இலங்கையில் இறுதிகட்டப் போரின்போது நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து
அந்நாடு உடனே சர்வதேச தரத்திற்கிணங்க விசாரணை நடத்த வேண்டும் என்றும்,
இல்லையெனில் சர்வதேச நெருக்கடி மற்றும் நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டும்
என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது.இது குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் விக்டோரியா நூலேண்ட் கூறியதாவது,
இலங்கையில் இறுதிகட்டப் போரின்போது நடந்த போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் குறித்து அந்நாடு விரைவில் விசாரணை நடத்த வேண்டும். அந்த விசாரணை சர்வதேச தரத்தில் இருக்க வேண்டும். இலங்கையே விசாரணையை நடத்தும் என்று எதிர்பார்க்கிறோம். இல்லை என்றால் அந்நாடு சர்வதேச நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
இந்த விசாரணையைத் துவங்குமாறு நாங்கள் இலங்கை அரசை தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டு தான் இருக்கிறோம். ஆனாலும் இன்னும் விசாரணை துவங்கவில்லை. இலங்கையே விசாரிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். இந்த குற்றங்கள் குறித்த பிரச்சனையை சிங்களர்களே தீர்த்துக் கொள்ள விரும்பினால் அவர்களே செய்யட்டும். ஆனால் விரைவில் தீர்வு காணப்பட வேண்டும் என்றார்.

No comments:
Post a Comment