|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

25 September, 2011

இதே நாள்...


  • இந்திய பிரதமர் மன்மோகன் சிங் பிறந்த தினம்(1932)
  •  கர்நாடக இசை அறிஞர் பாபநாசம் சிவன் பிறந்த தினம்(1890)
  •  கவிமணி தேசிய விநாயகம்பிள்ளை இறந்த தினம்(1959)
  •  ஏமன் அரபுக் குடியரசு அமைக்கப்பட்டது(1962)
  •  இந்தோனேசியா ஐநாவில் இணைந்தது(1950)
  • ஜெனிபார் லோபஸின் புதிய ஆல்பம்!









    Ashlee Simpson parties in polka dots during Mexican holiday !







    கூடங்குளம்: மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தாததே காரணம் அணு விஞ்ஞானி !

    கூடங்குளம் அணுமின் நிலையம் குறித்து எழுந்துள்ள அச்சத்துக்கு அப்பகுதி மக்களிடம் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தாததே காரணம் என்று அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத்தின் முன்னாள் தலைவர் ஜி.ஆர்.சீனிவாசன் தெரிவித்தார்.  ரசாயனப் பொறியாளர்கள் சங்கம் சார்பில் கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பான கருத்தரங்கம் சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது. அதில் அவர் பேசியது:  மக்கள் ஏற்பு என்பது அணுமின் திட்டங்களைப் பொருத்தவரை மிக முக்கியமான விஷயம் ஆகும். பூகம்பம் மற்றும் சுனாமியால் ஃபுகுஷிமா அணுமின் நிலையத்தில் விபத்து ஏற்பட்டது.

     
    இது மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஃபுகுஷிமாவில் உள்ள அணு உலை வேறு. கூடங்குளத்தில் உள்ள அணு உலை என்பது வேறு. கூடங்குளத்தில் உள்ள அணு உலைகள் உலகிலேயே மிகவும் பாதுகாப்பான அணு உலைகள் ஆகும்.  சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இந்த மாதிரியான அணு உலைகள் உள்ளன. ஃபுகுஷிமாவில் அணுமின் நிலைய விபத்துக்கு மின்சாரம் சப்ளை துண்டிக்கப்பட்டது, எரிபொருள் குளிரூட்டப்படாதது போன்றவை முக்கியக் காரணங்களாக இருந்தன.

     
    ஆனால் இந்த அணுமின் நிலையத்தில் அது போன்ற விபத்துகள் ஏற்படா வண்ணம் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பேரழிவுத் தாக்குதல் ஏதேனும் நிகழ்ந்தால்கூட 72 மணி நேரம் வரை அணுமின் நிலையத்தில் மின்சாரம் இருக்கச் செய்யும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.  இந்த அணு மின் நிலையத்துக்கு விபத்துக் காப்பீடு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் பின்பற்றப்பட்டுள்ளன.  தாராபுரம் அணுமின் நிலையத்துக்கு சற்றுத் தொலைவில் மீனவர்கள் மீன்களைப் பிடிக்கிறார்கள். அணுமின் உலையால் கடல்வாழ் உயிரினங்களுக்கு எந்தவித ஆபத்தும் இல்லை.

     
    நாட்டிலுள்ள ஒவ்வொரு அணுமின் நிலையத்திலும் அவசரகால மீட்பு ஒத்திகைகள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது.

     அணு உலையில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் கூட பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் வராத வகையில் இந்த அணு உலை வடிவமைக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் அவசரகால ஒத்திகையின்போது 5 கி.மீ. சுற்றளவு வரை மக்களை வெளியேற்றுகிறோம்.  இந்த நடவடிக்கை மக்களிடம் பீதியை ஏற்படுத்தக் கூடும் என்றாலும், மக்களுக்கு விழிப்புணர்வை அளிக்க இது மேற்கொள்ளப்படுகிறது. 

     
    புதிய சக்திகள் தேவை: நமது நாட்டில் மின்சாரத்தின் தேவை நாளுக்கு நாள் பல மடங்கு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. ஆனால் மின்சாரத்தைத் தயாரிக்க போதுமான அளவு நிலக்கரி நம்மிடம் இல்லை. இதனால் மின் நிலையங்களுக்குத் தேவையான மின்சாரத்தை நாம் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து கொண்டிருக்கிறோம்.  எரிசக்தி பாதுகாப்பு ஒரு நாட்டுக்கு மிகவும் முக்கியமானது. எனவே இந்தத் துறையில் தன்னிறைவு அடைவதற்கு மரபுசாரா எரிசக்தியும், பல்வேறு புதிய சக்திகளும் தேவைப்படுகின்றன.

     
    உலகில் உள்ள தோரியத்தில் 25 சதவீதம் நமது நாட்டில் உள்ளது. இதை வைத்துக்கொண்டு 300 ஆண்டுகளுக்கு 3 லட்சம் மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். தோரியத்திலிருந்து மின்சாரத்தைத் தயாரிக்கும் தொழில்நுட்பம் முழுமை அடையும் நிலையில் உள்ளது.
     அணுமின்சாரம் தான் நாட்டின் எதிர்காலம். அதை நாம் கைவிடக் கூடாது என்றார் சீனிவாசன்.  இந்த நிகழ்ச்சியில் கதிரியக்க ரசாயனத்துறை விஞ்ஞானி வேணுகோபால், திரிபுரா மாநில முன்னாள் தலைமைச் செயலாளர் பி.எஸ்.ராகவன், ரசாயனத் தொழில்கள் சங்கத்தின் தலைவர் பி.கே.என். பணிக்கர் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

    சளி போக்கும் கற்பூரம்!


    கற்பூரம் என்பது வாசனைப் பொருளாக மட்டுமின்றி புனிதத்தன்மை வாய்ந்த்தாக கருதப்படுகிறது. பசுமை மாறாத கற்பூர மரம் சீனா மற்றும் ஜப்பான் நாடுகளைச்சேர்ந்த. வெப்ப மற்றும் மிதவெப்ப மண்டல நாடுகளில் வளர்க்கப்படுகிறது. இந்தியாவில் அலங்காரத்தாவரமாக அறிமுகப்படுத்தப்பட்ட இது கற்பூரம் தயாரிக்க தோட்டப்பயிராக பயிரிடப்படுகிறது.

    கற்பூர எண்ணெய்: உயரமான பசுமையான மரத்தின் பட்டை மணம் கொண்டது. கட்டைப்பகுதி கடினமானது. மஞ்சள் பழுப்பு நிறமுடையது. அதிக மணம் கொண்டது. இலைகள் தடித்தவை. மணமுடையவை. தளிர்கள் செம்மை நிறத்துடன் தோன்றி பின்னர் கரும்பச்சை வண்ணம் பெறுகின்றன. மஞ்சள் நிறமுடைய மலர்கள் சிறியவை. கற்பூர மரத்தின் கட்டை மற்றும் இலைகள் மருத்துவப் பயன் கொண்டவை. பதிமூன்றாம் நூற்றாண்டினைச் சார்ந்த மார்கோபோலோ என்ற மாலுமி கற்பூர எண்ணெயினை சீனர்கள் பெரிதும் பயன்படுத்தினர் எனக் குறிப்பிட்டுள்ளார்.செயல்திறன்மிக்க வேதிப்பொருட்கள்: கற்பூரமரத்தில் பல எளிதில் ஆவியாகும் எண்ணெய் வகைகள் உள்ளன. கேம்ஃபர், செப்ரோல், யூஜினால் மற்றும் டெர்பினியரல், இவற்றுடன் லிக்னான்களும் காணப்படுகின்றன.மார்புச்சளி போக்கும்: உடல்வலிகளுக்கு மேல் பூச்சாகப் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. வலிபோக்கும் தயாரிப்பு மூட்டுவலி, நரம்பு புடைப்புகள், மற்றும் முதுகுவலி போக்க உதவும். மார்புச்சளி போக்க மார்பு மீது பூசப்படுகிறது. குழந்தைகளின் மார்புச்சளி போக்க தேங்காய் எண்ணெயினை சற்று சூடுபடுத்தி அதில் சிறிதளவு கற்பூரத்தினைக் கரைத்து கை மருந்தாக மார்பில் பூசப்படுகிறது. கற்பூரத்தினால் சளி, இசிவு, ஜன்னி, வாந்தி, சுரம், மந்தம், தீப்புண், சிலேத்தும வாதப்பிணிகள், கிருமிநோய், காதுவலி, முகநோய் முதலியன குணமாகும். இதைச் துணியில் முடிந்து முகர்ந்துவர ஜலதோஷம், தலைவலி, சுரதோஷம் முதலியன குணமாகும்.வயிற்றுப்புழுக்களுக்கு எதிரானது: கற்பூரம் வயிற்றுப் புழுக்களுக்கு எதிராகச் செயல்படும் பூச்சிக் கொல்லிகளில் இடம்பெறுகிறது . ஆலிவ் எண்ணெய் (4 பங்கு) கற்பூரம் (1 பங்கு) கலந்த கலவையானது தசைவலி, மற்றும் வீக்கங்களை போக்க வல்லது. தோல் வியாதிகளான கடுங்குளிர் கொப்புளங்கள் மற்றும் குளிர் புண்களுக்கு தடவப்படுகிறது.விஷபேதிகட்கு வழங்கும் மருந்துகளுடன் இதையும் குன்றியெடை சேர்த்துக் கொடுக்க விரைவில் குணப்படும். கற்பூரத்துடன் மஞ்சள்தூள் சேர்த்து சீதளம் மிகுந்துள்ள பாரிசம்களில் தேய்க்க உஷ்ணம் பிறக்கும். பச்சைக்கற்பூரத்தினால் குன்மம், சூலை, வாதம், கபம் மேகப்பிணிகள் முதலியன குணமாகும். கற்பூர எண்ணெய்யினை மருந்து, வாசனைப்பொருள் மற்றும் இறந்தவர் உடலைப் பதப்படுத்தும் திரவமாகவும் பயன்படுத்துகின்றனர்.

    'அதற்கு' முன்பு பெண்கள் விரும்பாத விஷயங்கள்!


    ஆண்களிடம் உங்களுக்குப் பிடிக்காத, குறிப்பாக செக்ஸ் உறவுக்கு முன்பு அறவே பிடிக்காத விஷயங்கள் என்ன என்று பெண்களைக் கேட்டால் பெரிய லிஸ்ட்டே கொடுப்பார்கள். அதில் சில இங்கு...

    செக்ஸ் உறவு என்பதை உடல் ரீதியான விஷயமாகவே பெரும்பாலான ஆண்கள் நினைக்கிறார்கள். ஆனால் பெண்கள் அப்படி இல்லை. அதை மனதோடும் சம்பந்தப்படுத்தி உண்மையான இன்பத்தை அனுபவிப்பவர்கள் பெண்கள் மட்டுமே. உடலும், மனதும் இணையும் நிகழ்வாகவே உடல் உறவை பெண்கள் கருதுகிறார்கள். சில ஆண்கள் மென்மையான இசையை கேட்டுக் கொண்டே செக்ஸில் ஈடுபட விரும்புவார்கள். ஆனால் பெரும்பாலான பெண்களுக்கு இது பிடிப்பதில்லை. இசை உண்மையான லயிப்பைத் தருவதில்லை என்பது பெண்கள் கூறும் காரணம். எனவே உங்களது துணைக்கு இசை பிடிக்குமா, இல்லையா என்பதை அறிந்து கொண்டு இசையை பரவ விடுங்கள்.

    இன்று கிட்டத்தட்ட அத்தனை பேருமே 'செல்'லும் கையுமாகத்தான் உள்ளனர். சாப்பிடும்போதும் செல்போனில் பேச்சு, குளிக்கும் போதும் கூட சிலர் பேசப் பார்த்திருக்கலாம். ஆனால் உறவின்போது மட்டும் எப்பாடுபட்டாவது இந்த செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விடுங்கள், உறவு தொடர்பான பேச்சுக்களை மட்டுமே 'ஆன்' செய்து வைத்திருங்கள். பெண்களுக்கு இந்த செல்போன் பேச்சு, குறிப்பாக 'அந்த' நேரத்தில் அரட்டை அடிப்பது அறவே பிடிக்காது. அவசரக் குடுக்கைகளை பெண்களுக்கு கண்டிப்பாக பிடிக்காது. எதிலும் அவசரம் காட்டாமல் நிதானமாக அணுகுங்கள். உடல் ரீதியான தழுவல்களும் சரி, உறவும் சரி, மென்மையாக, அதேசமயம், சீரான வேகத்தில் இருக்குமாறு பார்த்துக் கொள்வது அவசியம்.

    பெரும்பாலான பெண்களுக்கு ஐஸ் வைப்பது, கெஞ்சுவது, தாஜா செய்வது பிடிக்காது. நேர்மையாக, நேருக்கு நேராக கேட்பதும், தெளிவாகப் பேசுவதும்தான் பல பெண்களுக்குப் பிடித்திருக்கிறது. அதைத்தான் அவர்கள் ஆண்களிடம் பொதுவாக எதிர்பார்க்கிறார்கள். எப்போது ஒருவர் தாஜா செய்கிறாரோ, ஐஸ் வைக்கிறாரோ அவர் நிச்சயம் வெளிப்படையான ஆள் இல்லை என்று பெண்கள் கருதத் தொடங்கி விடுகிறார்களாம். எனவே உறவுக்காக கெஞ்சுவதை தவிருங்கள். மாறாக, வெளிப்படையாக பேசுங்கள். இன்று வேண்டாம், இன்னொரு நாள் பார்ப்போம் என்று உங்கள் துணை கூறினால் உடனே முகம் சுளிக்காதீர்கள். இதன் மூலம் உங்கள் துணையின் மனதை நீங்கள் முழுமையாகஆக்கிரமிக்க முடியும்.

    செக்ஸ் உறவின்போது பெண்கள் முழுமை அடைய நிறைய நேரம் பிடிக்கும். ஆண்களுக்கோ சில நிமிடங்களில் எல்லாம் நெருங்கி வந்து முடிந்தும் விடும். அதை பெரும்பாலான பெண்கள் விரும்புவதில்லை. முத்தமிடுவது, தொடுதல், உரசுதல், தழுவுதல் உள்ளிட்ட சின்னச் சின்ன விஷயங்களை பெண்கள் பெரிதும் விரும்புவார்கள்.ஆண்கள் இதையெல்லாம் செய்வதற்கு பொறுமை இழத்தல் கூடாது.  மேலும் ஒரு பெண்ணுக்கு உச்ச நிலை ஏற்பட 2 நிமிடங்களுக்கும் மேலாகும். எனவே எந்த அளவுக்கு பெண்ணின் உணர்வுகளை தூண்ட முடியுமோ, அந்த அளவுக்கு இன்பத்தில் பூர்த்தி நிலை கிடைக்க வாய்ப்புண்டு. மாறாக அதி வேகமாக உறவுக்குப் போக முற்பட்டால் இன்பத்திற்குப் பதில் கசப்புதான் வந்து சேரும்.

    முத்தமிடுவதில் சொதப்புவதை தவிருங்கள். எந்த மாதிரியான முத்தம் உங்களது துணைக்குப் பிடிக்கும் என்பதை அறிந்து அதை வாரிக் கொடுங்கள். அது உங்கள் மீதான ஈர்ப்பை அதிகரிக்க உதவும். முத்தம் கொடுப்பதற்கு முன்பு வாயை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள் - அது ரொம்ப ரொம்ப முக்கியம்.

    உறவின்போது நடைபெறும் முன்விளையாட்டுக்களில் முக்கியமான ஒரு விஷயம் உணர்வுகளைத் தூண்டும் பேச்சு. இது இரு பாலாருக்கும் முக்கியமானது. இருவரும் பேசுவதற்கு நிறைய விஷயங்களை யோசித்து வைத்துக் கொள்ள வேண்டும். போர் அடிப்பது போன்ற பேச்சு்க்களை அறவே தவிருங்கள். உணர்வின் வேகம் கூட வேண்டும்- நமது பேச்சின் போக்கில். அப்படி இருக்குமாறு பேச்சுக்களை வைத்துக் கொள்வது நல்லது. அந்த சமயத்தில் 'சித்தாந்தம்' பேசுவதை விட்டு விட்டு 'செக்ஸி'யாக பேசுவதற்கு முயலுங்கள்.

    எல்லாவற்றையும் விட முக்கியமானது, எதைச் செய்தாலும் அதற்கு 'பெர்மிஷன்' கேட்டுக் கொண்டிருப்பதைத் தவிர்ப்பது. உங்களது துணைக்குப் பிடித்ததை அறிந்து வைத்துக் கொண்டு அதில் ஈடுபட்டு அவரை உங்கள் வசப்படுத்த வேண்டும். மாறாக, இப்படி கட்டிப்பிடிக்கவா, இங்கு முத்தமிடவா என்றெல்லாம் கேட்டுக் கொண்டிருக்காதீர்கள். அவருக்கு எது பிடிக்கும் என்பதை அறிந்து அதற்கேற்ப செய்து அவரை முழுமையாக உங்களுக்குள் கொண்டு வருவதன் மூலம், இன்பமான உறவுக்கு வழி கோல முடியும். இப்படி சின்னச் சின்னதாக நிறைய உள்ளன. இவற்றைப் புரிந்து கொண்டு, அறிந்து கொண்டு தெளிந்து செயல்படும் ஆண்கள் மீது பெண்களுக்குக் கொள்ளைப் பிரியம் உண்டாகுமாம்.

    உற்சாகத்தை போக்கும் ‘கொர் கொர்’!


    நாள் முழுவதும் உழைத்துக் களைத்தபின் உடல் எடுக்கும் ஓய்வே உறக்கம். ஒருசிலர் உடலை கீழே சாய்த்த உடன் உறங்கிவிடுவார்கள். ஒரு சிலருக்கு எளிதில் தூக்கம் வராது. அப்படியே தூங்கினாலும் அவர்களை அவ்வளவு எளிதில் எழுப்ப முடியாது. சிலர் அடித்து போட்டது போல் உறங்குவர். சிலர் மலர்களை போல் உறங்குவர். சிலர் கும்பகர்ணன் போல் தூங்குவர். குறட்டை விட்டு தூங்குவோர் இதில் ஒரு ரகம்.

    பொதுவாக குறட்டை விடுவோர் பார்ப்பதற்கு நிம்மதியாக உலகை மறந்து உறங்குவது போல் காணப்படுவார்கள். ஆனால் உண்மையில் குறட்டை அவர்களை ஒரு வழி செய்துவிடும். மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும். அருகில் படுத்திருப்பவர்களுக்கு தொல்லை தரும். இதனால் வெளிநாடுகளில் பல தம்பதியர்கள் விவாகரத்து வரை கூட சென்ற சம்பவங்களும் நடந்ததுண்டு. இந்த குறட்டையை தவிர்ப்பது எவ்வாறு என பார்ப்போம்.

    அதிக எடையால் வரும் குறட்டை: குறட்டை என்பது நாம் தூங்கும் போது, நம் சுவாசக்குழாயில் உள்ள தசைகள் சற்று ஓய்வுக்கு உள்ளாகும் வகையில் தளர்ந்து விடும். மூச்சுக் குழாயில் தற்காலிக அடைப்பு ஏற்படுகிறது. மூச்சு வெளியேறும் போது இந்த அடைப்பை மீறி காற்று வெளியேறுவதால், விதவிதமான ஒலிகளை எழுப்புகிறது. இது தான் குறட்டைச் சத்தமாக நமக்கு கேட்கிறது. உடல் பருமன், அலர்ஜியால் சுவாச குழாயில் ஏற்படும் சளி இவற்றால் குறட்டை வரும் வாய்ப்பு உள்ளது. நீங்கள் அதிக உடல் எடை கொண்டவர் என்றால் அதற்கும் குறட்டைக்கும் தொடர்பு உள்ளது. எனவே உங்கள் உடல் எடையை சிறிது குறைத்தால் அது குறட்டையை தவிர்ப்பதற்கு வழிவகுக்கும்.
    குறட்டை தவிர்க்கும் வழிமுறைகள்: குறட்டையினை தவிர்ப்பதற்கு உகந்ததாக தற்போது பல சுவாச தைலங்கள் (வேப்பரப்) சந்தையில் வந்துள்ளன. இவற்றை பாதிக்கப்பட்டோர் தங்களது மார்பு பகுதியில் நன்றாக தடவி கொள்ளவும். இவ்வாறு செய்வதால் சுவாசம் மேற்கொள்ளும்போது காற்றானது எளிதில் மூக்கினுள் சென்று வரும். மேலும் இது மூக்கில் தடையேற்படுத்தும் கோழை போன்றவற்றை இளகச்செய்து விடும். இதனால் சுவாசம் அமைதியாகவும், எளிதாகவும் நடைபெறும்.

    சிலர் தூங்கும் போது வாய் திறந்த நிலையில் இருக்கும். இது ஏனெனில் அவர்கள் காற்றினை வாய் வழியாகவும் சுவாசத்திற்கு எடுத்து கொள்வதால் நடைபெறும் ஒன்று. இதற்கென கவசம் போன்ற கருவி ஒன்று உள்ளது. இதனை பொருத்தி கொள்வதால் தூங்கும் போதும் வாயானது திறந்த நிலையில் இருக்கும். இதனால் சுவாசம் நன்கு நடைபெறும்.

    குறட்டையை தவிர்ப்பதற்கு தற்போது சி.பி.ஏ.பி எனப்படும் கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கருவி தொடர்ச்சியாக காற்றினை சுவாசத்தில் பங்கு பெற செய்கிறது. காற்று எளிதாகவும், தொடர்ந்தும் உட்செல்வதற்கு ஏற்ற வகையில் செயல்படுகிறது. அதனால் தூக்கம் தடைபடுவதில்லை. எனினும் இத்தகைய கருவிகள் சற்று விலை அதிகம் கொண்டவை. சிலர் மூக்கின் வழியாக குறட்டை விடுவதும் உண்டு. இவர்கள் தூங்கும்போது வாய் வழியாக காற்றை சுவாசிக்க கற்றுகொண்டால் குறட்டையானது தவிர்க்கப்படும். அதற்கு உதவியாக மூக்கை கெட்டியாக பிடித்து கொள்ளும் கிளிப் போன்றவற்றை உபயோகிப்பதால் எளிதாக தூங்க இயலும்.

    அறுவை சிகிச்சை: குறட்டை விடுவதில் மூக்கின் உட்புறம் அமைந்துள்ள எலும்பு பகுதியும், சதை பகுதியும் ஒழுங்காக அது அமைய வேண்டிய இடத்தில் இல்லாமல் சிலருக்கு இடம் மாறி அமைந்திருக்கும். இதனை சிறிய அறுவை சிகிச்சையின் உதவியால் எளிதில் சரி செய்து விடலாம். குறட்டையையும் தவிர்த்து விடலாம். உங்களது கழுத்தின் தசைகள் பலப்படுத்தப்பட்டு இருந்தால் பெரும்பாலும் மூச்சு விடுவதில் உள்ள சிரமம் குறையும். காற்று மூச்சு குழல் வழியே சிரமம் இன்றி பயணிக்கும். எனவே தூங்கும்போது கைகளை முகத்திற்கு எதிராக வைத்து கொள்ளவும். பின்னர் தலையினை கையின் உதவியால் எதிர்புறம் திருப்பவும். இந்த முறையை தலையின் இருபுறமும் செய்யவும். சிறிது நேர இடைவெளி விட்டு இதனை தொடரவும். இதேபோல் தலையை மேல் மற்றும் கீழ் திசைகளில் திருப்பவும். இதற்கும் சற்று இடைவெளி விடுதல் அவசியம். இவ்வாறு தூங்கும் முன் படுக்கையறையில் சிறிது நேரம் தொடர்ந்து செய்து வரவும்.

    இவ்வாறு குறட்டையை தடுப்பதற்கு பல வழிகள் உள்ள போதிலும் அவரவர்களுக்கு எது சரியாக அமையும் என்பதை மருத்துவர்களிடம் தகுந்த ஆலோசனை செய்து அதன்படி கடைபிடித்தால் நன்மை பயக்கும்.

    உடலுக்குக் குளிர்ச்சி தரும் மந்தாரை!


    மந்தாரை உள்ள வரை நொந்தாரைக் காண முடியாது’ என்று ஒரு மருத்துவப் பழமொழியே உண்டு. அந்த அளவுக்கு மருத்துவகுணங்களை கொண்டுள்ளது மந்தாரை. இது மணமுடைய இரண்டாகப் பிரிந்த இலைகளையும், பலநிற மலர்களையும் உடைய சிறுசெடி வகையாகும். இதில் செந்நிற மலருடைய பெரிதாய் வளரும் இனமும் காணப்படுகிறது. வீட்டுத் தோட்டங்களில் வளர்க்கப்படுகிறது. இலை, பூ, வேர், பட்டை ஆகியன மருத்துவக் குணம் கொண்டவை. மந்தாரையானது திருக்கானப்பேர் (காளையார்கோயில்), திருத்திலதைப்பதியிலும் தலமரமாக விளங்கிறது.

    செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்: இலைகளில் குவார் செட்டின், அஸ்ட்ரா காஸின், ஐசோகுவர்சிட்ரின், காம்ப்ஃபெரால் க்னூக்கோசைடு, அமினோ அமிலங்கள் மற்றும் ஆல்கலாய்டுகள் விதைகளில் உள்ளன. ஆந்தோசையனின், நட்டின், அப்பிஜெனின், போன்ற வேதிப்பொருட்களும் தாவரத்தில் உள்ளன.ரத்தக்கட்டிகளை குணமாக்கும்: மலர்கள், மிதமான பேதி மருந்து, உலர்ந்த மொட்டுக்கள், பூச்சிகளை நீக்கும். சீதபேதி மற்றும் மூலவியாதியை குணப்படுத்தும். பட்டை வயிற்றுப்போக்கில் பயன்படும். வேர்ப்பட்டை தயிர் உடன் கலந்து இரத்தக்கட்டிகளை குணப்படுத்த உதவும். அரைத்த வேர்ப்பட்டை சுக்குடன் கலந்து குரல்வளை சுரப்பி வீக்கத்துக்கு தடவப்படுகிறது. வேர் அஜீரணத்தைப் போக்கும். மந்தாரைப் பட்டை சதை, நரம்புகளைச் சுருக்கி ரத்தம், சீழ்க்கசிவுகளைக் கட்டுப்படுத்தக்கூடியவை, நோய் நீக்கி உடல் தேற்றும் மருந்தாகப் பயன்படுகிறது; உடல் பலம் மிகுக்கும். முடியின் வேர்க்கால்களை உறுதிப்படுத்தி, உடலுக்குக் குளிர்ச்சி அளிக்கக்கூடியது மந்தாரை.தைராய்டு நோய்க்கு தீர்வு: தைராக்ஸின் குறைந்தால் உடல் எடை அதிகரிப்பு, அதிக ரத்த போக்கு, முறையற்ற மாதவிடாய், தோலின் மிருதுத்தன்மை குறைவு, அதிகமான முடி உதிர்தல், மலச்சிக்கல், உடல்வலி, மன அழுத்தம், போன்ற பிரச்சினைகள் ஏற்படும். அதிகமான தைராய்டு சுரந்தால் இதயத்துடிப்பு அதிகமாகும், எடை குறையும். கோபம், தூக்கமின்மை, மாதவிடாய் கோளாறுகள், வயிற்று போக்கு என பல சிக்கல்கள் ஏற்படும். காஞ்சனாரம் என்று அழைக்கப்படும் மந்தாரைத் தாவரம் தைராய்டு நோய்களுக்கு மருந்தாகப்பயன்படுகிறது. இதனை மருந்தாக உட்கொள்வதன் மூலம் தைராய்டு சுரப்பினை சீராக்குவதோடு, உடல் நலனை சீராக்கும்.

    தோழியிடம் 'சில்மிஷம்' செய்த ரிஹானா!









    பாப் பாடகி ரிஹானா புது சர்ச்சையில் சிக்கியுள்ளார். தன்னுடன் நீச்சலில் பங்கேற்ற தோழி ஒருவரின் மார்பைப் பிடித்து சில்மிஷம் செய்த காட்சி வெளியாகியுள்ளது. ஹாட்டான பாப் பாடகிகளில் ஒருவர் ரிஹானா. அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்க அவர் தவறுவதில்லை. தென் அமெரிக்காவில் நடந்த ஒரு நிகழ்ச்சியின்போது தனது பின்பக்கத்தை கைகளால் பிடித்துக் கிள்ளி அனைவரையும் பரபரப்பில் ஆழ்த்தினார். இந்தநிலையில் தற்போது பிரேசிலில் ஒரு சேட்டையைச் செய்துள்ளார். ரியோடிஜெனிரோவில் அவரும் அவரது பெண் தோழி ஒருவரும் நீச்சலில் ஈடுபட்டனர். அப்போது பெண் தோழியின் முன்னழகைப் பிடித்து சில்மிஷம் செய்தார் ரிஹானா. அதைப் பார்த்து வெட்கப்பட்டு, கூச்சப்பட்ட அவரது தோழி அவரிடமிருந்து விடுபட்டு விலகினார்.

    இதுதொடர்பான புகைப்படம் வெளியாகி சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. ரியோடிஜெனீரோ கடற்கரை உலகப் புகழ் பெற்றது. ஆனால் ரிஹானா கடற்கரைக்கு ஒருமுறை கூட போகவில்லை. மாறாக ஹோட்டல் நீச்சல் குளத்திலேயே பொழுதைக் கழித்தார். அப்போதுதான் இந்த சில்மிஷத்திலும் ஈடுபட்டார்.

    தளபதி ரமேஷ் மனைவி வழக்கு-இலங்கை ராணுவ தளபதிக்கு அமெரிக்க கோர்ட் சம்மன்!


    நியூயார்க் கோர்ட்டில், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கிழக்குப் பகுதி கமாண்டர் கர்னல் ரமேஷ் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக அவரது மனைவி தொடர்ந்த வழக்கில், இலங்கை ராணுவ தளபதி சவேந்திர சில்வாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இலங்கையில் கடந்த 2009-ம் ஆண்டு மே 18-ந்தேதி விடுதலைப்புலிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையே இறுதி கட்ட போர் நடந்தது. அப்போது 58-வது டிவிஷன் கமாண்டராக பணியாற்றியவர் ஜெனரல் சவேந்திரா சில்வா.

    இவரது தலைமையிலான படையினர்தான் புதுக்குடியிருப்பு மருத்துவமனையில் தஞ்சம் புகுந்திருந்த அப்பாவி தமிழர்களை கொத்துக் குண்டுகளை வீசி கொடூரமாகக் கொன்றனர். போரின் இறுதியில் ரமேஷ் தலைமையிலான கிழக்குப் படையினர், சில்வா தலைமையிலான சிங்களப் படையிடம் சரணடைந்தனர். ஆனால் அவர்களை மிகக் கொடூரமாக சித்திரவதை செய்த சிங்களப் படையினர் பின்னர் அனைவரையும் படுகொலை செய்து விட்டது. இந்த நிலையில் நியூயார்க் தெற்கு மன்ஹாட்டன் கோர்ட்டில் ரமேஷின் மனைவி வத்சலா தேவி சார்பில் வழக்கு தொடரப்பட்டது. ராஜபக்சே நியூயார்க் வந்த சமயத்தில் இந்த வழக்கு தொடரப்பட்டது. அதில், ராஜபக்சே, சவேந்திர சில்வா உள்ளிட்டோர் மீது போர்க்குற்றச்சாட்டு சுமத்ப்பட்டிருந்தது. தனது கணவரின் மரணத்திற்குக் காரணமான இவர்களைத் தண்டிக்க வேண்டும். தனக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரியிருந்தார் வத்சலா தேவி.

    இந்த மனுவுடன் இலங்கைப் போரின்போது நடந்த மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றச் செயல்கள் உள்ளிட்டவற்றுக்கான பல்வேறு புகைப்பட, வீடியோ ஆதாரங்களையும், ஐநா. நிபுணர் குழுவின் அறிக்கையையும் இணைத்திருந்தார் வத்சலா தேவி. இந்த மனுவைப் பரிசீலித்த கோர்ட் தற்போது இதை விசாரணைக்கு ஏற்றுள்ளது. இதையடுத்து சவேந்திர சில்வாவுக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டது. இந்த சில்வா ஈழப் போர் முடிந்ததும்,ஐநா.வுக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதியாக நியமிக்கப்பட்டு தற்போது நியூயார்க்கில் பணியில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    நேபாளத்தில் நடந்த விமான விபத்தில் 8 தமிழர்கள் பலி!


    நேபாளத்தில் நடந்த விமான விபத்தில் பலியான 8 தமிழர்களின் அடையாளம் தெரிய வந்துள்ளது. அவர்களில் ஒருவர் முன்னாள் அமைச்சர் ரகுபதியின் உறவினர் மீனாட்சி சுந்திரம் எனத் தெரிய வந்துள்ளது. அதேபோல இன்னொரு முன்னாள் அமைச்சர் செல்வராஜின் உறவினர் ஒருவரும் இதில் இறந்துள்ளது தெரிய வந்துள்ளது. நேபாளத் தலைநகர் காத்மாண்டுவிலிருந்து நேபாளத்தின் பல்வேறு சுற்றுலாத் தலங்களுக்கு வாகன வசதிகள் உள்ளன. அதில் ஒன்று விமான பயணம். சிறிய ரக விமானம் மூலம் எவரெஸ்ட் சிகரத்தை சுற்றிக் காட்டுவார்கள். சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்தது இது.

    எவரெஸ்ட் சுற்றுலா: புத்தா ஏர் என்ற தனியார் விமானம் இதுபோல சுற்றுலாப் பயணிகளுக்கு எவரெஸ்ட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சுற்றிக் காட்டுவதற்காகக் கிளம்பியது. அந்த சிறிய ரக விமானத்தில் விமானிகள் உள்ளிட்ட ஊழியர்கள் மற்றும் 16 சுற்றுலாப் பயணிகள் இருந்தனர். பயணிகளில் 12 பேர் இந்தியர்கள், இவர்களில் 8 பேர் தமிழர்கள், திருச்சியைச் சேர்ந்தவர்கள். மற்ற 6 பேர் ஐரோப்பியர்கள். எவரெஸ்ட் உள்ளிட் பகுதிகளைப் பார்வையிட்ட பின்னர் விமானம் காத்மாண்டுத் திரும்பிக் கொண்டிருந்தது. அப்போது காத்மாண்டுப் பள்ளத்தாக்கில் உள்ள திடீரென பனி மூட்டத்தில் சிக்கி விமானம் விபத்துக்குள்ளானது.திருச்சியைச் சேர்ந்த 8 பேர் பலி: இதில் முதலில் 18 பேர் உயிரிழந்ததாகவும், ஒருவர் படுகாயத்துடன் தப்பியதாகவும் தகவல்கள் வெளியாகின. தற்போது 19 பேரும் பலியாகி விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் 10 பேர் இந்தியர்கள். அதில் 8 பேர் திருச்சியைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது. அவர்களது உடல்களை அடையாளம் காணும் பணியில் இந்தியத் தூதரக அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.தமிழர்கள் அனைவரும் திருச்சியில் உள்ள இந்திய கட்டுமான சங்கத்தின் உறுப்பினர்கள் ஆவர். சுற்றுலாவாக நேபாளம் வந்துள்ளனர்.விபத்தில் உயிரிழந்த 8 தமிழர்களில் ஒருவர் முன்னாள் திமுக அமைச்சர் ரகுபதியின் உறவினர் மீனாட்சி சுந்தரம். இவர் புதுக்கோட்டை அருகே உள்ள குழியிறையில்உள்ள ஒரு பள்ளியின் தாளாளராக இருந்தவர். குழித்துறையைச் சேர்ந்தவர். மணிமாறன் என்பவரின் தலைமையிலான குழுவில் இவர் இடம் பெற்றிருந்தார்.உயிரிழந்தோர் விவரம்: விபத்தில் உயிரிழந்த 8 பேரின் விவரங்களும் தற்போது வெளியாகியுள்ளன.இறந்தவர்கள் - மணிமாறன், மருதாச்சலம், காட்டூர் மகாலிங்கம், கிருஷ்ணன், கனகசபேசன், மீனாட்சி சுந்தரம், தியாகராஜன், தனசேகரன்.இவர்கள் தவிர வட மாநிலத்தைச் சேர்ந்த ராஜ் மேத்தா மற்றும் அவரது மனைவி சாயா மேத்தா.பிசகுநாராயண் என்ற கிராமத்தில் இந்த விபத்து நடந்துள்ளது. தலைநகர் காத்மாண்டுவிலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் இந்தக் கிராமம் உள்ளது.மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். இருப்பினும் வானிலை மோசமாக இருப்பதால் மீட்புப் பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.விபத்து குறித்து அதை நேரில் பார்த்த ஹரிபோல் போடல் என்பவர் கூறுகையில், கிராமத்தில் உள்ள ஒரு வீட்டின் மேற் கூரை மீது விமானம் விழுந்து நொறுங்கியது என்றார்.

    LinkWithin

    Related Posts Plugin for WordPress, Blogger...