|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

02 April, 2011

Classic moments world cup final highlights ind vs srl



சி.பி.ஐ., வலையில் சிக்கி திணறிக்கொண்டிருக்கும் ராஜா, இதுவரை ஜாமீன் பெற முயற்சிக்காதது ஏன்?

"ஸ்பெக்ட்ரம்' ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, பிப்., 2ம் தேதி ராஜாவை சி.பி.ஐ., கைது செய்தது. அவரது, தனிச் செயலராகப் பணியாற்றிய ஆர்.கே.சந்தாலியா, தொலைத் தொடர்புத் துறை முன்னாள் செயலர் சித்தார்த் பெகுரா ஆகியோரையும் சி.பி.ஐ., கைது செய்தது. கைதான பின், பல முறை சி.பி.ஐ., விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின், டில்லி திகார் சிறையில் ராஜா அடைக்கப்பட்டார். சிறையில் 50 நாட்களுக்கும் மேலாக வாடிக்கொண்டிருக்கும் ராஜா, இதுவரை ஜாமீன் பெற முயற்சிக்கவில்லை.கட்சித் தலைமை உத்தரவிட்டதன் பேரில் தான், ராஜா அமைதியாக இருப்பதாக கூறப்படுகிறது.

ராஜா ஜாமீன் மனு செய்யாததற்கு வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. ஜாமீன் கேட்டு ராஜா மனு செய்து, அம்மனு மீது வழக்கு நடைபெற்றால், பல்வேறு கேள்விகள் பூதம்போல் எழும்பும். குறிப்பாக, "வழக்கில் தொடர்புடைய மற்ற நபர்கள் யார், யார்? அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதா? அவர்கள் கைது செய்யப்படவேண்டியவர்களா? அவர்களுக்கும், ராஜாவுக்கும் உள்ள தொடர்புகள் என்னென்ன?' போன்ற சரமாரியாக கேள்விகள் வந்து விழும்.இதற்கு, ராஜா கட்டாயம் பதிலளிக்க வேண்டிய நிலை ஏற்படும். அப்படி, பதிலளித்தால், அதையொட்டி, கோர்ட் புதிய உத்தரவுகளை வெளியிட நேரிடும். அதுபோன்று ஒரு நிலை ஏற்பட்டால், ஆளுங்கட்சியில் மிகப்பெரிய சூறாவளி ஏற்பட்டுவிடும் என்று முன்கூட்டியே தெரிந்து தான், ஜாமீன் கேட்காமல் ராஜா அமைதியாக இருப்பதாக கூறப்படுகிறது.


மேலும், கருணாநிதியின் மனைவி தயாளு மற்றும் மகள் கனிமொழி ஆகியோரை சி.பி.ஐ., விசாரித்துள்ளது. இந்நிலையில், ராஜா ஜாமீன் கோரி மனு செய்தால், அதுதொடர்பான விசாரணையில், இவர்களது பெயர்களையும் இழுக்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுவிடும் என்பதும், ராஜாவின் மவுனத்திற்கு ஒரு முக்கியக் காரணம் என்று கூறப்படுகிறது. "தேர்தல் நடைபெறும் போது, ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக எழும் விவாதங்கள் அவசியமற்றது' என்று தி.மு.க., தலைமை கருதுவதால், ராஜாவை அமைதி காக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

இதே நாள்

  • உலகின் முதலாவது நகர்பேசி அழைப்பு நியூயார்க்கில் மேற்கொள்ளப்பட்டது(1973)
  •  மராட்டிய பேரரசர் சிவாஜி இறந்த தினம்(1680)
  •  தென்கொரியாவில் மனித உரிமை மீறல் மற்றும் உள்நாட்டுப் போர் ஆரம்பமானது(1948)
  •  ஜோசப் ஸ்டாலின், சோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சியின் முதல் பொதுச் செயலாளரானார்(1922)

CBI files 80,000-pg chargesheet: But for Raja, silent on DMK

"முதலில் வந்தவருக்கே முன்னுரிமை'' என்ற அடிப்படையில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக அப்போதைய தொலைத்தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ஆ. ராசா உள்பட 9 பேர் மீது மத்தியப் புலனாய்வுக் கழகம் (சி.பி.ஐ.) குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தது.30,984 கோடி ரூபாய்: இந்த நடவடிக்கையால் அரசுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பு 30,984 கோடி ரூபாய் மட்டுமே என்று முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.சிறப்பு நீதிமன்றம்: தில்லியில் இதற்காகவே ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் சிறப்பு சி.பி.ஐ. நீதிமன்றத்தில் நீதிபதி ஓ.பி. சைனி முன்னிலையில் சனிக்கிழமை இந்த குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.80,000 பக்கங்கள்: 80,000 பக்கங்களைக் கொண்ட இந்த குற்றப்பத்திரிகையில் மத்திய அரசின் தலைமை அரசு வழக்கறிஞர் குலாம் இ வாஹன்வதி, அதிகாரத் தரகர் நீரா ராடியா உள்பட 125 பேர் சாட்சிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.மாத இறுதியில் கூடுதல் குற்றப்பத்திரிகை: இந்த வழக்கை விசாரித்துவரும் சி.பி.ஐ. அமைப்பு இந்த மாத இறுதிக்குள் கூடுதல் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்வதாகவும் மே 31-ம் தேதிக்குள் இந்த வழக்கில் விசாரணையை முடித்துவிடுவதாகவும் நீதிபதியிடம் தெரிவித்தது.நீதிபதி திருப்தி: இந்த வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகை, ஆவணங்கள், சாட்சிகளின் வாக்குமூலங்கள், இதர ஆதாரங்கள் ஆகியவற்றை படித்துப் பார்த்ததாகவும் இந்த வழக்கைத் தொடர போதிய காரணங்களும் ஆதாரங்களும் இருப்பதாகத் தமக்கு திருப்தி ஏற்பட்டிருப்பதாகவும் இனி வழக்கு விசாரணையைத் தொடரலாம் என்றும் நீதிபதி ஓ.பி. சைனி குறிப்பிட்டார்.9 பேர் மீது குற்றப்பத்திரிகை: முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ஆ. ராசா, அத்துறை முன்னாள் செயலாளர் சித்தார்த் பெகுரா, 3 தொலைத் தொடர்பு நிறுவனங்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், யூனிடெக் வயர்லெஸ், ஸ்வான் டெலிகாம் ஆகியவை அந்த 3 நிறுவனங்கள்.ஏமாற்றுதல், கையெழுத்து மோசடி, கிரிமினல் சதித்திட்டம், ஊழல் ஆகிய குற்றங்களைச் செய்திருப்பதாக ஆ. ராசா, அவருடைய தனிச் செயலர் ஆர்.கே. சண்டோலியா, பெகுரா, ஸ்வான் டெலிகாம் நிறுவன ஊக்குவிப்பாளர் ஷாகித் உஸ்மான் பல்வா ஆகியோர் மீது சி.பி.ஐ. குற்றம்சாட்டியிருக்கிறது.ஐக்கியப்படுத்தப்பட்ட தொடர்பு சேவைக்கான உரிமங்களும், 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடும் வழங்கப்பட்டிருக்கும் விதத்தை ஆராய்ந்தால் இந்தியக் குற்றவியல் நடைமுறைச் சட்டம், ஊழல் தடுப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழ் வரும் பிரிவுகளின்படி குற்றங்கள் நடந்திருப்பது புலனாகிறது என்று சி.பி.ஐ. சுட்டிக்காட்டுகிறது.மும்பையைச் சேர்ந்த டி.பி. ரியாலிட்டி நிறுவனத்தின் இயக்குநர் வினோத் கோயங்கா, குடுகாமில் உள்ள ரியல் எஸ்டேட் நிறுவனம் யூனிடெக், தமிழ்நாட்டில் உள்ள யூனிடெக் வயர்லெஸ் பிரைவேட் லிமிடெட் ஆகியவற்றின் நிர்வாக இயக்குநர் சஞ்சய் சந்திரா, மும்பையைத் தலைமையிடமாகக் கொண்ட ரிலையன்ஸ் டெலிகாம் நிறுவனத்தின் குழும நிர்வாக இயக்குநர் கெüதம் தோஷி, 2 மூத்த துணைத் தலைவர்கள் ஹரி நாயர், சுரேந்திர பிபாரா ஆகியோரின் பெயர்களும் குற்றப்பத்திரிகையில் இடம் பெற்றுள்ளன.ஏப்ரல் 13-ல் ஆஜராக சம்மன்: இந்த வழக்கில் குற்றப்பத்திரிகையில் பெயர் குறிப்பிடப்பட்டு ஆனால் இன்னமும் கைது செய்யப்படாமல் உள்ளவர்கள் இம் மாதம் (ஏப்ரல்) 13-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி ஓ.பி.சைனி உத்தரவிட்டார்.மிக அதிகப் பயன் அடைந்த நிறுவனம்: இந்த முறைகேடு காரணமாக மிக அதிக அளவுக்குப்பணப் பயன் அடைந்த நிறுவனம் யூனிடெக் வயர்லெஸ் நிறுவனம் என்று குற்றப்பத்திரிகை தெரிவிக்கிறது. யூனிடெக் வயர்லெஸ் நிறுவனமும் ஸ்வான் டெலிகாம் நிறுவனமும்தான் இந்த அலைக்கற்றை ஒதுக்கீடுகளைப் பெறும் தகுதி (திறன், அனுபவம் போன்றவை) இல்லாதவை என்றும் குற்றப்பத்திரிகைத் தெரிவிக்கிறது.ரிலையன்ஸ் டெலிகாம் நிறுவனம் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு பெறுவதற்காக ஸ்வான் டெலிகாம் நிறுவனம் களப்பணிகளைச் செய்தது என்று குற்றப்பத்திரிகை தெரிவிக்கிறது.கலைஞர் டி.வி. கண்காணிக்கப்படுகிறது: கலைஞர் டி.வி. பிரைவேட் லிமிடெட், சினியுக் பிலிம்ஸ், கிரீன் அவுஸ் பிரைவேட் லிமிடெட், குசேகாவோன் புரூட்ஸ் அண்ட் வெஜிடபிள்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் தொடர்ந்து தங்களால் கண்காணிக்கப்படுவதாக நீதிபதியிடம் சி.பி.ஐ. தெரிவித்தது.கனிமொழி, தயாளு அம்மாள் பங்குதாரர்: கலைஞர் டி.வி. நிறுவனத்தில் தமிழக முதலமைச்சர் மு. கருணாநிதியின் மகள் கனிமொழி, மனைவி தயாளு அம்மாள், கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குநர் சரத்குமார் ஆகியோருக்கு முறையே 20, 60, 20 சதவீதப் பங்குகள் இருப்பது நீதிபதியிடம் தெரிவிக்கப்பட்டது.2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டுடன் தொடர்புள்ள சட்டவிரோதப் பணம் பல்வாவின் நிறுவனத்திலிருந்து சினியுக் பிலிம்ஸ், குசேகாவோன் நிறுவனம் மூலமாக கலைஞர் டி.வி.க்குக் கிடைத்தது என்று சி.பி.ஐ. குற்றஞ்சாட்டுகிறது.குசேகாவோன் புரூட்ஸ், வெஜிடபிள்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர்கள் ஆசிஃப் பல்வா, ராஜீவ் அகர்வால் ஆகியோர் மார்ச் 29-ம் தேதி கைது செய்யப்பட்டனர். சினியுக் பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் வங்கிக் கணக்குகள் மூலம் ரூ.200 கோடியை கலைஞர் டி.வி.க்கு அனுப்பிவைத்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது

'the world's most violent city'


Despite frequent beheadings, public shoot-outs between rival drug gangs and widespread police corruption, Jose Armendariz Bailon thinks Juarez is a great place to invest.
As chairman of the Maquiladoras Association (AMAC) in Juarez, Mexico, Bailon is responsible for drawing manufacturing investment to the border city which has been rocked by violence between warring drug cartels battling for trafficking routes to the US. 
"There is a certain fear from investors," Bailon says during an interview in a board room at the offices of the maquiladora association. "But they [investors] see the other strengths we have, so investment hasn't been reduced."
Recorded homicides in the city of about 1.5 million surpassed 3,000 in 2010, a level roughly equivalent to that in a war zone. Escalating violence means 2011 is likely to be even worse.

Japan PM visits tsunami-hit areas


India win Cricket World Cup






India delight the Mumbai home crowd with a six wicket win over Sri Lanka.
India beat Sri Lanka to win the Cricket World Cup for the first time in 28 years as captain Mahendra Singh Dhoni struck a dramatic six to bring the title home to an ecstatic crowd on Saturday.
Dhoni finished with 91 not out as India, chasing a target of 275, won by six wickets with 10 balls to spare at the Wankhede Stadium to become the first host country to win the World Cup.
Left-hander Gautam Gambhir stayed calm among the storm to score a masterly 97, sharing a fourth-wicket partnership of 109 from 118 balls with man-of-the-match Dhoni. Yuvraj Singh, who was named man-of-the-tournament, finished on 21 not out.
"The 2007 World Cup was a nightmare and this is a dream," said Gambhir.
"All credit to Sachin Tendulkar, we were all playing for him, it (trophy) is for him.
"We had a tough quarterfinal and semfinal, it was a blessing in disguise for us. It is a dream come true"

Libyan rebels killed in NATO air strike'



Slow pace of rescue work in Japan


'Libyan rebels killed in NATO air strike'


இதே நாள்

  •  உலக சிறுவர் நூல் தினம்
  •  இந்திய விடுதலைப் போராட்ட வீரர் வ.வே.சு.ஐயர் பிறந்த தினம்(1881)
  •  போக்லாந்து தீவுகளை அர்ஜெண்டினா முற்றுகையிட்டது(1982)
  •  அமெரிக்காவின் முதல் தியேட்டர் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் திறக்கப்பட்டது(1902)
  •  ராகேஷ் சர்மா, விண்வெளிக்கு சென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார்(1984)

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...