ஒருவர் நம்மிடம் ஒரு விஷயத்தைக் கூறும்
போது அதனை நாம் மறுப்பதால், அவர்களுக்கு எதிராக நாம் செயல்படுவதாக அவர்கள்
அர்த்தம் கொண்டுவிடுவார்களோ என்று நீங்கள் நினைப்பீர்கள். அதுதான் தவறு.
ஒரு வேலையை ஆரம்பத்திலேயே மறுப்பதால், நம்மிடம் வேலை செய்யச் சொன்னவருக்கு
மிகப்பெரிய பாதிப்போ, அதிருப்தியோ ஏற்பட்டுவிடாது. அதையே அரைகுறையாக
செய்துவிட்டு, அதன்பிறகு அதனை செய்ய ஆர்வமில்லை என்பதை
வெளிப்படுத்தினால்தான் பிரச்னை ஏற்படும். எனவே எதையும் ஆரம்பத்திலேயே
தெரிவித்துவிட்டால் நல்லது.
பணிவோடு சொல்லலாம். முடியாது, வேண்டாம், கூடாது என்பது போன்ற வார்த்தைகளை பணிவோடு கூறலாம்.
இது தான் காரணம், எனவே என்னால் இதனை செய்ய இயலாது, என் சூழ்நிலை இப்படி
இருப்பதால் என்னால் செய்ய முடியாது என்று பணிவோடு ஒரு விஷயத்தை மறுக்கும்
போது அதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது. எனவே, உறவோ, நட்போ பாதிக்கும் என்று
பயப்பட வேண்டாம். சினிமாவுக்கு அழைக்கும் நண்பர்களிடம், இன்று
சினிமாவுக்கு வரும் மனநிலையில் நான் இல்லை. அடுத்த முறை உங்களுடன் முதல்
ஆளாகா நான் இருப்பேன் என்று கூறி அவர்களை சிரித்த முகத்துடன் சினிமாவுக்கு
அனுப்பி வைக்கலாம். இதுபோல ஒரு சூழ்நிலையை சரியான முறையில் வேண்டாம் என்ற
பதிலுடன் கொண்டு செல்ல எல்லோராலும் முடியும்.இதேப்போல விருப்பம் இல்லாத ஒருவரை, ஒரு வேலையை செய்யச் சொல்லி
கட்டாயப்படுத்துவதும் தவறுதான். எனவே, உங்களது சுதந்திரத்தில் மற்றவர்
தலையீட்டை நிராகரிப்பது போல, மற்றவர் சுதந்திரத்தில் உங்களின்
தலையீட்டையும் தவிர்க்கலாம்.
No comments:
Post a Comment