சங்க இலக்கியங்களில் பெண்களின் கழுத்தை சங்கோடும், அன்னப் பறவையோடும் ஒப்பிட்டுள்ளனர். பெண்களின் அழகிற்கு மேலும் அழகூட்டுவது கழுத்து என்றால் மிகையாகாது. கழுத்தானது மிகவும் உணர்ச்சிகரமான பகுதியாகும். ஒவ்வொரு பெண்ணும் தங்களின் முக அழகைச் சிரத்தையோடு பராமரிக்கும் அளவிற்கு கழுத்தினைப் பராமரிக்கக் காட்டுவதில்லை. பல பெண்களுக்கு அழகான வளவளப்பான முகம் இருக்கும். ஆனால் கழுத்து மட்டும் சுருக்கங்களோடு சொரசொரப்பானதாக இருக்கும். முகத்தை அழகாகப் பராமரிக்க முடியும்போது கழுத்தைப் பராமரிப்பதும் சாத்தியம் தான்.
மருத்துவ ரீதியான பிரச்சினைகள் மருத்துவ ரீதியான பிரச்சினைகளும் கழுத்து கருப்பாக இருப்பதற்குக் காரணமாக இருக்கலாம். வழக்கமான இந்தப் பராமரிப்பு முறைகள் எதுவும் இதற்கு உதவாது. எனவே தோல் சிகிச்சை நிபுணரைப் பார்க்கலாம். கழுத்தின் பின் பகுதிக்கும் இந்தப் பராமரிப்பு முறைகள் மிக அவசியம். மென்மையான கழுத்துப் பகுதியை நீங்கள் கவனிக்காமல் விட்டுவிட்டால் தோலின் தன்மை மிருதுவான தன்மையை இழக்கும். சுருக்கங்களோடு முரட்டுத்தனமான தோற்றத்தைக் கொடுக்கும்.
கழுத்தினை கழுவுங்கள் எப்பொழுதெல்லாம் முகத்தைக் கழுவுகிறீர்களோ அப்பொழுது கழுத்தையும் சுத்தப்படுத்துங்கள். சுத்தப்படுத்தும் க்ரீம்களாலேயே மசாஜ் செய்யுங்கள். காட்டனால் துடைத்தெடுங்கள். இப்பொழுது உங்கள் பேஷ் வாஷ் க்ரீம்களால் முகத்தையும் கழுத்தையும் கழுவுங்கள். பிறகு ஒரு மாய்ச்சரைசிங் க்ரீமால் மசாஜ் செய்யுங்கள்.
இயற்கை மூலிகைகள் இயற்கை மூலிகைகளைக் கொண்டு செய்யும் ப்ளீசிங் மற்றும் பேஷியலுமே சிறந்தவை. அதுதான் முகத்தையும் தோலின் தன்மையும் நல்ல முறையில் பாதுகாக்கும். பேஷியலோடு மசாஜ் செய்யும்போது கழுத்துப் பகுதியிலுள்ள தோலை மென்மையாக்குவதோடு இரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது. பச்சரிசி விழுதாக அரைத்துக் கழுத்தில் மருக்கள் உள்ள இடங்களில் போட்டு வந்தால், அவை குறையும். கழுத்தில் அணியும் செயின்களை சோப்பும், எலுமிச்சம் பழச்சாறும் கலந்த தண்ணீரில் போட்டு வாரத்திற்கொரு முறை சுத்தப்படுத்த வேண்டும். ரக்த சந்தனம், முல்தானி மிட்டி, பன்னீர், கிளிசரின் ஆகிய அனைத்தையும் கலந்து கழுத்தின் பின் பக்கத்தில் தடவி அரை மணி நேரம் ஊறவும். பிறகு கழுவி விடவும். பின்னங்கழுத்து கருமையைப் போக்க இது உதவும்.
குங்குமப் பூ பாலடை பாலாடையுடன் சிறிதளவு குங்குமப் பூ கலந்து கழுத்தின் முன் பகுதி மற்றும் தொண்டை ஆகிய இடங்களில் தடவவும். பதினைந்திலிருந்து முப்பது நிமிடங்கள் வரை காத்திருந்து கழுவிடவும். இது கழுத்தை நிறமாகவும், மென்மையாகவும் வைத்திருக்க உதவும். ஒரு முட்டையின் வெள்ளைக் கருவுடன், ஒரு டீஸ்பூன் தேன் கலந்து கழுத்தில் தடவி, முப்பது நிமிடங்கள் கழித்துக் கழுவினால் கழுத்து சுருக்கங்களின்றியும், அழகாகவும் இருக்கும். கழுத்தில் ஏற்படும் கோடுகளைத் தவிர்க்க, பர்மிங் ஜெல் அல்லது டைட்டனிங் ஜெல் தடவலாம். இப்போது பிரபலமாகி வரும் அரோமா தெரபி சிகிச்சையில் கழுத்தின் அழகைப் பராமரிக்கக் கூட பிரத்யேக எண்ணெய்கள் உள்ளன.
பேஷியல் அவசியம்பேஷியல் செய்வதற்கான ப்யூட்டி பார்லர்களுக்குப் போனால் கழுத்து, முகம் இரண்டிற்கும் பேஷியல் செய்யச் சொல்லவேண்டும். ஏனெனில் அது மிகப்பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும். வீட்டிலிருக்கும் போது முகத்தில் பேஸ் பேக் அணிவதை விரும்பினால் அதையே கழுத்திற்கும் சேர்த்துச் செய்யுங்கள். கழுத்திற்குப் போடுவது கொஞ்சம் சிரமம் தான். யாரையாவது அப்ளை பண்ணச் சொல்லலாம். 15 நிமிடங்களுக்குப் பிறகு அதனைக் கழுவுங்கள். அப்புறம் பாருங்கள் உங்கள் கழுத்து காண்பவரை கவர்ந்திழுக்கும் வகையில் பளபளக்கும்.
No comments:
Post a Comment