இந்த ஆண்டில் வரும் 2 வது சந்திரகிரகணம் இன்று இரவு முழுமையாக தெரியும். 51 நிமிடம் வரை நீடிக்கும் இந்த சந்திரகிரகணத்தை இந்தியாவில் தெளிவாக பார்க்க முடியும் என கோளரங்க நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். சூரியன், பூமி, சந்திரன் ஒரே நேர்கோட்டில் செல்லும்போது, பூமியின் நிழல் பகுதியில் சந்திரன் செல்கிறது. இதை சந்திர கிரகணம் என்கிறோம் கடந்த ஆண்டில் ஜூன் மாதம் 15 ம் தேதி வந்த சந்திரகிரகணம் நீண்ட நேரம் இருந்தது. இதுபோல் இன்று சந்திரகிரகணம் நடக்கிறது.
இது குறித்து மத்தியபிரதேச கோளரங்க இயக்குனர் தூரி கூறுகையில்: இது இந்தியாவில் வாழும் அனைவரும் பார்க்க அரிய வாய்ப்பு . இந்த நிகழ்வு மாலை 6.15 முதல் துவங்கி, இரவு 7.36 முதல் நிழல் தெரிய துவங்கும். தொடர்ந்து இரவு 8.27 வரை முழுமையாக மறைவது தெரியும் பின்னர் படிப்படியாக 9.48 க்குள் சீரடையும். ஆசியா, ஆஸ்திரேலியா, தென் அமெரிக்கா, மற்றும் அண்டார்டிகா பகுதியில் தெரியும். ஐரோப்பா மற்றும் ஆப்ரிக்காவில் ஆரம்ப கட்ட நிகழ்வுகளை பார்க்க முடியாது. கடந்த முறை பல இடங்களில் மேகங்கள் மறைந்தன . ஆனால் இந்த முறை அனைவரும் பார்க்கும் விதமாக அமையும் என்றார். இந்தியாவில் மீண்டும் ஒரு முழு சந்திரகிரகணத்தை பார்க்க வேண்டுமென்றால் இன்னும் ஏழு ஆண்டுகள் ( 2018 ஜூலை 27 ம் தேதி வரை) காத்திருக்க வேண்டும். இன்று மறக்காமா பாருங்க.,
கோயில்கள் நடை அடைப்பு : சந்திர கிரகணத்தை ஒட்டி இந்தியா முழுவதும் உள்ள கோயில்கள் நடை அடைக்கப்படுகிறது. சபரிமலை அய்யப்பன் கோவில் நடை, நான்கு மணிநேரம் அடைக்கப்படும். இங்கு தற்போது, மண்டல பூஜை உற்சவம் நடந்து வருகிறது. நாட்டின் பல பகுதிகளில் இருந்தும், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு, தரிசனம் செய்து வருகின்றனர். இன்று மாலை 6.15 மணிக்கு, தீபாராதனைக்குப் பின் அடைக்கப்படும்.
அருமையான பகிர்வுக்கு நன்றி
ReplyDelete