|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

11 January, 2013

இது இது இதுதான் இந்தியா!

2012ம் ஆண்டு மட்டும் பாகிஸ்தான் ராணுவம், போர் நிறுத்த உடன்பாட்டை 117 முறை மீறி நடந்து கொண்டுள்ளது. ஆனால் இந்தியத் தரப்போ இதுகுறித்து பெரிய அளவில் அக்கறை காட்டியதாகவே தெரியவில்லை. 55 ஆண்டு காலமாக இந்தியா, பாகிஸ்தான் இடையே மோதல் நிலவி வருகிறது. நாம் சும்மா இருந்தாலும் அவர்கள் இருக்க விடுவதில்லை, சீண்டிக் கொண்டேதான் இருக்கிறார்கள். இரு நாடுகளுக்கும் இடையே 3 பெரிய போர்கள் நடந்து விட்டன. கார்கிலில் கடைசியாக நடந்த மோதலை உலகமே பயத்துடன் பார்த்தது. அதன் பின்னர் இருநாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை இந்தியா மதித்து நடந்து வருகிறது. ஆனால் பாகிஸ்தான்தான் அதை சுத்தமாக மதிப்பதில்லை. 2003ம் ஆண்டு நவம்பர் மாதம் ஏற்படுத்தப்பட்ட இந்த உடன்பாட்டை இதுவரை பாகிஸதான் மதித்ததே கிடையாது. அன்று முதல் தொடர்ந்து போர்நிறுத்தத்தை மீறியபடியே உள்ளது பாகிஸ்தான். இந்தியாவும் அதைக் கண்டு கொள்ளாமல் இருந்து வருகிறது. பாகிஸ்தான் தாக்குவதும், அதற்கு இந்தியா பதிலடி கொடுப்பதுமாகவே உள்ளோம். எல்லைப் பகுதியில் நாம் எதைச் செய்தாலும் அதற்கு இடையூறு செய்வதே பாகிஸ்தானின் வேலையாகப் போய் விட்டது. கடந்த ஆண்டு மட்டும் பாகிஸ்தான் ராணுவம் 117 முறை போர் நிறுத்தத்தை மீறி நடந்து கொண்டுள்ளனர். சிறு ஆயுதங்களை வைத்து இந்திய வீரர்களை நோக்கிச் சுடுவது அவர்களுக்குப் பொழுதுபோக்கு போலாகி விட்டது. தற்போது இந்தியப் பகுதிக்குள்ளேயே புகுந்து 2 ராணுவ வீரர்களைக் கோரமான முறையில் பாகிஸ்தான் ராணுவம் கொன்றுள்ள செயல், இந்திய ராணுவத்தினரை கடும் உக்கிரத்தில் தள்ளியுள்ளது. ஆனால் இந்திய அரசு என்ன செய்யப் போகிறது என்பதுதான் தெரியவில்லை.

மதுக்கடையை மூடுங்கள்! கைதான 7ஆம் வகுப்பு மாணவி !

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கைது செய்யப்பட்டு போலீஸ் வேனில் 7ஆம் வகுப்பு மாணவி கீர்த்தனா,இந்த இடத்தில் மதுக்கடை இருப்பதால் எங்களால் பள்ளிக்குச் செல்ல முடியவில்லை. என்னுடன் பள்ளிக்கு படிக்க வரும் சகோதரிகளை இந்த கடையில் குடிக்க வருபவர்கள் கேலி, கிண்டல் செய்கின்றனர். மதுக்கடையை கடந்து பள்ளிக்கு செல்லவே அச்சமாக இருக்கிறது. என்னுடைய தந்தை இந்த கடையில் குடித்துதான் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு வேலைக்கு போகாமல் எங்களுடைய குடும்பம் மிகவும் சிரமத்தில் உள்ளது. எங்களுக்கு இந்த மதுக்கடை வேண்டேவே வேண்டாம். இந்த கடை இருப்பதால்தான் இங்கு அனைவரும் குடிக்க வருகின்றனர். மதுக்கடையை மூடுங்கள். பக்கத்தில் பேருந்துநிலையம், கோயில்கள் உள்ளது. பெண்கள் நிம்மதியாக வந்து செல்லமுடியவில்லை. அதனால் இந்த கடையை உடனே இழுத்த மூட வேண்டும் என்றார்

திருப்பூர் குமரன் இறந்த தினம்!

இந்திய விடுதலை போராட்ட தியாகி திருப்பூர் குமரன் இறந்த தினம்!

பார்த்ததில் பிடித்தது!

சங்கரமடத்துடன் கூட ஒப்பிட முடியாதது திமுக மடம்..

தமிழர்கள் தலையில் மிளகாய் அரைக்க வாரிசுகள் வந்து கொண்டே இருப்பார்கள்.





இப்படியே உசுப்பேத்தி உசுப்பேத்தி...?

இங்கிலாந்துக்கு எதிரான எல்லா போட்டிகளிலும் வென்றால்தான் இந்தியாவுக்கு நம்.1 ரேங்க்!


இப்படியே உசுப்பேத்தி உசுப்பேத்தி...?
 

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...