|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

19 February, 2013

Jessica Cox-


என்ன கொடுமை சரவணன்!


பார்த்ததில் பிடித்தது!

நம்ம கர்சீப் போட்டு இடம்புடிச்ச டெக்னிக்கவே மிஞ்சிட்டானுங்க!
crocodile-attacks-buffalo-
 

வைகோ - ஜெயலலிதா திடீர் சந்திப்பு!


மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை முதலமைச்சர் ஜெயலலிதா சிறுதாவூர் அருகே சந்தித்துப் பேசினார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.மதுவிலக்கை வலியுறுத்தி வைகோ, தமது கட்சியுடனருடன் நடைபயணமாக வந்துகொண்டிருந்த நிலையில், தமது சிறுதாவூர் பங்களாவுக்கு செல்லும் வழியில் பையனூர் அருகே வைகோவை பார்த்த ஜெயலலிதா, தமது காரை திருப்பச் சொல்லி, வைகோ அருகில் சென்றார்.பின்னர்காரிலிருந்து இறங்கிச் சென்று வைகோவிடம் நலம் விசாரித்தார் குறிப்பாக உங்களது தாயார் எப்படி இருக்கிறார் ? என ஜெயலலிதா கேட்க, நலமுடன் இருப்பதாக பதிலளித்தார் வைகோ.

தொடர்ந்து அவரது நடைபயணம் வெற்றி பெற தமது வாழ்த்துக்களையும் அவர் தெரிவித்தார். வைகோவும் பதிலுக்கு ஜெயலலிதாவிடம் நலம் விசாரித்தார். இருவரும் சுமார் 7 நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்ததனர்.  கடந்த சட்டசபை தேர்தலின்போது அதிமுக- மதிமுக இடையேயான கூட்டணி முறிந்த பின்னர் இருவரும் சந்திப்பது இதுவே முதல்முறையாகும் .வைகோவை கழ்ற்றிவிட்ட பின்னர்  தேமுதிகவை கூட்டணியில் சேர்ந்துகொண்டார் ஜெயலலிதா. தற்போது தேமுதிகவுடன் கூட்டணி முறிந்துவிட்ட நிலையில், வைகோவை சந்தித்து ஜெயலலிதா பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதோடு, பல்வேறு அரசியல் யூகங்களையும் கிளப்பியுள்ளது.

இது ஒரு ய்தேச்சையான சந்திப்பு என்றாலும், ஜெயலலிதா நினைத்திருந்தால் அப்படியே சிறுதாவூர் சென்றிருக்கலாம். ஆனால் காரை யூ டர்ன் அடிக்கவைத்து, வைகோ அருகில் சென்று சந்தித்துப் பேசியுள்ளார். வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்fதலில் அதிமுக தனித்தே போட்டியிடும் என்று ஜெயலலிதா அறிவித்துள்ளபோதிலும், அப்போதையை சூழலுக்கு ஏற்ப தனது முடிவை அவர் மாற்றிக்கொள்ளவும் கூடும். அரசியலில் சமய சந்தர்ப்பங்களுக்கு ஏற்ப நீக்குப்போக்காக செயல்பட்டால்தான் தாக்குப்பிடிக்க முடியும் என்ப்து ஜெயலலிதா அறியாதது அல்ல.. மேலும் வைகோ அளவுக்கு விஜயகாந்துக்கு அரசியல் முதிர்ச்சியும், அனுபவமும் கிடையாது என்பதையும் அவர் தற்போது உணர்ந்திருப்பார்.அந்த எண்ணத்துடனேயே அவர் சில எதிர்கால காய்நகர்த்தல்களை கணக்குபோட்டு, வைகோவை சந்தித்திருக்கக்கூடும் என்று கூறுகிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

இதனிடையே நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட சில முக்கிய நிர்வாகிகள் கட்சியைவிட்டு விலகிய நிலையில், சோர்வடைந்து காணப்பட்ட மதிமுகவினரிடையே இந்த் சந்திப்பு உற்சாகத்தை கொடுத்துள்ளது.  ஜெயலலிதா, வைகோவை சந்தித்துப் பேசிவிட்டு சென்றபின்னர் நடை பயணத்தில் சென்ற மதிமுகவினரிடம் காண்ப்பட்ட உற்சாக நடையில் அது வெளிப்பட்டது. மேலும் தமிழகம் முழுவதும் உள்ள கட்சியின் மாவட்ட நிர்வாகிகள், இது தொடர்பாக வைகோவுடன் சென்றவர்களை தொடர்பு கொண்டு, இச்சந்திப்பு குறித்து ஆர்வமுடன் விசாரித்ததாகவும் கூறப்படுகிறது.
அவர்களது இந்த உற்சாகத்திற்கு,  இச்சந்திப்பு  மீண்டும் கூட்டணி ஏற்பட,  அச்சாரமாக இருக்கும் என்ற எண்ணம்தான் காரணமாக இருக்க முடியும்.அதே சமயம் வைகோ மனதில் என்ன உள்ளது என்பதை அறிந்துகொள்ளவும் கட்சியினர் ஆர்வம் காட்டுகின்றனர். 

கிருஷ்ணர் ஆட்சிபுரிந்த துவாரகை...


ராமர் கட்டிய சேது பாலம் 17 லட்சத்து 50 ஆயிரம் ஆண்டுகளாக ராமேஸ்வரம் கடலில் மூழ்கி இருப்பதைப் போல, மகாபாரத காலத்தில் கிருஷ்ணர் ஆட்சிபுரிந்த துவாரகையும் 5200 ஆண்டுகளுக்கு முன் கடலில் மூழ்கியது. தொல்லியல் ஆராய்ச்சியில், புதைந்த பகுதிகளைக் காண முடிந்ததால் துவாரகை இருந்தது உண்மை என்பது நிரூபணம் ஆகியுள்ளது.  தொல்லியல் ஆராய்ச்சி: இந்திய தேசிய கடல் ஆராய்ச்சிக் கழகம், துவாரகை கடல்பகுதியில், 1983 முதல் 1990 வரை 18 ஆராய்ச்சிகளை மேற்கொண்டது. குஜராத் மாநிலம் லோத்தல் பகுதியில் தொல்லியில் ஆய்வாளர் எஸ்.ஆர். ராவ் தலைமையில் ஆய்வு நடந்தது. பழமையான நகரமான துவாரகை கடலுக்குள் இருப்பதை கண்டுபிடித்தனர். ஆய்வின்போது துவாரகையின் ஒருபகுதியான பேட் துவாரகையில் கி.மு.1528ம் ஆண்டைச் சேர்ந்த மண்பாண்டத்தையும், கடற்கரையில் 560மீட்டர் நீளமுள்ள சுவர் ஒன்றையும் கண்டனர். இப்பகுதி கிருஷ்ணர் ஆண்ட துவாரகை என முடிவு செய்தனர். 

இந்த முடிவுகளை எஸ்.ஆர்.ராவ், தி லாஸ்ட் சிட்டி ஆப் துவாரகா என்னும் நூலாக ஆங்கிலத்தில் வெளியிட்டார். இந்த ஆய்வு மூலம் மகாபாரதம் உண்மையில் நடந்த நிகழ்ச்சி என்பது உறுதியானது. மகாபாரத முடிவில் வந்த கலியுகம் தொடங்கி, 5113 ஆண்டுகள் ஆகிறது. அதற்கு 87 ஆண்டுகளுக்கு முன்பே துவாரகை மூழ்கியதால், இந்நகரம் மூழ்கி 5200 ஆண்டுகளாகிறது என்பது உறுதிப்படுத்தப்படுகிறது. பேட் துவாரகை: கோமதி நதிக்கரையில் அமைந்த துவாரகாவுக்கு துவாரமதி, துவாரவதி, குசஸ்தலை என்ற பெயர்களும் உண்டு. துவாரகை அருகிலுள்ள பேட் துவாரகையிலும் கிருஷ்ணர் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. இங்கு 18 மீட்டர் அகலம் கொண்ட இரண்டு பிரதான சாலைகள், ஒன்றுக்கொன்று தொடர்புடைய குடியிருப்புகள், மூன்று பிரம்மாண்ட கட்டடத் தொகுப்புகள் தென்படுகின்றன. சுவரைக் கட்ட பயன்படுத்திய கற்கள், 3600 ஆண்டுகளுக்கு முந்தைய தொன்மை வாய்ந்ததாக உள்ளது. 

பேட் துவாரகை ஒரு தீவுப்பகுதியாகும். இங்கு தான் கிருஷ்ணர், சத்தியபாமா, ஜாம்பவதி ஆகியோர் பொழுதுபோக்க வந்துள்ளனர். ஆங்காங்கே பூந்தோட்டம், ஏரிகளும் உள்ளன.  மூழ்கிய துவாரகை: கடலில் மூழ்கிய துவாரகையில், அடிப்படை வசதியுள்ள குடியிருப்பு, வியாபார இடங்கள், அகன்ற சாலை, அழகான துறைமுகம் இருந்துள்ளன. தங்கம்,வெள்ளி, நவரத்தினங்கள் இழைக்கப்பட்ட கட்டடங்களும் இங்கு பிரசித்தமாக விளங்கியுள்ளன. குரு÷க்ஷத்ர யுத்தம் முடிந்து 36 ஆண்டுகளுக்குப்பின், துவாரகை முழுவதும் கடலுக்கடியில் மூழ்கியது. இதனை முன்கூட்டியே அறிந்த கிருஷ்ணர் யாதவர்களை பிரபாஸ் என்ற உயரமான மலைப்பிரதேசத்திற்கு அழைத்துச் சென்று பாதுகாத்தார். தற்போது இப்பகுதி சோம்நாத் எனப்படுகிறது. அழிந்த துவாரகையை நீர்மூழ்கிக்கப்பலில் சென்று பக்தர்கள் பார்ப்பதற்கு இந்தியக்கடல் அகழ்வாராய்ச்சிக்கழகம் ஏற்பாடு செய்து வருகிறது. தேவலோக தச்சன் விஸ்வகர்மா இந்நகரத்தைக் கட்டியதாக புராணங்கள் சொல்கின்றன.  துவாரகாநாத்ஜி மந்திர். 

துவாரகை அழிந்த பிறகு, அங்கு மூன்று முறை கோயில் கட்டப்பட்டிருக்கிறது. எல்லாமே கடலில் மூழ்கியிருக்கலாம் அல்லது பிற சமயத்தாரால் அழிக்கப்பட்டிருக்கலாம். தற்போது உள்ள கோயில் 1500 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. இது துவாரகாநாத்ஜி மந்திர் எனப்படுகிறது. மூலவர் கல்யாண நாராயணர் என்ற திருநாமத்துடன் மேற்கு நோக்கி காட்சி தருகிறார். தாயார் திருநாமம் கல்யாண நாச்சியார். கண்ணனின் எட்டு துணைவியர் (அஷ்ட மகிஷிகள்), அண்ணன் பலராமன், துர்வாச மகரிஷி ஆகியோருக்கு சந்நிதிகள் உள்ளன. இங்கு மன்னராக கண்ணன் வீற்றிருப்பதாக ஐதீகம். துவாரகை கிருஷ்ணருக்கு தினமும் 17முறை உணவு படைக்கப்படுகிறது. இதை போக் என்பர். உடையும் தொடர்ந்து மாற்றப்படுகிறது. காலையில் சுவாமியை எழுப்பும் நிகழ்ச்சி உடாபன் எனப்படும். கிருஷ்ணனை பெரியாழ்வார், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், திருமழிசையாழ்வார், ஆண்டாள் பாடியுள்ளனர். இருப்பிடம்: குஜராத் தலைநகர் அகமதாபாத்திலிருந்து 455 கி.மீ.

தமிழறிஞர் உ.வே.சாமிநாதையர் பிறந்த தினம்(1855)

உ. வே. சாமிநாதையர் (பெப்ரவரி 19,1855 - ஏப்ரல் 281942உத்தமதானபுரம் வேங்கடசுப்பையர் மகன் சாமிநாதன் சுருக்கமாகஉ.வே.சா. இவர் சிறப்பாக தமிழ் தாத்தா என அறியப்படுகிறார். ஒரு தமிழறிஞர். பலரும் மறந்து அழிந்துபோகும் நிலையிலிருந்த பண்டைத் தமிழ் இலக்கியங்கள் பலவற்றைத் தேடி அச்சிட்டுப் பதிப்பித்தவர். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழுக்குத் தொண்டாற்றியவர்களுள் உ. வே. சாமிநாதன் குறிப்பிடத்தக்கவர். தமது அச்சுப்பதிப்பிக்கும் பணியினால் தமிழ் இலக்கியத்தின் தொன்மையையும், செழுமையையும் அறியச் செய்தவர். உ.வே.சா 90 க்கும் மேற்பட்ட புத்தகங்களை அச்சுப்பதித்தது மட்டுமின்றி 3000 க்கும் அதிகமான ஏட்டுச்சுவடிகளையும் கையெழுத்தேடுகளையும் சேகரித்திருந்தார்.

TV,குழந்தைகளை குற்றவாளிகளாக மாற்றுகிறது!


அளவுக்கு அதிகமாக டிவி பார்க்கும் குழந்தைகள், அதிகப்படியான குற்றச் செயல்களில் ஈடுபடவும், வயதுக்கு மீறிய நடவடிக்கைகளில் ஈடுபடவும் வாய்ப்புக்கள் அதிகம் என நியூசிலாந்தில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஓடாகோ பல்கலைக்கழகம், 1970 களில் பிறந்த 5 முதல் 15 வயது வரையிலான 1000 குழந்தைகளிடம் ஆய்வு மேற்காண்டு வந்தது. இவர்கள் 26 வயதுடையவரைப் போன்று செயல்படுவதற்கான சாத்தியகூறுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் பீடியாட்ரிக்ஸ் என்ற பத்திரிக்கை வெளியிட்டுள்ள ஆய்வு கட்டுரையில், குழந்தை பருவத்தில் டிவிக்கு அடிமையானவர்களுக்கும், இளம் வயதில் சமூக குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் அதிகளவில் டிவி பார்க்கும் குழந்தைகள் தங்களின் வளரும் இளம் பருவத்தில் அதிக குற்றங்கள் செய்கின்றனர் எனவும், இத்தகைய குற்றச் செயல்களில் ஈடுபடும் இளம் பருவத்தினரின் எண்ணிக்கை ஒவ்வொரு மணிக்கும் 30 சதவீதம் அதிகரித்து வருவதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாக கட்டுரையை எழுதிய இணை எழுத்தாளர் பாப் ஹான்கோக்ஸ் தெரிவித்துள்ளார்.

அளவுக்கு அதிகமாக டிவி பார்ப்பவர்களுக்கும் கொடூரமான விசித்திர நடவடிக்கைகள் மற்றும் எதிர்மறையான உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் திறனை அதிகம் கொண்டவர்களுக்கும் தொடர்பு இருப்பதாகவும் ஆய்வில் தெரிய வந்துள்ளது. குறிப்பாக இத்தகையவர்களிடம் புத்திகூர்மை, சமூக பார்வை மற்றும் பெற்றோருக்கு கட்டுபடுதல் உள்ளிட்டவைகள் எதிர்மறையாக இருக்கும் என தெரிய வந்துள்ளது. அதிகபடியாக டிவி பார்க்கும் பழக்கமே சமூக குற்றங்களை அதிகரிக்கவும், இளம் குற்றவாளிகள் உருவாவதற்கும் காரணமாக இருப்பதாகவும், டிவி பார்க்கும் பழக்கத்தை குறைத்தாலே சமூக குற்றங்கள் குறையும் எனவும் ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. குழந்தைகள் ஒரு நாளைக்கு ஒன்று முதல் 2 மணி நேரம் டிவி பார்ப்பதே உகந்தது என அமெரிக்க கழகத்திற்கு பீடியாட்ரிக்ஸ் நிறுவனம் பரிந்துரைத்துள்ளது. 

சமூக விரோதமான செயல்களை டிவி மூலமாகவே குழந்தைகள் கற்றுக் கொள்வதாகவும், அதிகளவில் உணர்ச்சி வசப்பட வைப்பது போன்ற பழக்கங்களையும் அவர்கள் டிவி மூலமாகவே கற்றுக் கொள்ளவதாகவும் ஆய்வு தெரிவித்துள்ளது. இது போன்ற செயல்கள் சமூக ஒழுக்கம் பாதித்தல், கீழ்படிதல் இல்லாமை, கல்வி தரம் குறைவது, அதனால் வேலையில்லா திண்டாட்டம் உள்ளிட்ட விளைவுகள் உருவாக அதிக வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரபாகரன் மகன் படுகொலை???



நா கூசாமல் பொய் சொல்லும் இலங்கை..விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன், இலங்கை ராணுவத்தினரால் கொடூரமாக கொல்லப்பட்டது தொடர்பான புகைப்படங்களை, சேனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இடத்தில், மணல் மூடைகளுக்கு நடுவே, சட்டை கூட அணியாமல் லுங்கியை போர்த்திக் கொண்டு காயங்களுடன் பரிதாபமாக, 12 வயதான பாலச்சந்திரன் அமர்ந்திருக்கும் படம் வெளியிடப்பட்டுள்ளது. பாலச்சந்திரனுக்கு பாதுகாப்பாக நின்றிருந்த விடுதலைப் புலிகள் ஐந்து பேர், கைகள் கட்டப்பட்டு, தலையில் சுடப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டிருக்கின்றனர்.

மற்றொரு படத்தில், பாலச்சந்திரன் பிஸ்கட் போன்ற எதையோ சாப்பிடுகிறார். அதே கேமராவில் தான், பாலச்சந்திரன் சுடப்பட்டு வீழ்ந்து கிடக்கும் காட்சி பதிவு செய்யப்பட்டுள்ளது. நிர்கதியாக நின்ற பாலச்சந்திரனின் நெஞ்சில் ஐந்து துப்பாக்கி குண்டுகள் துளைத்துள்ளன. இதன் மூலம், ராணுவத்தின் பிடியில் இருந்த போது தான் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் கொடூரமாக கொல்லப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக, சேனல் 4 செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆய்வாளர்களின் கூற்றுப்படி அவர் 2அடி தூரத்தில் இருந்தே சுட்டுக்கொலை செய்யப்பட்டிருப்பார் என்று அறியமுடிகிறது. அவரின் பாதுகாவலர்களை அவரின் கண்முன்னாலே சுட்டு விட்டு அவரையும் சுட்டிருக்கலாம் என்று ஊகிக்க முடிகிறது.இந்த படங்கள் வெளியானது பிரபாகரன் ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுட்த்தி உள்ளது.  இலங்கை ராணுவத்தின் மேலும் பல கொடூரச் செயல்கள் அடங்கிய காட்சிகளை விரைவில் ஆவணப்படமாகவும் சானல் 4 தொலைக்காட்சி வெளியிட உள்ளது.

பங்காரு அடிகளார் மனைவி மகன்களுக்கு சி.பி.ஐ சம்மன்!


ஆதிபராசக்தி பல் மருத்துவக்கல்லூரியில் மேற்படிப்பு தொடங்குவதற்கு லஞ்சம் கொடுத்த வழக்கு தொடர்பாக பங்காரு அடிகளார் மனைவி மகன்களுக்கு சி.பி.ஐ சம்மன் அனுப்பியுள்ளது. மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆலய நிறுவனர் பங்காரு அடிகளாரை நிறுவிய தலைவராகவும், அவரது மனைவி லஷ்மி பங்காரு அடிகளாரை தலைமை நிர்வாக அதிகாரியாகவும் கொண்டு ஆதிபராசக்தி பல் மருத்துவக் கல்லூரி இயங்கி வருகிறது. இந்தக் கல்லூரியின் நிர்வாக இயக்குனராக பங்காரு அடிகளாரின் இரண்டாவது மகன் செந்திலின் மனைவி ஸ்ரீலேகா செயல்பட்டு வருகிறார். 2012-ம் ஆண்டு எம்டிஎஸ் எனப்படும் பல் மருத்துவ மேற்படிப்புக்கான அனுமதி பெறுவதற்காக இந்திய பல் மருத்துவக் கழகத்திடம் கல்லூரி நிர்வாகம் விண்ணப்பத்திருக்கிறது. 

 அக்டோபர் 2012-ல் நடந்த ஆய்வில் கல்லூரியில் அடிப்படை வசதிகள், ஆய்வகங்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இல்லாததை சுட்டிக் காட்டி அனுமதி மறுத்திருக்கிறது இந்திய பல் மருத்துவக் கழகம். டிசம்பர் 28-ம் தேதி கூடிய கல்லூரியின் நிர்வாகக் குழு இந்திய பல் மருத்துவக் கழகத்தின் உறுப்பினர் ராயப்பேட்டையைச் சேர்ந்த பல் மருத்துவர் டாக்டர் எஸ் முருகேசன் என்பவருக்கு லஞ்சம் கொடுத்து அனுமதி வாங்க முடிவு செய்திருக்கிறது. இந்த முருகேசன் எஸ்ஆர்எம் பல் மருத்துவக் கல்லூரியின் டீன் (பொறுப்பு) ஆகவும் இருக்கிறார். ஆதிபராசக்தி கல்லூரியினர் முருகேசனுக்கு லஞ்சம் கொடுக்கப் போவது பற்றிய தகவல் சிபிஐ அதிகாரிகளுக்குத் தெரிய வந்து ராயப்பேட்டை லாயிட்ஸ் சாலையில் இருக்கும் அவரது கிளினிக்கில் ரெய்டு நடத்தினர். லஞ்சப் பணத்தின் முதல் தவணையாக ரூ 25 லட்சத்தை கொடுத்த போது, முருகேசனையும், கல்லூரியின் நிர்வாகச் செயலர் கருணாநிதி, நிர்வாக அலுவலர் கே ராம்பத்ரன் ஆகியோரையும் இடைத்தரகராக உடன் வந்த அ.தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் ஆரணி எம்எல்ஏ டி பழனியையும் சிபிஐ அதிகாரிகள் கடந்த ஜனவரி 8-ம் தேதி கைது செய்திருக்கின்றனர். கைது செய்யப்பட்ட நான்கு பேரும் சென்னை சிறப்பு சி.பி.ஐ. நீதிமன்றத்தில் 8-ம் தேதி மாலை ஆஜர் படுத்தப்பட்டனர். அவர்களுக்கு 15 நாட்கள் நீதி மன்ற காவல் விதிக்கப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். 

 இந்த லஞ்சம் வழங்கிய விவகாரத்தில் கல்லூரி நிர்வாக இயக்குனர் ஸ்ரீலேகாவுக்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகித்த சிபிஐ அதிகாரிகள் அவருக்கு சம்மன் அனுப்பினர். சம்மனை ஏற்றுக் கொள்ளாத ஸ்ரீலேகா சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிபதிகள் ஜனவரி 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் சிபிஐ அதிகாரிகள் முன்பு ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என உத்தரவிட்டனர். இதன்படி இரண்டு தினங்கள் ஆஜராகி ஸ்ரீலேகா விளக்கமளித்தார். விசாரணைக்கு ஆஜாரான ஸ்ரீலேகாவை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். பின்னர் சொந்த ஜாமீனில் விடுவித்தனர். இதனிடையே பல் மருத்துவக்கல்லூரியின் தலைமை நிர்வாக அதிகாரியான லட்சுமி பங்காரு அடிகளார், அவரது மகன்கள் செந்தில், அன்பழகன் ஆகியோருக்கு சி.பிஐ விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியுள்ளது. கைதாவதை தடுக்க அவர்கள் முன் ஜாமின் மனு தாக்கல் செய்துள்ளனர். டெல்லியை சேர்ந்த பல் மருத்துவ கவுன்சில் அதிகாரிகளுக்கும் இதில் தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது. பல் மருத்துவ கல்லூரிகளுக்கு முறைகேடாக அனுமதி வழங்கிய விவகாரம் தொடர்பாக கடந்த மாதம் தேசிய அளவில் 8 இடங்களில் விசாரணை நடத்தப்பட்டது. இதில் தமிழ்நாட்டை சேர்ந்த 5 கல்லூரிகளும் அடங்கும்.


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...