- உலக காதலர் தினம்
- ஐ.பி.எம்., நிறுவனம் அமைக்கப்பட்டது(1924)
- ஈ.என்.ஐ.ஏ.சி., என்ற முதல் தலைமுறை கணினி அறிமுகமானது(1946)
- 103வது தனிமமான லோரென்சியம் கண்டுபிடிக்கப்பட்டது(1961)
- ஆஸ்திரேலிய பவுண்டிற்கு பதிலாக ஆஸ்திரேலிய டாலர் அறிமுகப்படுத்தப்பட்டது(1966)
ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை. விவேகானந்தர்.
13 February, 2012
இதே நாள்...
குழந்தை விற்பனை இணையதளத்தில் விளம்பரம்
மெக்சிகன் இணையதளம் ஒன்றில், அழகான குழந்தை விற்பனைக்கு உள்ளது. அதன் உறுப்புகள் தேவைப்படுவோர் வாங்கிக் கொள்ளலாம் என்ற விளம்பரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விளம்பரத்திற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டதை அடுத்து விளம்பரம் நீக்கப்பட்டுவிட்டது. விளம்பரத்தை பதிவு செய்தவர் பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த செயலை அடுத்து, இணையதளத்தில் மனிதர்களை, உடல் உறுப்புகள் விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது என்ற விதிமுறை பதிவு செய்யப்பட்டுள்ளது.
கொருக்கை வீரட்டேஸ்வரர் கோயில்...
காதல் என்பது ஒருவரை ஒருவர் நேசிப்பது. விரும்புவது. அன்பு செலுத்துவது. பிரியம் வைப்பது. பாசம் வைப்பது. இதற்கு பெயர்தான் காதல் என பெரியவர்கள் கூறுகின்றனர். ஆணுக்கும் பெண்ணுக்கும் வருவது மட்டும் காதல் இல்லை. தாய் பிள்ளைகளிடம் வைக்கும் பாசம். சகோதரன் சகோதரியிடம் வைக்கும் பிரியம். ஒருவன் ஆண் அல்லது பெண் நண்பரிடம் வைக்கும் நேசம், ஒரு ஆண் ஒரு பெண்ணை மனதார விரும்புவது. தலைமையில் இருக்கும் ஒருவர் தனக்கு கீழ் இருப்பவரிடம் வைக்கும் அன்பு இப்படிப்பட்ட எல்லாமே காதல் தான். பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையே பாசம் இல்லாமல் தவிப்பவர்களும், சகோதரர்களுக்கும் சகோதரிகளுக்கும் இடையே பிரியம் இல்லாமல் வருத்தப்படுவர்களும். நண்பர்களுக்கிடையே நேசம் இல்லாமல் கவலைப்படுபவர்களும், ஆணும் பெண்ணும் ஒருவர் விரும்பி மற்றொருவர் விரும்பால் திரிபவர்களும், தலைமையும் கீழ் உள்ளவர்களும் ஒற்றுமையில்லையே என நினைப்பவர்களும் சென்று வழிபட வேண்டிய கோயில் நாகப்பட்டினம் மாவட்டம் கொருக்கை வீரட்டேஸ்வரர் கோயில் ஆகும். தாரகாசூரன் போன்ற அசுரர்கள் அழிய முருகனின் அவதாரம் தேவை. எப்போதுமே தியானத்திலிருப்பவர் சிவன். தேவர்கள் எல்லோரும் சேர்ந்து மன்மதனிடம் கூறி சிவன் மீது அம்பெய்து சிவனது தியானத்தை கலைக்க கூறினர். மன்மதனும் சிவன் மீது கணை தொடுக்க, கோபமடைந்த சிவன் மன்மதனை எரித்து விடுகிறார். பதறிப்போன ரதி தேவி, சிவனிடம் மடிப்பிச்சை கேட்க சிவனின் அருளால் மன்மதன் உயிர்ப்பிழைக்கிறான். சிவன் இத்தலத்தில் காமதகன மூர்த்தியாக அருள்பாலித்து வருகிறார். காதலர் தினத்தன்று ஆண், பெண் காதலர்கள் தான் இந்த கோயிலுக்கு சென்று வழிபட வேண்டும் என்பதில்லை. பாசம், பிரியம், நேசம், விருப்பம், அன்பு, ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த கோயிலுக்கு சென்று இங்குள்ள காமதகன மூர்த்தியை வழிபட்டால் தங்களது விருப்பம் உடனே நிறைவேறும் என்பது நம்பிக்கை.
குலதெய்வத்தை அறிந்து வழிபடுதல் அவசியம்.
பொதுவாக ஒவ்வொருவரும் அவர்களது முன்னோர்களின் வழியைப் பின்பற்றி ஏதாவது ஒரு தெய்வத்தை குலதெய்வாக வழிபடுவார்கள். குலதெய்வம் என்பது நம் தாய் தந்தையைப் போல நம்கூடவே இருந்து வழிகாட்டும் அருட்சக்தியாகக் கருதப்படுகிறது. நமக்கு ஒரு கஷ்டம் என்றால் குலதெய்வம் தான் உடனே முன் வந்து காப்பாற்றும், மற்ற தெய்வங்கள் எல்லாம் அடுத்து தான் வரும் என கிராமங்களில் கூறுவர். குழந்தை பிறந்தவுடன் அதற்கு பெயர் வைப்பது முதல் மொட்டைஅடித்து முடி காணிக்கை செலுத்தி காது குத்துவது வரை அனைத்தும் குலதெய்வத்தின் கோயிலில்தான். குடும்பத்தில் எந்த சுபநிகழ்ச்சி நடந்தாலும், குலதெய்வத்தை முதலில் வணங்கிய பிறகே அதற்கான பணிகளைத் தொடங்குவது வழக்கம். சுப நிகழ்ச்சிகளை துவங்குபவர்கள் உடனே குல தெய்வம் கோயிலுக்கு செல்ல முடியாவிட்டால் குல தெய்வத்தை நினைத்து காணிக்கையை ஒரு மஞ்சள் துணியில் முடிந்து வைத்து, குலதெய்வம் கோயிலுக்கு செல்லும் போது செலுத்தி விடுவது வழக்கம். சில சந்தர்ப்பங்களில் சிலர் குலதெய்வ வழிபாட்டை தொடராமல் விட்டு விடுவர். சில ஆண்டுகள் கழித்து குலதெய்வம் எதுவென்றே தெரியாமல் போய் விடுவதும் உண்டு. இதனால், சோதனைகள் ஏற்படும் போது, குலதெய்வ குற்றமாக இருக்குமோ என்று நினைப்பதுண்டு. உடனே அவர்கள் தங்களின் சொந்த ஊர் எது என்று அறிந்து அங்கு அந்தக் கிராமத்தைக் காக்கும் கடவுளே தங்களின் குலதெய்வம் என்று அறிந்து வழிபடுகின்றனர். குலதெய்வத்தை தங்களால் அறிய இயலவில்லை எனில். சித்தர்களால் அருளப்பட்ட நாடி ஜோதிடம் போன்றவற்றினாலும் தாங்கள் தங்கள் குலதெய்வத்தை அறியலாம். குலதெய்வ வழிபாடு என்பது மிகவும் இன்றிமையாதது. இஷ்டதெய்வம் என்பது நாம் விரும்பி வழிபடும் கடவுள். எனினும், குலதெய்வம் என்பது நமது முன்னோர்களினால் தலைமுறை தலைமுறையாக வழிபட்டு வருவது. ஆகவே, எப்படியாவது நமது குலதெய்வத்தை அறிந்து வழிபடுதல் அவசியம். குல தெய்வம் எது? அதை வழிபடுவது எப்படி? எனத்தெரிந்து அதை வழிபட ஆரம்பிக்கும் வரை, கும்பகோணம் அருகில் 3 கி.மீ. தொலைவில், கதிராமங்கலத்தில் அமைந்துள்ள அகத்தியர் பூஜித்த துர்கை கோயிலுக்கு செல்ல வேண்டும். ஞாயிறு, செவ்வாய், வெள்ளிக்கிழமை ராகு காலங்களில் இந்த துர்க்கையை வழிபாடு செய்வது சிறப்பாகும்.கவிச்சக்கரவர்த்தி கம்பர் தான் பாடல் எழுதும் முன்பாக இந்த துர்க்கையை வழிபாடு செய்தபின் தான் கவிதை எழுதுவாரம்.
இதே நாள்...
- சர்வதேச வானொலி தினம்
- இந்திய சுதந்திர போராட்ட வீராங்கனை சரோஜினி நாயுடு பிறந்த தினம்(1879)
- ஸ்பெயின், போர்ச்சுக்கலை தனிநாடாக அங்கீகரித்தது(1668)
- பிரான்ஸ் தனது முதலாவது அணுகுண்டை சோதித்தது(1960)
- பொன்னம்பலம் அருணாச்சலத்திற்கு சர் பட்டம் பக்கிங்ஹம் அரண்மனையில் வழங்கப்பட்டது(1914)
Subscribe to:
Posts (Atom)