ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை. விவேகானந்தர்.
16 April, 2013
பாம்பு கடித்துவிட்டால்?
பாம்பு கடித்துவிட்டால் , பாம்புக் கடிக்குள்ளானவரை தனியார்
மருத்துவமனைக்கு அழைத்து செல்லாதீர்கள். ஏனெனில் பெரும்பாலன
தனியார் மருத்துவமனையில் பாம்பு கடித்தோரை"அட்மிட்" செய்வதில்லை.
எனவேகால தாமதம் செய்யாமல், உடன் அரசு மருத்துவமனைக்கு
அழைத்துசெல்லவும்.
"பாம்பு கடி" பற்றிய சில தகவல்கள்..
1. கடித்த இடம், மனிதன் கடித்தது போல் அனைத்து பற்களும் வரிசையாக
பதிந்து காணப்படுகிறதா..? இந்த அறிகுறி விஷப்பாம்பு கடி அல்ல...
2. கடித்த இடம், இரண்டு பற்கள் மட்டும் சற்று இடைவெளியில் பதித்து
காணப்படுகிறதா..? கடித்த இடம் சற்றுதடித்து (வீங்கி) காணப்படுகிறதா?
கடுமையான வலி இருக்கிறதா..? இந்த அறிகுறி விஷப்பாம்பு
கடித்ததாகத்தான் இருக்கக்கூடும்.
முதலுதவி:- 1.இறுக்கி கட்டுப் போடவேண்டாம். இறுக்கி கட்டுப் போடுவதன்
மூலம், சில சமயங்களில் விஷம் ஓரிடத்திலேயே தங்குவதால் கடித்தப்பகுதி
அழுகிபோகும். லேசான இறுக்கத்துடன் கட்டுப்போடுவது நல்லது.
2.காயப்பட்ட இடத்தை ஓடும் நீரில் சோப்பு போட்டு மூன்று முறை கழுவவும்.
3.பாம்பு கடிபட்டவர் பதற்றமடையகூடாது . அவர் பதற்றமடையும்போதும்
ரத்தஓட்டம் அதிகரிக்கும்.
4.பாம்பு கடித்துவிட்டால் வேகமாக நடக்க கூடாது. ஏனெனில் நாம் வேகமாக
நடக்கும்போது ரத்த ஓட்டம் அதிகரிக்கும். அதனால் நம் ரத்தத்தில் கலந்துள்ள
விஷம் விரைவில் நம் உடல்முழுவதும் பரவி உயிரிழப்பை
விரைவுபடுத்துகிறது
5.இயன்றவரை பாம்புக் கடிக்குள்ளானவரை தைரியமூட்டவும். எந்த
அளவிற்கு அவரின் இதயத்துடிப்பைக் கட்டுப்படுத்துகின்றோமோ,
அவ்வளவிற்கு அவரைக் காப்பாறுகின்றோம்.
6.பாம்பு கொத்திய இடத்தை, இதயத்தை விடத் தாழ்த்தி வைக்கவும். பாம்புக்
கடிக்குள்ளானவரை படுக்க வைத்து மருத்துவமனைக்கு அழைத்துசெல்லவும் .
7.பாம்பு கடித்துவிட்டால் , பாம்புக் கடிக்குள்ளானவரை தனியார்
மருத்துவமனைக்கு அழைத்து செல்லாதீர்கள். ஏனெனில் பெரும்பாலன
தனியார் மருத்துவமனையில் பாம்பு கடித்தோரை"அட்மிட்" செய்வதில்லை.
எனவேகால தாமதம் செய்யாமல், உடன் அரசு மருத்துவமனைக்கு
அழைத்துசெல்லவும்.
8.இயலும் என்றால் பாம்பு பற்றிய விபரங்களைப் பெறவும். சில சமயங்களில்
அடித்துக் கொல்லக்கூடிய நிலை ஏற்படலாம். எனினும் இவ்வாறு அடிக்க
நேர்ந்தால், பாம்பின் தலையில் அடித்துக் கொல்ல வேண்டாம். ஏனென்றால்
தலையை வைத்துத்தான் பாம்பை இனம் காணலாம். கடிபட்ட நேரம் போன்ற
தகவல்கள் முக்கியமானவை.
பாம்பு கடித்தால்.. கிட்னியையும், கண்களையும் உடன் பாதிக்ககூடும்.
உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும்.
சன் கும்பலுக்கு பாடம் புகட்டலாம்..
எங்கள் ஏரியா கேபிள்களில் புதிய தலைமுறை சேனல் தெரிவதில்லை. ``சரி செட் டாப் பாக்ஸ்
இணைப்பு எடுத்தால் தெரியுமா..’’ என்று கேபிள்காரர்களிடம் கேட்டால், ``நாங்க SCV சார்.. புதிய
தலைமுறை சேனலை காட்டக்கூடாதுங்குறது எங்களுக்கு போடப்பட்ட உத்தரவு சார்” என்றார்.
இது எப்படி இருக்கு.. பணம் கொடுக்குறது நாம.. ஆனா நாம எந்த சேனலை பார்க்கணும்னு சன்
கும்பல் நமக்கு உத்தரவு போடுது.
புதிய தலைமுறை சேனலைக் கண்டு சன் டிவி கும்பல் எவ்வளவு ஆடிப்போயிருக்கிறது என்பது
இதன் மூலம் தெரிகிறது. அவங்க சிறப்பா செய்தி கொடுக்குறாங்க.. அதனால் மக்கள்
பெரும்பாலும் புதிய தலைமுறையை பார்க்கிறார்கள். அதற்கு போட்டியாக சன் டிவியும்
தங்களது செய்தி தரத்தை உயர்த்தினால் மக்கள் பார்ப்பார்கள். மாறாக போட்டிச் சேனலை
அதிகார பலத்தின் மூலம் இருட்டடிப்பு செய்வது அயோக்கியத்தனம்.
தாங்கள் கொடுப்பது தான் செய்தி என்று அகம்பாவம் பிடித்து நின்ற சன் கும்பல் இன்று எல்லா
தரப்பு செய்திகளையும் காட்ட வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டதற்கு புதிய தலைமுறையின்
வரவு தான் காரணம். அவர்களின் சில செய்திகள் விசயத்தில் நமக்கு மாற்றுக்கருத்து
இருந்தாலும் கூட, சன் டிவியின் மீடியா ஏக போகத்தை ஆட்டம் காண வைத்தது என்ற
வகையில் புதிய தலைமுறையை ஆதரிக்கலாம்.. SCV கனெக்ஷன் வைத்திருப்பவர்கள்
அனைவரும் அந்த இணைப்பை துண்டித்துவிட்டு வேறு இணைப்புக்கு மாறுவதும், `சன்
டைரக்ட்’ செட் டாப் பாக்ஸை வாங்காமல் புறக்கணிப்பதன் மூலம் சன் கும்பலுக்கு பாடம்
புகட்டலாம்..
Subscribe to:
Posts (Atom)