|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

02 February, 2012

4 மாதங்களுக்குள் புதிய விதிமுறைகள் வகுக்க 'டிராய்க்கு' உச்ச நீதிமன்றம் உத்தரவு!


முறைகேடாக 2ஜி லைசென்ஸ் பெற்றவுடன் தங்களது நிறுவன பங்குகளை அதிக விலைக்கு விற்று லாபமடைந்த 3 தொலைத் தொடர்பு நிறுவனங்களும் தலா ரூ. 5 கோடி அபராதம் செலுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2ஜி வழக்கில் தொடர்புடைய அனைத்து தொலைத் தொடர்பு நிறுவனங்களின் ஸ்பெக்ட்ரம் லைசென்களையும் உச்ச நீதிமன்றம் இன்று அதிரடியாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.இந்த லைசென்ஸ்களை வழங்கியவர் ஆ.ராசா என்பது குறிப்பிடத்தக்கது.

முறைகேடாக ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் பெற்றதாக 11 தொலைத் தொடர்பு நிறுவனங்கள் மீது சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது. இதனால் நாட்டுக்கு ரூ. 1.76 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டதாக மத்திய அரசின் கணக்குத் தணிக்கை அதிகாரியான சிஏஜி குற்றம் சாட்டியிருந்தார்.இந் நிலையில் முறைகேடாக 2ஜி லைசென்ஸ் பெற்றவுடன் தங்களது நிறுவன பங்குகளை அதிக விலைக்கு விற்று லாபமடைந்த 3 தொலைத் தொடர்பு நிறுவனங்களான ஸ்வான் டெலிகாம், யூனிடெக் வயர்லெஸ், எஸ்டெல் ஆகியவை தலா ரூ. 5 கோடி அபராதம் செலுத்த வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதே போல விதிகளை மீறிய லூப் டெலிகாம், ஸ்யாம் சிஸ்டமா ஆகியவை தலா ரூ. 50 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும்.இந்த 5 நிறுவனங்கள் உள்பட முறைகேடாக லைசென்ஸ் பெற்ற அனைத்து நிறுவனங்களின் லைசென்ஸ்கள் அடுத்த 4 மாதங்களுக்கு மட்டுமே செல்லும்.அதற்குள் லைசென்ஸ் வினியோகம் தொடர்பாக புதிய விதிமுறைகளை தொலைத் தொடர்பு ஆணையமான டிராய் வகுக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.டிராய் வகுக்கும் இந்த புதிய விதிமுறைகளின் கீழ் 2ஜி லைசென்ஸ்களை மீண்டும் விற்பது குறித்து மத்திய அரசு முடிவெடுக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...