|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

10 December, 2011

சங்குக் கழுத்தழகு வேண்டுமா?


சங்க இலக்கியங்களில் பெண்களின் கழுத்தை சங்கோடும், அன்னப் பறவையோடும் ஒப்பிட்டுள்ளனர். பெண்களின் அழகிற்கு மேலும் அழகூட்டுவது கழுத்து என்றால் மிகையாகாது. கழுத்தானது மிகவும் உணர்ச்சிகரமான பகுதியாகும். ஒவ்வொரு பெண்ணும் தங்களின் முக அழகைச் சிரத்தையோடு பராமரிக்கும் அளவிற்கு கழுத்தினைப் பராமரிக்கக் காட்டுவதில்லை. பல பெண்களுக்கு அழகான வளவளப்பான முகம் இருக்கும். ஆனால் கழுத்து மட்டும் சுருக்கங்களோடு சொரசொரப்பானதாக இருக்கும். முகத்தை அழகாகப் பராமரிக்க முடியும்போது கழுத்தைப் பராமரிப்பதும் சாத்தியம் தான்.

மருத்துவ ரீதியான பிரச்சினைகள் மருத்துவ ரீதியான பிரச்சினைகளும் கழுத்து கருப்பாக இருப்பதற்குக் காரணமாக இருக்கலாம். வழக்கமான இந்தப் பராமரிப்பு முறைகள் எதுவும் இதற்கு உதவாது. எனவே தோல் சிகிச்சை நிபுணரைப் பார்க்கலாம். கழுத்தின் பின் பகுதிக்கும் இந்தப் பராமரிப்பு முறைகள் மிக அவசியம். மென்மையான கழுத்துப் பகுதியை நீங்கள் கவனிக்காமல் விட்டுவிட்டால் தோலின் தன்மை மிருதுவான தன்மையை இழக்கும். சுருக்கங்களோடு முரட்டுத்தனமான தோற்றத்தைக் கொடுக்கும்.

கழுத்தினை கழுவுங்கள் எப்பொழுதெல்லாம் முகத்தைக் கழுவுகிறீர்களோ அப்பொழுது கழுத்தையும் சுத்தப்படுத்துங்கள். சுத்தப்படுத்தும் க்ரீம்களாலேயே மசாஜ் செய்யுங்கள். காட்டனால் துடைத்தெடுங்கள். இப்பொழுது உங்கள் பேஷ் வாஷ் க்ரீம்களால் முகத்தையும் கழுத்தையும் கழுவுங்கள். பிறகு ஒரு மாய்ச்சரைசிங் க்ரீமால் மசாஜ் செய்யுங்கள்.

இயற்கை மூலிகைகள் இயற்கை மூலிகைகளைக் கொண்டு செய்யும் ப்ளீசிங் மற்றும் பேஷியலுமே சிறந்தவை. அதுதான் முகத்தையும் தோலின் தன்மையும் நல்ல முறையில் பாதுகாக்கும். பேஷியலோடு மசாஜ் செய்யும்போது கழுத்துப் பகுதியிலுள்ள தோலை மென்மையாக்குவதோடு இரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது. பச்சரிசி விழுதாக அரைத்துக் கழுத்தில் மருக்கள் உள்ள இடங்களில் போட்டு வந்தால், அவை குறையும். கழுத்தில் அணியும் செயின்களை சோப்பும், எலுமிச்சம் பழச்சாறும் கலந்த தண்ணீரில் போட்டு வாரத்திற்கொரு முறை சுத்தப்படுத்த வேண்டும். ரக்த சந்தனம், முல்தானி மிட்டி, பன்னீர், கிளிசரின் ஆகிய அனைத்தையும் கலந்து கழுத்தின் பின் பக்கத்தில் தடவி அரை மணி நேரம் ஊறவும். பிறகு கழுவி விடவும். பின்னங்கழுத்து கருமையைப் போக்க இது உதவும்.

குங்குமப் பூ பாலடை பாலாடையுடன் சிறிதளவு குங்குமப் பூ கலந்து கழுத்தின் முன் பகுதி மற்றும் தொண்டை ஆகிய இடங்களில் தடவவும். பதினைந்திலிருந்து முப்பது நிமிடங்கள் வரை காத்திருந்து கழுவிடவும். இது கழுத்தை நிறமாகவும், மென்மையாகவும் வைத்திருக்க உதவும். ஒரு முட்டையின் வெள்ளைக் கருவுடன், ஒரு டீஸ்பூன் தேன் கலந்து கழுத்தில் தடவி, முப்பது நிமிடங்கள் கழித்துக் கழுவினால் கழுத்து சுருக்கங்களின்றியும், அழகாகவும் இருக்கும். கழுத்தில் ஏற்படும் கோடுகளைத் தவிர்க்க, பர்மிங் ஜெல் அல்லது டைட்டனிங் ஜெல் தடவலாம். இப்போது பிரபலமாகி வரும் அரோமா தெரபி சிகிச்சையில் கழுத்தின் அழகைப் பராமரிக்கக் கூட பிரத்யேக எண்ணெய்கள் உள்ளன.

பேஷியல் அவசியம்பேஷியல் செய்வதற்கான ப்யூட்டி பார்லர்களுக்குப் போனால் கழுத்து, முகம் இரண்டிற்கும் பேஷியல் செய்யச் சொல்லவேண்டும். ஏனெனில் அது மிகப்பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும். வீட்டிலிருக்கும் போது முகத்தில் பேஸ் பேக் அணிவதை விரும்பினால் அதையே கழுத்திற்கும் சேர்த்துச் செய்யுங்கள். கழுத்திற்குப் போடுவது கொஞ்சம் சிரமம் தான். யாரையாவது அப்ளை பண்ணச் சொல்லலாம். 15 நிமிடங்களுக்குப் பிறகு அதனைக் கழுவுங்கள். அப்புறம் பாருங்கள் உங்கள் கழுத்து காண்பவரை கவர்ந்திழுக்கும் வகையில் பளபளக்கும்.

பெண்ணை காதலித்து ஏமாற்றிய ஐபிஎஸ்...



டெல்லியில் ஐபிஎஸ் தேர்வுக்காக படித்த போது, உடன் படித்த ஐபிஎஸ் அதிகாரி தன்னை காதலித்துவிட்டு ஏமாற்றிவிட்டதாக, ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியின் மகள், சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளி்த்துள்ளார். சென்னை, வளசரவாக்கத்தை அடுத்த கனகதாரா நகரை சேர்ந்தவர் கோகுல்சங்கர். சென்னை உதவி போலீஸ் கமிஷனராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு லட்சுமி என்ற மனைவியும், 2 மகள்களும், 1 மகனும் உள்ளனர். இதில் முதல் மகளுக்கு திருமணமாகிவிட்டது. இந்த நிலையில் நேற்று மாலை 3 மணிக்கு சென்னை கமிஷனர் அலுவலகத்துக்கு கோகுல்சங்கர் தனது 2வது மகள் பிரியதர்ஷனி, மனைவி லட்சுமி உள்ளிட்டோருடன் வந்தார். கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு ஒன்றை அளித்தார்.

இது குறித்து கோகுல்சங்கர் கூறியதாவது, நான் சென்னையில் துணை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றேன். எனது 2வது மகள் பிரியதர்ஷினி பி.ஏ., எம்எஸ்சி பட்டபடிப்பு முடித்துள்ளார். என்.சி.சி.யில் இந்திய அளவில் முதலிடம் வந்த பிரியதர்ஷினி, போலீஸ் அதிகாரியாக வர வேண்டும் என்று ஆசைப்பட்டாள். ஐ.பி.எஸ். தேர்வு எழுதுவதற்காக பிரியதர்ஷினி டெல்லியில் தங்கி படித்தாள். அப்போது அவளுடன் படித்த ஒரு நபரை காதலித்தாள். திருச்சியை சேர்ந்த அந்த நபரின் பெற்றோர் கல்லூரியில் பேராசிரியர்களாக பணியாற்றி வருகின்றனர். இரு குடும்பத்தினரும் காதலை ஏற்று கொண்டு, திருமணம் செய்து வைக்க தீர்மானித்தோம். ஐ.பி.எஸ். தேர்வில் இந்தியாவிலேயே 3வது இடத்தை பெற்று வெற்றி பெற்ற அந்த நபர், தற்போது பயிற்சியில் உள்ளார்.

இந்த நிலையில் அந்த நபரின் குடும்பத்தினர், எங்களுடனான தொடர்பை துண்டித்து கொண்டனர். இந்த மாதம் திருமண நிச்சயம் செய்ய இருந்த நிலையில், தற்போது உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த இன்னோரு பெண்ணை திருமணம் செய்ய முடிவு செய்துள்ளது தெரிய வந்துள்ளது.

எனது உறவினர்கள், நண்பர்கள் என்று அனைவரிடமும் அந்த நபர் தான் எனது மகளின் வருங்கால கணவன் என்று அறிமுகப்படுத்தி உள்ளோம். இந்த நிலையில் எனது மகளை காதலித்து ஏமாற்றிய, அந்த நபர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு கொடுத்துள்ளேன், என்றார்.

இது குறித்து பிரியதர்ஷனி கூறியதாவது, என்னை காதலி, மனைவி என்று ஆசை தீர அழைத்துவிட்டு தற்போது ஓதுக்கி உள்ளனர். செல்போனில் பல மணி நேரங்கள் பேசியும், எஸ்எம்எஸ்கள் அனுப்பியும் காதலை வளர்த்தார். நல்ல வேளை எனது மனதை மட்டுமே அவரிடம் தொலைத்தேன். கற்பை இழந்திருந்தால் இந்த புகார் கொடுக்க கூட தகுதி இல்லாத நிலை ஏற்பட்டிருக்கும். எனது வாழ்க்கை போனாலும் பரவாயில்லை, அவரது முகமூடியை கிழித்து, ஐ.பி.எஸ். அதிகாரியாக, அவர் எந்த வகையிலும் தகுதி இல்லாதவர் என்பதை நிரூபிப்பேன்.என்னை திருமணம் செய்து கொள்ள 2 கிலோ தங்க நகை, ரூ.50,000 ரொக்கப் பணம், பி.எம்.டபில்யூ கார் உள்ளிட்டவை வரதட்சனையாக தர வேண்டும் என்று கேட்டிருந்தனர். அதனை தர எங்களால் முடியவில்லை. எனவே என்னை அவர் ஏமாற்றிவிட்டார். இனி அவர் சமாதானமாகி என்னை ஏற்று கொள்ள வந்தால் கூட நான் அவரை திருமணம் செய்து கொள்ள சம்மதிக்கமாட்டேன், என்றார்.

மீன் உணவு பக்கவாதத்தை தடுக்கும்!


மீன் உணவுகளை உட்கொள்பவர்களுக்கு மூளை சுறு சுறுப்படைவதோடு பக்கவாதம் வரும் வாய்ப்பும் குறைவு என்று நரம்பியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலமே இத்தகைய மாயா ஜாலத்தை செய்வதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். நியூசிலாந்தின் மஸ்கே பல்கலைக்கழக குழுவினர் மீன் உணவு உட்கொள்பவர்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். 176 பேரை தேர்வு செய்து வஞ்சிரம், இறால் உள்ளிட்ட பல்வேறு வகை மீன்களை 6 மாதங்களாக கொடுத்து ஆய்வு செய்தனர். இதில் அவர்களுக்கு ஞாபக சக்தி 15 சதவீதம் அதிகரித்து இருந்தது தெரிய வந்தது. மேலும் அறிவுக் கூர்மையும் ஏற்பட்டிருந்தது.மீன்களில் ஒமேகா-3 என்ற கொழுப்பு அமிலம்தான் ஞாபக சக்தி அதிகரிப்புக்கு காரணம் என்று ஆய்வில் தெரிவித்துள்ளனர்.

மூளை சுறு சுறுப்பு ஒமேகா 3 அமிலம் மனித உடலுக்கு நல்லது என்று ஏற்கனவே ஆய்வுகள் தெரிவித்துள்ளன. இந்த நிலையில் ஒமேகா-3 அமிலம் மனிதனின் ஞாபக சக்தியை அதிகரிக்க உதவுவதாகவும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. எனவே மீன்கள் அதிகம் சாப்பிட்டால் அறிவுக்கூர்மை ஏற்படும். மூளை சுறுசுறுப்பாக இயங்கும். மனநலம் பாதிக்கப்படுவதை தடுக்கும் என்று ஆய்வாளர்கள் கூறினார்கள்.

மீன்களின் சிறப்பு ஒமேகா-3 அமிலம் மனிதனின் உடலில் இயற்கையாகவே சுரப்பது இல்லை. மற்ற உணவுப் பொருட்களிலும் இவை இருப்பதில்லை. மீன்களில் மட்டுமே ஒமேகா-3 இருக்கிறது. எனவே மீன் சாப்பிட்டால் மட்டுமே ஒமேகா-3 கிடைக்கும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

பக்கவாதம் வராது மேலும் மீன் உணவானது பக்கவாதம் வரும் வாய்ப்பையும் குறைப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 3600க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் 65 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு வாரம் மூன்று முறை மீன் உணவுகளை உண்ணக்கொடுத்து நடத்தப்பட்ட ஆய்வில் அவர்களின் மூளையில் பக்கவாதம் ஏற்படுத்தும் நோய் தாக்குதலுக்கான அறிகுறிகள் படிப்படியாக குறைந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

உலகின் சக்திவாய்ந்த பெண்கள் இந்தியாவில் 6 பேர்.


உலக அளவில் கார்ப்பொரேட் துறையில் 50 சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் 6 இந்தியப் பெண்கள் இடம் பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு இந்த பட்டியலில் 35 வது இடத்தில் இருந்த ஐசிஐசிஐ நிறுவனத்தின் சாந்தா கோச்சர் இந்த ஆண்டு 5 வது இடத்தை பிடித்துள்ளார்.2011 ஆண்டில் உலக அளவில் மிகவும் சக்திவாய்ந்த 50 பெண்கள் பட்டியலை ஃபார்ச்சூன் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் இந்தியாவைச்சேர்ந்த 6 பெண்கள் இடம் பெற்றுள்ளனர். ஐசிஐசிஐ நிறுவனத்தின் சாந்தா கோச்சர் 5 வது இடத்தையும், ஆக்ஸிஸ் வங்கியின் சீக்கா சர்மா 33 வது இடத்தையும் பிடித்துள்ளனர். ஹெச்பியின் நீலம் தவான் 35 இடத்தையும் ஹெச்எஸ்பிசியின் இந்தியப்பிரிவு தலைவர் நைனாலால்கித்வா 41 இடத்தில் உள்ளனர். அப்போலா மருத்துவ குழுமத்தின் பிரீதா ரெட்டி 48 வது இடத்திலும், பயோகானின் கிரண்மஜூம்தார் 49 இடத்திலும் உள்ளனர்.

Nonsensical, Semi-English Music Video Goes Viral in India டைம் மேகசினில் கொலவெறி!


Perhaps the ballad’s universal theme is part of its appeal – apparently it’s about a guy who’s been dumped by his girlfriend. The song is also notable for its pretty nonsensical use of words, employing a unique language probably best described as “Tamglish” – mixing Tamil and English.
In once section for instance singer Dhanush, son-in-law of Rajinikanth, one of Tamil cinema’s biggest stars, sings “eyes-u, eye-u, meet-u, meet-u.” In another he croons “distance-la moonu moonu.” The actor performed the song for the movie, which is directed by his wife Aishwarya. “We all expected it to be a hit by not the kind of rage that it has become today,” Anirudh Ravichander, who composed the track 
ஒரே ஒரு பாடலுக்கு இவ்வளவு பரபரப்பு , வரவேற்பு இருக்குமா என்ற கேள்விக்கு வரலாறு கூட படைக்க முடியும் என்ற அளவுக்கு வெற்றி கண்டுள்ளது மூன்று படத்தின் ஒய் திஸ் கொலவெறி பாடல். பிளாப் சாங் என்று ஆரம்பித்தாலும் இன்றளவில் உலக மெகா ஹிட்டாகி உள்ளது கொலவெறி பாடல். கோலிவுட்டில் காலடி எடுத்த வைத்த மாத்திரத்தில் அனிருத்துக்குத் தான் இப்படி ஒரு பிரமாண்ட வெற்றி கிடைத்திருக்கிறது என்று சொல்லலாம். யூ டியூபில் அதிகம் தேடப்பட்டபாடல் என்ற வரிசையில் ஒய் திஸ் கொலவெறிக்கு கேல்ட் அவார்ட் வழங்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்ல, தனுஷ் எழுதி பாடிய இந்த பாடல் பற்றி டைம் பத்திரிகையிலும் இடம் பெற்றுள்ளது. இது மூன்று டீமுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்கிறார் அனிருத். இப்படி ஒரு இமாலய வெற்றி குறித்து என்ன நினைக்கிறீர்கள் என கேட்டால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது, இது எங்கள் கூட்டணிக்கு கிடைத்த வெற்றி என்றார். ஏர்.ஆர்.ரஹ்மானை மிஞ்சிவிட்டீர்கள் போல என்றால் அப்படி ஒன்றும் இல்லை ஏ.ஆர் ரஹ்மான் தான் எனது இன்ஸ்பிரேஷன். அவர் ஒரு மிகப்பெரிய கலைஞர், நான் இப்போது தான் என் இசைப்பயணத்தை துவக்கியுள்ளேன். ரஹ்மான் சார் சாதித்ததில் ஒரு 5% அளவுக்கு சாதிக்க முடிந்தாலே அதை மிகப்பெரிய சாதனையாக கருதுவேன். இவ்வாறு அனிருத் கூறினார்.

பாரதியின் பக்தி நெறிமுறைகள்!

டிசம்பர்-11: மகாகவி பாரதி பிறந்த தினம்,1882-ம் ஆண்டு டிசம்பர் 11 சின்னசாமி ஐயருக்கும் லட்சுமி அம்மாளுக்கும் எட்டயபுரத்தில் பிறந்த பாரதி தனது 11-ம் வயதிலேயே கவிபுனையும் ஆற்றலை வெளிப்படுத்தினார். 1897 ஆம் ஆண்டு செல்லம்மாளை மணந்தார். 1898 ஆம் ஆண்டு தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தினால் வறுமை நிலையினை அடைந்தார். இதனை எட்டையபுரம் மன்னருக்குத் தெரிவித்து பொருளுதவி வழங்குமாறு கடிதத்தில் கேட்டுக்கொண்டார் பின்னர் எட்டையபுரம் அரண்மனையில் பணி கிடைத்தது. சிறிது காலங்களிலேயே அப்பணியை விடுத்து காசிக்குச் சென்றார். 1898 முதல் 1902 வரை அங்கு தங்கி இருந்தார். வாழ்நாள் முழுதும் பல்வேறு தருணங்களில் பத்திரிகை ஆசிரியராகவும், மதுரையில் சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகவும் பணியாற்றியுள்ளார். பாரதியாரின் வரிகள் ..  

தைரியம் தரும் பக்தி:
* தெய்வத்தின் அருள் இருந்தால் மட்டுமே உலகமே வியக்கும் வண்ணம் ஒருவனுக்கு எதிர்பாராத விதத்தில் பயன்கள் கிடைக்கும். 

* கோயிலுக்குப் போனாலும் சரி, போகாவிட்டாலும் சரி, தெய்வத்தைக் கும்பிட்டாலும் சரி, பிறரை ஏமாற்றுவதை நிறுத்தினாலே தெய்வம் அருள் புரியும். 

* நல்ல விளக்கிருந்தாலும் பார்க்க கண் வேண்டும். அதேபோல் நாலுபேர் துணையிருந்தாலும் நல்ல முறையில் வாழ சுயபுத்தி வேண்டும். 

* தன்னைத் தானே திருத்திக் கொள்ளாதவன், பிற உயிர்களைத் திருத்த அதிகாரம் பெறமாட்டான். 

* வெறும் சொல்லுக்கு மகிமையில்லை. அச்சொல் உள்ளத் துணிவை உணர்த்துமாயின் அதற்கு மகிமையுண்டு. 

* உண்மையான பக்தி இருந்தால் மனதைரியம் கிடைக்கும், மனதைரியம் இருந்தால் தெய்வ பக்தி ஏற்படும். அத்துடன், இந்த பிறவியிலேயே தெய்வநிலை பெறலாம். 

* கடவுளிடமும் அவருடைய படைப்பாகிய அனைத்து ஜீவன்களிடமும் என்றும் மாறாத அன்பு செலுத்துவதே பக்தி. அதுவே முடிவான சாதனமாகும்.  

சூரிய நமஸ்காரம்: முனிவர்களும், புலவர்களும் உமது பெருமையைப் பெரிதென்று போற்றுகின்றனர். அப்பெருமையைக்கொண்ட சூரியதேவனே! உம்மை வாழ்த்துகின்றேன். பரிதியே! யாவற்றுள்ளும் முதல் பொருளாகத் திகழ்பவனே! பானு என்ற பெயர் கொண்டவனே! பொன் போல் நல்லொளியினை திரளாகப் பிரகாசிப்பவனே! உன்னை வணங்குகின்றேன். கதிரொளி தரும் உன் முகத்தினை சற்றே காட்டுவாயாக! வேதமொழிகள் உன்னைப் புகழும் புகழினைக் கண்டு நானும் வேள்விப்பாடல்களை பாடுவதற்கு ஆவல் கொண்டேன். நீ உதிக்கும் வேளையில் நாதத்தினை எழுப்பும் கடலின் இனிய ஒலியோடு நல்ல தமிழில் சொல்லில் இசைப்பாடல்களைச் சேர்ப்பேன். கீழ்வானில் படரும் வான் ஒளி இன்பத்தைக் கண்டு, பறவைகள் பாட்டுப்பாடி மகிழும். விழியினைப் போல சுடர்முகம் கொண்ட உன் வடிவம் கண்டு கடலின் ஒவ்வொரு துளியும் சுருதி பாடி புகழ் சேர்க்கும். என் உள்ளம் கடலினைப் போல் உன் இணையடியின் கீழே நின்று வணங்கும். உலகில் ஒவ்வோர் அணுவும் உந்தன் ஜோதியால் நிறைந்து நல்வாழ்வு பெறும். வானிலே நிலைபெற்று உலகமெல்லாம் வாழ்விக்கும் ஒளி தரும் தேவா! உன்னை ஆயிரம் முறை அஞ்சலி செய்வேன்.

இந்திய வரலாறை கற்பிக்க சிபிஎஸ்இ டிவி சேனலுடன் ஒப்பந்தம்.


இந்திய வரலாற்றையும், பழமையான நினைவுச் சின்னங்களையும் பள்ளி மாணவர்களுக்கு கற்பிக்க ஏதுவாக சிபிஎஸ்இ, வரலாற்று டிவி சேனல் ஒன்றுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இந்திய வரலாற்றை கற்பிக்கும் முயற்சியில் சிபிஎஸ்இ ஈடுபட்டுள்ளது. இந்த முயற்சியில் சுமார் 1000 பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு வரலாறு தொடர்பான வினாடி-வினா நிகழ்ச்சிகளை நடத்துவது போன்றவை இடம்பெறும். மேலும், இந்திய முயற்சியில் யுனெஸ்கோவும் இணைந்து கொண்டுள்ளது என்று சிபிஎஸ்இ தலைவர் வினீத் ஜோஷி கூறியுள்ளார். பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இந்தியாவின் வரலாறும், புகழ்பெற்ற நினைவுச் சின்னங்களையும் எளிதாக கற்பிப்பதற்காக இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த புதிய முயற்சியினால் நிச்சயம் எதிர்பார்த்த பலன் கிடைக்கும் என்று நம்புகிறோம். கல்வியோடு சேர்த்தே நமது வரலாற்றை கற்பிற்கும் இந்த திட்டத்தினால், நமது பாரம்பரியமும், கலாச்சாரமும் பாதுகாக்கப்படும் என்றார் ஜோஷி.

உங்களுக்கு பொருத்தமான பணி?


நல்ல சம்பளத்தில், நல்ல வேலை வேண்டும் என்று ஆசைப்படும் அதேநேரத்தில், நாம் எந்த வேலைக்குப் பொருத்தமானவர்கள் என்பதையும் ஆராய வேண்டும். நம்முடைய திறமைகள், தகுதிகள் மற்றும் பின்னணிகள் குறித்து சுய பகுப்பாய்வை மேற்கொண்டாலொழிய, பொருத்தமான பணியை நாம் பெறுவதென்பது இயலாத காரியமே. எனவே சுய பகுப்பாய்வு தொடர்பான சில ஆலோசனைகள் இங்கே வழங்கப்பட்டுள்ளன. 
தொழில்ரீதியிலான பகுப்பாய்வு வேலை தேடுதலில் உள்ள மிகப் பிரதானமான அம்சம் என்னவெனில், உங்களுக்குள் இருக்கும் ஆர்வத்தையும், தொழில்முறை குறிக்கோள்களையும் பகுப்பாய்வு செய்வதாகும். ஏனெனில், நம்மில் பெரும்பாலானோர், உள்ளார்ந்த திறன்கள் மற்றும் விருப்பங்களைக் கண்டு கொள்வதில்லை. இதனால்தான், பல்வேறான சிக்கல்களை சந்திக்கிறோம். நேர்முகத்தேர்வின்போது, சம்பிரதாயமாக கேட்கப்படும் "உங்களைப் பற்றி சொல்லுங்களேன்" என்ற கேள்விக்கு சாதாரணமாகவும், தெளிவாகவும் பதில்சொல்ல பலரும் திணறுவர். எனவேதான், உங்களின் உள்ளக்கிடக்கையைப் பகுப்பாய்வு செய்வது முக்கியமான செயல்பாடு என்கிறோம். கீழ்வரும் கேள்விகளுக்கு பதில் சொல்லிப் பாருங்கள்,
1. வாழ்க்கையில் நான் என்ன செய்ய விரும்புகிறேன்?
2. என்னுடைய பணி நோக்கங்கள் என்னென்ன?
3. என்னுடைய நீண்டகால லட்சியங்கள் என்னென்ன?
4. அடுத்த 5 அல்லது 10 வருடங்களில் எனது நிலை என்னவாக இருக்கும்?
5. எனது குறுகியகால பணி குறிக்கோள் என்ன?
6. எனது பணி விருப்பங்கள் என்னென்ன?
7. எனது பணி முன்னுரிமைகள் என்னென்ன?
மேற்கூறிய கேள்விகளுக்கு தெளிவான பதிலளித்து பழகிவிட்டாலே போதும், உங்களின் வேலை விஷயத்தில் ஒரு தெளிவான முடிவை உங்களால் எடுக்க முடியும்.
பின்புல பகுப்பாய்வு ஒரு வேலையைத் தேடும் முன்பாக உங்களது கல்வி மற்றும் தொழில்முறை பின்னணிப் பற்றி யோசித்துக் கொள்ள வேண்டும். மேலும், எந்த வகையான பணி நிலைகள் உங்களுக்கு ஒத்துவரும்? நீங்கள் விரும்பும் பணி நிலைகளுக்கு ஏற்றவாறு உங்களின் கல்வித் தகுதி இருக்கிறதா? போன்ற அம்சங்களையும் விரிவாக யோசிக்க வேண்டும். ஏனெனில், உங்களிடம் சிறந்த கல்வித் தகுதிகள் இருக்கலாம் மற்றும் பிரமாதமான அனுபவங்கள் இருக்கலாம். ஆனால் ஒரு குறிப்பிட்ட பணிக்கான நேர்முகத் தேர்வின்போது, அப்பணிக்கு நீங்கள் எவ்வாறு பொருந்துகிறீர்கள் என்பதை மட்டுமே அவர்கள் பார்ப்பார்கள். எனவே, நேர்முகத்தேர்வின்போது, உங்களது கல்வி மற்றும் அனுபவப் பின்னணி குறித்து குறைந்தபட்சம் 2 நிமிடங்கள் வரை நேர்மறையாக பேசுவதற்கு பயிற்சி எடுக்கவும்.
திறன் மதிப்பீடு ஒவ்வொரு விதமான பணியை செய்வதற்கும், ஒரு குறிப்பிட்ட விதமான திறன்களும், தகுதிகளும் தேவைப்படும். எனவே, உங்களிடம் இருக்கும் திறன்கள் மற்றும் தகுதிகள் பற்றி மதிப்பாய்வு செய்ய வேண்டும். இத்தகைய மதிப்பாய்வானது, உங்களின் உள்ளார்ந்த மற்றும் கற்றல் மூலமான திறன்கள் ஆகிய இரண்டையும் சார்ந்தது. உள்ளார்ந்த திறன் என்பது உங்களது ஆளுமையோடு தொடர்புடையது. கற்றதன் மூலமான திறன்கள் மற்றும் உள்ளார்ந்த திறன்களுக்கு சில உதாரணங்கள்
கற்றல் மூலமான திறன்கள்கம்ப்யூட்டர் ப்ரோகிராமிங், டேட்டா ப்ராசஸிங், மார்க்கெடிங், வாகனம் ஓட்டுதல், நிர்வாகம், கலந்துரையாடுதல், வெளிநாட்டு மொழி, பிசினஸ் ரைட்டிங், இன்டர்பெர்சனல் ஸ்கில்ஸ், பேரம்பேசும் திறன், பொதுமக்கள் தொடர்பு, தொழில்முறையாக பேசுதல், கவனித்தல், மேலாண்மை, திட்டமிடுதல், ஒருங்கிணைதல், பொதுக்கூட்ட உரை, விற்பனை, மேற்பார்வை, நேர மேலாண்மை, கற்பித்தல் மற்றும் பயிற்சி.
உள்ளார்ந்த திறன்கள் சூழலுக்கேற்ப மாறிக்கொள்ளுதல், பகுப்பாய்வு செய்தல், அழுத்தம் திருத்தமாக பேசும் திறன், உறுதித்தன்மை, பரந்த மனப்பான்மை, தைரியம், படைப்புத்திறன், முடிவெடுத்தல், ராஜதந்திரம், விவேகம், சுயதிறம், தொலைநோக்குப் பார்வை, கற்பனைத்திறன், முன்முயற்சி, தலைமைத்துவம், உற்சாகப்படுத்தல், சீரிய நோக்கம், பொறுமை, விடாமுயற்சி, வளமை, அக்கறை, உடல்திறன் மற்றும் குழு ஒருங்கிணைப்பு முதலில், உங்களிடம் இருக்கும் திறன்களை பட்டியலிட்டுக் கொள்ளுங்கள். அடுத்ததாக, நீங்கள் சேரக்கூடிய பணிக்குத் தேவையான திறன்கள் எவை என்று அடையாளம் கண்டு, அவற்றை மேம்படுத்திக் கொள்ளுங்கள்.
பொருத்தமான பணியைத் தேடுதல் உங்களுக்குப் பொருத்தமான பணியைத் தேடுவதில் பலவிதமான நுட்பங்களை கையாள வேண்டும். தொழில்முறை சார்ந்த நபர்களுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொள்ளுதல், ஆசிரியர்கள், பள்ளி மற்றும் கல்லூரித் தோழர்கள் மற்றும் பழைய மாணவர்கள் ஆகியோருடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளுதல், பலவிதமான இணையதளங்களில் தேடுதல் உள்ளிட்ட பலவிதமான வழிமுறைகளைப் பயன்படுத்தி, உங்களுக்கான பொருத்தமான பணியைத் தேடலாம்.

இன்று 2வது சந்திரகிரகணம்...


இந்த ஆண்டில் வரும் 2 வது சந்திரகிரகணம் இன்று இரவு முழுமையாக தெரியும். 51 நிமிடம் வரை நீடிக்கும் இந்த சந்திரகிரகணத்தை இந்தியாவில் தெளிவாக பார்க்க முடியும் என கோளரங்க நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். சூரியன், பூமி, சந்திரன் ஒரே நேர்கோட்டில் செல்லும்போது, பூமியின் நிழல் பகுதியில் சந்திரன் செல்கிறது. இதை சந்திர கிரகணம் என்கிறோம் கடந்த ஆண்டில் ஜூன் மாதம் 15 ம் தேதி வந்த சந்திரகிரகணம் நீண்ட நேரம் இருந்தது. இதுபோல் இன்று சந்திரகிரகணம் நடக்கிறது.

இது குறித்து மத்தியபிரதேச கோளரங்க இயக்குனர் தூரி கூறுகையில்: இது இந்தியாவில் வாழும் அனைவரும் பார்க்க அரிய வாய்ப்பு . இந்த நிகழ்வு மாலை 6.15 முதல் துவங்கி, இரவு 7.36 முதல் நிழல் தெரிய துவங்கும். தொடர்ந்து இரவு 8.27 வரை முழுமையாக மறைவது தெரியும் பின்னர் படிப்படியாக 9.48 க்குள் சீரடையும். ஆசியா, ஆஸ்திரேலியா, தென் அமெரிக்கா, மற்றும் அண்டார்டிகா பகுதியில் தெரியும். ஐரோப்பா மற்றும் ஆப்ரிக்காவில் ஆரம்ப கட்ட நிகழ்வுகளை பார்க்க முடியாது. கடந்த முறை பல இடங்களில் மேகங்கள் மறைந்தன . ஆனால் இந்த முறை அனைவரும் பார்க்கும் விதமாக அமையும் என்றார். இந்தியாவில் மீண்டும் ஒரு முழு சந்திரகிரகணத்தை பார்க்க வேண்டுமென்றால் இன்னும் ஏழு ஆண்டுகள் ( 2018 ஜூலை 27 ம் தேதி வரை) காத்திருக்க வேண்டும். இன்று மறக்காமா பாருங்க., 

கோயில்கள் நடை அடைப்பு : சந்திர கிரகணத்தை ஒட்டி இந்தியா முழுவதும் உள்ள கோயில்கள் நடை அடைக்கப்படுகிறது. சபரிமலை அய்யப்பன் கோவில் நடை, நான்கு மணிநேரம் அடைக்கப்படும். இங்கு தற்போது, மண்டல பூஜை உற்சவம் நடந்து வருகிறது. நாட்டின் பல பகுதிகளில் இருந்தும், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு, தரிசனம் செய்து வருகின்றனர். இன்று மாலை 6.15 மணிக்கு, தீபாராதனைக்குப் பின் அடைக்கப்படும்.

கணவனை மீட்ட புதிய சாவித்திரி ...

மேற்குவங்க மாநிலத் தலைநகர் கொல்கத்தாவில் உள்ள ஏ.எம்.ஆர்.ஐ. தனியார் மருத்துவமனையில் நிகழ்ந்த பயங்கர தீ விபத்தில் 90 பேர் உடல் கருதி பலியாகியுள்ளனர். ஏராளமானோர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்த நர்சுகள், போலீஸ்காரர், தீயணைப்பு வீரர் ஆகியோரும் நெருப்பில் சிக்கி பலியாகி உள்ளனர். இந்தநிலையில் இந்த விபத்தில் 30 வயது இளம் பெண் ஒருவர் துணிச்சலாக போராடி தனது கணவரை நெருப்பில் இருந்து காப்பாற்றி உள்ளார். அவரது பெயர் முன்னா. இவரது கணவர் ஸ்ரீபதா ஆச்சார்யா (வயது 35). இவர்கள் அரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி ஸ்ரீபதாவுக்கு தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டிருந்தது. இதற்கான மேல்சிகிச்சைக்காகவே ஸ்ரீபதா இந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். 

கணவருக்கு உதவியாக முன்னாவும் மருத்துவமனையில் தங்கியிருந்தார். தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த ஸ்ரீபதா, 4 நாட்களுக்கு முன்பு மூன்றாவது மாடியில் உள்ள சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார். இரவு நேரத்தில் முன்னா கீழ்தளத்தில் உள்ள பார்வையாளர் பகுதிக்கு சென்று உறங்குவது வழக்கம். இவ்வாறு நேற்று முன்தினம் 08.12.2011 அன்று முன்னா கீழ்தளத்தில் உள்ள பார்வையாளர்கள் பகுதிக்கு சென்று உறங்கினார். இந்நிலையில் 09.12.2011 அன்று அதிகாலை மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டது.புகைமூட்டம் மற்றும் அலறல் சத்தத்தை கேட்டு விழித்து எழுந்த முன்னாவுக்கு உடனடியாக கணவரின் கதி என்ன? என்ற அச்சம் எழுந்தது. ஒவ்வொருவரும் உயிரை காப்பாற்றிக்கொள்ள வெளியே ஓடிக்கொண்டிருந்தனர். இதனால் யாரும் அவருக்கு உதவ முன்வரவில்லை. இந்த சமயத்தில் தான் முன்னாவுக்கு துணிச்சல் வந்தது. எப்படியாவது கணவரை காப்பாற்றிவிட வேண்டும் என்ற உத்வேகத்தில் மாடிப்படிகள் வழியாக 3வது மாடியை நோக்கி ஓடினார். அப்போது நர்சுகள் சிலர் அவரை தடுத்தனர். காரணம் 3வது மாடி முழுவதும் புகை மூட்டமாக இருந்தது. தீ வேகமாக பரவிக் கொண்டிருந்தது. 

இருந்தாலும் முன்னா பயப்படவில்லை. 3 மாடிக்கு சென்று கணவர் அனுமதிக்கப்பட்டிருந்த வார்டுக்கு சென்று புகை மூட்டத்தின் நடுவே கணவரை தேடினார். ஒருவழியாக அவரை கண்டுபிடித்தார். அவரை அப்படியே அலாக்காக தூக்கி கொண்டு வெளியே வந்தார். நெருப்பு ஜூவாலைகளை கடந்து மாடிப் படிகளில் இறங்கினார். ஒருவழியாக இருவரும் வெளியே வந்ததும் முன்னா, அவரது கணவர் ஸ்ரீபதா ஆகிய இருவரது உடல் முழுவதும் தீக்காயங்கள் இருந்தன. முன்னாவின் துணிச்சலை அனைவரும் பாராட்டினர். அவர் துணிச்சலாக செயல்பட்டிருக்காவிட்டால் அவரது கணவர் தீயில் கருகி உயிரிழந்திருப்பார்.  தற்போது இவர்கள் இருவரும் வேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கள்ள தொடர்பு 3 மகள்களுடன் பெண் தற்கொலை!

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியை  சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி கவுரி. இவர்களுக்கு யமுனா, செல்வி, ரம்யா ஆகிய 3 பெண் குழந்தைகள் இருந்தனர். இவர்கள் பொள்ளாச்சியில் அரசு விடுதியில் தங்கி படித்து வந்தனர். கவுரி கடந்த 3 மாதங்களுக்கு முன் திருப்பூர் வந்தார். திருப்பூர் பெரிச்சிப்பாளையம் அண்ணமார் காலனியில் வாடகைக்கு வீடு எடுத்து  வசித்து வந்தார்.  நேற்று முன்தினம் இரவு கவுரி தனது மகள்கள் யமுனா, செல்வி, ரம்யா ஆகியோரை திருப்பூருக்கு வரவழைத்தார். குழந்தைகளுக்கு  சாப்பாட்டில்  விஷம் கலந்து கொடுத்தார். பின்னர் தானும் சாப்பிட்டார். இதில் 4 பேரும் மயங்கி விழுந்து   இறந்தனர். நேற்று மாலை வரை வீடு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் ஜன்னல் வழியாக எட்டி பார்த்தனர். அப்போது கவுரி உள்பட 4 பேரும்  இறந்து  கிடந்ததை கண்டு  திடுக்கிட்டனர். 

இது குறித்து திருப்பூர் தெற்கு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.  போலீசார்  4 பேரின் பிணங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அப்போது கள்ளக்காதல் விவகாரத்தில் கவுரி தனது மகள்களுக்கு விஷம் கொடுத்து தானும் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. 18 வருடத்துக்கு முன் கவுரி ஒருவரை  காதலித்து வந்துள்ளார். ஆனால் பெற்றோர் இந்த காதலை ஏற்றுக் கொள்ளவில்லை. கவுரியை ரமேசுக்கு திருமணம் செய்து கொடுத்தனர். அவருடன் கவுரி குடும்பம் நடத்தி வந்தார். 

இந்த நிலையில் கவுந்தப்பாடியில் உள்ள உறவினர் வீட்டு திருமணத்துக்கு கவுரி சென்றார். அப்போது பழைய காதலனை  சந்தித்தார்.  பின்னர் இருவருக்கும் கள்ள தொடர்பு ஏற்பட்டது. இதனை அறிந்த ரமேஷ் மனைவியை விட்டு பிரிந்து சென்றார்.  கள்ளக்காதலன்  தான் கவுரியை திருப்பூரில் தனிக்குடித்தனம் வைத்தார். அடிக்கடி வந்து சென்றதாகவும் கூறப்படுகிறது. கடந்த வாரம் கவுரி கவுந்தப்பாடி சென்றார். அப்போது அவரது கள்ளக்காதல் பற்றி உறவினர்கள் கேவலமாக பேசினர். இதனால் கவுரி அவமானம் அடைந்தார். மகள்களுக்கு விஷம்  கொடுத்து தானும் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்து கொண்ட  கவுரி கடிதம் எழுதி வைத்துள்ளார். அதில் கூறி இருப்பதாவது:  அப்பா, அம்மா மற்றும் சொந்த பந்தங்கள் யார் என்ன சொன்னாலும் சரி. நாங்கள் இருவரும் அடுத்த ஜென்மத்திலாவது இணை பிரியாமல் இருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன். எனது சாவுக்கு யாரும் காரணம் அல்ல. இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

மது சப்ளையுடன் கல்லூரி மாணவிகளின் ஆபாச நடன கிளப்புகள்!

சென்னையில் ஆபாச நடன கிளப்புகள் பெருகி வருகின்றன. கலாச்சார நடனம் என்ற பெயரில் அனுமதி வாங்கி இந்த கிளப்புகளை நடத்துகிறார்கள். சிந்தாதிரிப்பேட்டையிலும், அண்ணாசாலையில் உள்ள சாந்தி தியேட்டர் அருகிலும், ராயப்பேட்டையிலும் நடக்கும் இந்த கிளப்புகளில் கல்லூரி மாணவிகளை ஆபாச நடனம் ஆட வைப்பதாக ஜான்சிராணி பெண்கள் பாதுகாப்பு சங்கத்தலைவியும் மனித உரிமைகள் கழக சர்வதேச அமைப்பின் மகளிர் அணி தலைவியுமான கல்பனா கண்டித்துள்ளார்.
 
இந்த கிளப்புகளில் மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை நடன நிகழ்ச்சி நடத்துகின்றனர். இதற்கு ஒருவருக்கு ரூ.300 கட்டணம் வசூலிக்கிறார்கள். அதற்கு ரசீது கொடுப்பது இல்லை. மாடியில் நடக்கும் இந்த கிளப்புகளின் அருகிலேயே டாஸ்மாக் மதுபான கடைகள் உள்ளன. அங்கிருந்து மது வாங்கி குளிர்பானத்தில் கலந்து நடன நிகழ்ச்சியை பார்ப்போருக்கு வினியோகிக்கின்றனர். அதற்கு தனியாக பணம் வாங்குகிறார்கள் கல்லூரி மாணவிகளை கலாச்சார நடனம் என்ற பெயரில் ஏமாற்றி அழைத்து வந்து ஆபாச நடனம் ஆட வைக்கின்றனர். 15 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவிகளையும் ஆட வைக்கிறார்கள். அவர்களுக்கு போதையில் இருக்கும் வாடிக்கையாளர்கள் கைகளை தொட்டு டிப்ஸ் என்ற பெயரில் பணத்தை அள்ளி கொடுக்கின்றனர். அந்த பணத்தையும் கிளப் நடத்துபவர்களே பிடுங்கி கொள்கிறார்கள்.

 
இந்த பெண்களிடம் மொபைல் நம்பர்களை வாடிக்கையாளர்கள் வாங்கி செல்கின்றனர். இதன் மூலம் அவர்களின் எதிர்காலம் தடம் புரளும் பரிதாப நிலைமை ஏற்படுகிறது. கலாச்சார சீரழிவை ஏற்படுத்தி இளம்பெண்கள் வாழ்க்கைக்கு வேட்டு வைக்கும் இந்த நடன கிளப்புகள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கல்பனா வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளார். ஆபாச நடன கிளப்புகளை மூடக்கோரி அவற்றின் முன்னால் விரைவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். சம்பந்தப்பட்டவர்கள் மீது பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...