|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

10 December, 2011

கள்ள தொடர்பு 3 மகள்களுடன் பெண் தற்கொலை!

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியை  சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி கவுரி. இவர்களுக்கு யமுனா, செல்வி, ரம்யா ஆகிய 3 பெண் குழந்தைகள் இருந்தனர். இவர்கள் பொள்ளாச்சியில் அரசு விடுதியில் தங்கி படித்து வந்தனர். கவுரி கடந்த 3 மாதங்களுக்கு முன் திருப்பூர் வந்தார். திருப்பூர் பெரிச்சிப்பாளையம் அண்ணமார் காலனியில் வாடகைக்கு வீடு எடுத்து  வசித்து வந்தார்.  நேற்று முன்தினம் இரவு கவுரி தனது மகள்கள் யமுனா, செல்வி, ரம்யா ஆகியோரை திருப்பூருக்கு வரவழைத்தார். குழந்தைகளுக்கு  சாப்பாட்டில்  விஷம் கலந்து கொடுத்தார். பின்னர் தானும் சாப்பிட்டார். இதில் 4 பேரும் மயங்கி விழுந்து   இறந்தனர். நேற்று மாலை வரை வீடு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் ஜன்னல் வழியாக எட்டி பார்த்தனர். அப்போது கவுரி உள்பட 4 பேரும்  இறந்து  கிடந்ததை கண்டு  திடுக்கிட்டனர். 

இது குறித்து திருப்பூர் தெற்கு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.  போலீசார்  4 பேரின் பிணங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அப்போது கள்ளக்காதல் விவகாரத்தில் கவுரி தனது மகள்களுக்கு விஷம் கொடுத்து தானும் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. 18 வருடத்துக்கு முன் கவுரி ஒருவரை  காதலித்து வந்துள்ளார். ஆனால் பெற்றோர் இந்த காதலை ஏற்றுக் கொள்ளவில்லை. கவுரியை ரமேசுக்கு திருமணம் செய்து கொடுத்தனர். அவருடன் கவுரி குடும்பம் நடத்தி வந்தார். 

இந்த நிலையில் கவுந்தப்பாடியில் உள்ள உறவினர் வீட்டு திருமணத்துக்கு கவுரி சென்றார். அப்போது பழைய காதலனை  சந்தித்தார்.  பின்னர் இருவருக்கும் கள்ள தொடர்பு ஏற்பட்டது. இதனை அறிந்த ரமேஷ் மனைவியை விட்டு பிரிந்து சென்றார்.  கள்ளக்காதலன்  தான் கவுரியை திருப்பூரில் தனிக்குடித்தனம் வைத்தார். அடிக்கடி வந்து சென்றதாகவும் கூறப்படுகிறது. கடந்த வாரம் கவுரி கவுந்தப்பாடி சென்றார். அப்போது அவரது கள்ளக்காதல் பற்றி உறவினர்கள் கேவலமாக பேசினர். இதனால் கவுரி அவமானம் அடைந்தார். மகள்களுக்கு விஷம்  கொடுத்து தானும் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்து கொண்ட  கவுரி கடிதம் எழுதி வைத்துள்ளார். அதில் கூறி இருப்பதாவது:  அப்பா, அம்மா மற்றும் சொந்த பந்தங்கள் யார் என்ன சொன்னாலும் சரி. நாங்கள் இருவரும் அடுத்த ஜென்மத்திலாவது இணை பிரியாமல் இருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன். எனது சாவுக்கு யாரும் காரணம் அல்ல. இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...