முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, தென்னிந்திய புத்தக விற்பனையாள் மற்றும் பதிப்பாளர் சங்கத்திற்கு ரூ.1 கோடி நன்கொடை வழங்கி அந்த தொகையை வங்கியில் டெபாசிட் செய்து அதில் இருந்து கிடைக்கும் வட்டித்தொகையை கொண்டு எழுத்தாளர்களுக்கு ஆண்டுதோறும் பரிசு வழங்குமாறு கூறி இருந்தார்.2012-ம் ஆண்டு பரிசுக்குரியவர்களை டாக்டர் இ.சுந்தரமூர்த்தி, பேராசிரியர் ராமகுருநாதன், பாலரமணி ஆகியோர் கொண்ட குழு தேர்வு செய்துள்ளது. பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் விவரம் வருமாறு:-
1. தமிழ் உரைநடை இலக்கியம் - மா.ர.போ.குருசாமி
2. தமிழ் கவிதை இலக்கியம் - சிற்பி பாலசுப்பிரமணியம்
3. தமிழ் நாடக இலக்கியம் - கே.பி.அறிவானந்தம்
4. தமிழ் புனைவு இலக்கியம் - விக்கிரமன்
5. ஆங்கில இலக்கிய எழுத்தாளர் - பிரேமா நந்தகுமார்
6. பிற இந்திய மொழி எழுத்தாளர் (கொங்கணி மொழி இலக்கியம்) - பிரான்சிஸ் டி-சவ்சா
மேற்கண்ட எழுத்தாளர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு லட்சம் ரூபாய் ரொக்கத்துடன், வெள்ளிக்கேடயம், பொன்னாடை ஆகியவையும் வழங்கப்படும். பரிசளிப்புவிழா, உலகப் புத்தக திருநாளான நாளை (திங்கட்கிழமை) மாலை 6 மணிக்கு சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெறும்.விழாவுக்கு தொழிலதிபர் நல்லி குப்புசாமி செட்டியார் தலைமை தாங்குகிறார். பரிசுகளை தி.மு.க. பொதுச் செயலாளர் அன்பழகன் வழங்குகிறார்.
மேற்கண்ட தகவலை தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தலைவர் ஆர்.எஸ்.சண்முகம் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment