2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் பணத்தில் 60 சதவீத அளவில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் இருப்பதாக ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியன் சுவாமி குற்றம்சாட்டியுள்ளார். 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று அளித்த தீர்ப்பு குறித்து மகிழ்ச்சி தெரிவித்த சுப்பிரமணியன் சுவாமி, "நாடு பெருமிதம் கொள்ளக் கூடிய வகையிலான தீர்ப்பு இது," என்றார். உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு, அரசின் ஒட்டுமொத்த தோல்வியை காட்டுகிறது என்றவர், "2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலைத் தடுக்க பிரதமர் தவறிவிட்டார்," என்றார். "நான் போதுமான ஆதாரங்களை உச்ச நீதிமன்றத்திடம் சமர்ப்பித்தேன். மூன்று விவகாரங்களிலும் நீதிமன்றம் முடிவு எடுத்திருக்கிறது. இந்த வழக்கில் ப.சிதம்பரத்தை விசாரணை செய்வது தொடர்பாக சிபிஐ சிறப்பு நீதிமன்றம் முடிவு செய்யும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பும் மகிழ்ச்சிக்குரியது," என்றார். மேலும், "2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் அடுத்த இலக்கு, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தான். ஸ்பெக்ட்ரம் ஊழல் பணத்தில் 60 சதவீதம், அவரிடம் தான் உள்ளது," என்றார் சுப்பிரமணியன் சுவாமி.
சோனியா காந்தி தமிழர்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியர்களுக்குமே ஒரு சாபக்கேடு என்பது எப்போது இந்தியர்களுக்கு விளங்கப்போகுது? காங்கிரஸ் கட்சி ஊழலை எதிர்க்கும் என கூறும் சோனியாவின் ஊழல் பேராட்சியை பாருங்கள்.டாட்டா நிறுவுனர்க்கு ஒரு மல்ரி பில்லியனர் ஆக வருதற்கு 100 ஆண்டுகள் எடுத்தது. அம்பானி சகோதரர்கட்கு 50 ஆண்டுகள் எடுத்தது. ஆனால் சோனியாவின் மருமகனும் பிரியங்காவின் கணவருமான ரொபேர்ட் வத்ரா மல்டி பில்லியனராக வருவதற்கு 10 ஆண்டுகளே எடுத்துள்ளது.சோனியா செய்யும் ஊழல் எல்லாமே இத்தாலியில் உள்ள தனது குடும்பத்தாருடனும், தனது மருமகன் பேரிலும் முதலீடு செய்வதனால் யாரும் கண்டு பிடிக்க முடியவில்லை. அப்படி கண்டுபிடிச்சாலும் பத்திரிகைகளில் வருவதில்லை காரணம் பலம், பணம்.

No comments:
Post a Comment