போலந்து நாட்டில் நடந்த வில்வித்தை போட்டியில் தங்கம் வென்று
இந்தியாவுக்கு பெருமை சேர்த்த வீராங்கனைகளை விமான நிலையத்தில் வரவேற்க ஆள்
யாரும் இல்லாமல் போயினர். தங்கம் வென்ற இவர்களுக்கு அவமதிப்பு நடந்துள்ளதாக
வில்வித்தை ஆர்வலர்கள் கவலைப்பட்டனர்.கடந்த வாரத்தில் போலந்து ரோகிளவ் நகரில் உலக கோப்பை வில்வித்தை தொடரில்
பெண்கள் பிரிவில் இந்திய வீராங்கனைகள் தீபிகா குமாரி, பாம்பைலாதேவி, ரிமிலி
ஆகியோர் பங்கேற்றனர். இவர்கள் தென்கொரிய வீராங்கனைகளை 219 - 215 என்ற
கணக்கில் வெற்றி பெற்றனர்.
வெற்றி பெற்ற வீராங்கனைகள் இன்று டில்லி திரும்பினர், இவர்களை வரவேற்க
விளையாட்டு அமைப்பினர் யாரும் வரவில்லை. எவ்வித வரவேற்பும் இல்லை . ஆளோடு ,
ஆளாக வந்து சேர்ந்தனர். சம்பந்தப்பட்ட துறை சங்கத்தினரோ அல்லது மாநில அரசு
தரப்பிலோ யாரும் வரவில்லை. இந்தியாவுக்காக தங்கம் வென்ற வீராங்கனைகள்
புறக்கணிக்கப்படுவது வேதனை அளிக்கிறது.
No comments:
Post a Comment