"ஸ்பெக்ட்ரம்' ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, பிப்., 2ம் தேதி ராஜாவை சி.பி.ஐ., கைது செய்தது. அவரது, தனிச் செயலராகப் பணியாற்றிய ஆர்.கே.சந்தாலியா, தொலைத் தொடர்புத் துறை முன்னாள் செயலர் சித்தார்த் பெகுரா ஆகியோரையும் சி.பி.ஐ., கைது செய்தது. கைதான பின், பல முறை சி.பி.ஐ., விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின், டில்லி திகார் சிறையில் ராஜா அடைக்கப்பட்டார். சிறையில் 50 நாட்களுக்கும் மேலாக வாடிக்கொண்டிருக்கும் ராஜா, இதுவரை ஜாமீன் பெற முயற்சிக்கவில்லை.கட்சித் தலைமை உத்தரவிட்டதன் பேரில் தான், ராஜா அமைதியாக இருப்பதாக கூறப்படுகிறது.
ராஜா ஜாமீன் மனு செய்யாததற்கு வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. ஜாமீன் கேட்டு ராஜா மனு செய்து, அம்மனு மீது வழக்கு நடைபெற்றால், பல்வேறு கேள்விகள் பூதம்போல் எழும்பும். குறிப்பாக, "வழக்கில் தொடர்புடைய மற்ற நபர்கள் யார், யார்? அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதா? அவர்கள் கைது செய்யப்படவேண்டியவர்களா? அவர்களுக்கும், ராஜாவுக்கும் உள்ள தொடர்புகள் என்னென்ன?' போன்ற சரமாரியாக கேள்விகள் வந்து விழும்.இதற்கு, ராஜா கட்டாயம் பதிலளிக்க வேண்டிய நிலை ஏற்படும். அப்படி, பதிலளித்தால், அதையொட்டி, கோர்ட் புதிய உத்தரவுகளை வெளியிட நேரிடும். அதுபோன்று ஒரு நிலை ஏற்பட்டால், ஆளுங்கட்சியில் மிகப்பெரிய சூறாவளி ஏற்பட்டுவிடும் என்று முன்கூட்டியே தெரிந்து தான், ஜாமீன் கேட்காமல் ராஜா அமைதியாக இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும், கருணாநிதியின் மனைவி தயாளு மற்றும் மகள் கனிமொழி ஆகியோரை சி.பி.ஐ., விசாரித்துள்ளது. இந்நிலையில், ராஜா ஜாமீன் கோரி மனு செய்தால், அதுதொடர்பான விசாரணையில், இவர்களது பெயர்களையும் இழுக்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுவிடும் என்பதும், ராஜாவின் மவுனத்திற்கு ஒரு முக்கியக் காரணம் என்று கூறப்படுகிறது. "தேர்தல் நடைபெறும் போது, ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக எழும் விவாதங்கள் அவசியமற்றது' என்று தி.மு.க., தலைமை கருதுவதால், ராஜாவை அமைதி காக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

No comments:
Post a Comment