வெட்ட வெளிச்சமாகிறது.

அரசின் நில மீட்பு நடவடிக்கையால் மக்கள் நிம்மதியுடன் இருக்கிறார்கள். தமிழ்நாட்டு மக்கள் ஆதரித்து வெற்றி பெறச் செய்துள்ள கூட்டணியால் உருவான இந்த ஆட்சி அனைவருக்கும் சம வாய்ப்பு அளிக்கும் சமுதாயத்தை உருவாக்கும் வகையில் நிதி நிலை அறிக்கை திருப்பு முனையாக அமைந்துள்ளது.

கண்ணை மூடிக் கொண்டு பாராட்டலாம்: தமிழக அரசு ஒரு சிறப்பான பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளது. பல்வேறு இலவச திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பல்வேறு உதவிகளும் அதிகமாக்கப்பட்டுள்ளது. அனைவரும் பாராட்டும் வகையில் சிறந்த பட்ஜெட் அமைந்துள்ளது. இதில் புதிய திட்டம் எதுவும் இல்லை என்று சிலர் கூறுகிறார்கள். அவர்கள் கண் இருந்தும் பாராத கருத்து குருடர்கள். இது கண்ணை மூடிக்கொண்டு பாராட்டக் கூடிய பட்ஜெட்.

அந்த அளவுக்கு ஏராளமான சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. ஏழை நடுத்தர மக்களை விலைவாசி உயர்வு தாக்கத்தில் இருந்து மீட்பதற்கு புதிய திட்டங்கள் உதவும். ரூ.8 ஆயிரத்து 900 கோடி அளவுக்கு புதிய திட்டங்களும், சலுகைகளும் அளிக்கப்பட்டு இருப்பது சமுதாயத்தின் அடித்தள மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும்.

ஏழைகளை அடையாளம் காண்பித்து அவர்களுக்கு ஏற்படும் குறைகளைகளைய அடையாள அட்டை வழங்க வேண்டும். ஏழைகளுக்கு உதவிகள் முழுமையாக கிடைக்க இடையூறாக இருந்து தவறு செய்யும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இளைஞர்களின் வேலை வாய்ப்பு அதிகரிக்க கல்லூரிகளிலேயே, அவர்களுக்கு வேலை வாய்ப்பு பயிற்சி அளிக்க வேண்டும்.
திமுக ஆட்சியில் இதற்கான அக்கறை செலுத்தப்படவில்லை. விவசாயிகளுக்கு இப்போது சலுகைகளை அரசு அறிவித்து உள்ளது. அவர்கள் பயிரிடும் விளை பொருட்களுக்கு உத்தரவாதம் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பெண்களுக்கு இந்த பட்ஜெட்டில் பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. பெண்கள் நாட்டின் கண்கள் என்ற திட்டத்தை நான் எனது சொந்த பணத்தில் செயல்படுத்தினேன். எல்.ஐ.சி. மூலம் ரூ. 10 ஆயிரம் முதலீடு செய்தால் திருமண வயதை எட்டும் போது அந்த பெண்ணுக்கு ரூ.2 லட்சம் கிடைக்கும். இது போன்று ரூ.30 ஆயிரம் போட்டால் 18 ஆண்டில் ரூ.3 லட்சம் கிடைக்கும் திட்டம் எல்.ஐ.சி.யில் உள்ளது. இதனை அரசு பரிசீலிக்க வேண்டும்.

கடந்த திமுக ஆட்சியில் சுய உதவிக் குழுக்கள் அரசியல் நோக்கத்திற்காக பயன்பட்டு வந்தன. சமூக நலத்துறையில் இருந்த சுய உதவி குழுக்கள் மு.க.ஸ்டாலினிடம் உள்ளாட்சி துறை இருந்ததால் அந்த துறைக்கு மாற்றப்பட்டது. எனவே, சுய உதவிக் குழுக்களை மீண்டும் சமூக நலத்துறைக்கு மாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

புனிதம் - குறும்படம்!


பார்கவேன்டிய குறும்படம்! வர்ணம் !!


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...