ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை. விவேகானந்தர்.
06 December, 2012
நாடு எக்கேடு கெட்டால் எனக்கு என்ன?
இந்திய ஒலிம்பிக் சங்கத்தை சஸ்பெண்ட் செய்து சர்வதேச ஒலிம்பிக்
கவுன்சில் உத்தரவிட்டுள்ள நிலையில், அந்தத் தடை குறித்து சற்றும்
கவலைப்படாமல், சங்கோஜப்படாமல், ஒலிம்பிக் சங்க நிர்வாகிகள் தேர்தலை நடத்தி
முடித்து காக்டெய்ல் பார்ட்டி வைத்து அதைக் கொண்டாடியும் முடித்துள்ளனர்
புதிய நிர்வாகிகள். அந்த பார்ட்டியில் சுரேஷ் கல்மாடியும் கலந்து கொண்டார்.இந்திய
ஒலிம்பிக் சங்கத்தின் தேர்தல், மத்திய விளையாட்டுத்துறையின்
விதிமுறைகளுக்கேற்ப நடைபெறும் என அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஒலிம்பிக்
சங்கத்தை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில்.
இது
இந்திய விளையாட்டு வீரர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி அலைகளை
ஏற்படுத்தியுள்ளது. அடுத்து காமன்வெல்த், ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும்
இந்தியா விளையாட முடியாதபடி தடைகள் வரப் போவதாகவும் கூறப்படுகிறது.ஆனால்
இது எதைப் பற்றியும் கவலைப்படாமல் திட்டமிட்டபடி இந்திய ஒலிம்பிக் சங்கம்
தேர்தலை நடத்தி முடித்துள்ளது. புதிய தலைவராக அபய் சிங் செளதாலா
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.தேர்தலை முடித்த கையோடு டெல்லி
இம்பீரியல் ஹோட்டலில் நேற்று ராத்திரி விடிய விடிய விருந்து வைத்து
களேபரப்படுத்தியுள்ளனர் சங்க நிர்வாகிகள். பெரும் திரளானோர் கலந்து கொண்ட
இந்த விருந்து நிகழ்ச்சியில் மது விருந்தும், இரவு விருந்தும் அடக்கம். விருந்துக்கு
வந்தவர்களில் முக்கியமானவர் காமன்வெல்த் போட்டி ஊழல் புகழ் சுரேஷ்
கல்மாடி. புதிய தலைவர் செளதாலாவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
விருந்திலும் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
ஊத்தி மூடினாலும் விடிய, விடிய ஊத்தி ஆட்டம் போட்ட இந்திய ஒலிம்பிக் சங்கம்.நாடு எக்கேடு கெட்டால் இவனுகளுக்கு என்ன? வாழ்க பாரதம்!
ஊத்தி மூடினாலும் விடிய, விடிய ஊத்தி ஆட்டம் போட்ட இந்திய ஒலிம்பிக் சங்கம்.நாடு எக்கேடு கெட்டால் இவனுகளுக்கு என்ன? வாழ்க பாரதம்!
நிர்வாண பெண்ணின் உடலில்!
மியாமியில் உள்ள ஒரு ஹோட்டலில் ஜப்பானிய வகை உணவுகளை வித்தியாசமான
முறையில் கொடுக்கிறார்கள். அதாவது நிர்வாணமாக படுத்திருக்கும் ஒரு பெண்ணின்
உடலில் உணவுகளை வைத்து அதை வாடிக்கையாளர்களுக்குத் தருகிறார்கள்.அதாவது
தட்டுக்குப் பதில் ஒரு பெண் நிர்வாணமாக படுத்திருப்பார். அவர் மீது
உணவுகள் வைக்கப்பட்டிருக்கும். அந்த உணவை நமக்குத் தருவார்கள். நாம்
பெண்ணின் உடலிலிருந்து உணவை எடுத்துச் சாப்பிட வேண்டும்.குங்பூ
கிச்சன் மற்றும் சுஷி ஆகிய இரு ஹோட்டல்களும் மியாமி கடற்கரைப் பகுதியில்
உள்ளன. இங்குதான் இந்த வித்தியாசமான உணவுப் பரிமாறல் நடக்கிறது. கடந்த
மாதம் முதல் நிர்வாணப் பெண்களின் உடல் மீது உணவுகளை வைத்து வழங்குவதை
இவர்கள் அறிமுகப்படுத்தியுள்ளனர்.இதுகுறித்து அந்த உணவகத்தின்
தலைமைச் சமையலர் கூறுகையில், ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக நிர்வாணப்
பெண்ணின் உடலில் உணவுகளை வைத்துப் பரிமாறுவதை, சாப்பிடுவதை ஜப்பானியர்கள்
கடைப்பிடித்து வருகிறார்கள். இது ஜப்பானியர்களின் பாரம்பரியம் என்று
கூறினார்.ஒரு பெண்ணின் உடலில் வைக்கப்படும் உணவை 15 பேர் வரை சாப்பிடலாம். இந்த உணவுக்கான கட்டணம் 500 டாலர்களாகும்.
ஊழல்கள் மலிந்த நாடு!
உலக அளவில் ஊழல்கள் நிறைந்த நாடுகளின் பட்டியலில் இந்தியாவிற்கு 94 வது
ரேங்க் கிடைத்துள்ளது. உலக அளவில் அரசுத்துறை, பொதுத்துறை உள்ளிட்ட பல்வேறு
துறைகளில் ஊழல்கள் நிறைந்துள்ளன. இவற்றில் ஊழல்கள் நிறைந்த நாடுகள் எவை
என்பது குறித்து, டி.ஐ.ஐ. எனப்படும் டிரான்ஸ்பரன்சி இன்டர்நேசனல் இந்தியா
என்ற அமைப்பு ஆய்வு மேற்கொண்டு அதற்கான அறிக்கையினை வெளியிட்டது.
கடந்த 2011-ம் ஆண்டு 182 நாடுகளில் ஆய்வு செய்ததில் ஊழல்கள் குறைந்த
உள்ள நாடுகளில், நியூசிலாந்தும், பின்லாந்தும் உள்ளன. இந்தியாவை பொறுத்தவரை
இந்தியா 95-வது ரேங்க் பெற்றிருந்தது. இந்தாண்டு 176 நாடுகளில் ஆய்வு
மேற்கொள்ளப்பட்டதில் இந்தியா 94 ரேங்க் பெற்று 36வது இடத்திலும், தொடர்ந்து
சீனா 39வது இடத்திலும், பாகிஸ்தான் 27வது இடத்திலும் உள்ளன.
வளர்ச்சி குன்றிய நாடுகளில் ஊழல் உலக அளவில் ஊழல்கள் அதிகம் உள்ள நாடுகள் பட்டியலில் முதல் 10 நாடுகள் பட்டியலில் இப்போதும் ஆப்ரிக்க நாடான சோமாலியா, வடகொரியா, ஆப்கானிஸ்தான் ஆகியவை இடம் பெற்றுள்ளன என்று டி.ஐ.ஐ. அமைப்பின் துணைத்தலைவர் எஸ்.கே.அகர்வால் தெரிவித்துள்ளார். பொதுவாக வளர்ச்சி அடைந்த நாடுகளான வட அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளில் ஊழல் குறைவாகவும், வளர்ச்சி குன்றிய நாடுகளான ஆப்பிரிக்கா, ஆசியா, தென் அமெரிக்கா போன்ற நாடுகளில் ஊழல் அதிகரித்துள்ளது.
எங்கும் எதிலும் ஊழல் அதன்படி 2012-ம் ஆண்டு வரை மொத்தம் உள்ள 182 நாடுகளில் இந்தியா 36 இடத்தில் உள்ளது. இது உலக அளவில் 94வது ரேங்க் ஆகும். இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக 2-ஜி ஸ்பெக்டரம் ஒதுக்கீட்டில் ஊழல், நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கியதில் ஊழல், காமல்வெல்த் போட்டிகளில் ஊழல் போன்ற பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் தற்போது இந்தியாவில் பரபரப்பினை ஏற்படுத்தி வருகின்றன.
அதிகாரத்தை தவறாக பயன்படுத்துதல் டி.ஐ.ஐ அமைப்பு 2003 ஆம் ஆண்டிலிருந்து கடந்த 10 ஆண்டுகளாக ஊழல்கள் மலிந்த நாடுகளைக் கண்டறிந்து ரேங்க் கொடுத்து அதை வெளியிட்டு வருகிறது. இதில் ஊழல் மலிவுச் சுட்டெண் என்பது உலக நாடுகளின் ஊழல் நிலையின் மதிப்பீடு ஆகும். ஊழல் என்பது தனிப்பட்ட இலாபத்துக்காக அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவது என்று இந்த அமைப்பு வரையறை செய்கிறது.

Subscribe to:
Posts (Atom)