|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

02 February, 2012

SEEMAN SPEECH IN CHIDAMBARAM


maharaja tamil Movie


இரண்டு பெண்கள் சேர்ந்தால்...


மனதை திருடிவிட்டாய் MOVIE ONLINE


மதிகெட்டான் சாலை MOVIE ONLINE


2ஜி-யில் சோனியாவே அடுத்த இலக்கு சுப்ரமணிய சுவாமி!

 2ஜி ஸ்பெக்‍ட்ரம் ஊழல் பணத்தில் 60 சதவீத அளவில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் இருப்பதாக ஜனதா கட்சி தலைவர் சுப்பிரம​ணியன் சுவாமி குற்றம்சாட்டியுள்ளார். 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று அளித்த தீர்ப்பு குறித்து மகிழ்ச்சி தெரிவித்த சுப்பிரமணியன் சுவாமி, "நாடு பெருமிதம் கொள்ளக் கூடிய வகையிலான தீர்ப்பு இது," என்றார். உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு, அரசின் ஒட்டுமொத்த தோல்வியை காட்டுகிறது என்றவர், "2ஜி ஸ்பெக்‍ட்ரம் ஊழலைத் தடுக்‍க பிரதமர் தவறிவிட்டார்," என்றார். "நான் போதுமான ஆதாரங்களை உச்ச நீதிமன்றத்திடம் சமர்ப்பித்தேன். மூன்று விவகாரங்களிலும் நீதிமன்றம் முடிவு எடுத்திருக்கிறது. இந்த வழக்கில் ப.சிதம்பரத்தை விசாரணை செய்வது தொடர்பாக சிபிஐ சிறப்பு நீதிமன்றம் முடிவு செய்யும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பும் மகிழ்ச்சிக்குரியது," என்றார். மேலும், "2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் அடுத்த இலக்கு, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தான். ஸ்பெக்‍ட்ரம் ஊழல் பணத்தில் 60 சதவீதம், அவரிடம் தான் உள்ளது," என்றார் சுப்பிரமணியன் சுவாமி.


சோனியா காந்தி தமிழர்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியர்களுக்குமே ஒரு சாபக்கேடு என்பது எப்போது இந்தியர்களுக்கு விளங்கப்போகுது? காங்கிரஸ் கட்சி ஊழலை எதிர்க்கும் என கூறும் சோனியாவின் ஊழல் பேராட்சியை பாருங்கள்.டாட்டா நிறுவுனர்க்கு ஒரு மல்ரி பில்லியனர் ஆக வருதற்கு 100 ஆண்டுகள் எடுத்தது. அம்பானி சகோதரர்கட்கு 50 ஆண்டுகள் எடுத்தது. ஆனால் சோனியாவின் மருமகனும் பிரியங்காவின் கணவருமான ரொபேர்ட் வத்ரா மல்டி பில்லியனராக வருவதற்கு 10 ஆண்டுகளே எடுத்துள்ளது.சோனியா செய்யும் ஊழல் எல்லாமே இத்தாலியில் உள்ள தனது குடும்பத்தாருடனும், தனது மருமகன் பேரிலும் முதலீடு செய்வதனால் யாரும் கண்டு பிடிக்க முடியவில்லை. அப்படி கண்டுபிடிச்சாலும் பத்திரிகைகளில் வருவதில்லை காரணம் பலம், பணம்.

பார்த்ததில் பிடித்தது!


மதுரைக்கே மல்லிகைப் பூவா, திருநெல்வேலிக்கே அல்வாவா, தேமுதிகவுக்கே சவாலா - கேப்புட்டன் #யாருப்பா நாலாவுது ரவுண்டுல சரக்கை ஜாஸ்தியா கலந்தது ..!!

kaniyen on Twitter கேப்டனின் கொடும்பாவியை கொளுத்தும் கயவர்களே முடிந்தால் கேப்டனை கொளுத்தி பாருங்கள், இது சவால் அல்ல, ஆறு கோடி தமிழர்களின் கோரிக்கை !




 

நார்வே திரைப்பட விழாவில் பங்கேற்க 15 தமிழ்ப் படங்கள்!


தமிழ் சினிமாவுக்கென்றே சர்வதேச அளவில் நடக்கும் நார்வே திரைப்பட விழாவில் பங்கேற்க 15 தமிழ்ப் படங்கள் தேர்வாகியுள்ளன.வரும் ஏப்ரல் மாதம் 25-ம் தேதி முதல் - 29-ம் தேதி வரை ஐந்து நாட்கள் இந்த விழா சிறப்பாக நடைபெற உள்ளது. வசீகரன் இசைக்கனவுகள், அபிராமி கேஷ் அண்ட் கேரி ஆதரவோடு, இம்முறை நார்வேயைச் சேர்ந்த அமைப்புகள் சில இணைந்து இந்த விழாவை நடத்துகின்றன.

இதுகுறித்து திரைப்பட விழா குழு இன்று வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு: மிகப்பெரிய சர்வதேச திரைப்பட விழாவாக உருவெடுத்துள்ள இந்த நார்வே தமிழ் திரைப்பட விழா குறித்த அறிவிப்பு வெளியானதிலிருந்து தமிழ்ப் படைப்பாளிகள், தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்கள் இதில் பங்கேற்க மிகுந்த ஆர்வம் காட்டி வந்தனர். தங்கள் படங்களை போட்டிக்காக அனுப்பி வைத்துள்ளனர். குறும்பட இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் தொடர்ந்து தங்களுடைய படைப்புகளை அனுப்பிய வண்ணம் உள்ளனர். இவ்வாறு கடந்த ஆண்டு வெளியான திரைப்படங்கள், திரைப்பட விழா குழுவிற்கு அனுப்பிவைக்கப்பட்ட திரைப்படங்களிலிருந்து 15 படங்களை குளோரியா செல்வநாதன் (ஜெர்மனி) தலைமையிலான 7 பேர் கொண்ட நார்வே தமிழ் திரைப்பட விழா குழு தேர்வு செய்து அறிவித்துள்ளது.

தேர்வாகியுள்ள படங்கள்:

நார்வே தமிழ் திரைப்பட விழா - தமிழர் விருது 2012

01.அழகர்சாமியின் குதிரை
02.வெங்காயம்
03.வாகை சூடவா
04.கோ
05.ஆரண்ய காண்டம்
06.தீராநதி - பிரான்ஸ்
07.எங்கேயும் எப்போதும்
08.போராளி
09.மயக்கம் என்ன
10.பாலை
11.உச்சிதனை முகர்ந்தால்
12.வர்ணம்
13.மகான் கணக்கு
14.ஸ்டார் 67 (Star 67 - கனடா)
15.நர்த்தகி

இந்த விழாவுக்காக தேர்வு செய்யப்பட்ட குறும்படங்கள் குறித்த விவரம் வரும் 25.02.2012 அன்று வெளியாகும். இந்த விழாவில் தமிழர் விருதுக்கான போட்டியில் பங்குபெறாமல், விசேஷ பிரிவில் சுபாஷ் கலியன் இயக்கிய பாலம் கல்யாணசுந்தரத்தின் ஆவணப்படம், அன்னக்கிளி ஆர் செல்வராஜ் இயக்கத்தில், இளையராஜா இசையில் வெளியான பச்சைக்குடை போன்ற படங்கள் திரையிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.தமிழ் சினிமாவை உலகளவில் கொண்டு செல்லும் பெரும் முயற்சி இது. இந்த முயற்சி முழுமையான வெற்றியை அடைய, இந்தி சினிமாவின் உலகளாவிய வீச்சு மற்றும் வர்த்தகத்தை மிஞ்சும் வகையில் தமிழ் சினிமா படைப்புகள் அமைய, தமிழ் சினிமாவின் அனைத்து படைப்பாளிகளையும், துணை நிற்குமாறு வேண்டுகிறோம். இந்த திரைப்பட விழா என்பது ஏதோ தனிப்பட்ட ஒரு நிகழ்வு என்று எண்ணாமல், தமிழ் சினிமாவை கவுரவப்படுத்தும், உலக அளவுக்கு எடுத்துச் செல்லும் ஒரு முயற்சியாகக் கருதி இயக்குநர்கள், கலைஞர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் தாங்களாக முன்வந்து பங்கேற்க வேண்டும் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

குடும்ப வாழ்க்கையை அலசும் டிவி வண்க்கம் நிர்மலா நிகழ்ச்சிக்கு தடை...

குடும்ப விஷயங்களை பொதுவில் அலசுவது போல உள்ள டிவி நிகழ்ச்சிகளால் தனிமனித வாழ்க்கை பாதிக்கப்படுவதாக புகார் எழுவதால், இந்த நிகழ்ச்சிகள் குறித்து பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 'ஜீ' டி.வி நடத்தும் `சொல்வதெல்லாம் உண்மை' என்ற நிகழ்ச்சியால் பாதிக்கப்பட்ட ஒருவர் தொடர்ந்த வழக்கிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வழக்கு தொடர்ந்த நபர் குறித்த பகுதியை ஒளிபரப்ப உடனடித் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

நிர்மலா பெரியசாமி நிகழ்ச்சி 'ஜீ' டி.வியில் தினமும் இரவு 9.30 மணிக்கு 'சொல்வதெல்லாம் உண்மை' என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் குடும்ப பிரச்சினைகள் குறித்த விஷயங்கள் அலசப்படுகின்றன. இதற்காக இருதரப்பினரையும் நேரடியாக அழைத்து விவாதிக்கப்படுகிறது. இதற்கிடையே, இந்த நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்று ஓய்வு பெற்ற மத்திய அரசு அலுவலரான மதுரை அய்யர்பங்களாவை சேர்ந்த பெர்னாட்ஷான் (வயது 61) என்பவர், மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.அந்த மனுவில், "எனக்கு 1978-ம் ஆண்டு திருமணம் நடந்தது. என்னுடைய மனைவி செல்வராணிக்கு தற்போது 51 வயது ஆகிறது. எங்களுக்கு 2 மகளும், ஒரு மகனும் உள்ளனர். முதல் பிரசவத்துக்கு பின்பு என் மனைவிக்கு 90 சதவீதம் பார்வை இழப்பு ஏற்பட்டது. இருந்த போதிலும் என் மனைவியுடன் வாழ்க்கை நடத்தி வந்தேன். இந்த நிலையில் பணப்பிரச்சினை, பார்வை இழப்பு போன்ற காரணத்தால் அவர் மன அழுத்தத்தில் இருந்தார்.

இந்த நிலையில் என் மனைவி, ஜீ டி.வி நடத்தும் சமையல் கலை நிகழ்ச்சிக்கு தன்னை அழைத்து இருப்பதாக கூறினார். பின்னர் 25.1.2012 அன்று என்னையும் அழைத்துக்கொண்டு அந்த நிகழ்ச்சிக்கு சென்றார். என் மனைவியை 'ஷூட்டிங்' நடக்கும் அரங்கிற்கு அழைத்துச் சென்றனர். என்னை வெளியே உள்ள ஒரு அரங்கில் காத்திருக்கும்படி கூறினர். அதன்பின்பு ஒரு மணி நேரம் கழித்து என்னை 'ஷூட்டிங்' நடந்து கொண்டிருந்த அரங்கிற்கு அழைத்துச் சென்றனர். அங்கு டி.வி. செய்தி வாசிப்பாளரான நிர்மலா பெரியசாமி, எனது குடும்ப வாழ்க்கை குறித்து தாறுமாறாக பல்வேறு கேள்விகளை கேட்டார். அந்த நேரத்தில் என்னால் வேறு எதுவும் செய்ய முடியாத வகையில் திகைத்தேன். அதன்பின்புதான் குடும்ப பிரச்சினைகள் குறித்து அலசக்கூடிய ஒரு நிகழ்ச்சி என்பதை தெரிந்து கொண்டேன். இதனால் என்னை பற்றிய அந்த நிகழ்ச்சியை ஒளிபரப்ப வேண்டாம் என்று நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களிடம் கண்ணீர் விட்டு அழுதேன்.

அதற்கு ஒருங்கிணைப்பாளர்கள் மறுத்து விட்டனர். பிரச்சினைக்குரிய காட்சியை நீக்கி விட்டுதான் ஒளிபரப்புவோம் என்றும் கூறினர். குடும்பத்தில் உள்ள பிரச்சினைகளுக்கு சமரச தீர்வு ஏற்படுத்துகிறோம் என்ற பெயரில் பொது இடத்தில் அடுத்தவரின் குடும்ப வாழ்க்கையை கேவலப்படுத்துகின்றனர். எனவே ஜீ டி.வியில் `சொல்வதெல்லாம் உண்மை' என்ற நிகழ்ச்சியை ஒளிபரப்ப தடை விதிக்க மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை செயலாளருக்கு உத்தரவிட வேண்டும். மேலும் ஏற்கனவே படம் பிடிக்கப்பட்டுள்ள எனது குடும்ப வாழ்க்கை குறித்த நிகழ்ச்சியை ஒளிபரப்பவும் தடை விதிக்க வேண்டும்," என்று குறிப்பிட்டுள்ளார்.

உடனடி தடை இந்த மனு நீதிபதி கே.கே.சசிதரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி இடைக்கால உத்தரவில், "ஜீ டி.வியில் ஒளிபரப்பப்படும் 'சொல்வதெல்லாம் உண்மை' என்ற நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்ற மனுதாரரின் முக்கிய கோரிக்கை குறித்து எதிர் மனுதாரர்களிடம் விசாரணை நடத்திய பின்பு முடிவு செய்து கொள்ளலாம்.மனுதாரர் தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த விஷயத்தை ஒளிபரப்பினால் தனது மரியாதை பாதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். எனவே மனுதாரரின் குடும்ப வாழ்க்கை குறித்த விஷயத்தை ஜீ டி.வியில் ஒளிபரப்ப தடை விதிக்கப்படுகிறது," என்றார். மத்திய அரசுக்கு உத்தரவு மேலும் இந்த வழக்கு சம்பந்தமாக மத்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை செயலாளர், ஜீ டி.வி பொது மேலாளர் ஆகியோர் பதில் அளிக்க நோட்டீசு அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.

அமலாபாலின் கையை பிடித்து,இடுப்பில் கை போட்டு!

 ஹைதராபாத்தில் நடந்த தெலுங்கு பாடல் வெளியீட்டு விழாவில் அமலாபால் பங்கேற்றார். தெலுங்கில் ஏற்கெனவே அறிமுகமானவர் அமலா. மேலும் அவரது தமிழ்ப் படங்களும் தெலுங்கில் டப் செய்யப்பட்டு ரிலீசாகியுள்ளதால், ரசிகர்கள் மத்தியில் அவநர் பிரபலம். எனவே அமலா பாலை காணபடவிழா நடந்த அரங்கம் எதிரில் தெலுங்கு ரசிகர்கள் குவிந்தனர். விழா முடிந்து அமலாபால் வெளியே வந்த போது ஆட்டோ கிராப் வாங்குவது போல் சுற்றி வளைத்தனர்.இதனால் கூட்டத்தில் அவர் சிக்கிக் கொண்டார். சிலர் அமலாபாலின் கையை பிடித்து இழுத்தனர். இடுப்பில் கை போட்டனர். இதனால் அவர் உடம்பில் நகக்கீறல்கள் பட்டு காயமும் ஏற்பட்டது. சில நிமிடங்களுக்குப் பிறகு அங்கு நின்ற பாதுகாவலர்கள் விரைந்து சென்று ரசிகர்கள் பிடியில் இருந்து அமலாபாலை மீட்டு போலீஸ் வண்டியில் அனுப்பி வைத்தனர்!

சாப்பிட்ட உடன் டீ, தம். எச்சரிக்கை!


உணவு உட்கொண்ட உடன் புகைப்பிடிக்கும், தேநீர் அருந்தும் பழக்கம் கொண்டவரா நீங்கள் அப்படியெனில் இது உங்களுக்குத்தான். உண்ட உணவு ஜீரணமாகும் முன்பே சிகரெட் பற்றவைத்தால் அது குடல் கேன்சர் ஏற்பட வழிவகுக்கும் என்று எச்சரித்துள்ளனர் மருத்துவர்கள்.உணவு உண்டபின் என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது என்று மிகப்பெரிய பட்டியலே கொடுத்துள்ளனர் அவர்கள்.இன்றைக்கு பலபேர் உணவு உண்டவுடன் அவசரமாக சிகரெட் பற்ற வைத்து உள்ளே இழுப்பார்கள். இது உடல் நலத்திற்கு தீங்கானது. சாப்பிட்டவுடன் பிடிக்கப்படும் ஒரு சிகரெட், பத்து எமனுக்குச் சமம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். இதனால் குடல் புற்றுநோய் வரும் வாய்ப்பு பத்து மடங்கு அதிகரிக்க வாய்ப்பு உண்டாம். எனவே, சிகரெட்டுக்கு நோ சொல்லுங்க.

டீ கூடவே கூடாது சாப்பிட்டவுடன் டீ குடிக்கும் பழக்கம் பலருக்கு உண்டு. இது மிகவும் தவறான பழக்கமாம். அமிலத்தின் அளவு டீ இலையில் அதிகம் உள்ளது. அது நாம் உண்ணும் உணவில் உள்ள புரோட்டினை இன்னும் கடினமாக்கி, ஜீரணமாவதை மேலும் தாமதப்படுத்துமாம்.

வயிற்றில் களேபரம் வயிறு முட்டச் சாப்பிட்டுவிட்டு, மூச்சுவிட முடியாமல் வயிற்றை இறுக்கிப் பிடிக்கும் பெல்ட்டையோ, அல்லது இடுப்புப் பகுதி ட்ரெஸ்ஸையோ லூசாக்கிவிட்டு ஃப்ரீயாக இருப்பார்கள் சிலர். அது கூடவே கூடாதாம். அப்படிச் செய்யும்போது வயிற்றில் மொத்தமாகத் தங்கியிருக்கும் உணவு, பெல்ட் லூஸானதும் தடக்கென்று குடலில் கீழிறங்கி, உள்ளே களேபர மாற்றங்கள் நிகழுமாம். அதனால் குடல் பாதிக்கப்பட்டு பல பிரச்னைகள் வரும். அதனால் முன்னாடியே பேன்ட், பெல்ட்டை தளர்த்தி விட்டு தட்டுக்கு முன்பு உட்காருவது ரொம்ப நல்லது.

வாழைப்பழம் கூடாது நல்ல விருந்துச் சாப்பாடு என்றால், நம் பக்கம் வாழைப் பழம் சாப்பிட்டு முடிக்கிற வழக்கம் உண்டு. இது ஜீரணத்துக்கு நல்லது என்று கூறப்பட்டு வந்தது. ஆனால், இதுவும் தவறானது என்கின்றனர் ஆய்வாளர்கள். பழங்களுக்கும் நாம் தினமும் உண்ணும் உணவுக்கும் இருக்கும் குணங்கள் வேறுவேறு. இதனால் இரண்டும் சேர்த்து ஜீரணம் ஆவதற்கு இன்னும் தாமதமாகும். அதனால், சாப்பிட்டு முடித்து இரண்டு மூன்று மணி நேரம் கழித்து பழம் சாப்பிடுவதே நல்லது என்கின்றனர்.

சாப்பிட்ட உடனே குளியல் சாப்பிட்ட வேகத்தில் பண்ணக் கூடாத இன்னொன்று குளியல்.ஏனென்றால், குளிக்கும்போது தண்ணீரினால் கிடைக்கும் குளிர்ச்சியினாலும், கை, கால் என மசாஜ் போலத் தேய்ப்பதாலும் உடல் முழுவதும் ரத்த ஓட்டம் அதிகமாகும். இதனால் வயிற்றுப் பகுதிக்கு செல்லும் ரத்தத்தின் அளவு குறைந்து ஜீரணத்தைத் தாமதமாக்கும். 

தூங்காதீங்க ஜீரணமாகாது வாக்கிங் செல்வது மிக நல்லது. ஆனால், சாப்பிட்டவுடன் வாக்கிங் கிளம்புவது நல்லதல்ல. உணவுக்குப் பிறகு குறைந்தது ஒரு மணி நேரம் கழித்தே நடக்க வேண்டும். சாப்பிட்ட வேகத்தில் கடினமான வேலைகளை அரக்கப்பறக்கச் செய்வதும் கூடாது. உணவுக்குப் பிறகு சற்றேனும் ஓய்வு முக்கியம். சாப்பிட்டவுடன் உறங்கச் செல்வதும் தவறு. உடனடியாகத் தூங்குவதால், நாம் உண்ட உணவு ஜீரணமாகாமல் அப்படியே தங்கி குடல் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு வழிவகுக்கும். எனவே இதுவரை செய்த தவறான பழக்கமெல்லாம் போதும் இனியாவது சரியா பின்பற்றுங்க என்கின்றனர் ஆய்வாளர்கள்.

தகுதியே இல்லாத அதிமுகவுடன் சேர்ந்ததற்காக நான்தான் வெட்கப்படுகிறேன் விஜயகாந்த்!


மதுரைக்கே மல்லிகைப் பூவா, திருநெல்வேலிக்கே அல்வாவா, தேமுதிகவுக்கே சவாலா?. எங்க கிட்ட சவால் விடாதீங்க, அதுக்கெல்லாம் பயப்படுபவன் இந்த விஜயகாந்த் இல்லை. தகுதியே இல்லாத அதிமுகவுடன் சேர்ந்ததற்காக நான்தான் வெட்கப்படுகிறேன் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோபாவேசமாக கூறியுள்ளார். சட்டசபையிலிருந்து 10 நாள் தடை விதிக்கப்பட்டதத் தொடர்ந்து தனது கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார் விஜயகாந்த். அப்போது தனது பாணியில் படு இயல்பாகவும், கோபமாகவும், சாந்தமாகவும் பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்தியபடியே நீண்ட நேரம் அவர் பேசினார்.

விஜயகாந்த் பேச்சின் சில துளிகள்... நாங்களா அதிமுகவுடன் கூட்டணிக்கு அலைந்தோம். அவர்கள்தான் வந்தார்கள், அவர்கள்தான் கூப்பிட்டார்கள். நாங்கள் அவர்களுக்கு ஆதரவு கொடுத்ததால்தான் அவர்கள் ஜெயித்தார்கள். நாங்கள் மட்டுமில்லை, மக்கள் இவர்களுக்கு ஆதரவு கொடுத்ததால்தான் ஜெயித்தார்கள்.எங்களைப் பார்த்து திராணி இருந்தால் என்று கேட்கிறார்.இவர் கடந்த ஆட்சியின்போது 13 இடைத்தேர்தலில் ஜெயித்தாரா. 5 தொகுதிகளில் நடந்த தேர்தலில் போட்டியிடப் பயந்து ஓடியவர் இவர்.மதுரைக்கே மல்லிகைப் பூவா என்பார்கள், திருநெல்வேலிக்கே அல்வாவா என்பார்கள். அதுபோல தேமுதிகவுக்கே சவாலா. எங்களைப் பார்த்து சவால் விடாதீர்கள். அதுக்கெல்லாம் நாங்க பயப்பட மாட்டோம்.

தனியாக போட்டியிட தயார். நாளைக்கே நாங்க ராஜினாமா செய்கிறோம், நீங்களும் வாங்க, கவர்னர் ஆட்சியில் தேர்தலை சந்திப்போம். ரெடியா. மடியில் கனம் இருந்தால்தான் வழியில் பயம் வரும்.சட்டசபையில் சபாநாயகர் சொன்னதும் நான் உட்கார்ந்து விட்டேன். ஆனால் எதிர்த் தரப்பிலிருந்து குரல் கொடுத்ததால்தான் நான் எழுந்து நின்றேன். நான் எழுந்து நின்றதை மட்டும் காட்டினார்களே, எதிர்த் தரப்பிலிருந்து குரல் கொடுத்ததை ஏன் காட்டவில்லை. அதையும் காட்டியிருக்க வேண்டுமல்லவா, அதுதானே நியாயம். நியாயத்தைப் பத்தி இவங்க பேசக் கூடாது. 13 நாளில் வாஜ்பாய் அரசைக் கவிழ்த்தியவர் இவர். இவர் நியாயம் பத்திப் பேசலாமா.

தேமுதிக சரியில்லை என்று இப்போது சொல்கிறாரே, அதை ஏன் கூட்டணி முடிவானபோது சொல்லவில்லை, தேமுதிக தொகுதிகளை அறிவித்தபோது ஏன் செய்யவில்லை. நாங்கள் இல்லாவிட்டால் அதிமுக டெபாசிட் இழந்திருக்கும். கூட்டணி இல்லாமல் ஒருபோதாவது அதிமுக போட்டியிட்டுள்ளதா. எம்.ஜிஆர். இருந்தபோதும் கூட கூட்டணி இல்லாமல் அதிமுக போட்டியிட்டதில்லை. ஊர் கூடித்தானே தேர் இழுத்தோம். எல்லாக் கூட்டணியும் கூடித்தானே வெற்றி பெற வைத்தோம். சட்டசபையில் நாங்கள் மக்கள் பிரச்சனைகளைத்தானே பேசப் போனோம். கூட்டணி குறித்து பேசப் போகவில்லை. என்னைப் பார்த்தால் அறுவறுப்பாக உள்ளது என்கிறார். இவரைப் பார்த்தால் கூடத்தான் அறுவறுப்பாக உள்ளது, அசிங்கமாக இருக்கிறது. நாங்கள் பொறுத்துக் கொள்ளவில்லையா. அமைதியாக இருக்கவில்லையா.

பேசுவதை சர்வாதிகாரமாக தடுக்கிறார்கள். பேச வாய்ப்புக் கொடுத்தால்தானே தங்களைத் திருத்திக்கொள்ள வாய்ப்பு கிடைக்கும். தானே புயல் நிலவரம் பற்றிப் பேச விடவில்லை, பால் விலை உயர்வு, பஸ் கட்டண உயர்வு குறித்துப் பேச விடவில்லை. இன்றைய நிலவரம் என்று போர்டு போடுவார்களே அது போல இன்றைய மந்திரிகள் என்ற நிலையில் இந்த ஆட்சி உள்ளது. தூர்தர்ஷன் ஒரு சார்பாகவே நடக்கிறது. ஜெயா டிவியில் எடிட் செய்து தருவதை போடாதே, எல்லாவற்றையும் போடு. நீங்க மட்டும்தான் மக்கள் பத்திப் பேசுவீங்களா, மத்தக் கட்சிக்காரன் பேச மாட்டானா. ஆணவத்தில் இருக்கிறார் ஜெயலலிதா, மமதையில் இருக்கிறார். எங்களுக்கு இறங்குமுகம் என்று நீங்கள் சொல்லக் கூடாது. மக்கள் சொல்ல வேண்டும். எம்.ஜி.ஆர் மட்டும்தான் தொடர்ந்து ஆட்சி புரிந்தவர். நீங்களும், மத்தக் கட்சியும் மாறி மாறித்தான் ஆள முடிந்தது. இப்போதுதானே விஜயகாந்த் வந்துள்ளான், பொறுத்திருந்து பாருங்கள் என்னை. 

2005ல் கட்சி ஆரம்பித்து தொடர்ந்து தனியாகத்தானே தேர்தலை சந்தித்தேன். நான் தலை குணிந்தாலும் உங்களைத் தலை குணிய வைக்க மாட்டேன் என்று சேலத்தில் சொல்ல விட்டுத்தான், தொண்டர்களின் விருப்பத்திற்கேற்பத்தானே கூட்டு சேர்ந்தேன். ரூம் போட்டு எங்களுக்காக காத்திருந்தபோது வெக்கமா இல்லையா?! இன்னும் கூட நிறைய இருக்கு... சொன்னா தாங்க மாட்டாங்க! இவங்களை பாராட்டிக்கிட்டே இருக்கனும், இதுக்குப் பெயரா ஆட்சி. பாராட்ட மட்டும் டைம் தர்றீங்கள்ள, விமர்சனம் செய்யவும் டைம் தாங்க. புள்ளி விவரம் இருந்தா பேசுங்க என்கிறார்கள். ஊரைக் கொள்ளையடிச்சதுக்கு உங்க கிட்ட புள்ளி விவரம் இருக்கா. யார் மந்திரி, யார் ஐஏஎஸ், யார் ஐபிஎஸ் என்று இவர்களுக்கேத் தெரியாது. இவங்கதான் தகுதி இல்லாதவர்.நான் யாருக்கும் பயப்படவில்லை. மக்கள் மனது வைத்தால்தான் யாராக இருந்தாலும். நான்தான் புலி என்றால், ஆட்சிக்கு நாளை நான் வந்தாலும் இப்படிப் பேச முடியும். அப்ப என்ன சொல்வீங்க.

ஜெயலலிதா திருந்தி விட்டார் என நினைத்தேன், இல்லை, பழைய குருடி கதவைத் திருடி கதைதான். ஜெயலலிதா திருந்தவில்லை, ஆணவத்துடன் இருக்கிறார். போன 5 வருடமாக எங்கே போனீர்கள். தேர்தலை சந்திக்கக் கூட திராணி இல்லையே உங்களுக்கு. நான் பயப்படாமல்தான் சந்தித்தேன்.தொண்டர்கள் என்ன விரும்புகின்றார்களோ அதன்படிதான் நாங்கள் கூட்டு வைப்போம். 5 ஆண்டுகாலம் அரசியலில் இடைத்தேர்தல் நாயகனின் (மு.க.அழகிரி) நிலை என்னவாச்சு? இப்போது அழகிரி எங்கே இருக்கிறார்?. சட்டம் ஒழுங்கு கெட்டு போய் குட்டி சுவராக இருக்கிறது. தேவைப்பட்டால் நாங்கள் போராட்டம் நடத்துவோம். ஆவுடையப்பன் சபாநாயகராக இருந்தபோது இவரை (ஜெயலலிதாவை) 1 மணி நேரம் பேச விட்டார்கள். இவர் பேசலாம், நாங்க பேசக் கூடாதா?

எனக்குப் பயமெல்லாம் கிடையாது. மரியாதைக்கு மரியாதை, அன்புக்கு மட்டும்தான் கட்டுப்படுவேன். மிரட்டிப் பணிய வைக்க வைத்தால் அது முடியாது.அதிமுகவுடன் கூட்டணி வைத்ததற்கு ராஜிவ் காந்தி முதல் வாஜ்பாய் வரை அனைவரும் கவலைப்பட்டனர். எங்களுக்குத் தகுதி இல்லை என்கிறார்கள். உங்களுக்குத்தான் தகுதி இல்லை. தகுதியில்லாத உங்களுடன் கூட்டணி வைத்ததை நினைத்து நான்தான் வெட்கப்படுகிறேன்.கேவலப்பட்ட அரசுக்கு மத்தியில் எங்களை உட்கார வைத்து விட்டார்களே என நாங்கள் இவர்களுடன் கூட்டணி வைத்தமைக்கு வெட்கப்படுகிறோம். வேதனைப்படுகிறோம்.

நன்றி கெட்டவங்க, எப்படிக் கெஞ்சுனாங்க என்று எனக்குத் தான் தெரியும். பேச நினைத்தால் நான் நிறையப் பேசுவேன். பேசக் கூடாதென்று அமைதியாக இருக்கிறேன். கேவலப்பட்ட ஒரு அரசாங்கத்தின் கீழ் மக்களை உட்கார வைத்து விட்டார்கள். அந்தமக்களை தூக்கி நிறுத்தத்தான் நான் இனிமேல் போராடப் போகிறேன். இப்போது சொல்கிறேன், என்ன திமிராக சொல்கிறான் என்று தப்பாக நினைக்க வேண்டாம். அடுத்த முறை தேமுதிகதான் ஆட்சியைப் பிடிக்கும். பிடிக்கப் போவதைப் பாருங்கள்.நாளை முதல் எனது கட்சி எம்.எல்.ஏக்கள் சட்டசபைக்குப் போவார்கள். நான் மக்கள் மன்றத்திற்குப் போகப் போகிறேன் என்றார் விஜயகாந்த்.

2ஜி தீர்ப்பு ஊழல் கண்காணிப்பு பெருமிதம்!

2ஜி வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு திருப்தி அளிப்பதாக மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் பெருமிதம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஊழல் கண்காணிப்பு ஆணையாளர் பிரதீப் குமார், உச்சநீதிமன்றத் தீர்ப்பை முழுமையாக படிக்க வேண்டும். தீர்ப்பை மதிக்கிறோம். இந்த வழக்கின் விசாரணை அறிக்கையை கண்காணிப்பகத்திடம் தாக்கல் செய்ய உத்தரவிட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்றார்.2ஜி ஊழல் வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் கோரப்பட்டிருந்தது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த நீதிமன்றம், வழக்கின் விசாரணை அறிக்கையை ஊழல் கண்காணிப்பகத்திடம் தாக்கல் செய்யுமாறு சி.பி.ஐக்கு உத்தரவிட்டது. மேலும் ஊழல் கண்காணிப்பகம் நீதிமன்றத்துக்கு இந்த வழக்கில் உதவி புரியும் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடுகள் நடப்பதை ஊழல் கண்காணிப்பகம் முதலில் கண்டறிந்து சி.பி.ஐ. விசாரணைக்கு பரிந்துரைத்தது குறிப்பிடத்தக்கது.

4 மாதங்களுக்குள் புதிய விதிமுறைகள் வகுக்க 'டிராய்க்கு' உச்ச நீதிமன்றம் உத்தரவு!


முறைகேடாக 2ஜி லைசென்ஸ் பெற்றவுடன் தங்களது நிறுவன பங்குகளை அதிக விலைக்கு விற்று லாபமடைந்த 3 தொலைத் தொடர்பு நிறுவனங்களும் தலா ரூ. 5 கோடி அபராதம் செலுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2ஜி வழக்கில் தொடர்புடைய அனைத்து தொலைத் தொடர்பு நிறுவனங்களின் ஸ்பெக்ட்ரம் லைசென்களையும் உச்ச நீதிமன்றம் இன்று அதிரடியாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.இந்த லைசென்ஸ்களை வழங்கியவர் ஆ.ராசா என்பது குறிப்பிடத்தக்கது.

முறைகேடாக ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் பெற்றதாக 11 தொலைத் தொடர்பு நிறுவனங்கள் மீது சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது. இதனால் நாட்டுக்கு ரூ. 1.76 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டதாக மத்திய அரசின் கணக்குத் தணிக்கை அதிகாரியான சிஏஜி குற்றம் சாட்டியிருந்தார்.இந் நிலையில் முறைகேடாக 2ஜி லைசென்ஸ் பெற்றவுடன் தங்களது நிறுவன பங்குகளை அதிக விலைக்கு விற்று லாபமடைந்த 3 தொலைத் தொடர்பு நிறுவனங்களான ஸ்வான் டெலிகாம், யூனிடெக் வயர்லெஸ், எஸ்டெல் ஆகியவை தலா ரூ. 5 கோடி அபராதம் செலுத்த வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதே போல விதிகளை மீறிய லூப் டெலிகாம், ஸ்யாம் சிஸ்டமா ஆகியவை தலா ரூ. 50 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும்.இந்த 5 நிறுவனங்கள் உள்பட முறைகேடாக லைசென்ஸ் பெற்ற அனைத்து நிறுவனங்களின் லைசென்ஸ்கள் அடுத்த 4 மாதங்களுக்கு மட்டுமே செல்லும்.அதற்குள் லைசென்ஸ் வினியோகம் தொடர்பாக புதிய விதிமுறைகளை தொலைத் தொடர்பு ஆணையமான டிராய் வகுக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.டிராய் வகுக்கும் இந்த புதிய விதிமுறைகளின் கீழ் 2ஜி லைசென்ஸ்களை மீண்டும் விற்பது குறித்து மத்திய அரசு முடிவெடுக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

122 ஸ்பெக்ட்ரம் லைசென்களையும் உச்ச நீதிமன்றம் ரத்து!


2ஜி வழக்கில் தொடர்புடையதாகக் கருதப்படும் தொலைத் தொடர்பு நிறுவனங்களின் 122 ஸ்பெக்ட்ரம் லைசென்களையும் உச்ச நீதிமன்றம் இன்று அதிரடியாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.இந்த லைசென்ஸ்களை வழங்கியவர் முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசா என்பது குறிப்பிடத்தக்கது. இந்த 122 லைசென்ஸ்களையும் ரூ. 9,000 கோடிக்கு விற்றார் ராசா. இதனால் நாட்டுக்கு ரூ. 1.76 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டதாக மத்திய அரசின் கணக்குத் தணிக்கை அதிகாரியான சிஏஜி குற்றம் சாட்டியிருந்தார்.இதையடுத்து முறைகேடாக ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் பெற்றதாக 11 தொலைத் தொடர்பு நிறுவனங்கள் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.இதைத் தொடர்ந்து இந்த முறைகேட்டுக்கு உதவியதாக ஆ.ராசா மற்றும் பல்வேறு தொலைத் தொடர்பு நிறுவன அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர். இந் நிலையில் இன்று இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் மிக முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது.

இதன்படி 2008ம் ஆண்டுக்குப் பின் 11 தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட 122, 2ஜி லைசென்ஸ்களையும் உச்ச நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது. இந்த 122 லைசென்ஸ்களில் 85 லைசென்ஸ்கள் முறைகேடாக வழங்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், ராசா பதவியில் இருந்தபோது வழங்கிய அனைத்து லைசென்ஸ்களையும் நீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்துவிட்டது.

இதில் டாடா நிறுவனத்தின் 3 லைசென்ஸ்களும், வீடியோகான் நிறுவனத்தின் 21 லைசென்ஸ்களும், லூப் டெலிகாம் நிறுவனத்தின் 21 லைசென்ஸ்களும், யூனிநார் நிறுவனத்தின் 22 லைசென்ஸ்களும், ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தின் 13 லைசென்ஸ்களும், சிஸ்டமா-ஸ்யாம் நிறுவனத்தின் 21 லைசென்ஸ்களும், எடிசலாட்-டிபி நிறுவனத்தின் 15 லைசென்ஸ்களும், எஸ் டெல் நிறுவனத்தின் 6 லைசென்ஸ்களும், ஐடியா செல்லுலார் நிறுவனத்தின் 9 லைசென்ஸ்களும் அடக்கம்.

இந்த அனைத்து லைசென்ஸ்களையும் ரத்து செய்யுமாறு மத்திய தொலைத் தொடர்புத்துறைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த வழக்குத் தொடர்பாக தன்னிடம் உள்ள அனைத்து ஆவணங்களையும் மத்திய கண்காணிப்பு ஆணையத்திடம் (Central Vigilance Commission- CVC) ஒப்படைக்கவும் உத்தரவிட்டுள்ளது.ராசாவின் பதவிக் காலத்தில் 2ஜி லைசென்ஸ்கள் சட்ட விரோதமாகவும் முறையற்ற வகையிலும் விற்கப்பட்டதாகவும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. நீதிபதிகள் சிங்வி, கங்கூலி ஆகியோர் அடங்கிய டிவிசன் பெஞ்ச் இந்தத் தீர்ப்பை வழங்கியது. இந்த வழக்கில் தீர்ப்பு கடந்த ஆண்டு மார்ச் மாதம் 17ம் தேதி ஒத்தி வைக்கப்பட்டு இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.இந்த வழக்கை தாக்கல் செய்தது அன்னா ஹசாரே குழுவைச் சேர்ந்த பிரசாந்த் பூஷண் மற்றும் ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணிய சாமி ஆகியோர் என்பது குறிப்பிடத்தக்கது.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...