- டொமினிக்கன் குடியரசின் தேசிய தினம்
- நியூ பிரிட்டானியா தீவு கண்டுபிடிக்கப்பட்டது(1700)
- பிரிட்டன் தொழிற்கட்சி அமைக்கப்பட்டது(1900)
- ரேடியோ கார்பன் என்ற கரிமம்-14 கண்டுபிடிக்கப்பட்டது(1940)
- அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான அரசியலமைப்பு சட்டம் திருத்தப்பட்டது(1951)
ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை. விவேகானந்தர்.
26 February, 2012
இதே நாள்...
ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய ஹாக்கி தகுதி!
2012 லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய ஹாக்கி அணி தகுதி பெற்றுள்ளது. இன்று நடந்த தகுதிச்சுற்று இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் அணியை இந்திய சந்தித்தது. இந்த போட்டியில் கோல் மழை பொழிந்த இந்திய அணி 8-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. சந்தீப் சிங் 5 கோல்கள் அடித்தார். இத்தொடரில் அவர் 16 கோல்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2008ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஹாக்கி அணி முதன்முறையாக தகுதி பெறவில்லை.
கின்னஸ் புத்தகத்தில் சந்திர பகதூர் டாங்கி
உலகின் மிக குள்ளமான நபராக, நேபாளத்தை சேர்ந்த சந்திர பகதூர் டாங்கி,72, என்பவர், கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். பிலிப்பைன்சை சேர்ந்த ஜூன்ரி பலாவிங், என்பவர் தான் இதுவரை உலகின் மிக குள்ளமான மனிதராக அறிவிக்கப்பட்டவர். இவரின் உயரம், 59.9 செ.மீ., மட்டுமே. இந்நிலையில், பலாவிங்கை விட, 5.3 செ.மீ., உயரம் குறைவான அதாவது, 54.6 செ.மீ., உயரம் கொண்ட சந்திர பகதூர், கின்னஸ் நிறுவனத்தால் உலகின் மிக குள்ளமான மனிதராக அறிவிக்கப்பட்டுள்ளார். கின்னஸ் உலக பதிவு நிறுவனத்தின் தலைவர் கிரெய்க் க்ளெண்டே தலைமையிலான ஒரு குழு, காத்மாண்டுவிற்கு வந்து சந்திர பகதூரின் உயரத்தை அளந்து உறுதி செய்த பின், இந்த அறிவிப்பை கின்னஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. மொத்தம் 12 கிலோ எடையுள்ள சந்திர பகதூர் பற்றி, நேபாள ஆய்வாளர்கள் சிலர், மூன்று வாரங்களுக்கு முன் வெளியுலகிற்கு தெரிவித்தனர். இதையடுத்து தான், அவரது பெயர் உலகளவில் பிரபலமானது.
உலகின் மிகப் பெரிய விமான நிலையத்தை நிர்மாணிக்க, சீனா முடிவு !
அமெரிக்காவின் அட்லாண்டா சர்வதேச விமான நிலையத்தை தோற்கடிக்கும் வகையில், உலகின் மிகப் பெரிய விமான நிலையத்தை நிர்மாணிக்க, சீனா முடிவு செய்துள்ளது. அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தின் அட்லாண்டா நகரில் உள்ள ஹார்ட்ஸ்பீல்டு - ஜாக்சன் சர்வதேச விமான நிலையம்தான், விமானப் போக்குவரத்தில் உலகின் மிகப் பெரிய விமான நிலையம் என கருதப்படுகிறது. இந்நிலையில், அதையும் தோற்கடிக்கும் வகையில் பீஜிங்கின் தென் கிழக்கில், உலகின் மிகப் பெரிய சர்வதேச பயணிகள் விமானப் போக்குவரத்து நிலையம் ஒன்றை அமைக்க சீனா முடிவு செய்துள்ளது. மொத்தம் 15 பில்லியன் டாலர் செலவில் அமையக் கூடிய இந்த நிலையம், பீஜிங்கிற்கும், ஹேபெய் மாகாணத்தின் லாங்பாங் நகருக்கும் இடையில் உள்ள பகுதியில் நிறுவப்படலாம்
உயிரின் விலை ரூ. 5
ரூ. 5க்காக ஓடும் பஸ்சில் இருந்து கண்டக்டர் தள்ளிவிட்டதில் 21 வயது இளைஞர் தலையில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்தார். மத்திய பிரதேச மாநிலம் சத்னா மாவட்டம் ராம்பூரைச் சேர்ந்தவர் சுபம்சிங். அம்மாநில போலீஸ்துறையில் சேர்வதற்காக பரீட்சை எழுதியிருந்தார். அதன் முடிவுகளை காண்பதற்காக நேற்று சத்னாவிற்கு சென்று விட்டு மீண்டும் பஸ்சில் ஊர் திரும்பியுள்ளார். சத்னாவிலிருந்து ராம்பூருக்கு ரூ. 20 வசூலிப்பதற்கு பதிலாக கண்டக்டர் ரூ. 25 கேட்டுள்ளார். கண்டக்டர் கூடுதலாக ரூ. 5 கேட்டதால் சுபம் சிங் ஆத்திரமடைந்தார். இதனால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் அது கைகலப்பாக, கண்டக்டர் சுபம்சிங்கை ஓடும் பஸ்சில் இருந்து தள்ளியுள்ளார். இதில் கீழே விழுந்த சுபம்சிங் தலையில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உலகின் பணக்காரநாடு கத்தார்...
உலகின் பணக்கார நாடுகளின் வரிசையில் கத்தார் முதலிடத்தை பிடித்துள்ளது.இது குறித்து சர்வே ஒன்றை அமெரிக்காவின் போர்பஸ் பத்திரிகை கருத்து கணிப்பு நடத்தியது. இதில் கத்தார்,துபாய், குவைத் உட்பட 15 நாடுகள் கணக்கில் கொள்ளப்பட்டன. இதில் 1.7 மில்லியன் மக்கள் தொகை கொண்ட கத்தார் நாடு தனி நபரின் ஆண்டு வருமானம் சுமார் 88 ஆயிரம் அமெரிக்கக டாலராக உள்ளது என தெரிவித்துள்ளது. அதற்குஅடுத்த படியாக ஐக்கிய அரபு குடியரசு 47 ஆயிரத்து 500 அமெரிக்க டாலர்ஆகவும் உள்ளது. இந்த நாடுகளின் வரிசையி்ல குவைத் ஆறாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. மேலும் வரும் 2022-ம் ஆண்டில் கால்பந்திற்கான உலககோப்பை போட்டியை நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது. இரண்டாம் இடத்தில் உள்ள லக்சம்பர்க்கின் ஆண்டு வருமானம் சுமார் 81 ஆயிரம் டாலராகும். மூன்றாம் இடத்தில் உள்ள சிங்கப்பூர் வருமானம் 56 ஆயிரத்து700 டாலராகும். நார்வே, புருனே, யை தொடர்ந்து ஐக்கிய அரபு குடியரசு, அமெரிக்கா, ஹாங்காங், சுவிட்சர்லாந்து மற்றும் நெதர்லாந்து போன்ற நாடுகள் முதல் ஐந்து இடங்களுக்குள் மாறி மாறி வந்து கொண்டுள்ளது. அதேசமயம்புருண்டி, லிபேரியா, ரீபப்ளி்க் ஆப் காங்கோ போன்ற நாடுகளின் தனிநபர் வருமானம் சுமார் 300 முதல் 400 அமெரிக்க டாலர் என்ற அளவில் மட்டுமே உள்ளது.
Subscribe to:
Posts (Atom)