|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

19 September, 2011

செருப்புக் கடைக்காரர் பெயரில் தனது மகனுக்கு பைக் வாங்கினார் அசாருதீன்!

அசாருதீனின் இளைய மகன்அயாசுதீனின் உயிரைப் பறித்த சூப்பர் பைக், செருப்புக் கடைக்காரர் ஒருவரின் பெயரில் வாங்கப்பட்டுள்ள விவரம் தற்போது கிடைத்துள்ளது.

சுசுகி ஜிஎஸ்எக்ஸ் ஆர் 1000 என்ற இந்த சூப்பர் பைக்கில் அதி வேகமாக சென்றுதான் விபத்துக்குள்ளாகி மரணமடைந்தார் அயாசுதீன். இந்த கோர விபத்தில் அவரது அத்தை மகனும் உயிரிழந்து விட்டார். அயாசுதீனுக்கு வயது 19 தான் ஆகிறது. தந்தையைப் போலவே சிறந்த கிரிக்கெட் வீரராக உருவாகி வந்த நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்து போயுள்ளார் அயாசுதீன். விபத்தில் இறந்த அயாசுதீனின் அத்தை மகனுக்கு வயது 16தான் ஆகிறது. இரு இளம் குருத்துக்களை இழந்த சோகத்தில் அசாருதீன் குடும்பமே அதிர்ச்சியில் மூழ்கியுள்ளது.

இந்த நிலையில் விபத்துக்குக் காரணமாக அந்த பைக்கை ஒரு செருப்புக் கடைக்காரர் பெயரில் அசாருதீன் வாங்கியுள்ளது தெரிய வந்துள்ளது. இதையடுத்து வருமான வரித்துறையினர் விசாரணையில் குதித்துள்ளனர்.
இந்த பைக்கை ஜப்பானின் நகோயா நகரிலிருந்து இறக்குமதி செய்து வாங்கியுள்ளனர். டெல்லி லாஜ்பத் நகரில் உள்ள பிட்டூ பைக் வாலா என்ற டீலரிடமிருந்து பைக் வாங்கப்பட்டுள்ளது. இதன் விலை 88 சதவீத வரிகள் உள்பட ரூ. 5.27 லட்சமாகும்.

பிட்டூ பைக்வாலாவிடமிருந்து ஹைதராபாத், மல்லபள்ளியைச் சேர்ந்த சையத் அத்தர் அலி என்பவர் பைக்கை ஆர்டர் செய்து வாங்கியுள்ளார். கடந்த 2010, டிசம்பர் 23ம் தேதி பைக் வாங்கப்பட்டுள்ளது. இதற்காக அவர் ரூ. 13,12,649 கொடுத்துள்ளார். அத்தர் அலி, கான்பூரைச் சேர்ந்தவர். இவர் அசாருதீனின் குடும்ப நண்பர் ஆவார். இவருக்கு அகாபுராவில் நோபிள் புட்வேர் என்ற ஷூ மற்றும் செருப்புக் கடை சொந்தமாக உள்ளது.

அசாருதீன் மகன் ஓட்டிச் சென்ற பைக் இன்னொருவருடையது என்ற தகவல் வெளியானதும் வருமானவரித்துறையினர் தற்போது விசாரணையில் குதித்துள்ளனர். வரி கட்டுவதைத் தவிர்ப்பதற்காக தனது மகனுக்கு வேறு ஒருவரின் பெயரில் பைக் வாங்கினாரா அசார் என்று விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

இதற்கிடையே, போலீஸாரும் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். பைக்கை விற்ற டீலரிடம் அவர்கள் விசாரித்தபோது தனது மகனுக்காக அசாருதீன்தான் இந்த பைக்கை வாங்கியதாக கூறியுள்ளார். இதையடுத்து அத்தர் அலி வீட்டுக்குப் போலீஸார் சென்றபோது அங்கு அவர் இல்லை. இதையடுத்து பைக்குக்கான ஆவணங்களுடன் விசாரணைக்கு வருமாறு அவருக்கு போலீஸார் தகவல் அனுப்பியுள்ளனர்.

செருப்புக் கடைக்காரர் பெயரில் தனது மகனுக்கு பைக் வாங்கினார் அசாருதீன் என்ற புதிய தகவல் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

இதே நாள்...



  • தாய்லாந்து தேசிய இளைஞர்கள் தினம்
  •  தி ஹிந்து இதழ் வெளியிடப்பட்டது(1878)
  •  பேர்டினண்ட் மெகலன், ஸபெயினிலிருந்து உலகைச் சுற்றிவரப் புறப்பட்டார்(1519)
  •  மகாத்மா காந்தி, புனே சிறையில் உண்ணாநோன்பை துவக்கினார்(1932)
  •  துருவ செயற்கைகோள் ஏவுகணையை இந்தியா ஏவியது(1993)
  • திருச்சி, தனியார் மருத்துவமனையில் இறந்து விட்டதாக கூறி, பிணமாக மூடை கட்டி கொடுக்கப்பட்டவர், உயிர் பிழைத்த சம்பவம்!


    திருச்சி, தனியார் மருத்துவமனையில் இறந்து விட்டதாக கூறி, பிணமாக மூடை கட்டி கொடுக்கப்பட்டவர், உயிர் பிழைத்த சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இலங்கை யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் தன்னேரி, 64. இவரது மனைவி கோமதி, 56. இலங்கையில் நடந்த கலவரத்தை தொடர்ந்து, 1985ம் ஆண்டு, மண்டபம் முகாமுக்கு வந்த இவர்கள், 1996ல் இருந்து திருச்சி கொட்டப்பட்டு, இலங்கை தமிழர் முகாமில் தங்கியுள்ளனர். இவர்களுக்கு ஜெயராணி என்ற மகளும், செவ்வந்தி செல்வன், சந்திரன், மோகன்தாஸ், 30, ஆகிய மூன்று மகன்களும் உள்ளனர். பெயின்டராக பணிபுரியும், இவர்களது மகன் மோகன்தாஸ், 15ம் தேதி இரவு நடந்த சாலை விபத்தில் படுகாயமடைந்தார். திருச்சி கே.எம்.சி., தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரை, மூன்று நாட்கள் ஐ.சி.யூ.,வில் வைத்திருந்தனர். நேற்று முன்தினம் இரவு, 7 மணிக்கு, அவர் இறந்து விட்டதாக கூறி, உறவினர்களிடம் ஒப்படைத்தனர். மோகன்தாஸ் இறந்ததை அறிந்து, வீட்டின் முன் பந்தல் போடப்பட்டு, ஐஸ் பெட்டியும் வரவழைத்தனர். ஊரெல்லாம் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டப்பட்டது.

    இதற்கிடையே, மருத்துவமனையில் இருந்து மோகன்தாஸ், ஆம்புலன்சில் ஏற்றப்பட்டார். திடீரென அவரது கை, கால்கள் அசையவே, அதிர்ச்சியடைந்த உறவினர்கள், மீண்டும் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லாமல், நேரடியாக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். உயிருக்கு ஆபத்தான நிலையில், அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    மோகன்தாசின் அண்ணி சாந்தி கூறியதாவது:திருச்சி அரசு மருத்துவமனைக்குதான், மோகன்தாசை முதலில் கொண்டு சென்றோம். அதற்குள் இரண்டு முறை, மோகன்தாசுக்கு வலிப்பு வந்து, காதில் ரத்தமும் வந்தது.டாக்டர்கள் எங்களுக்கு சரியாக பதில் அளிக்காததால், பயந்துபோன நாங்கள், உடனடியாக திருச்சி கே.எம்.சி., மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். அங்கு அவரை ஐ.சி.யூ., வார்டுக்கு கொண்டு சென்றனர். நேற்று முன்தினம் வரை தொடர்ந்து சிகிச்சை அளிப்பதாக கூறி, மருந்து, மாத்திரைகளை வாங்கி வர கூறினர்.ஒரு லட்ச ரூபாய் செலவழித்த பின்னும், அவர் உயிருடன் இருக்கிறாரா, இல்லையா என்பதை தெரிவிக்கவில்லை. நாங்கள் வற்புறுத்தவே, நேற்று முன்தினம் இரவு, பிணமாக எங்களிடம் வழங்கினர். அவர் இறந்து விட்டதாக சான்றிதழும் கொடுத்தனர்.

    ஆம்புலன்சில் ஏற்றியபோது தான், மோகன்தாசுக்கு உயிர் இருப்பது தெரிந்தது. இதற்குபிறகும் அந்த மருத்துவமனையில் இருக்கக்கூடாது என்று திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்துவிட்டோம்.இங்கு வந்தவுடன் தனியார் மருத்துவமனையை சேர்ந்த சிலர், ஆங்கிலத்தில் எழுதப்பட்ட தாளில் கையெழுத்து கேட்டு, எங்களை மிரட்டுகின்றனர். நாங்கள் போட மறுத்துவிட்டோம். இதுபோன்று பணம் பறிக்கும் மருத்துவமனைகள் மீது, தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு சாந்தி கூறினார்

    LinkWithin

    Related Posts Plugin for WordPress, Blogger...