|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

28 September, 2012

இன்று உலக ரேபிஸ் தினம்!

ரேபிஸ் என்பது ஒரு வகை வைரஸ். இது காடுகளில் வாழும் வவ்வால், நரி, ஓநாய் போன்ற விலங்குகளையும், வீட்டு விலங்கான நாயையும் எளிதில் தாக்கக் கூடியது. ரேபிஸ் வைரஸ் தாக்கிய விலங்குகள், மனிதர்களை நேரடியாக கடிப்பதாலோ அல்லது அவ்விலங்குகளால் கடிக்கப்பட்ட பிற விலங்குகள் மூலமாகவோ பரவுகிறது.

ரேபிஸ் நோய்க்கு தடுப்பு மருந்தை, முதன் முதலில் 1885ல் லூயிஸ் பாஸ்டர் என்பவர் கண்டுபிடித்தார். அதற்கு மன் இந்நோய்க்கு மருந்தே கிடையாது. உயிரிழப்புகளும் அதிகம் நிகழ்ந்தன. இவரது சாதனையை அங்கீகரிக்கும் விதமாக, இவரது மறைந்த நாளான செப்., 28ம் தேதி, உலக ரேபிஸ் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. ரேபிஸ் நோயால், உலகில் ஆண்டுதோறும் 55 ஆயிரம் பேர் இறக்கின்றனர், சராசரியாக 10 நிமிடத்துக்கு ஒருவர் இறக்கிறார் என ஆய்வில் தெரிய வந்துள்ளது. 97 சதவீத ரேபிஸ் நோய், நாய்கள் மூலம் தான் பரவுகின்றன. இந்தியாவில் மட்டும் 2 கோடியே 50 லட்சம் நாய்கள் உள்ளன. அதில் 60 சதவீதம் தெருவில் திரியும் நாய்களாகவும், மீதி வீட்டில் வளர்க்கும் நாய்களாகவும் உள்ளன என தனியார் ஆய்வு தெரிவிக்கிறது. இவை மூலம் ரேபிஸ் அதிகமாக பரவுகிறது.

கவனம் அவசியம்: வீட்டில் வளர்க்கும் விலங்குகளிடம் கவனமாகவும், தொடர் கண்காணிப்பிலும் இருக்க வேண்டும். அதன் செயல்பாடுகளில் மாற்றம் ஏற்படின், உடனே கால்நடை மருத்துவரை அணுக வேண்டும். ரேபிஸ் வைரஸ் தாக்கிய விலங்குகள் கடித்தவுடன், அந்த இடத்தில் சோப்பு நீரால் 10 முதல் 15 நிமிடம் நன்கு கழுவ வேண்டும். பின் டாக்டரிடம் காட்டி, சிகிச்சை மேற்கொண்டால் நோயிலிருந்து பாதுகாக்கலாம். இல்லாவிட்டால் இது உயிரையும் பறிக்கக் கூடியது.

ஆய்வில்அதிர்ச்சி தகவல்!

தற்போது உலகம் சந்தித்து வரும் காலநிலை மாற்றம் மூலம் வரும் 2030ம் ஆண்டிற்கு உலகில் 10 கோடி பேர் பலியாகலாம் என்ற அதிர்ச்சி தகவல் ஆய்வில் தெரியவந்துள்ளது.பல்வேறு காரணங்களால் உலகின் காலநிலையில் பெரிய மாறுதல்கள் ஏற்பட்டு வருகிறது. வளிமண்டலத்தில் உள்ள கிரீன்ஹஸ் விளைவு பாதிக்கப்பட்டுள்ளதால், உலகின் வெப்பநிலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் துருவ பகுதியில் உள்ள பனிக்கட்டிகள் உருகுவது அதிகரித்து, கடல் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. இதனால் எதிர்காலத்தில் மக்கள் வாழ்வதற்கு ஏற்ற இடமாக பூமி இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.இந்த நிலையில் டாரா என்று மனிதாபிமான அமைப்பு ஆய்வு ஒன்றை நடத்தியது. இதில் உலகில் உள்ள 184 நாடுகளில் கடந்த 2010ம் ஆண்டு முதல் 2030ம் ஆண்டு வரையுள்ள காலநிலை, பொருளாதாரம், மனித இனம் ஆகியவை குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வின் முடிவில் பல அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த ஆய்வின் முடிவில் கூறியிருப்பதாவது, உலகில் தற்போது நிலவி வரும் மாசுப்பட்ட காற்று, பசி, நோய்கள் ஆகிய காரணங்களால், ஆண்டுதோறும் சுமார் 50 லட்சம் பேர் பலியாகி வருகின்றனர். இந்த நிலையில் காலநிலை மாற்றம் மற்றும் காற்றில் கார்பன் அளவு அதிகரிப்பின் மூலம், வரும் 2030ம் ஆண்டிற்குள், ஆண்டுதோறும் 60 லட்சம் பேர் வரை பலியாகும் நிலை உருவாக வாய்ப்புள்ளது. தற்போது இறப்பவர்களில் 90 சதவீதம் பேர் வளரும் நாடுகளை சேர்ந்தவர்கள்.காலநிலை மாற்றம் மற்றும் காற்றில் கார்பன் அளவு அதிகரித்து வருவதால், வரும் 2030ம் ஆண்டிற்குள் உலகில் 10 கோடி பேர் பலியாகலாம். காலநிலை மாற்றம் மூலம் சர்வதேச அளவிலான பொருளாதார வளர்ச்சி ஆண்டுதோறும் 1.2 ட்ரில்லியன் டாலர் இழப்பு ஏற்படுகிறது. இது வரும் 2030ம் ஆண்டிற்கு 3.2 சதவீதம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. பூமியின் வெப்பநிலை அதிகரிக்கும் பட்சத்தில் வரும் 2100ம் ஆண்டிற்குள் இது 10 சதவீத பொருளாதார இழப்பை ஏற்படுத்தலாம்.அடுத்த 50 ஆண்டுகளில் பூமியின் வெப்பநிலையில் 2 முதல் 3 டிகிரி அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் 50 ஆண்டுகளுக்கு பிறகு நுகர்வோரின் வாங்கும் தன்மை 20 சதவீதம் வரை குறைய வாய்ப்புள்ளது. உலகில் ஏற்படும் காலநிலை மாற்றத்தை தடு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...