ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை. விவேகானந்தர்.
11 September, 2012
4ல் ஒருவருக்கு பிபி, 10ல் ஒருவருக்கு நீரிழிவு!
இளம் தலைமுறை இந்தியா நோயாளி இந்தியாவாக மாறிவருகிறதோ என்ற அச்சம் உருவாகும் அமைந்துள்ளது சமீபத்தில் வெளியிடப்பட்ட புள்ளிவிபரம் ஒன்று. அதாவது இந்தியாவில் உள்ள இளம் தலைமுறையினரில் நான்கில் ஒருவருக்கு உயர் ரத்த அழுத்தம் இருக்கிறது. அதேபோல் பத்தில் ஒருவருக்கு நீரிழிவு நோய் இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.உடல் ஏற்றுக்கொள்ளும் உணவை உண்ணவேண்டும் என்பது இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வாரின் அறிவுரை. நாமே வளர்ந்த நாடுகளின் கழிவுகளை உணவாக உட்கொள்கிறோம். அவர்கள் ஒதுக்கிய குப்பையில் தூக்கிப்போடும் மருந்துகளை நாம் விலை கொடுத்து வாங்கிக் கொண்டிருக்கிறோம். இதன் காரணமாகவே நம் இந்தியாவில் உள்ள மக்கள் இன்றைக்கு பல்வேறு நோய் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர்.
உயர் ரத்த அழுத்தம் மெல்லக்கொல்லும் ஒரு நோய். இது இதயம் தொடர்பான நோய்களையும், பக்கவாதத்தை ஏற்படுத்துகிறது. அதேபோல் நீரிழிவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூளை தொடங்கி பாதம் வரை நோய் தாக்குகிறது. முறையற்ற உணவுப்பழக்கத்தினாலேயே இந்த நோய்களில் சிக்கித் தவிக்கின்றனர் இன்றைய இளைய சமுதாயத்தினர். இது தவிர இந்தியாவில் 26 சதவிகித மக்கள் புகையிலை உபயோகிக்கின்றனர் என்றனர் என்றும் இது தொடர்பான நோய்களில் சிக்கிக் கொண்டுள்ளனர் என்றும் தெரியவந்துள்ளது. 2012 ம் ஆண்டிற்கான புள்ளிவிபரத்தில் இது குறிப்பிடப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் மூன்றில் ஒருவருக்கு உயர்ரத்த அழுத்தம் பாதித்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 51 சதவிகித மரணங்கள் பக்கவாதம் மற்றும் இதயம் தொடர்பான நோய்களினால் ஏற்படுவதாக தெரியவந்துள்ளது.
வளரும் நாடுகளில் உடல்பருமன் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் உள்ளனர். இதுவே உயர்ரத்த அழுத்த நோய்க்கு அடிகோலுகிறது. இந்தியாவில் 23.1 சதவிகிதம் ஆண்களும், 22.6 சதவிகித பெண்களும் உயர் ரத்த அழுத்த நோய்க்கு ஆளாகியுள்ளனர். அதேபோல் 11.1 சதவிகித ஆண்களும், 10.8 சதவிகித பெண்களும் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதனிடையே கடந்த 20 ஆண்டுகளில் பிரசவகால மரணங்கள் இந்தியாவில் குறைந்துள்ளது என்பது ஆறுதல் தரக்கூடிய செய்தியாகும். 1990 களில் 5.4 லட்சமாக இருந்த பேறுகால மரணம் தற்போது 2.9 லட்சமாக குறைந்துள்ளது.இதேபோல் சைட் எனப்படும் ஸ்கிரீன் இன்டியா டுவின் எபிடெமிக் அமைப்பு இந்தியர்களை பாதிக்கும் நோய்கள் குறித்த மிகப்பெரிய ஆய்வு ஒன்றை மேற்கொண்டது, அதில் பல்வேறு முடிவுகள் தெரியவந்துள்ளது.
எட்டு மாநிலங்களில் நகர்புறங்களில் வசிக்கும் 16 ஆயிரம் மக்களிடம் மூன்று ஆண்டுகளாக சோதனை செய்யப்பட்டது. அவர்களில் 60 சதவிகிதத்தினர் சர்க்கரை நோய் மற்றும் உயர்ரத்தஅழுத்தத்தினால் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டதாக சைட் அமைப்பின் தலைவர் டாக்டர் சசாங்ஜோசி தெரிவித்துள்ளார். நோய் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் பலரும் ரெகுலராக ரத்த சர்க்கரை, மற்றும் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கவேண்டும் என்ற எண்ணம் இல்லாதவர்களாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் பலரது ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு 7 சதவிகிதம்தான் இருந்துள்ளது. கெட்ட கொழுப்பின் அளவு 100 மி.லி கிராம் அளவிற்கு இருந்து. ஏராளமானோர் ஒபிசிட்டி எனப்படும் உடல் பருமனால் பாதிக்கப்பட்டிருப்பதும் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்த 8 மாநிலங்களில் எடுக்கப்பட்ட சர்வேயின் படி பிற மாநிலங்களுடன் ஒப்பிடும் போது நோய் பற்றிய விழிப்புணர்வு மகாராஷ்டிராவில் குறைவாகவே உள்ளது தெரியவந்தது. இந்தியா முழுவதும் 7 சதவிகிதத்தினர் தங்களுடைய நோய் பற்றிய விழிப்புணர்வு அன்றி இருக்கின்றனர். மகாராஷ்டிராவில் 5 சதவிகிதத்தினர் நோய்பற்றி அறியாமையிலேயே இருக்கின்றனர்.மாறிவரும் உணவுப்பழக்கமே இதுபோன்ற நோய் பாதிப்பிற்கு காரணம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். எனவே வருங்கால சமுதாயத்தினரையாவது நோயற்ற சமுதாயமாக உருவாக்க நோய் பற்றிய விழிப்புணர்வும், அதனை கட்டுப்படுத்துவது குறித்த தெளிவும் இருக்க வேண்டும் என்பது மருத்துவர்களின் அறிவுரை.
போனுட்ரியா நிக்ரிவென்டர்' சிலந்தி!
மனிதர்களின் செக்ஸ் உணர்வுகளை அதிகரிக்க சத்தான உணவுகளை மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். வாலிப வயோதிக அன்பர்களுக்கு வயக்ரா போன்ற மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆனால் சிலந்தியின் விஷம் மூலம் பாலியல் உணர்வுகளை அதிகரிக்க முடியும் என்றும் இதனால் நீண்ட சுகத்தை அனுபவிக்க முடியும் என்றும் கூறியுள்ளனர். இது தொடர்பான ஆராய்ச்சி முடிவு ஒன்று சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது.தென்அமெரிக்க நாடான பிரேசிலின் காட்டு பகுதிகளில் ‘போனுட்ரியா நிக்ரிவென்டர்' என்ற வகை சிலந்திகள் அதிகம் காணப்படுகின்றன. உலகிலேயே அதிக விஷம் கொண்ட சிலந்திகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது.இதன் கொடுக்கில் இருந்து வெளியேறும் திரவம், அதிக விஷத்தன்மை வாய்ந்தது. போனுட்ரியா சிலந்தி விஷத்தின் மருத்துவ குணம் தொடர்பாக பிரேசில் மற்றும் அமெரிக்க விஞ்ஞானிகள் இணைந்து சமீபத்தில் ஆய்வு நடத்தினர். சிலந்தியிடம் இருந்து ‘பிஎன்டிஎக்ஸ்2,6' எனப்படும் விஷம் உறிஞ்சி எடுக்கப்பட்டது.
முதுமை காரணமாக செக்ஸ் வாழ்வில் உற்சாகம் குறைந்து காணப்பட்ட எலிகளின் உடலில் இந்த விஷம் செலுத்தப்பட்டது. அதன் பின்னர், எலிகளின் ‘மூடு' அதிகரித்தது. இதனால் இன்ப அதிர்ச்சி அடைந்த ஆய்வாளர்கள் தங்களில் ஆராய்ச்சி முடிவுகளை செக்ஸ் பற்றிய இதழ் ஒன்றில் வெளியிட்டுள்ளனர். அதில் சில சுவாரஸ்யமான தகவல்கள் கூறப்பட்டுள்ளன.எலிகளின் உடலில் சிலந்தியின் விஷத்தை செலுத்தியதும் நைட்ரிக் ஆக்சைடு சுரப்பு அதிகமாகிறது. மருந்தை செலுத்திய 20 நிமிடத்தில் அது வேலை செய்ய தொடங்குகிறது. இது ரத்த தட்டுகளை விரிவடைய செய்கிறது. ரத்த தட்டுகளின் சுவர்கள் நெகிழ்வு தன்மை அடைகின்றன. ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. மர்ம உறுப்பு பகுதியில் ரத்த ஓட்டம் அதிகரிப்பதால் அதிக விரைப்புத்தன்மை கிடைக்கிறது.
ஏறக்குறைய, ‘வயாக்ரா' போன்ற செக்ஸ் வீரிய மாத்திரைகள் போலவே சிலந்தி விஷம் செயல்படுகிறது. வயதான பிறகு ஏற்படும் விரைப்புத்தன்மை கோளாறுகளுக்கு சிலந்தி விஷம் அருமையான மருந்தாக இருக்கும் என்று தெரிகிறது.இந்த ஆராய்ச்சி இன்னமும் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது. மனிதர்களை வைத்து சோதனை நடத்தி, வெற்றி கிடைத்த பிறகுதான் சந்தையில் மருந்தாக அறிமுகப்படுத்தப்படும் என்றும் அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.இதை படித்து விட்டு நம் ஊர் ஆசாமிகள் யாரும் சிலந்தியை கடிக்க வைத்து சோதனை செய்து பார்க்க வேண்டாம். அப்புறம் அலர்ஜி ஆகிவிடப்போகிறது.
Subscribe to:
Posts (Atom)