|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

12 August, 2011

தமிழர்களின் உணர்வை மதிக்காத இந்திய!

இலங்கையில் நடந்த மனித உரிமை குற்றங்கள் குறித்து நேர்மையான விசாரணையை இலங்கைஅரசு மேற்கொள்ளாவிட்டால் அந்நாடு சர்வதேச விசாரணைக்கு உள்ளாக நேரிடும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது.
.
இலங்கையில் விடுதலைப்புலிகளுடன் நடந்த இறுதி சண்டையில் ஆயிரக்கணக்கான தமிழர்களை இலங்கை ராணுவம் கொன்று குவித்தது.  ஐ.நா. அமைத்த மூவர் குழு இந்த குற்றச்சாட்டை உறுதி செய்து உள்ளது. அண்மையில் பிரிட்டன் தொலைக்காட்சி ஒன்றும் இலங்கை ராணுவத்தின் போர் குற்றங்களை அம்பலப்படுத்தும் வகையில் நெஞ்சை பதற வைக்கும் வீடியோ காட்சிகளை வெளியிட்டது. இந்த நிலையில் அமெரிக்கா இலங்கை அரசுக்கு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. 


அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் விக்டோரியா நூலண்ட் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசினார்.மனித உரிமை குற்றங்கள் குறித்து விசாரணை நடத்துவது இலங்கை அரசின் பொறுப்பாகும். மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அமெரிக்கா விரும்புகிறது என அவர் கூறினார். இது நடைபெறாவிட்டால், அதுவும் விரைந்து நடைபெறாவிட்டால், இந்த போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச மன்றத்தில் விவாதிக்கும் உரிமையை நாங்கள் பயன்படுத்த நேரிடும் என்பதை எச்சரிக்கிறோம். 

ஒரு செயற்கையான காலக்கெடுவை நாங்கள் விதிக்க விரும்பவில்லை. இலங்கை தமிழ் மக்கள் கவலையையும் அவர்களுடைய விரக்தியையும் நாங்கள் உணர்ந்திருக்கிறோம். எனவே இலங்கை அரசு அவர்கள் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். அப்படி செயல்படுவது அவர்களது நாட்டின் நலனுக்கு நல்லது என்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் எச்சரித்தார். 

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...