- சர்வதேச புத்தக மற்றும் பதிப்புரிமை தினம்
- ஆங்கில நாடக எழுத்தாளர் வில்லியம் ஷேக்ஸ்பியர் இறந்த தினம்(1616)
- உலகப் புகழ்பெற்ற திரைப்பட இயக்குனர் சத்யஜித் ராய் இறந்த தினம்(1992)
- எயிட்ஸ் வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது(1984)
- புனித ஜார்ஜ் கோட்டை மதராசில்(சென்னை) கட்டப்பட்டது(1639)
ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை. விவேகானந்தர்.
22 April, 2012
இதே நாள்...
FRAUD DESIGN COIN CAREFUL.
இப்பொழுதெல்லாம் ஒரு பெரிய ஃபேஷன் கோல்ட் காயின் கிப்ட், மற்றூம் சில்வர் காயின் கிப்ட். மொபைல் போன் சேல்ஸிருந்து மாருதி கார் வாங்கும் வரை இந்த கோல்ட் அல்லது சில்வர் காயினுக்கு ஆசைபட்டு முதலுக்கு மோசம் கதை தான் இங்கு தமிழ் நாட்டில் நடக்கிறது. இரண்டு ரூவாய்க்கு வெத்திலை வாங்கினால் நம்மளுங்க பார்த்து இளம் வெத்தலை வேனும்னு கில்லி கில்லி பார்த்து மற்றூம் இருபது ரூபாய்க்கு வாங்கும் வெண்டைக்காயை இளசா வேனும்னு நுனியை ஒடிச்சு ஒடிச்சு வாங்கும் நாம், அந்த அன்றாடகாச்சியை உண்டு இல்லை என ஆக்கி ஒரு வெற்றி சிரிப்புடன் வீட்டுக்கு வந்து அந்த புரானத்தை எபிஸொடு எபிஸொடாக ஸ்பான்ஸ்ர்ஸிப் இல்லாமல் எல்லொரிடம் சொல்லி பீத்திப்போம் ஆனால் கிடைக்கும் இந்த அல்ப வெள்ளி தங்க வெள்ளி காயினுக்கு அடிமை ஆகி முதலுக்கே மோசமாகி லட்சகணக்கில் ஏமாறுகிறோம். சரி கிடைத்த காயினாவது நல்லதா என டெஸ்ட் செய்யுங்கள் 50 - 60% டூப்ளிகேட் காயின்கள் தான். முக்கால் வாசி வெள்ளி காயினள் - அலுமினியத்தில செய்ய பட்டு வெள்ளி முலாம் பூசபடுகிறது. அதே மாதிரி தங்க காயின்களும் லஷ்மி படம் போட்டு அம்பாள் பூசாரி கனக்கா சாமி படத்தில் ஒத்தி எடுத்து கொடுத்த உடன் நாம் மதி மயங்கி அப்படியே பூஜை ரூமில் அல்ல்து லாக்க்ரில பதுக்கி வைப்போம். அரை கிராம், ஒரு கிராம் இரண்டு கிராம் வரை நாம் அதை ஒரு பொருட்டாக மதிப்பதில்லை. என்றாவது அந்த காயினை எடுத்து நகை கடையில் கொடுத்தால் தான் நமக்கு சொல்லுவார்கள் சார் இது உண்மையான வெள்ளி தங்கமில்லை என்று. இவர்களின் மெயின் டார்கெட் புதிதாக முளைத்து இருக்கும் நவீன ஃபிராடு கல்ச்சர் - "அக்ஷய திருதி" இது நகை கடைக்காரகளின் நவின பிராட் ஆகும். அந்த ஒரு நாள் மட்டும் நம் வாழ்க்கையின் தரம் உயர்ந்து விடாதா என தங்கம் வாங்க வழியில்லாதவர்கள் கூட எப்படியாவது ஒரு கிராம் இரண்டு கிராம் என அவர்களின் சுளையாக பணத்தை கொடுத்து இந்த மாதிரி காயினை வாங்கி பூஜை அறையில் வைத்து என்றாவ்து அதை மாற்ற நினைக்கும் போது அந்த குட்டு வெளிப்படும். த்ங்க காயின் பிராடுகள் நான் கீழே இனைத்துள்ள தங்க காயின் டிசைந்தான் ஒரிஜினில் டூப்ளிகேட் - இந்த சாமி படம் தவிர வேறு எந்த டீடெய்லும் இருக்காது. இது இவர்கள் மட்டுமல்ல ஐ சி ஐ சி ஐ, ரிலயன்ஸ் மற்றும் பெரிய தங்க வியாபரிகளும் இந்த ஏமாற்று வேலையில் பங்குண்டு. உங்களூக்கு ஒருத்தர் வெள்ளீ அல்லது கோல்டு காயின் கிஃப்டாக கொடுத்தால் தயவு செய்து நீங்கும் வாங்கும் எந்த ஒரு பொருளுக்கும் அன்றைய தங்க வெள்ளி விலையில தயங்காமல் தள்ளூபடி செய்து பாக்கி பணம் பெற்று கொண்டால் அவர்கள் தான் உண்மையானவர்கள். ஆனால் 90 % வெள்ளீ மற்றும் கோல்டு காயின் கிப்டாக கொடுப்பவர்கள் வேண்டுமென்றால் கிப்ட் வாங்கி கொள்ளுங்கள் நாங்கள் உங்கள் விலையில் குறைக்க முடியாது என்று சொன்னால் தயவு செய்து அந்த பக்கம் கூட தலை வைத்து படுக்கதீர்கள் இந்த அரை, ஒன்னு, இரண்டு கிராமுக்கு கூட உண்மை இல்லாத இவர்கள் எப்ப்டி உங்கள் லட்ச கனக்காம பர்சேஸ்க்கு உண்மையாக இருப்பார்கள். சரி இப்படியே இந்த தங்க ப்ர்சேஸ் பற்றியும் பார்த்து விடலாம்
கோல்ட் காயின் எவ்வளவு இருந்தாலும் ஆத்திர அவசரத்திற்க்கு வங்கியில் அடகு வைக்கமுடியாது - Thanks Madhan for the info
வந்தே வந்து விட்டது தீபாவளி. ஒரு காலத்தில் தீபாவளி பண்டிகை என்றால் புது துணி, பட்டாசு, பட்சனங்கள் என்னெய் குளியல், மற்றும் அசைவ பிரியர்களுக்கு கறி குழம்பு என்று எழுதபடாத தீபாவளி விதிகள் சமீப காலமாக ஸ்டேட்டஸ் சிம்பல் ஆகி போனது என்னமோ மறுக்கமுடியாத உண்மை. இதற்க்கு மூனு காரணம்,1.வருமானம் அதிகம், 2. அடுத்தவரை பார்த்து கொண்டாடும் ஸ்டையில் 3. தவறாக சம்பாதித்த பணம் இது மூன்றும் இந்த தீபாவளி பண்டிகையை டோட்டலாக மாற்றியது. மேல் கூறிய பர்சேஸ் போக புது அப்ளையன்ஸஸ் மற்றூம் புது நகை ப்ர்சேஸ் இன்றியமையானது. நகை வாங்கும் கலை ஏனோ சில பரம்பரை ஷாப்பிங் ஜித்தர்களுக்கு மட்டுமே எளிதாகிறது, மற்றவர்களுக்கு மைக்ரேன் வந்தவனை ரோல கோஸ்டரில் ஏற்றி விட்ட கதை தான் - இதை ஏன் கூறுகிறேன் என்றால் நூற்றில் மூன்று சதவிகித பேர்தான் ரோலகோஸ்டரில் ஏறி இறங்கும் வரை சுற்றி என்ன நடக்கிறது என கண் இமைக்காமல் பார்ப்பார்கள், மீது உள்ள 97% சதவிகித மக்கள் ஏறியது தான் தெரியும், அது சுற்றி நிற்கும் வரை கண்ணை திறக்கவே மாட்டார்கள். அந்த கதை தான் நகை விற்கும் கடைகளின் அலிபாபா குகை எக்ஸ்பீரியன்ஸ். தங்கம் என்னை பொறுத்த வரை நிறைய பேர் டிசைனுக்கு கொடுக்கும் இம்பார்டன்ஸ் அதன் தரம், அதன் உண்மையான வேல்யு பற்றி கவலை படாமல் குருட்டாம் போக்கில் வாங்குகின்றனர். கடைக்குள் போன உடனேயே உலகத்தில் எங்கு பவர் கட் இருந்தாலும் இந்த தி நகர் திருட்டு அண்ணாச்சிகள், பாரிமுனை பஜன்லால்கள், புரசை பெர்னான்டோக்கல் ஒரு வசிய சக்தியை நம் மீது தெளித்து பக்ரீத்துக்கு ரெடியாகும் பலி ஆடுகளை போல் நடத்துவார்கள்.
Please CONSIDER THIS FACTS before you purchase.
1. தங்கம் 16 கேரட் / 18 கேரட் / 20 கேரட் / 22 கேரட் / 24 கேரட் தரம் பற்றீ .நன்கு விசாரித்து வாங்குங்கள்.
2. மெஷின் கட் வாங்கவே வாங்கதிர்கள் சீக்கிரம் உடைந்து விடும்.
3. குறைந்த வெயிட்டில் பெரிதாக தோன்றும் நகைகள், மற்றூம் தோடு, வளையல்கள் வாங்கவே வாங்காதிர்கள். அத்ற்க்கு உள்ளே மெழுகு, செம்பு,மற்றூம் வெள்ளீ ஃபில்லிங்க் இருக்கும்.
4. கண்டிப்பாக கல் வைத்த நகைகளை வாங்க வேண்டாம், வாங்கினால் 30 - 45% உங்கள் பணம் பச்சா.
5.தயவு செய்து ஒயிட் மெட்டல் நகைகளை தெரியாத கடைகளிடம் வாங்கவே வேண்டாம். பாதி ஒயிட் மெட்டல் நகைகள் ஒரிஜினல் அல்ல.
6. சிங்கப்பூர், மலேஷியா, துபாய் மற்றூம் நிறைய நாடுகளில் தங்கத்தின் விலையை வெளியே போர்ட்டு போட்டிருப்பார்கள். அந்த விலை மற்றும் எவ்வளவி கிராமோ அவ்வளுவுதான் விலை, நம்மூர் கொள்ளை ஃபார்முலா கிடையாது, இங்குதான் செய்கூலி / சேதாரம் / கல் சார்ஜ் அப்புறம் லொட்டு லொசுக்கு இத்யதி இத்யாதி போட்டு தங்கத்தின் விலையில் 30 - 45% எக்ஸ்ட்ரா போட்டு ஒரு ஜெர்க் கொடுத்து உங்களுக்கு ஆபத்பாந்தவர் போல சரி பில் போட்டா இன்னும் காஸ்ட்லி என்று புருடா விட்டு 70% நகைகள் பில் இல்லாமல் தான் விற்பனை ஆகிறது.இதனால் விற்க அல்லது மாற்ற செல்லும் போது இன்னுமொரு 30 - 40% லாஸ். 916, கேடி எம், கடை சீல் எனும் அல்வாவை கண்டிப்பாக நம்பவேண்டாம், ஆக மொத்தம் நீங்கள் கொடுக்கும் ஒவ்வொரு பத்தாயிர ரூபாய்க்கு மூனாயிரம் தான் ஹேன்ட் இன் வேல்யு. சோ கொஞ்சம் எக்ஸ்ட்ரா ஆனாலும் பராவயில்லை தயவு செய்து பிராப்பர் பில்லை வாங்குங்கள் அப்படி செய்யும் பட்சத்தில் அந்த நகை தரம் குறைந்தால், இல்லை உடந்தாலோ அல்லது கலப்படம் இருந்தாலோ அவர்கள் உங்களுக்கும் அன்றைய தேதிக்கு முழு பணமோ அல்லது தங்கமோ தர வேண்டும் இல்லையென்றால் நீங்கள் கன்ஸுமர் கோர்ட்டுக்கு சென்றால் அவர்கள் நஷ்ட ஈடு தந்தே ஆகவேன்டும். வெள்ளை பேப்பரில் அல்லது ரப்பர் ஸ்டாம்பில் பில் போட்டு கொடுத்தால் கண்டிப்பக வாங்க வேண்டாம். ஆஸ் இஸ் (AS IS) என போட்டு கொடுத்தாலும் வாங்க வேண்டாம்.தங்கம் வாங்குவது ஒரு நல்ல சேமிப்பு ஆனால் பார்த்து வாங்கி உங்கள் முழு வேல்யு இருக்குமாரு பார்த்து கொள்ளுங்கள்.
இந்தவார பலன்(22-4-2012 முதல் 27-4-2012 வரை)
மேஷம் பொது: வெற்றிகரமான வாரம். எடுக்கும் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக முடியும். பண வரவு திருப்திகரமாக இருக்கும். பயணங்களால் நன்மை உண்டு. உடல் நலம் நன்றாக இருக்கும். மனம் நிம்மதியாக இருக்கும். பெண்களுக்கு: குடும்பம் மகிழ்ச்சிகரமாக நடக்கும். குடும்பத்தில் இதுவரை இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். குடும்பத்தார் ஒற்றுமையாக இருப்பார்கள். கணவர் அன்பாக இருப்பார். உறவினர்களை அனுசரித்துச் செல்லவும்.வேலை பார்ப்போருக்கு: கொடுக்கும் வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த கடன் தொகை கிடைத்து மகிழக்கூடும். சக ஊழியர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. அடுத்தவர்கள் குடும்ப விஷயங்களில் தலையிட வேண்டாம்.
ரிஷபம் பொது: முன்னேற்றகரமான வாரம். எடுக்கும் காரியங்களில் பலவற்றில் வெற்றி கிடைக்கும். மனம் மகிழும் செய்திகளைக் கேட்பீர்கள். பண வரவு நன்றாக இருக்கும். சொத்து விவகாரங்களில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள்.பெண்களுக்கு: குடும்பம் நன்றாக நடக்கும். தாய்வழி உறவுகள் வீட்டு சுப நிகழ்ச்சகளில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள். குடும்பத்தலைவருக்கு வெளியூரில் வேலை கிடைக்கலாம். குழந்தைகள் நலனில் கவனம் செல்லும். சேமிப்பில் கவனம் தேவை.வேலை பார்ப்போருக்கு: சிலருக்கு இடமாற்றம் கிடைக்கும். கொடுக்கும் வேலைகளை திறம்பட செய்து முடிப்பீர்கள். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். அதனால் வேலை பளு குறையும். வீண் பேச்சைக் குறைத்துக்கொள்வது நல்லது.
மிதுனம் பொது: மிதமான வாரம். எடுக்கும் காரியங்களில் சிலவற்றில் தான் வெற்றி கிடைக்கும். சமுதாயத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். உடல் நலனில் கவனம் தேவை. நண்பர்களும், உடன் பிறப்புகளும் ஆதரவாக இருப்பார்கள்.பெண்களுக்கு: குடும்பம் ஆனந்தமாக நடக்கும். குடும்பத்தார் ஒற்றுமையாக இருப்பார்கள். பண வரவு அதிகரிக்கும். குடும்பத்தில் மங்கல நிகழ்ச்சி நடத்த முயற்சி மேற்கொள்வீர்கள். உறவினர்களிடம் மனம் திறந்து பேச வேண்டாம்.வேலை பார்ப்போருக்கு: கொடுக்கும் வேலைகளை சிறப்பாக செய்து முடித்து உயர் அதிகாரிகளிடம் பாராட்டு பெறுவீர்கள். சக ஊழியர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. யாரிடமும் உங்கள் ரகசியங்களைக் கூற வேண்டாம். எதிர்பார்த்த கடன் தொகை கிடைத்து மகிழக்கூடும்.
கடகம் பொது: குதூகலமான வாரம். எடுக்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். பண வரவு சிறப்பாக இருக்கும். சிலருக்கு புதிய வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டு. வெளியூரில் இருந்து நல்ல செய்தி வீடு தேடி வந்து மகிழ்விக்கும். மனம் உற்சாகமாக இருக்கும். பெண்களுக்கு: குடும்பம் அமைதியாக நடக்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். வீண் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். உடல் நலனில் கவனம் தேவை. குழந்தைகள் நலனில் கவனம் செல்லும்.வேலை பார்ப்போருக்கு: சிலருக்கு எதிர்பாராத பதவி உயர்வு கிடைத்து மகிழக்கூடும். சிலருக்கு பணிபுரியும் அலுவலகத்திலேயே அதிக செல்வாக்குள்ள பதவி கிடைக்கும். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். அதனால் அலுவலகத்தில் சில சலுகைகள் பெறக்கூடும்.
சிம்மம் பொது: சிறப்பான வாரம். எடுக்கும் காரியங்களை திறம்பட செய்து முடிப்பீர்கள். பண வரவுக்கு குறைவிருக்காது. சமுதாயத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். உடல் நலம் நன்றாக இருக்கும். பேச்சில் நிதானம் தேவை.பெண்களுக்கு: குடும்பம் மகிழ்ச்சிகரமாக நடக்கும். கணவன் மனைவி இடையே அன்பும், பாசமும் அதிகரிக்கும். வீட்டுக்குத் தேவையான பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடத்தி மகிழக்கூடும்.வேலை பார்ப்போருக்கு: அலுவலகத்தில் சுமூகமான சூழல் நிலவும். வேலை பளு அதிகரிக்கும். இருப்பினும் சிறப்பாக பணியாற்றி உயர் அதிகாரிகளிடம் பாராட்டு பெறுவீர்கள். அலுவலகத்தில் சில சலுகைகள் கிடைக்கக்கூடும்.
கன்னி பொது: அனுகூலமான வாரம். எடுக்கும் காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பண வரவு நன்றாக இருக்கும். உடன் பிறப்புகளுடன் இருந்து வந்த பகை தீரும். குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிடுவீர்கள். பணம் கொடுக்கல், வாங்கலில் கவனமாக இருக்கவும்.பெண்களுக்கு: குடும்பம் நன்றாக நடக்கும். கணவருடனான ஒற்றுமை சுமாராகத் தான் இருக்கும். அதனால் நிதானமாகப் பேசவும். குழந்தைகளால் மகிழ்ச்சி அடைவீர்கள். உறவினர்களை அனுசரித்துச் செல்லவும்.வேலை பார்ப்போருக்கு: அலுவலகத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். அதனால் வேலை பளு குறையும். எதிர்பார்த்த கடன் தொகை கிடைத்து மகிழக்கூடும். உழைப்புக்கேற்ற ஊதியம் உண்டு.
துலாம் பொது: சுமாரான வாரம். எடுக்கும் காரியங்களில் சிலவற்றில் தான் வெற்றி கிடைக்கும். உடல் நலனில் கவனம் தேவை. ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். பயணத்தின்போது பொருட்களை பத்திரமாக வைத்துக்கொள்ளவும். யாருக்கும் வாக்கு கொடுக்கவோ, ஜாமீன் கையெழுத்திடவோ வேண்டாம்.பெண்களுக்கு: கணவரை அனுசரித்துச் செல்வது நல்லது. உறவினர்களிடம் வீண் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். எதிலும் நிதானம் தேவை. சேமிப்பில் கவனம் செல்லும்.வேலை பார்ப்போருக்கு: சிலருக்கு பதவி உயர்வும், விரும்பிய இடத்திற்கு மாற்றமும் கிடைக்கலாம். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். கொடுக்கும் வேலைகளை உற்சாகமாக செய்து முடிப்பீர்கள்.
விருச்சிகம் பொது: மிதமான வாரம். எடுக்கும் காரியங்களை எப்பாடுபட்டாவது வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். திறமை மேம்படும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். அரசு விவகாரங்களில் கவனமாக இருக்கவும்.பெண்களுக்கு: குடும்பம் சீராக நடக்கும். பிரிந்த உறவுகள் ஒன்று சேரும். பயணங்கள் மேற்கொண்டு மகிழக்கூடும். வருமானம் அதிகரிக்கும். வீண் செலவுகளைக் குறைத்துக்கொள்வது நல்லது. வேலை பார்ப்போருக்கு: வேலை பளு குறையும். வருமானத்திற்கு குறைவிருக்காது. கொடுக்கும் வேலைகளை உடனுக்குடன் செய்து முடிப்பீர்கள். சக ஊழியர்களின் குடும்ப விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது.
தனுசு பொது: நன்மையான வாரம். எடுக்கும் காரியங்கள் திருப்திகரமாக முடியும். மனம் உற்சாகமாக இருக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். பண வரவு சீராக இருக்கும். நண்பர்கள் பக்கபலமாக இருப்பார்கள். பெரியவர்களின் ஆசி கிடைக்கும். பெண்களுக்கு: குடும்பம் நன்றாக நடக்கும். குடும்பத்தார் ஒற்றுமையாக இருப்பார்கள். குழந்தைகள் நலனில் கவனம் செல்லும். கணவர் அன்பாக இருப்பார். உறவினர்களை அனுசரித்துச் செல்லவும்.வேலை பார்ப்போருக்கு: சிலருக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். சிலருக்கு விரும்பிய இடத்திற்கு மாற்றம் கிடைத்து மிகழக்கூடும். கொடுக்கும் வேலைகளை உடனுக்குடன் செய்து முடிப்பது நல்லது. உயர் அதிகாரிகளை அனுசரித்துச் செல்லவும்.
மகரம் பொது: நிம்மதியான வாரம். எடுக்கும் காரியங்கள் எளிதில் வெற்றிகரமாக முடியும். பண வரவுக்கு குறைவிருக்காது. வழக்குகள் சாதகமாக முடியும். உற்றார், உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வீண் செலவுகளைக் குறைத்தக்கொள்வது நல்லது.பெண்களுக்கு: குடும்பம் ஆனந்தமாக நடக்கும். கணவருடன் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். குடும்பத்தார் ஒற்றுமையாக இருப்பார்கள். பண வரவு நன்றாக இருக்கும். மனம் உற்சாகமாக இருக்கும்.வேலை பார்ப்போருக்கு: கொடுக்கும் வேலைகளை உற்சாகமாக செய்து முடித்து உயர் அதிகாரிகளிடம் பாராட்டு பெறுவீர்கள். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கலாம். சக ஊழியர்களை அனுசரித்துச் செல்லவும்.
கும்பம் பொது: சாதகமான வாரம். எடுக்கும் காரியங்கள் நல்லபடியாக முடியும். பண வரவு நன்றாக இருக்கும். புதிய ரகசியங்களை தெரிந்துகொள்வீர்கள். ஆச்சரியப்படும் விஷயங்கள் நடக்கும். குல தெய்வ வழிபாடு மேற்கொள்ள திட்டமிடுவீர்கள். யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம். பெண்களுக்கு: குடும்பம் நன்றாக நடக்கும். கணவர் ஆதரவாக இருப்பார். அதனால் உங்கள் கோரிக்கைகள் நிறைவேறும். குழந்தைகளை ஆன்மீகத்தில் ஈடுபடுத்துவீர்கள். வீண் பேச்சைக் குறைத்துக்கொள்வது நல்லது.வேலை பார்ப்போருக்கு: சிலருக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான அறிகுறி தென்படும். கொடுக்கும் வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். அலுவலகத்தில் குடும்ப விஷயங்களைப் பற்றி பேச வேண்டாம்.
மீனம் பொது: இன்பமான வாரம். எடுக்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். பண வரவுக்கு குறைவிருக்காது. சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டு. நண்பர்களும், உறவினர்களும் ஆதரவாக இருப்பார்கள். உடல் நலனில் கவனம் தேவை.பெண்களுக்கு: குடும்பம் ஆனந்தமாக நடக்கும். கணவர் அன்பாக இருப்பார். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழக்கூடும். வீண் பேச்சைக் குறைத்துக்கொள்வது நல்லது. சேமிப்பில் கவனம் தேவை.வேலை பார்ப்போருக்கு: பொறுப்புகள் அதிகரிக்கும். வருமானம் நன்றாக இருக்கும். சக ஊழியர்கள் ஆதரவால் வேலை பளு குறையும். உயர் அதிகாரிகளை அனுசரித்துச் செல்லவும். பேச்சில் நிதானம் தேவை.
மீனவர்களுக்கு வயர்லெஸ்!
கடலில் மீன் பிடிக்கும்போது ஏற்படும் இயற்கை சீற்றங்கள், இன்னல்கள் குறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க மீனவர்களுக்கு வயர்லெஸ் தொலைத்தொடர்பு சாதனங்கள் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்து ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, கடலில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும்போது எதிர்பாராதவிதமாக ஏற்படும் கடல் சீற்றங்கள், இன்னல்கள் குறித்து உடனடியாக கரையில் இருக்கும் அரசு துறையினருக்கும் மற்ற மீனவர்களுக்கும் தகவல் தெரிவிக்க ஏதுவாக மீனவர்களுக்கு ரூ.14,000 மதிப்பில் கம்பியில்லா தகவல் தொடர்பு சாதனங்களை இலவசமாக வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் தொண்டி, சின்ன ஏர்வாடி, பாம்பன், ராமேஸ்வரம் பகுதி விசைப்படகு மீனவர்களுக்கு இந்த சாதனங்கள் வழங்கப்படவுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் ராமேஸ்வரம், ராமநாதபுரம், மண்டபம் ஆகிய இடங்களில் உள்ள மீன்துறை உதவி இயக்குனர் அலுவலகங்களில் வழங்கப்படுகிறது. இந்த விண்ணப்பத்தை பெற்று வரும் 27ம் தேதிக்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.மேலதிக விபரங்களுக்கு சம்மந்தப்பட்ட மீன்துறை உதவி இயக்குனர் அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் தேசிய பானமாக தேனீரை அறிவிக்க ஆலோசனை?
இந்தியாவின் தேசிய பானமாக தேனீரை அறிவிக்க ஆலோசனை நடந்து வருவதாக திட்டக் குழுத் துணைத் தலைவர் மாண்டேசிங் அலுவாலியா தெரிவித்துள்ளார்.அசாம் மாநிலம் ஜோர்காட்டில் நடைபெற்ற அசாம் தேயிலை பயிரிடுவோர் சங்கத்தின் 75-ம் ஆண்டு விழாவில் கலந்து கொண்டு அலுவவாலியா பேசுகையில், அசாமில் முதன் முதலில் தேயிலை பயிரிட்டவர் மோனிராம் தேவன். அவர் நாட்டின் விடுதலைக்காகப் போராடியவர். அவரால் இன்று தேயிலை பயிரிடும் தொழில் அபரிதமாக வளர்ந்திருக்கிறது. நாட்டின் தேசிய பானமாக தேயிலையை அறிவிப்பது தொடர்பாக வர்த்தகத்துறை அமைச்சர் ஆனந்த் சர்மா போன்றோருடன் ஆலோசனை நடத்தி வருகிறோம் என்றார் அவர்.இந்த நிகழ்ச்சியில் பேசிய அசாம் முதல்வர் தருண் கோகய், மாநிலத்தின் கிராமப்புற வருவாய் தரக்கூடிய முதல்நிலை தொழிலாக தேனீர் தான் இருந்து வருகிறது என்றார்.தேனீரை தேசிய பானமாக்க அறிவிக்க வேண்டும் என்று அசாம் மாநிலத்துக்கு வருகை தந்திருந்த பிரதமர் மன்மோகன்சிங்கிடம் முதல்வர் தருண் கோகய் வலியுறுத்தி உள்ளதாக அம்மாநில தொழில்துறை அமைச்சர் பிரதாயூட் தெரிவித்திருந்தார்.
இருதயத்தை பாதுகாக்கும் காலிஃப்ளவர்!
காய்கறி இனத்தைச் சேர்ந்த காலிஃப்ளவர் ஒருவகையான பூ வகையைச் சேர்ந்தது. இதில் மருத்துவ குணம் அதிகம் உள்ளதால் மூலிகையாகவும் கருதலாம். முட்டைக்கோஸும் காலிஃபிளவரும் ஒரே இனத்தைச் சேர்ந்தவை. இது சாதாரணமாக வெள்ளையாகவோ, இளம் மஞ்சளாகவோ காணப்படும். மேலும் இவற்றில் வயலட் கலர் காலிஃபிளவரும் உண்டு.காலிஃப்ளவர் ஒரு குளிர்பிரதேச காய்கறி. இது குளிர்காலங்களில் அதிக அளவில் கிடைக்கின்றது. இத்தாலியில் அதிக அளவில் விளைவிக்கப்பட்ட காலிஃப்ளவரானது முதன்முதலில் ஆசியாவில் தான் பயிரிடப்பட்டது. அக்காலத்தில் தென்னிந்திய மக்களுக்கு இது பற்றி எதுவும் தெரியாததால் இதற்கு தமிழில் பெயர் இல்லை. ஆங்கிலப் பெயரான காலிஃப்ளவர் என்றே அனைவராலும் அழைக்கப்படுகிறது.
காலிஃப்ளவரின் சத்துக்கள் காலிஃப்ளவரில் பொட்டாசியம், விட்டமின் B6, ஆகியவை உள்ளன. இதில் விட்டமின் சி மிக அதிகமாக உள்ளது. ஒரு கப் நறுக்கிய பூவில் கலோரி 24, புரதம் 2 கிராம், மாவுச்சத்து 5 கிராம், விட்டமின் சி 72 மில்லி கிராம், ஃபோலாசின் 66 மைக்ரோ கிராம், பொட்டாசியம் 355 மில்லி கிராம் அடங்கியுள்ளன. மேலும் இது நார்ச்சத்து அதிகம் கொண்ட காய்கறியாகும். இந்த காய்கறியை அதிகமாக வேக வைக்க கூடாது. இல்லையெனில் சத்துக்கள் கரைந்துவிடும். இதில் ஒரு வித தாவர அமிலம் உள்ளது. வேகும்போது கந்தகக் கலவையாக மாறி வாசனை வருகிறது. அதிக நேரம் வேக வைத்தால் வாசனை அதிகமாகும். சத்தும் வீணாகும். அலுமினியம், இரும்பு பாத்திரத்தில் வேக வைக்கக்கூடாது. இதிலுள்ள கந்தகக் கலவை அலுமினியத்துடன் சேர்ந்தால் பூ மஞ்சளாகிவிடும். இரும்பு இதை பிரவுன் கலராக்கிவிடும்.இதை தண்ணீரில் வேகவைப்பதை விட நீராவியிலோ, மைக்ரோவேவ் அவனிலோ வேகவைக்கலாம். வைட்டமின் சி சத்து அதிகரிக்கும்.
இருதயத்தை பாதுகாக்கும் காலிஃப்ளவரில் கொழுப்பு சத்து இல்லாத காய்கறி. குறைந்த கலோரிகள் கொண்டது. இதனால் இதயநோய்க்கு இதமான காய்கறி இது. காலிஃப்ளவருக்கு புற்று நோயை தடுக்கும் சக்தி உள்ளது. பூ வேகும்போது Isothiocyantes என்னும் ரசாயனம் வெளிவருகிறது. இது உடலினுள் சென்று உடல் தானாக உற்பத்தி செய்யும் phase II என்ற புற்றுநோய் தடுக்கும் பொருளை அதிகமாக சுரக்கச் செய்கிறது.இது இடுப்பில் ஏற்படும் கருப்பு தழும்புகளை போக்கவல்லது என்று ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
காலிஃப்ளவரின் சத்துக்கள் காலிஃப்ளவரில் பொட்டாசியம், விட்டமின் B6, ஆகியவை உள்ளன. இதில் விட்டமின் சி மிக அதிகமாக உள்ளது. ஒரு கப் நறுக்கிய பூவில் கலோரி 24, புரதம் 2 கிராம், மாவுச்சத்து 5 கிராம், விட்டமின் சி 72 மில்லி கிராம், ஃபோலாசின் 66 மைக்ரோ கிராம், பொட்டாசியம் 355 மில்லி கிராம் அடங்கியுள்ளன. மேலும் இது நார்ச்சத்து அதிகம் கொண்ட காய்கறியாகும். இந்த காய்கறியை அதிகமாக வேக வைக்க கூடாது. இல்லையெனில் சத்துக்கள் கரைந்துவிடும். இதில் ஒரு வித தாவர அமிலம் உள்ளது. வேகும்போது கந்தகக் கலவையாக மாறி வாசனை வருகிறது. அதிக நேரம் வேக வைத்தால் வாசனை அதிகமாகும். சத்தும் வீணாகும். அலுமினியம், இரும்பு பாத்திரத்தில் வேக வைக்கக்கூடாது. இதிலுள்ள கந்தகக் கலவை அலுமினியத்துடன் சேர்ந்தால் பூ மஞ்சளாகிவிடும். இரும்பு இதை பிரவுன் கலராக்கிவிடும்.இதை தண்ணீரில் வேகவைப்பதை விட நீராவியிலோ, மைக்ரோவேவ் அவனிலோ வேகவைக்கலாம். வைட்டமின் சி சத்து அதிகரிக்கும்.
இருதயத்தை பாதுகாக்கும் காலிஃப்ளவரில் கொழுப்பு சத்து இல்லாத காய்கறி. குறைந்த கலோரிகள் கொண்டது. இதனால் இதயநோய்க்கு இதமான காய்கறி இது. காலிஃப்ளவருக்கு புற்று நோயை தடுக்கும் சக்தி உள்ளது. பூ வேகும்போது Isothiocyantes என்னும் ரசாயனம் வெளிவருகிறது. இது உடலினுள் சென்று உடல் தானாக உற்பத்தி செய்யும் phase II என்ற புற்றுநோய் தடுக்கும் பொருளை அதிகமாக சுரக்கச் செய்கிறது.இது இடுப்பில் ஏற்படும் கருப்பு தழும்புகளை போக்கவல்லது என்று ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
தேவையா இழுபறி
நேற்று சென்னை அணி, 147 ரன்கள் என்ற இலக்கை எளிதாக எட்டியிருக்கலாம். கடைசி 12 பந்தில் 16 ரன்கள் தான் தேவைப்பட்டன. ஆனால், தோனியும், பிராவோவும் ஒன்றும், இரண்டுமாக ரன்கள் சேர்த்து, போட்டியை கடைசி பந்து வரை கொண்டு சென்றனர். இது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 146 ரன்கள் எடுத்தது.எட்டிவிடும் இலக்கை துரத்திய சென்னை அணிக்கு பத்ரிநாத், டு பிளசி ஜோடி நல்ல துவக்கம் தந்தது. பின்னி வீசிய போட்டியின் இரண்டாவது ஓவரில் 3 பவுண்டரி அடித்தார் டு பிளசி. தொடர்ந்து அசத்திய இவர், அமித் சிங் ஓவரில் இரு பவுண்டரி விளாசினார். பின் மனேரியா பந்தை சிக்சருக்கு அனுப்பினார்.மறுமுனையில் பந்துகளை வீணடித்த பத்ரிநாத் 15 ரன்னில் (22 பந்து), பிராட் ஹாக் சுழலில் "ஸ்டம்டு' ஆனார். திரிவேதி, கூப்பர் பந்துகளில் பவுண்டரி அடித்தார் ரெய்னா. அபார ஆட்டத்தை தொடர்ந்த டு பிளசி, இத்தொடரில் மூன்றாவது முறையாக அரைசதம் கடந்தார்.திரிவேதி பந்தில் சிக்சர் அடித்த டு பிளசி (73 ரன்கள், 52 பந்து), கூப்பர் பந்தில் அவுட்டானார். இதே ஓவரின் மூன்றாவது பந்தில் 26 ரன்கள் எடுத்திருந்த ரெய்னாவும் அவுட்டாக, போட்டியில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. அமித் சிங் வீசிய போட்டியின் 18வது ஓவரில் பிராவோ, தோனி தலா ஒரு பவுண்டரி அடிக்க, சற்று "டென்ஷன்' குறைந்தது."திரில்' வெற்றி:கடைசி ஓவரில் சென்னை அணியின் வெற்றிக்கு 8 ரன்கள் தேவைப்பட்டன. பின்னி வீசிய இந்த ஓவரின் முதல் இரு பந்தில், 2 ரன்கள் எடுக்கப்பட்டன. 3வது பந்தில் தோனி 2 ரன்கள் எடுத்தார். அடுத்த இரு பந்தில் 2 ரன்கள் மட்டும் எடுக்கப்பட, கடைசி பந்தில், வெற்றிக்கு 2 ரன்கள் தேவைப்பட்டன.பந்தை எதிர்கொண்ட தோனி, "ஸ்கொயர் லெக்' திசையில் அடித்து 2 ரன்கள் எடுக்க, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 147 ரன்கள் எடுத்து "திரில்' வெற்றி பெற்றது. தோனி (15), பிராவோ (16) அவுட்டாகாமல் இருந்தனர்.
ஆட்சிப்பணி அதிகாரிகளுக்கு, பிரதமர் அறிவுரை
முக்கியமான முடிவுகளை, தைரியமாகவும், விரைவாகவும் எடுக்க வேண்டும். தாமதமாக எடுக்கப்படும் முடிவால், யாருக்கும் எந்த பயனும் இல்லை. அரசியல் நிர்பந்தங்களுக்கு அடிபணிந்து பணியாற்றுவதாக, பொதுமக்கள் மத்தியில் நிலவும் அபிப்ராயத்தையும் மாற்றுவதற்கு முயல வேண்டும்' என்று, இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகளுக்கு, பிரதமர் அறிவுரை வழங்கியுள்ளார்.டில்லியில் நேற்று, மத்திய அரசின் சார்பில், இந்திய ஆட்சிப்பணி நாள் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, இந்திய ஆட்சிப்பணி உயர் அதிகாரிகள் கலந்து கொண்ட மாநாடு, டில்லி விஞ்ஞான் பவனில் நடைபெற்றது. இதில், நாடு முழுவதும் இருந்து நூற்றுக்கணக்கான ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தன்னலமற்ற சேவை: மாநாட்டை துவக்கி வைத்து பிரதமர் மன்மோகன் சிங் பேசும்போது, அதிகாரிகளுக்கு அறிவுரைகளை வழங்கினார். பிரதமர் தனது உரையில் கூறியதாவது: இந்திய ஆட்சிப்பணியில், தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் அதிகாரிகள், நாட்டிற்கு செய்யும் பங்களிப்பு மிகப்பெரியது. உலக அளவில் சிறந்து விளங்குபவர்களும் நம்மிடம் உள்ளனர். நாட்டுக்காக உறுதியுடனுடம், தன்னலமற்ற வகையிலும் சேவை செய்வதாலேயே அதிகாரிகள் ஜொலிக்கின்றனர். இத்தனை சிறப்புகள் இருப்பினும், சுயபரிசோதனை செய்து பார்க்கும்போது, நம்மில் ஏற்படும் தோல்விகள் மற்றும் திறமையின்மை போன்றவற்றையும் ஒப்புக் கொள்வது அவசியமாகிறது.
நெருக்கடி: முந்தைய காலங்களில் இருந்ததுபோல் அதிகாரிகள் இல்லை. அரசியல் நெருக்கடி மற்றும் நிர்பந்தங்களுக்கு அடிபணிந்து, வளைந்து பணியாற்றுகின்றனர் என்று, மக்கள் நினைக்கின்றனர். இது கொஞ்சம் மிகைப்படுத்தப்பட்டதாக இருந்தாலும், இதில் கொஞ்சமாவது உண்மையும் உள்ளது. முடிவெடுக்கும்போது, நாட்டு நலனை மனதில் கொண்டு சரியாகவும், அர்த்தமுள்ளதாகவும் அதிகாரிகள் எடுக்க வேண்டும். அதிகாரிகளின் முடிவு மற்றும் தீர்ப்பு ஆகியவற்றின் மீது எந்த வகையிலும் அரசியல் தலைமையின் நிறம் படியக் கூடாது. அவ்வாறு இல்லையெனில் சரியில்லாத, ஒரு தலைபட்சமான முடிவுகளாகவே அவை இருக்கும். தங்களைப் பற்றி பொதுமக்கள் மத்தியில் நிலவும் கருத்தை, மாற்றிக் காட்டும் வகையில் அதிகாரிகள் நடந்து கொள்ள வேண்டும்.
மாற்றம்: வேகமான மாற்றம் நிலவும் காலகட்டத்தில் வாழ்கிறோம். சமூகமும் சரி, பொருளாதாரமும் சரி. மிக வேகமாக மாறிக் கொண்டிருக்கிறது. நவீன தொழில்நுட்பம் என்பது, உலகத்தையே சுருக்கிவிட்டது. நம்மை சுற்றி நடக்கும் மாற்றங்களுக்கு ஏற்ப நாமும் மாறுகிறோமா என்பதை கவனிக்க வேண்டும். அப்படி பார்க்கையில் மாறி வரும் தொழில்நுட்ப மாற்றத்திற்கு ஏற்ப, ஆட்சிப்பணித் துறை மாறுகிறதா என்றால் சற்று பின்தங்கியுள்ளது என்றே கூறுவேன். நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்ப மாற்றிக் கொள்ள வேண்டுமென்ற சவாலை மனதில் உள்வாங்கி, அதன்படி பணியாற்றுவது அவசியமாகியுள்ளது. ஊழலுக்கு எதிரான உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதற்கேற்பவே மத்திய அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
தைரியமான முடிவு: ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் மேற்கொள்ளுகிறோம் என்ற பெயரில், வேண்டுமென்றே தேடிச் சென்று பிடித்து, வதைப்பதோ தொல்லை கொடுப்பதோ கூடாது. முக்கியமான முடிவுகளை எடுப்பதில், அதிகாரிகள் கால தாமதம் ஏற்படுத்தக் கூடாது. முடிவுகளை எடுக்கும்போது, தைரியமாகவும், விரைவாகவும் எடுக்க வேண்டும். தாமதமாக எடுக்கப்படும் முடிவால், யாருக்கும் பயன் இல்லை. முடிவுகள் எடுக்கும்போது, நிர்வாக ரீதியில் சில பிழைகள் ஏற்படுவது சகஜமே. அதற்காகவே தண்டனை அளித்தால் அது தவறாகிவிடும். நேர்மையான அதிகாரிகளுக்கு அவர்களின் நலன்கள் பாதுகாக்க, மத்திய, மாநில அரசுகள் எல்லா விதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளும். முடிவெடுக்கும்போது, சில பிரச்னைகள் ஏற்படுவது உண்மையே. அதற்காக தண்டனை என்றானால், தண்டனை கிடைக்குமே என்ற பயத்தில் அதிகாரிகள் முடிவுகளே எடுக்க மாட்டார்கள். இவ்வாறு பிரதமர் மன்மோகன்சிங் பேசினார்.
மூன்றே மூன்று சூப்பராகிவிடும்: மேலும், பிரதமர் தனது உரையில், "உறுதியாகவும், நேர்மையாகவும், முடிவெடுக்கும் அதிகாரிகளுக்கு என்றுமே, அரசாங்கம் துணை நிற்கும். இருப்பினும், அவ்வாறு எடுக்கும் முடிவுகள் சட்டத்திற்கு உட்பட்டதாகவும் இருக்க வேண்டும். எந்த முடிவு எடுத்தாலும், அது நாட்டு நலனுக்கு உகந்ததாக இருக்க வேண்டும். 12வது ஐந்தாண்டு திட்டத்தின்படி, அரசாங்கம் எடுக்கும் எந்த திட்டங்களானாலும், அது எல்லா பகுதிகளுக்கும் சென்றடைய வேண்டியதாக இருக்க வேண்டும். வளர்ச்சியானது எல்லா தரப்பு மக்களுக்கும் கிடைத்தாக வேண்டும். அதற்கு மூன்று வழிகளை அதிகாரிகள் பின்பற்ற வேண்டும். முதலாவது, ஊழலற்ற சிறந்த நிர்வாகத்தை அளிக்க அதிகாரிகள் முன்வர வேண்டும். இரண்டாவதாக வெளிப்படையாகவும், பதில் கூற கடமைப்பட்டதாகவும் அமைந்த நிர்வாகத்தை அளிக்க அதிகாரிகள் முன்வர வேண்டும். மூன்றாவதாக அரசாங்கம் தீட்டும் திட்டங்கள் எதுவும் காலதாமதம் இல்லாமல் விரைவாக சென்றடையும் வகையில், நிர்வாக அணுகுமுறை இருந்திட வேண்டும்' என்றும் குறிப்பிட்டார்.
இன்று சர்வதேச பூமி தினம்
சூரியக் குடும்பத்தில், பல் உயிரினங்களும் வாழத் தகுதியான ஒரே கிரகம் நாம் வாழும் பூமி மட்டுமே. அப்படிப்பட்ட பூமியை, பாதுகாப்பது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, சர்வதேச பூமி தினம் ஏப். 22ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது.அமெரிக்காவின் சுற்றுச்சூழல் ஆர்வலர் "கைலார்ட் நெல்சன்' என்பவரின் தீவிர முயற்சியால் 1970ல், இத்தினம் தொடங்கப்பட்டது. தற்போது "எர்த் டே' 175க்கும் மேற்பட்ட நாடுகளில் கடைப்பிடிக்கப்படுகிறது. பூகம்பம், சுனாமி,வெள்ளம், வறட்சி, பனிப்பாறை உருகுதல், எரிமலை வெடித்தல் போன்றவை அடிக்கடி நிகழ்கின்றன. இதற்கு காரணம், பூமியின் சூற்றுச்சூழல் பாதிக்கப்படுவது தான்.
அதிகரிக்கும் வெப்பநிலை: தொழிற்சாலைகள், வாகனங்களில் இருந்து வெளியாகும் கரியமில வாயுவால் ஓசோன் பாதிக்கப்படுகிறது. வெப்பநிலை மற்றும் பருவநிலையிலும் மாற்றம் ஏற்படுகிறது. இதன் மூலம் காற்று, நீர் மாசுபடுகிறது. அதிக மழை அல்லது வறட்சி என இயற்கை சீரழிவுகள் ஏற்படுகின்றன. இதைத் தடுக்க கரியமில வாயுவின் அளவை கட்டுப்படுத்த முயற்சிக்க வேண்டும்.
தடுக்கும் வழிகள்: ஒவ்வொருவரும் குறைந்தது ஒரு மரம் வளர்க்க வேண்டும். அனைத்து வகை குப்பைகளையும் குறைக்க வேண்டும். தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். மறுசுழற்சி பொருட்களை அதிகம் பயன்படுத்த வேண்டும். மின்சாரத்தை சேமிக்க வேண்டும். "புளோரெசன்ட்' பல்பினை பயன்படுத்த வேண்டும். கடைகளுக்கு செல்லும் போது "பாலிதீன்' பயன்படுத்துவதை, முடிந்தவரை குறைக்க வேண்டும். குறைந்த தூரம் செல்ல மோட்டார் வாகன பயன்பாட்டை தவிர்க்க வேண்டும். மாசுக்களை கட்டுப்படுத்த வேண்டும். சூரிய ஆற்றலை அதிகம் பயன்படுத்தலாம். பெரிய தொழிற்சசாலைகள், தேவையான மின் சக்தியை காற்றாலைகள் மூலம் பெறலாம். பாடப்புத்தகங்களில் சுற்றுச்சுழல் தொடர்பான பாடங்களை சேர்த்து, வருங்கால சந்ததியினர், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் முறை பற்றி தெரிந்து கொள்ளச் செய்யலாம்.
இதே நாள்...
- சர்வதேச புவி நாள்
- ரஷ்ய புரட்சியாளர் விளாடிமிர் லெனின் பிறந்த தினம்(1870)
- பிரமோஸ் ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக சோதித்தது(2006)
- ஐரோப்பிய போர்ச்சுகீசியரான பேதுரோ கப்ரால் முதன் முறையாக பிரேசிலை கண்டார்(1500)
எய்ம்ஸ் மருத்துவமனையில் 3 ஆண்டுகளில் சிகிச்சையின்போது 11500 பேர் உயிரிழப்பு!
எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த 3 ஆண்டுகளில் சிகிச்சையின்போது 11500 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்மூலம் இது தெரியவந்துள்ளது.மும்பையைச் சேர்ந்த அஜய் மராத்தீ என்பவர் கடந்த 3 ஆண்டுகளில் எய்ம்ஸ் மருத்துவமனையில் எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர் என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் கேள்வி கேட்டிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள மருத்துவமனை நிர்வாகத்தின் பேராசிரியர் சதாபதி மொத்தம் 11566 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவித்தார்.பெரும்பாலான இறப்புகள் அனைத்தும் உறுப்புகள் நன்கொடை கிடைக்காமல் நடந்த இறப்புகளாகும். ஒருவரின் உடலில் இருந்து 8 உறுப்புகளை தானமாக அளிக்கலாம். மக்கள் இதில் விழிப்புணர்ச்சி இல்லாமல் இருப்பது துரதிருஷ்டவசமானது என அவர் தெரிவித்தார்.
எழுத்தாளர்களுக்கு பதிப்பாளர் சங்கம் தலா ரூ.1 லட்சம் பரிசு!
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, தென்னிந்திய புத்தக விற்பனையாள் மற்றும் பதிப்பாளர் சங்கத்திற்கு ரூ.1 கோடி நன்கொடை வழங்கி அந்த தொகையை வங்கியில் டெபாசிட் செய்து அதில் இருந்து கிடைக்கும் வட்டித்தொகையை கொண்டு எழுத்தாளர்களுக்கு ஆண்டுதோறும் பரிசு வழங்குமாறு கூறி இருந்தார்.2012-ம் ஆண்டு பரிசுக்குரியவர்களை டாக்டர் இ.சுந்தரமூர்த்தி, பேராசிரியர் ராமகுருநாதன், பாலரமணி ஆகியோர் கொண்ட குழு தேர்வு செய்துள்ளது. பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் விவரம் வருமாறு:-
1. தமிழ் உரைநடை இலக்கியம் - மா.ர.போ.குருசாமி
2. தமிழ் கவிதை இலக்கியம் - சிற்பி பாலசுப்பிரமணியம்
3. தமிழ் நாடக இலக்கியம் - கே.பி.அறிவானந்தம்
4. தமிழ் புனைவு இலக்கியம் - விக்கிரமன்
5. ஆங்கில இலக்கிய எழுத்தாளர் - பிரேமா நந்தகுமார்
6. பிற இந்திய மொழி எழுத்தாளர் (கொங்கணி மொழி இலக்கியம்) - பிரான்சிஸ் டி-சவ்சா
மேற்கண்ட எழுத்தாளர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு லட்சம் ரூபாய் ரொக்கத்துடன், வெள்ளிக்கேடயம், பொன்னாடை ஆகியவையும் வழங்கப்படும். பரிசளிப்புவிழா, உலகப் புத்தக திருநாளான நாளை (திங்கட்கிழமை) மாலை 6 மணிக்கு சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெறும்.விழாவுக்கு தொழிலதிபர் நல்லி குப்புசாமி செட்டியார் தலைமை தாங்குகிறார். பரிசுகளை தி.மு.க. பொதுச் செயலாளர் அன்பழகன் வழங்குகிறார்.
மேற்கண்ட தகவலை தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தலைவர் ஆர்.எஸ்.சண்முகம் தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Posts (Atom)