இந்திய வரலாற்றையும், பழமையான நினைவுச் சின்னங்களையும் பள்ளி மாணவர்களுக்கு கற்பிக்க ஏதுவாக சிபிஎஸ்இ, வரலாற்று டிவி சேனல் ஒன்றுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இந்திய வரலாற்றை கற்பிக்கும் முயற்சியில் சிபிஎஸ்இ ஈடுபட்டுள்ளது. இந்த முயற்சியில் சுமார் 1000 பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு வரலாறு தொடர்பான வினாடி-வினா நிகழ்ச்சிகளை நடத்துவது போன்றவை இடம்பெறும். மேலும், இந்திய முயற்சியில் யுனெஸ்கோவும் இணைந்து கொண்டுள்ளது என்று சிபிஎஸ்இ தலைவர் வினீத் ஜோஷி கூறியுள்ளார். பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இந்தியாவின் வரலாறும், புகழ்பெற்ற நினைவுச் சின்னங்களையும் எளிதாக கற்பிப்பதற்காக இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த புதிய முயற்சியினால் நிச்சயம் எதிர்பார்த்த பலன் கிடைக்கும் என்று நம்புகிறோம். கல்வியோடு சேர்த்தே நமது வரலாற்றை கற்பிற்கும் இந்த திட்டத்தினால், நமது பாரம்பரியமும், கலாச்சாரமும் பாதுகாக்கப்படும் என்றார் ஜோஷி.
No comments:
Post a Comment