|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

27 August, 2013

பார்த்ததில் பிடித்தது...

உள்ளங்கள் அழகானால் இல்லங்கள் அழகாகும்,
உண்மைகள் அழகானால் நன்மைகள் அழகாகும்,
உறவுகள் அழகானால் திறமைகள் அழகாகும்,
உணர்சிகள் அழகானால் உரிமைகள் அழகாகும் ,
உழைப்புகள் அழகானால் உலகம் அழகாகும். 










தைரியமானவர்களுக்கு மட்டும்




ஆய கலைகள் 64

1. எழுத்திலக்கணம் (அக்கரவிலக்கணம்) 
2. எழுத்தாற்றல் (லிகிதம்) 
3. கணிதம் 
4. மறைநூல் (வேதம்)
 5. தொன்மம் (புராணம்) 
6. இலக்கணம் (வியாகரணம்) 
7. நயனூல் (நீதி சாத்திரம்) 
8. கணியம் (சோதிட சாத்திரம்) 
9. அறநூல் (தரும சாத்திரம்) 
10. ஓகநூல் (யோக சாத்திரம்) 
11. மந்திர நூல் (மந்திர சாத்திரம்) 
12. நிமித்திக நூல் (சகுன சாத்திரம்) 
13. கம்மிய நூல் (சிற்ப சாத்திரம்) 
14. மருத்துவ நூல் ( வைத்திய சாத்திரம்) 
15. உறுப்பமைவு நூல் (உருவ சாத்திரம்) 
16. மறவனப்பு (இதிகாசம்) 
17. வனப்பு 
18. அணிநூல் (அலங்காரம்) 
19. மதுரமொழிவு (மதுரபாடணம்) 
20. நாடகம் 
21. நடம் 
22. ஒலிநுட்ப அறிவு (சத்தப் பிரமம்) 
23. யாழ் (வீணை) 
24. குழல் 
25. மதங்கம் (மிருதங்கம்)
 26. தாளம் 
27. விற்பயிற்சி (அத்திரவித்தை) 
28. பொன் நோட்டம் (கனக பரீட்சை) 
29. தேர்ப்பயிற்சி (ரத ப்ரீட்சை) 
30. யானையேற்றம் (கச பரீட்சை) 
31. குதிரையேற்றம் (அசுவ பரீட்சை)
 32. மணிநோட்டம் (ரத்தின பரீட்சை) 
33. நிலத்து நூல்/மண்ணியல் (பூமி பரீட்சை) 
34. போர்ப்பயிற்சி (சங்கிராமவிலக்கணம்) 
35. மல்லம் (மல்ல யுத்தம்) 
36. கவர்ச்சி (ஆகருடணம்) 
37. ஓட்டுகை (உச்சாடணம்) 
38. நட்புப் பிரிப்பு (வித்துவேடணம்) 
39. காமநூல் (மதன சாத்திரம்) 
40. மயக்குநூல் (மோகனம்) 
41. வசியம் (வசீகரணம்) 
42. இதளியம் (ரசவாதம்) 
43. இன்னிசைப் பயிற்சி (காந்தருவ வாதம்) 
44. பிறவுயிர் மொழியறிகை (பைபீல வாதம்) 
45. மகிழுறுத்தம் (கவுத்துக வாதம்) 
46. நாடிப்பயிற்சி (தாது வாதம்) 
47. கலுழம் (காருடம்) 
48. இழப்பறிகை (நட்டம்) 
49. மறைத்ததையறிதல் (முஷ்டி) 
50. வான்புகவு (ஆகாயப் பிரவேசம்) 
51. வான்செலவு (ஆகாய கமனம்) 
52. கூடுவிட்டுக் கூடுபாய்தல் (பரகாயப் பிரவேசம்) 
53. தன்னுருக் கரத்தல் (அதிருசியம்) 
54. மாயச்செய்கை (இந்திரசாலம்); 
55. பெருமாயச்செய்கை (மகேந்திரசாலம்) 
56. அழற்கட்டு (அக்கினித் தம்பனம்) 
57. நீர்க்கட்டு (சலத்தம்பனம்) 
58. வளிக்கட்டு (வாயுத்தம்பனம்) 
59. கண்கட்டு (திருட்டித்தம்பனம்) 
60. நாவுக்கட்டு (வாக்குத்தம்பனம்) 
61. விந்துக்கட்டு (சுக்கிலத்தம்பனம்)
 62. புதையற்கட்டு (கனனத்தம்பனம்) 
63. வாட்கட்டு (கட்கத்தம்பனம்)
 64. சூனியம் (அவத்தைப் பிரயோகம்)

அமைச்சராவதற்காக "காக்கா' பிடித்தேன்.



அகமது படேல், சோனியா, ராகுல் ஆகியோரை காக்கா பிடித்து தான், அமைச்சர் பதவியை பெற்றேன்' என, ஜார்க்கண்ட் மாநில அமைச்சர், யோகேந்திர சாகு தெரிவித்துள்ளது, "டிவி' சேனல் நடத்திய, "ஸ்டிங்' ஆபரேஷன் மூலம், வெளிச்சத்துக்கு வந்துள்ளது. காங்., கூட்டணி அரசு, சமீபத்தில் பதவியேற்றது. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர், ஹேமந்த் சோரன், முதல்வராக பதவி வகிக்கிறார். காங்கிரசைச் சேர்ந்த, ஐந்து பேர், அமைச்சர்களாக உள்ளனர். இவர்களில், விவசாய அமைச்சராக உள்ள, யோகேந்திர சாகுவும், ஒருவர்."அமைச்சர் பதவியை பெற்றது எப்படி' என்பது குறித்து, ஒரு, "டிவி' சேனல் நிறுவனம், இவரிடம், ரகசியமாக தகவல் சேகரித்து (ஸ்டிங் ஆபரேஷன்), அதை படம் பிடித்தது. அந்த காட்சி, தற்போது ஒளி பரப்பாகி, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதில், யோகேந்திர சாகு, கூறியுள்ளதாவது:

ஜார்க்கண்ட் அரசில், காங்கிரசும் பங்கேற்க போவதாக தகவல் வெளியானதை அடுத்து, என் ஆதரவாளர்களுடன் டில்லி சென்றேன். காங்., சார்பில், அமைச்சராகும் நபர்களின் பட்டியலில், என் பெயர் இல்லை. 15 நாட்கள் டில்லியில் முகாமிட்டேன்.அமைச்சர் பதவியை பெறுவதற்கான நடவடிக்கைகளில் இறங்கினேன். காங்., தலைவர் சோனியா, அவரின் அரசியல் ஆலோசகர் அகமது படேல், காங்., துணை தலைவர் ராகுல், ஆகியோர் மூலமாக, காய் நகர்த்தினேன்.எந்த வகையான நடவடிக்கையில் ஈடுபட்டேன் என்பதை தற்போது கூற முடியாது. அதெல்லாம், அரசியல் விவகாரம். கடைசியில், நான் நினைத்தது நடந்தது; எனக்கு அமைச்சர் பதவி கிடைத்தது.இவ்வாறு, சாகு, அதில் கூறிஉள்ளார். முதல் முறையல்ல:யோகேந்திர சாகு, இதுபோன்ற சர்ச்சையில் சிக்குவது, இது முதல் முறையல்ல. ஏற்கனவே, ராஜ்யசபா தேர்தலில் ஓட்டளிப்பதற்காக, லஞ்சம் வாங்க விரும்புவதாக, அவர் தெரிவித்துஇருந்தார். இதுவும், ஸ்டிங் ஆபரேஷன் மூலம், வெளிச்சத்துக்கு வந்து

கரிகால சோழன்

உலகின் பழமையான நீர்பாசன அணையான 
கல்லணை கட்டிய "கரிகால சோழன்" கற்ச் சிலை(?). தமிழ்நாட்டிலேயே ஒரே ஒரு இடத்தில், காஞ்சிபுரம் "ஏகாம்பரேஸ்வரர்" கோயிலில் மட்டுமே காணக் கிடைகின்றது.

தங்கம் வென்ற வீராங்கனைகள் வரவேற்க ஆள் இல்லை!



போலந்து நாட்டில் நடந்த வில்வித்தை போட்டியில் தங்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்த வீராங்கனைகளை விமான நிலையத்தில் வரவேற்க ஆள் யாரும் இல்லாமல் போயினர். தங்கம் வென்ற இவர்களுக்கு அவமதிப்பு நடந்துள்ளதாக வில்வித்தை ஆர்வலர்கள் கவலைப்பட்டனர்.கடந்த வாரத்தில் போலந்து ரோகிளவ் நகரில் உலக கோப்பை வில்வித்தை தொடரில் பெண்கள் பிரிவில் இந்திய வீராங்கனைகள் தீபிகா குமாரி, பாம்பைலாதேவி, ரிமிலி ஆகியோர் பங்கேற்றனர். இவர்கள் தென்கொரிய வீராங்கனைகளை 219 - 215 என்ற கணக்கில் வெற்றி பெற்றனர்.

வெற்றி பெற்ற வீராங்கனைகள் இன்று டில்லி திரும்பினர், இவர்களை வரவேற்க விளையாட்டு அமைப்பினர் யாரும் வரவில்லை. எவ்வித வரவேற்பும் இல்லை . ஆளோடு , ஆளாக வந்து சேர்ந்தனர். சம்பந்தப்பட்ட துறை சங்கத்தினரோ அல்லது மாநில அரசு தரப்பிலோ யாரும் வரவில்லை. இந்தியாவுக்காக தங்கம் வென்ற வீராங்கனைகள் புறக்கணிக்கப்படுவது வேதனை அளிக்கிறது.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...