|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

26 September, 2012

இப்படிக்கு உங்க அன்புல்ல பேத்தி?


 மளமளவென வளர்ந்துவிட்ட தொழில்நுட்பங்கள் நமக்கு அதிக பயன்பாடுகளைத் தந்தாலும், ஏனோ மனதிற்கு ஆழ்ந்த மகிழ்ச்சியை தருவதில்லை. எதுவுமே அளவுக்கு மீறிப் போகும்போது ரசிக்க முடியாமல் போய்விடுகிறது. ஐம்பது பைசா இன்லாண்ட் கடிதங்களும், 25 பைசா போஸ்டு கார்டும் வெளிப்படுத்திய மகிழ்ச்சியை இன்றைய மொபைல் போன்களும், பேஸ்புக்கும் வெளிப்படுத்துவதில்லை.

தொழில்நுட்ப சாதனங்கள் நம்மை மெல்ல மெல்ல சுயமாக பல காரியங்களைச் செய்ய இயலாதவர்களாக மாற்றிக் கொண்டிருக்கிறது. முன்பெல்லாம் ஒரு திருமணம், புதுமனை புகுவிழா போன்ற நிகழ்ச்சிகளுக்கு அழைப்பிதழை நேரிலோ அல்லது தபால் மூலமோ அனுப்பிவிட்டால் போதும், நிகழ்ச்சி நடைபெறும் நாளில் அனைவரும் ஆஜராகிவிடுவார்கள். ஆனால் இன்றைய நிலைமையே வேறு. நேரில் பத்திரிகை வைத்துவிட்டு வந்தாலும் மீண்டும் ஒருமுறை குடும்பத்தில் இருக்கும் அனைவருக்கும் போன் செய்து அழைக்க வேண்டும் என விரும்புகிறார்கள்.சென்னையிலிருந்து திருச்சிக்கு நண்பரின் விஷேசத்திற்கு செல்ல வேண்டும் எனில் பத்திரிகை கையில் கிடைத்ததும் ஒருமுறை போன் செய்து எப்படி வரவேண்டும் என விசாரித்துவிட்டு, பிறகு விஷேச தினத்தில் "நான் பஸ் ஸ்டாண்ட் வந்துட்டேன் இங்கிருந்து எப்படி வருவது?", "விவேகானந்தர் நான்காவது தெருவுக்கு வந்துட்டேன்.. ஏழாவது தெருவுக்கு எப்படி வருவது?" என நிகழ்ச்சி நடத்தும் நண்பரின் மொபைல் போனுக்கு ஓயாமல் அலைபேசும் நபர்களும் இருக்கிறார்கள். ஏண்டா இவனைக் கூப்பிட்டோம் என நினைக்கும் அளவுக்கு எரிச்சலூட்டுகிறார்கள்.


முன்பெல்லாம் கடிதங்கள் கோலோச்சிக் கொண்டிருந்த காலங்களில் குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட இடத்தில் சந்திக்க வேண்டும் என நண்பருக்கு ஒரு கடிதம் போட்டால் போதும். அந்த நேரத்தில், அந்த இடத்தில் தவறாமல் ஆஜராகிவிடுவார். இன்றைய தேதியில் பிரசவ வார்டில் மனைவி இருக்கும் போது கூட, " Awaiting for my sweet little baby " என டுவிட்டரில் தகவல் பரிமாறி, பிரசவமான குழந்தையை உடனே புகைப்படம் எடுத்து ஃபேஸ்புக்கில் பதிவேற்றுகிறார்கள். குழந்தை பிறந்ததை விட, அந்த செய்தியை பதிவேற்றம் செய்வதில் அதிக மகிழ்ச்சியடைகிறார்களோ என்று தோன்றுமளவுக்கு தொழில்நுட்ப அடிமைகளாகிவிட்டனர்.ஆனால் அன்று, குழந்தை பிறப்புக்காக அம்மா வீடு வந்த மனைவிக்கு குழந்தை பிறந்த தகவல் கடிதம் மூலம் மூன்று நாட்கள் கழித்து தான் தெரிய வரும். அதன்பிறகு விடுமுறை எடுத்துக் கொண்டு தனக்கு பிறந்த மகனை / மகளைப் பார்க்க ஊருக்கு சென்றவர்கள் ஏராளம். தனது மகன் எப்படி இருப்பான் என நினைத்துக் கொண்டே பயணித்து, மனம் நிறைய  மகனை அள்ளி முத்தமிடும் தருணத்தின் மகத்துவத்தை அனுபவித்தவர்களைக் கேட்டால் தெரியும்.  

ஏதேனும் துக்கம் நிகழ்ந்துவிட்டால் ஊருக்கு ஒருவர் தகவல் சொல்ல கிளம்பி போவார். அவர் போகும் ஊரில் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று தகவல் சொல்ல தேவையில்லை. அந்த ஊரில் ஒருவருக்கு தகவல் சொன்னால்கூட போதும். அவர்கள் மூலம் தகவல் பரவி அனைவரும் வந்து சேர்ந்துவிடுவர். ஆனால் இப்போது அப்படி இல்லை.. சில குடும்பங்களில் மாமா, அத்தை, அத்தை மகன், அத்தை மகள் என ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக போன் செய்து தகவல் சொல்ல வேண்டியுள்ளது. இல்லையெனில் எனக்கு ஏன்  சொல்லவில்லை நான் முக்கியமான ஆளில்லையா என்ற சண்டைகள் ஏராளமாக நடப்பதைக் காணமுடிகிறது.

ஊரிலிருக்கும் தாத்தாவுக்கு போட்ட கடிதத்திற்கு பதில் கடிதம் வந்த அன்று அதை பிரித்து படிப்பதற்குள் மனதிற்குள் ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது. நேரத்திற்கு சாப்பிடு, கவனமாக பள்ளிக்கூடத்துக்கு போ, வெயிலில் அதிகம் அலையாதே, காலாண்டு விடுமுறைக்கு ஊருக்கு வா என ஒவ்வொரு வார்த்தையிலும் தாத்தாவின் பாசமும், அக்கறையும் இருக்கும். கடிதங்களின் ஓரத்து மடுப்புகளில் கூட தாத்தா, பாட்டியின் அன்பு ஒட்டிக் கொண்டிருக்கும். 
கடிதப் போக்குவரத்தில் 'இப்டிக்கு உங்கல் அன்புள்ள மகன்', 'இப்படிக்கு உங்க அன்புல்ல பேத்தி' என தப்பு தப்பாய் எழுதியிருந்தாலும், அதில் வார்த்தைக்கு வார்த்தை அன்பு நிறைந்திருக்கும். அவை பொக்கிஷம் போல் அவ்வப்போது எடுத்து எடுத்து படிக்கப்படுவதும் உண்டு. ஆயிரம் எஸ்.எம்.எஸ். மெசேஜ்கள் அனுப்பினாலும், அவை ஒரே ஒரு கடிதம் சொல்லிய அன்பை முழுமையாகப் பரிமாறிவிட முடியுமா?

மணலில் புதைந்த வைகோ...

கூடங்குளம் அணு மி்ன் நிலையத்துக்கு எதிராக, கடற்கரை மணலில் புதைந்து மேற்கொள்ளப்பட்ட நூதனப் போராட்டத்தில் பங்கேற்ற மதிமுக பொதுச் செயலர் வைகோ...

உலக கருத்தடை தினமான இன்று...

இந்தியாவில் ஆய்வின் முடிவு :
* குறைந்தது மூன்று நாடுகளில் உள்ள 36% பெண்கள், தனது 24-29 வயதுகளில் தான் முதல் உடலுறவு கொள்கின்றனர் என்று கூறுகிறது.
* ஒட்டுமொத்தவர்களில், இரு பான்மயரும் முதல் உடலுறவு கொள்ளும் போது 55% பேர் ஆண் ஆணுறையைப் பயன்படுத்துகின்றனர் என்று தெரிய வந்தது.
* கருத்தடை பயன்பாட்டில் 29% ஆண்கள் மற்றும் பெண்கள் குறைந்தது ஒரு முறையேனும் பாதுகாப்பற்ற உடலுறவை மேற்கொள்கின்றனர்.
* கர்ப்பத்தடைக்கு பெண்கள் பயன்பாடு : 42% பெண்கள் கர்ப்பத்தடைக்கு தினமும் ஒரு மாத்திரையை எடுத்து கொள்கின்றனர். மற்றொரு 28% பெண்கள் உள்-கருப்பை சாதனம் (IUD) பயன்படுத்துகின்றனர். மேலும் குறைந்தது 3 நாடுகளில் இந்த கர்ப்பத்தடை முறை பயன்படுத்தபடுகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
* கருத்தடை பொறுப்பைப் பற்றி பதிலளித்தவர்களில் வெறும் 52% ஆண்கள் மற்றும் பெண்கள் இருபான்மயரும் இந்த கருத்தடைக்கு பொறுப்பு என்று ஒப்புக்கொண்டனர்.
* அதுமட்டுமல்லாமல் கருத்தடை முறைகள் பயன்பாட்டைப் பற்றி பதிலளித்தவர்களில் 51% மக்கள் தற்போது கருத்தடைக்கு ஆண் ஆணுறையை ஒரு வடிவமாக பயன்படுத்துகின்றனர் என்றும் கூறப்படுவதாக கூறுகின்றனர்.
தற்போது மேற்கொண்ட உலக கருத்தடை நாள் 2012 கணக்கெடுப்பின் புதிய தகவலாக, மீண்டும் 36% இந்திய பெண்கள், அவர்களது 24-29 வயது வரம்பில் முதல் உடலுறவு மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது தெரிய வந்துள்ளது. மேலும் ஒரு பெண்ணின் முதல் உடலுறவு கொண்ட வயது 24-29 என்றும், அவரது முதல் கர்ப்பம் 24-27 வயதிற்கும் இடையே ஏற்பட்டது என்று 48% இந்திய பெண்கள் பதிலளித்ததில் தெரிய வந்துள்ளது.
மேலும் குடும்ப கட்டுப்பாடு மற்றும் கருத்தடை பயன்பாடு விகிதங்கள் மிக முக்கியம் என்பதையும் அந்த கணக்கெடுப்புகள் குறிப்பிடுகின்றன. அதிலும் இந்தியாவில் இந்த கருத்தடை பயன்பாட்டு முறை விகிதம் மிகவும் குறைவாக உள்ளது என்று தெரிவிக்கின்றன.முதல் முறையாக நீண்ட காலமாக குடும்ப கட்டுப்பாடு பற்றி நடத்திய ஆய்வில், ஆண் ஆணுறை மட்டுமே பெரும்பாலானோரால் உபயோகப்படுத்தபடுகிறது என்பது தெரிய வந்தது. மேலும் மூன்றில் ஒருவர் கருத்தடை தேவை இல்லை என்றனர்.
குடும்ப திட்டமிடுதல் சங்கங்கள் (FPAI) மற்றும் மகப்பேறு கூட்டமைப்பு மற்றும் இந்திய பிரசவ சங்கங்கள் (FOGSI) இணைந்து, இந்தியாவில் பேயர் ஜ்ய்டுஸ் பார்மா (Bayer Zydus Pharma) கருத்தடை பற்றிய விழிப்புணர்வை மேற்கொள்ள உள்ளது. குறிப்பாக ஒவ்வொரு பெண்ணும் உலக கருத்தடை தினமான இன்று முதல் தங்கள் எதிர்காலத்தில், திட்டமிட்டு கர்ப்பம் தெறிப்பது என்றாலும் கருத்தடையை பயன்படுத்துவதாக இருந்தாலும், உங்கள் துணைவருடனும், உங்கள் மருத்துவரிடம் கலந்துரையாடி பின்னர் முடிவு எடுக்க வேண்டும் என்று Angel-Michael Evangelista, Managing Director, Bayer Zydus Pharma நிறுவனம் வலியுறுத்தி உள்ளது.

பார்த்ததில் பிடித்தது!




ரெண்டாவது படம்!

பார்க்க துண்டும் தமிழ்ப்படம் இயக்குனரின் அடுத்த (Sorry) ரெண்டாவது படம்!
  

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...