ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கைது செய்யப்பட்டு போலீஸ் வேனில் 7ஆம் வகுப்பு மாணவி கீர்த்தனா,இந்த இடத்தில் மதுக்கடை இருப்பதால் எங்களால் பள்ளிக்குச் செல்ல முடியவில்லை. என்னுடன் பள்ளிக்கு படிக்க வரும் சகோதரிகளை இந்த கடையில் குடிக்க வருபவர்கள் கேலி, கிண்டல் செய்கின்றனர். மதுக்கடையை கடந்து பள்ளிக்கு செல்லவே அச்சமாக இருக்கிறது. என்னுடைய தந்தை இந்த கடையில் குடித்துதான் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு வேலைக்கு போகாமல் எங்களுடைய குடும்பம் மிகவும் சிரமத்தில் உள்ளது. எங்களுக்கு இந்த மதுக்கடை வேண்டேவே வேண்டாம். இந்த கடை இருப்பதால்தான் இங்கு அனைவரும் குடிக்க வருகின்றனர். மதுக்கடையை மூடுங்கள். பக்கத்தில் பேருந்துநிலையம், கோயில்கள் உள்ளது. பெண்கள் நிம்மதியாக வந்து செல்லமுடியவில்லை. அதனால் இந்த கடையை உடனே இழுத்த மூட வேண்டும் என்றார்
No comments:
Post a Comment