|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

25 January, 2013

popular halloween songs & dance.


Kozhi Koovuthu 2012 Tamil Movie DVD



Kalakalappu Movie


புரிந்து கொண்டவர்கள் சொல்லுங்கள் பார்போம்!

தமிழகத்தில் இருந்து ஆந்திரா பக்கம் உள்ள திருத்தலங்களுக்கு பயணம் மேற்கொள்பவர்கள் மொழிப்பிரச்னை காரணமாக திண்டாடக்கூடாதே என்பதற்காக அவர்களுக்கு தெரிந்த அளவில் தமிழில் எழுதிவைத்துள்ளனர்.,பாராட்டவேண்டிய விஷயம்தான்,ஆனால் எழுதும்போது தமிழ் நன்கு தெரிந்தவர்களை வைத்து எழுதுவது நல்லது.இதில் என்ன எழுதி உள்ளார்கள் என்பதை புரிந்து கொண்டவர்கள் சொல்லுங்கள் பார்போம்.

தமிழுக்கே பெருமை!

பள்ளிக்கல்வியை தமிழ் மீடியத்தில் படித்து, "சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட்' தேர்வில், அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்தது பெருமையாக உள்ளது,'' என, மும்பையில் ஆட்டோ ஒட்டும் தமிழகத்தை சேர்ந்த, டிரைவர் மகள் பிரேமா நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரம் அடுத்த பெரிய கொள்ளியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயக்குமார், 53; ஆட்டோ டிரைவர். மும்பையில், மலாட் எஸ்.பி., கான்சால் என்ற பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மனைவி லிங்கம்மாள், 45, மகள்கள் மகாலட்சுமி, 27, பிரேமா, 25, மகன் தன்ராஜ், 23. மகாலட்சுமிக்கு திருமணம் ஆகிவிட்டது.
 
கடந்த, 20 ஆண்டுகளுக்கு முன், பெரிய கொள்ளியூரில் விவசாய கூலிவேலை செய்து வந்த ஜெயக்குமார், போதிய வருவாய் கிடைக்காததால், தன் மைத்துனர் குப்புசாமி என்பவர் ஆதரவுடன், 1990ம் ஆண்டு, மும்பைக்கு பிழைப்பு தேடி சென்றார். துணி நெசவு செய்யும் ஆலையில் பணிபுரிந்தார். அதிலும் எதிர்பார்த்த வருவாய் கிடைக்காததால், ஆட்டோ ஓட்டுனரானார். அதன் மூலம் கிடைத்த வருவாயை கொண்டு, சொந்தமாக ஆட்டோ வாங்கி, தன் குழந்தைகளை படிக்க வைத்தார். இத்தனை சிரமமான சூழலுக்கு இடையே படித்த, இவரது இரண்டாவது மகள் பிரேமா, "சார்ட்டட் அக்கவுன்டன்ட்' தேர்வில், 800க்கு, 607 மதிப்பெண்கள் எடுத்து, அகில இந்திய அளவில், முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
 
இதுகுறித்து, பிரேமா என் வெற்றியை பெற்றோரின் பாதங்களில் சமர்ப்பிக்கிறேன். அவர்கள் இல்லை என்றால், என்னால், இச்சாதனையை பெற்று இருக்க முடியாது. வறுமையான சூழலிலும், எங்களை படிக்க வைக்க வேண்டும், என்று பல தியாகங்களை செய்தனர்.ஒன்று முதல், 7ம் வகுப்பு வரை, மலாடு நகராட்சி பள்ளியில், தமிழ் மீடியத்தில் படித்தேன். ஆங்கில பாடத்தை தவிர்த்து, மற்ற அனைத்து பாடங்களையும், தமிழில் தான் கற்றேன்.
 
அதன்பின், மலாடு செகன்டரி பள்ளியில், 8 முதல், 10ம் வகுப்பு வரை, தமிழ் பாடத்தை தவிர மற்ற பாடங்களை, ஆங்கில மீடியத்தில் படித்தேன். என்.எல்., காலேஜில், பிளஸ் 2 முடித்து, நாகின்தாஸ் கண்டவாலி கல்லூரியில், பி.காம்., முடித்தேன். அதன்பின் மும்பை பல்கலையில் எம்.காம்., பட்டம் பெற்றேன்.எனக்கு திருமண ஏற்பாடுகளை செய்தபோது, அக்கவுன்டன்ட் படிப்பில் பெரிய அளவில் சாதிக்க வேண்டும் என்ற, என் விருப்பத்தை தந்தையிடம் கூறினேன். அதை மறுக்காமல், அதற்கான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தார்.என் தம்பி தன்ராஜும், பி.காம்., முடித்து, சி.ஏ., தேர்வை எழுத விரும்பியதால், இருவரும் சேர்ந்தே படித்தோம். மலாட் பகுதியில் வாடகை குடியிருப்பில் உள்ள எங்கள் வீடு சிறியது. அதில் நாங்கள் இருவரும், இரவில் கண் விழித்து படிக்க தேவையான வசதிகளை, என் தாய் ஏற்படுத்தி தந்தார். "டிவி' இணைப்பை துண்டித்து, படிப்பிற்கு உதவி செய்தனர்.
 
எங்களின் முயற்சிக்கு ஆசிரியர்களும் பல உதவிகளை செய்தனர். சி.ஏ., படிப்பில் இந்திய அளவில் சாதிக்க வேண்டும் என்ற குறிக்கோள் எனக்குள் இருந்தது. இதில் அகில இந்திய அளவில் முதலிடம் பெற்றது, என் பெற்றோரின் தியாகத்திற்கும், என் விடா முயற்சிக்கும் கிடைத்த வெற்றியாக நினைக்கிறேன். தன்ராஜூம் சி.ஏ., படிப்பில் தேர்ச்சியடைந்தது, இரட்டிப்பு மகிழ்ச்சி.மிகுந்த ஏழ்மையான நிலையில், மும்பைக்கு பிழைப்பு தேடி வந்தபோது, ஆதரவு அளித்த என் தாய்மாமன்கள் குப்புசாமி, பெருமாள் இவர்களின் உதவியை மறக்க முடியாது.தமிழ் மீடியத்தில் படித்த நான், சி.ஏ., படிப்பில் சாதனை படைத்ததை பெருமையாக கருதுகிறேன். தாய் மொழியான தமிழும், சொந்த ஊரும் என் அடையாளங்கள் என்பதை மறக்க மாட்டேன். சூழ்நிலை எப்படி இருந்தாலும், சரியான வகையில் முயன்றால் வெற்றி கிடைக்கும் என்பதை அனுபவபூர்வமாக தெரிந்து கொண்டேன்.நல்ல நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து, விரைவில் என் தந்தைக்கு ஓய்வு கொடுக்க வேண்டும். படிக்க ஆர்வம் இருந்தும், பணமின்றி கஷ்டப்படும் மாணவர்களுக்கு எதிர்காலத்தில் உதவி செய்ய விரும்புகிறேன். சி.ஏ., படிப்பில் சாதிப்பதற்கான முறைகளை, இப்படிப்பை தேர்வு செய்து படிப்பவர்களுக்கு கூறி, வழிகாட்ட தயாராக இருக்கிறேன்.இவ்வாறு, சாதனையாளர் பிரேமா நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

உலகில் மிக மோசமான விமான சேவை இந்தியாவின் ஏர் இந்தியா 3 ம் இடம்!

உலக அளவில் விமான சேவை தொடர்பான ஆய்வு நடத்தப்பட்டதில் இந்தியாவின் ஏர் இந்தியா மோசமான விமான சேவை பட்டியிலில் 3 ம் இடம் கிடைத்துள்ளளது. இதில் சீனா ஏர்லைன்ஸ் மிக மோசமானது என்ற பெயருடன் முதலிடம் பிடித்துள்ளது. ஹம்பர்க்கை மையமாக கொண்டு ஜெட் ஏர்லைன் விபத்து மற்றும் விவரம் குறித்த மையம் ( ஜே ஏ. சி.டி. இ. சி, ) நடத்திய ஆய்வு அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை நடந்துள்ள விபத்துக்களை கணக்கில் கொண்டு இந்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
பாதுகாப்பான சேவை வழங்குவதில் ஐரோப்பாவின் பின்லாந்தில் உள்ள பின்ஏர் நிறுவனம் முதலிடத்தில் உள்ளது. ஏர் நியூஸிலாந்து, கேதே பசிபிக், எமிரேட்ஸ் ஏர் நிறுவனங்கள் சிறந்த சேவை தரும் பட்டியலில் முறையாக 2, 3 மற்றும் 4 ம் இடங்களை பிடித்துள்ளது. உலகின் மிக பாதுகாப்பு குறைந்த விமான சேவைகள் பட்டியலில் ஏர் இந்தியா விமான சேவைக்கு மூன்றாவது இடம் கிடைத்துள்ளது. முதல் 10 இடங்களில் உள்ள எந்தவொரு விமான சேவையும் கடந்த 30 வருடங்களில் ஒரு முறை கூட விமான விபத்துக்களை சந்தித்ததில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகில் ஆபத்தான மிக பாதுகாப்பு குறைந்த விமான சேவையாக முதலாவது இடத்தில் சீனா ஏர்லைன்ஸ், இரண்டாவது இடத்தில் டாமின் ஏர்லைன், மூன்றாமிடத்தில் இந்திய ஏர் இந்திய நிறுவனம் இடம் பிடித்துள்ளது. இந்த ஆய்வில் சமீபத்திய விபத்துக்கள் குறித்தும் ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளது
 

உங்கள் குழந்தையை நேசியுங்கள்!


1. தாயாக இருப்பது சில நேரங்களில் சற்று சவாலானதாகவே இருக்கும். அதனால் எப்போதும் அமைதியாகவும் மற்றும் பொறுமையாகவும் இருக்க முயற்சி செய்யுங்கள். மேலும் அவர்கள் ஏதாவது குறும்பு செய்தால், அதை ஏன் செய்யக் கூடாது என்பதற்கான காரணத்தைப் பொறுமையாக எடுத்துச் சொல்லி புரிய வைக்க வேண்டும். 
 
2. உங்கள் குழந்தைகளின் விருப்பங்களில் கவனம் செலுத்துங்கள். உங்கள் குழந்தைக்கு இசையில் விருப்பமிருந்தால், அவனுக்காக ஏதேனும் ஒரு இசைக்கருவியை வாங்கிக் கொடுத்து, அவர்கள் வாசிப்பதை கவனியுங்கள். குழந்தை கோபமாக இருந்தால், அப்போது அவர்களிடம் மனம் விட்டு பேசி, அவர்களுக்கு ஒரு நல்ல தோழனாக இருக்க வேண்டும். 
 
 3. பணவிஷயத்தில் மிகவும் சரியாக இருக்க வேண்டாம். ஒவ்வொரு நாளும் பணத்தை கொடுப்பது சரியில்லைதான், அதற்காக உங்கள் குழந்தை கேட்கும் எந்தவொரு விருப்பத்தையும் உடனே முடியாது என்று நிராகரிக்க வேண்டாம். எதைக்கேட்டாலும் முடியாதென்றும், எப்போதும் பணத்தை சேமிப்பது பற்றிய அறிவுரைகளை சொல்லி, எந்த ஒரு பொருளையும் வாங்கிக் கொடுக்காமல் இருந்தால், பின் அவர்கள் மனதில் உங்கள் மீது இருக்கும் அன்பு குறைய நேரிடும். எனவே அவ்வப்போது ஏதேனும் விருப்பமானதை வாங்கிக் கொடுக்க வேண்டும். 
 
 4. உங்களை எப்பொழுதும் அவர்களுடன் பேசுவதற்கு ஏற்ற நபராக வைத்துக் கொள்வதில் உறுதியாக இருங்கள். எப்பொழுதும் புரிந்துகொள்ளக் கூடியவராகவும் மற்றும் அவர்கள் பேசுவதை செவிகொடுத்து கேட்பவராகவும் இருப்பதற்கு, உங்களால் முடிந்தவரை கடினமான முயற்சிகளை எடுங்கள். அம்மாவிடம் நட்புடன் ஆலோசனை கேட்பதும், வயதுக்கு வருவது பற்றிய சந்தேகங்களை கேட்கவும், வீட்டுவேலைகளில் உதவி செய்யவும், அல்லது சாதாரணமாக அம்மாவை கட்டிப்பிடிப்பதும் அவர்களுக்கு தெரியும். தங்களிடம் பேசுவதற்கு யாரும் இல்லாமலிருந்தால், பின் குழந்தைகள் தனிமையிலேயே இருப்பார்கள். எனவே அவ்வப்போது அவர்களிடம் பேசும் வழக்கத்தை கொள்ள வேண்டும். 
 
 5. குழந்தைகளுக்கு ஆதரவாக இருக்க வேண்டும். உங்கள் குழந்தைக்கு மருத்துவம் படிப்பதிலோ அல்லது மருத்துவராக ஆவதிலோ விருப்பம் இல்லையென்றால், அப்போது கோபப்பட வேண்டாம். உங்கள் மகளின் எண்ணம் உங்களுடையதிலிருந்து மாறுபடுவதை ஏற்றுக் கொள்ளுங்கள். மேலும் குழந்தைகளை எப்போதுமே குழந்தையாக எண்ணாமல், அவர்களின் வயதிற்கு ஏற்றவாறு மாறுங்கள். ஏனெனில் அவர்களுடைய வாழ்க்கையில் ஏற்கனவே பெரியளவில் பங்கேற்றிருக்கிறீர்கள். அதனால் அதனையே திரும்பவும் செய்ய வேண்டாமே! 
 
6. தவறு செய்தால் அதனை ஏற்றுக்கொள்ளுங்கள் மற்றும் மன்னிப்பு கேட்க பயப்படாதீர்கள். இது கடினமாகத்தான் இருக்கும். ஆனால் உங்கள் தவறை நீங்கள் ஒப்புக் கொள்வதும் மன்னிப்பு கேட்பதும் அனைவருக்கும் நன்மையாக இருக்கும். நீங்கள் பிடிவாதமாக இல்லாமலிருந்தால் அது மற்றவர்கள் உங்கள் மேல் கோபப்படுவதை தடுக்கும். மேலும் குழந்தைகளுக்கு மன்னிப்பு கேட்பதன் முக்கியத்துவத்தையும் கற்றுக் கொடுங்கள். 
 
7. குழந்தை தனது தந்தையை நேசிப்பதற்கு மதிப்பளித்திடுங்கள். உங்கள் குழந்தை, அவர்களது தந்தையை அளவுக்கு அதிகமாக நேசிப்பதைப் பார்த்து பொறாமைப்படக் கூடாது. 
 
8. இறுதியாக, மற்ற எல்லாவற்யையும் விட உங்கள் குழந்தைகளை அதிகமாக நேசியுங்கள். அவர்களை நேசிக்காமல், உங்கள் வாழ்க்கையில் நீங்கள் செய்யும் எந்தவொரு செயலும் அர்த்தம் தராது. எந்த நேரத்திலும் குழந்தைகளை நேசித்தால், அவர்களது மனதில் எக்காலத்திலும் பெற்றோர்களை மறக்காமல் நேசிப்பார்கள்.

 

வடிகாலை ஏற்படுத்திக் கொள்வோம்...

பெண்கள் ஏதேனும் பிரச்னையில் இருக்கும் போது அதனை மற்றவரிடம் கூறுவதால் அவர்கள் மன நிம்மதி அடைகின்றனர். இதற்கு அவர்களின் ஹார்மோன்களே காரணம். இது பெண்களின் பலவீனமல்ல. பலம்தான். இதனால், அவர்கள் ஒரு பிரச்னையை சரியாக அணுக வழி வகை செய்கிறது. எனவே, நமக்கே நமக்கு என்று ஒரு வடிகாலை, சரியான தோழியை, நண்பரை பெற்றுக் கொள்வோம். எதையும் மனம் திறந்து ஒருவரிடம் பேசும் போது நமது குற்றம் குறைகளை நாமே உணர வழி ஏற்படும்.

வெளியே வந்து சிந்திப்போம்.

ஒரு பிரச்னைக்கு அதன் உள்ளேயே தீர்வு இருக்கிறது. ஆனால், பிரச்னைக்கு உள்ளேயே இருந்து கொண்டு நாம் தீர்வை தேடக் கூடாது. அதை விட்டு வெளியே வந்து அதற்கான தீர்வை தேடினால் விரைவில் அதனை தீர்த்துவிடலாம். எனவே, ஏதேனும் ஒரு மன குழப்பம் ஏற்பட்டால், உடனடியாக அதைப் பற்றியே சிந்தித்து மூளை குழம்பி போகாமல், அதில் இருந்து விடுபட்டு, சிறிது ஓய்வு எடுத்துவிட்டு பிறகு அதைப் பற்றி அமைதியாக சிந்தியுங்கள். உடனடியாக ஒரு ஐடியா தோன்றும். அதனை செயல்படுத்தினால் வெற்றி நிச்சயம்.

ஒரு வேலையை செய்யச் சொல்லி கட்டாயப்படுத்துவதும் தவறுதான்!

ஒருவர் நம்மிடம் ஒரு விஷயத்தைக் கூறும் போது அதனை நாம் மறுப்பதால், அவர்களுக்கு எதிராக நாம் செயல்படுவதாக அவர்கள் அர்த்தம் கொண்டுவிடுவார்களோ என்று நீங்கள் நினைப்பீர்கள். அதுதான் தவறு. ஒரு வேலையை ஆரம்பத்திலேயே மறுப்பதால், நம்மிடம் வேலை செய்யச் சொன்னவருக்கு மிகப்பெரிய பாதிப்போ, அதிருப்தியோ ஏற்பட்டுவிடாது. அதையே அரைகுறையாக செய்துவிட்டு, அதன்பிறகு அதனை செய்ய ஆர்வமில்லை என்பதை வெளிப்படுத்தினால்தான் பிரச்னை ஏற்படும். எனவே எதையும் ஆரம்பத்திலேயே தெரிவித்துவிட்டால் நல்லது.

பணிவோடு சொல்லலாம்முடியாது, வேண்டாம், கூடாது என்பது போன்ற வார்த்தைகளை பணிவோடு கூறலாம். இது தான் காரணம், எனவே என்னால் இதனை செய்ய இயலாது, என் சூழ்நிலை இப்படி இருப்பதால் என்னால் செய்ய முடியாது என்று பணிவோடு ஒரு விஷயத்தை மறுக்கும் போது அதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது. எனவே, உறவோ, நட்போ பாதிக்கும் என்று பயப்பட வேண்டாம். சினிமாவுக்கு அழைக்கும் நண்பர்களிடம், இன்று சினிமாவுக்கு வரும் மனநிலையில் நான் இல்லை. அடுத்த முறை உங்களுடன் முதல் ஆளாகா நான் இருப்பேன் என்று கூறி அவர்களை சிரித்த முகத்துடன் சினிமாவுக்கு அனுப்பி வைக்கலாம். இதுபோல ஒரு சூழ்நிலையை சரியான முறையில் வேண்டாம் என்ற பதிலுடன் கொண்டு செல்ல எல்லோராலும் முடியும்.இதேப்போல விருப்பம் இல்லாத ஒருவரை, ஒரு வேலையை செய்யச் சொல்லி கட்டாயப்படுத்துவதும் தவறுதான். எனவே, உங்களது சுதந்திரத்தில் மற்றவர் தலையீட்டை நிராகரிப்பது போல, மற்றவர் சுதந்திரத்தில் உங்களின் தலையீட்டையும் தவிர்க்கலாம்.


தவறை ஒப்புக் கொள்வோம்..

நண்பர்களுக்குள்ளோ, உறவினர்களுக்குள்ளோ, தம்பதிகளுக்குள்ளோ எந்த விதமான சண்டையோ கருத்து வேறுபாடோ ஏற்பட்டால், அது பெரிய பிளவை ஏற்படுத்த விடாமல் தடுக்க வேண்டியது அவசியம். பல நேரங்களில் நாம் அதனை தடுக்காமல் விட்டுவிடுகிறோம். தவறு என் பக்கம் இருந்தால் மன்னித்துவிடு என்று பிரச்னையை அதோடு நிறுத்திவிடுங்கள். மன்னிப்புக் கேட்பது மட்டும் நீங்களாக இருக்க மாட்டீர்கள், உறவிலும், அன்பிலும் வெற்றி பெறுவதும் நீங்களாகவே இருப்பீர்கள்.

சாதனையாளர்களை பின்பற்றுவோம்.

பொதுவாக பெண்களுக்கு நிறைய விஷயங்கள் பிரச்னையாகவோ, சிக்கலாகவோ இருக்கலாம். ஆனால் அவற்றை சில முறைகளைக் கையாண்டால் நிச்சயம் நீங்கள்தான் வெற்றியாளராக இருப்பீர்கள்.சாதனையாளர்கள் எல்லாருமே சாதனையாளர்களாகவே பிறப்பதில்லை. அவர்களும் எத்தனையோ தோல்விகளையும், அவமானங்களையும் சந்தித்துத்தான் சாதனையாளர்களாக உருமாறுகிறார்கள். எனவே, நீங்கள் அடையும் ஒவ்வொரு தோல்விகளையும், சறுக்கல்களையும் ஒரு பாடமாக எடுத்துக் கொள்ளும் மனப்பக்குவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...