நம் தமிழ்நாட்டில் வாழ்ந்து கொண்டு தமிழருக்கும் தமிழ் மண்ணுக்கும் துரோகம் இளைக்கும் இந்த நய வஞ்சக நாயை என் இனமே இன்னும் வேடிக்கை பார்த்துகொண்டு இருக்கிறாயே? அரசியல் சாக்கடையில் நானும் இருக்கிறேன் என்பதற்காக ஏதாவது பித்துக்குளித்தனம் செய்துகொண்டிருக்கும் இந்த கலியுக சகுனி இன்று ஆட்டை கடித்து மாட்டையும் கடித்து... இன்று நம்மை கூறுபோட்ட நய வஞ்சக நாயுடன் கூட்டணியாய் என்ன? என்ன? செய்ய போகிறது? என்று என் மனம் அலைபாய்கிறது என் தமிழ் இனமே இன்னும் இந்த நாசகாரனை நம் மண்ணில் அனுமதிக்கலாம?
ராஜபக்சே மீது தீவிர பாசம் கொண்டவர் சுப்பிரமணியம் சாமி. இந்த
நிலையில் நேற்று கொழும்பு சென்று ராஜபக்சேவையும் அவரது தம்பி
கோத்தபயாவையும் சந்தித்துப் பேசியுள்ளார்.
இவர்கள் அனைவரும் கூடி என்ன பேசினார்கள் என்பது தெரியவில்லை. நேற்று
ராஜபக்சேவின் அதிபர் மாளிகையில் இந்த சந்திப்பு நடந்ததாக செய்திகள்
வெளியாகியுள்ளன.
விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் ஒரு தீவிரவாதி, அவரது மகன்
பாலச்சந்திரனும் தீவிரவாதி என்று சொல்லி வருபவர் இந்த சாமி. மேலும்
விடுதலைப் புலிகளுக்கு எதிராகவும், ராஜபக்சே கும்பலுக்கு ஆதரவாகவும்
தொடர்ந்து பேசி வருபவர்.
ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில்
இலங்கைக்கு பெரும் சிக்கல் ஏற்படவுள்ளது. இதிலிருந்து தப்பும் வழி என்ன
என்பது குறித்து தீவிரமாக யோசித்து வருகிறது இலங்கை. எனவே சாமியைக்
கூப்பிட்டு அவர்கள் ஆலோசனை கேட்டிருக்கலாமோ என்று சந்தேகிக்கப்படுகிறது.