அகமது படேல், சோனியா, ராகுல் ஆகியோரை காக்கா பிடித்து தான், அமைச்சர்
பதவியை பெற்றேன்' என, ஜார்க்கண்ட் மாநில அமைச்சர், யோகேந்திர சாகு
தெரிவித்துள்ளது, "டிவி' சேனல் நடத்திய, "ஸ்டிங்' ஆபரேஷன் மூலம்,
வெளிச்சத்துக்கு வந்துள்ளது. காங்., கூட்டணி அரசு,
சமீபத்தில் பதவியேற்றது. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர், ஹேமந்த்
சோரன், முதல்வராக பதவி வகிக்கிறார். காங்கிரசைச் சேர்ந்த, ஐந்து பேர்,
அமைச்சர்களாக உள்ளனர். இவர்களில், விவசாய அமைச்சராக உள்ள, யோகேந்திர
சாகுவும், ஒருவர்."அமைச்சர் பதவியை பெற்றது எப்படி' என்பது குறித்து, ஒரு,
"டிவி' சேனல் நிறுவனம், இவரிடம், ரகசியமாக தகவல் சேகரித்து (ஸ்டிங்
ஆபரேஷன்), அதை படம் பிடித்தது. அந்த காட்சி, தற்போது ஒளி பரப்பாகி,
பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதில், யோகேந்திர சாகு,
கூறியுள்ளதாவது:
ஜார்க்கண்ட் அரசில், காங்கிரசும் பங்கேற்க போவதாக தகவல்
வெளியானதை அடுத்து, என் ஆதரவாளர்களுடன் டில்லி சென்றேன். காங்., சார்பில்,
அமைச்சராகும் நபர்களின் பட்டியலில், என் பெயர் இல்லை. 15 நாட்கள்
டில்லியில் முகாமிட்டேன்.அமைச்சர் பதவியை பெறுவதற்கான நடவடிக்கைகளில்
இறங்கினேன். காங்., தலைவர் சோனியா, அவரின் அரசியல் ஆலோசகர் அகமது படேல்,
காங்., துணை தலைவர் ராகுல், ஆகியோர் மூலமாக, காய் நகர்த்தினேன்.எந்த வகையான
நடவடிக்கையில் ஈடுபட்டேன் என்பதை தற்போது கூற முடியாது. அதெல்லாம்,
அரசியல் விவகாரம். கடைசியில், நான் நினைத்தது நடந்தது; எனக்கு அமைச்சர்
பதவி கிடைத்தது.இவ்வாறு, சாகு, அதில் கூறிஉள்ளார். முதல்
முறையல்ல:யோகேந்திர சாகு, இதுபோன்ற சர்ச்சையில் சிக்குவது, இது முதல்
முறையல்ல. ஏற்கனவே, ராஜ்யசபா தேர்தலில் ஓட்டளிப்பதற்காக, லஞ்சம் வாங்க
விரும்புவதாக, அவர் தெரிவித்துஇருந்தார். இதுவும், ஸ்டிங் ஆபரேஷன் மூலம்,
வெளிச்சத்துக்கு வந்து
No comments:
Post a Comment