|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

12 August, 2011

களைப்பை போக்கும் சாக்லேட் பானம்!

அதிக வேலைப்பளு, உடற்பயிற்சி உள்ளிட்ட காரணங்களால் உடல் சோர்வடைவது இயல்பு. இதுபோன்ற நேரங்களில் சோர்வை களைய எடுக்கப்படும் நடவடிக்கைகள் உடனடி பலனை தராது. ஆனால், லோ கலோரி சாக்லெட் பானங்கள் உடல் களைப்பை உடனே போக்கிவிடும் என்று சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. டெக்சாஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், டாக்டர் ஜான் கிவி தலைமையில் இது குறித்து மேற்கொண்ட ஆய்வில் இந்த உண்மை கண்டறியப்பட்டது.

களைப்பு நீக்கும் பானம்: ஆய்வுக்காக சுமார் 50 பேர் தேர்வு செய்யப்பட்டு, ஆய்வுக்கு முந்தைய பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர். பின்னர் விளையாட்டு, வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டனர். சுமார் 90 நிமிடம் தொடர்ந்து சைக்கிள் ஓட்டவும் கோரப்பட்டனர். இதில், களைப்பு அடைந்தவர்களுக்கு லோ கலோரி சாக்லெட் பானம் கொடுத்து பரிசோதித்தனர். களைப்பு நீங்கி அவர்கள் உற்சாகமாக காணப்பட்டனர்.

தொடர்ந்து 6 வாரங்கள் கண்காணிக்கப்பட்ட நிலையில், அவர்கள் உடல் எடை அதிகரிக்கவில்லை என்பதும் தெரிந்தது.ஆய்வு குறித்து டாக்டர் ஜான் கூறுகையில், ‘‘லோ கலோரி சாக்லெட் பானம் உடனடியாக உடல் சோர்வை போக்கும். குறைந்த கலோரி அளவுள்ள பாலாக இருந்தால் நல்லது. உடல் எடை அதிகரிக்காது.

பெரும்பாலும் விளையாட்டு வீரர்கள் இத்தகைய பானத்தையே அதிகம் எடுத்துக் கொள்கின்றனர். மிகக் குறைந்த கலோரிகள் அல்லது அதிக கார்போஹைட்ரேட் கொண்ட பானங்களால் இதுபோன்ற உடனடி பலன் கிடைப்பதில்லை. லோ கலோரி சாக்லெட் பானத்தை குடிப்பதனால் உடல் எளிதாக அதிக பிராணவாயுவை எடுத்துக்கொள்வதும் தெரியவந்துள்ளது. இதனால் விளையாட்டு வீரர்கள் மட்டுமின்றிசாதாரணமானவர்களுக்கும் உடலில் சுவாசம் உள்ளிட்ட பிரச்னைகளில் இருந்து பாதுகாப்பு கிடைக்கிறது.

உடல் சுறுசுறுப்படைகிறது: லோ கலோரி சாக்லேட் பானம் இயல்பை விட அதிக சுறுசுறுப்பாக இயங்க வகை செய்கிறது. உடல் மற்றும் மனச்சோர்வை நீக்குகிறது. ரத்த ஓட்டம் சீராகிறது; இதயநோய் பாதிப்புகளை விரட்டுகிறது. உடல்தசைகளும் வலுப்பெறுகிறது. இதில் உள்ள அதிக அளவு புரதம் உடல் சுறுசுறுப்புக்கு உடனடி வழி செய்கிறது. பாதிப்புகளோ பக்க விளைவுகளோ இல்லை.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...